Tamil Wiki:அறிவுறுத்தல்கள்: Difference between revisions

From Tamil Wiki
Line 10: Line 10:
*கடுமையான கறாரான விமர்சனக்கருத்துக்களை இந்த கலைக்களஞ்சியம் சொல்லாது. எந்தக் கலைக்களஞ்சியமும் சொல்வதில்லை. ஆனால் அதில் ஒரு மதிப்பீடு இருக்கும். ஒருவரின் இடமென்ன மதிப்பென்ன என்று.
*கடுமையான கறாரான விமர்சனக்கருத்துக்களை இந்த கலைக்களஞ்சியம் சொல்லாது. எந்தக் கலைக்களஞ்சியமும் சொல்வதில்லை. ஆனால் அதில் ஒரு மதிப்பீடு இருக்கும். ஒருவரின் இடமென்ன மதிப்பென்ன என்று.


*அதன் அடிப்படையிலேயே கலைக்களஞ்சியம் ஒருவரை பற்றி எழுதுகிறது. இன்னொருவரை தவிர்க்கிறது. ஒருவருக்கு அதிக இடம் அளிக்கிறது. இந்த ‘ரேஷியோ’ மிக முக்கியமானது.
*அதன் அடிப்படையிலேயே கலைக்களஞ்சியம் ஒருவரை பற்றி எழுதுகிறது. இன்னொருவரை தவிர்க்கிறது. ஒருவருக்கு அதிக இடம் அளிக்கிறது. இந்த ‘விகிதம்’ மிக முக்கியமானது.


* அந்த தெரிவு ஏன் நடந்தது என்பதற்கான விளக்கமே அந்த மதிப்பீடு - பங்களிப்புக் குறிப்பு.
* அந்த தெரிவு ஏன் நடந்தது என்பதற்கான விளக்கமே அந்த மதிப்பீடு - பங்களிப்புக் குறிப்பு.


* அந்த மதிப்புக்குறிப்பு பொதுவாக எதிர்மறையாக எழுதப்படக்கூடாது. ‘இவர் வணிக எழுத்தாளர் மட்டுமே’ என எழுதப்படலாகாது. ‘இவர் பொதுவாசிப்புக்கான நூல்களை எழுதியவர்’ என்று பாஸிட்டிவாகவே குறிப்பிடும்  
* அந்த மதிப்புக்குறிப்பு பொதுவாக எதிர்மறையாக எழுதப்படக்கூடாது. ‘இவர் வணிக எழுத்தாளர் மட்டுமே’ என எழுதப்படலாகாது. ‘இவர் பொதுவாசிப்புக்கான நூல்களை எழுதியவர்’ என்று பாஸிட்டிவாகவே குறிப்பிடும்


==முதல் பத்தி==
==முதல் பத்தி==

Revision as of 14:29, 23 January 2022

இது விக்கிப்பீடியா போல தகவல்களை மட்டும் அளிக்கும் ஒரு டேட்டாபேஸ் அல்ல. இது கலைக்களஞ்சியம். இதற்கு ஆசிரியர்கள் உண்டு. ஆகவே கருத்துக்களும் மதிப்பீடுகளும் உண்டு. ஒட்டுமொத்தமாக இதன் ‘கருத்துக்கள்’ ஆசிரியர்களுக்குரியவை. அவர்களால் ஏற்கப்பட்டவை.

ஒரு கலைக்களஞ்சியம் பல ஆயிரம் பதிவுகளை கொண்டது. ஒரு பதிவுக்காக நாட்கணக்கில் ஆய்வும் குறிப்புகளும் எடுத்து எழுதுவதெல்லாம் தேவை அல்ல. நடைமுறையும் அல்ல. கையில் தரவுகள் தயாராக இருப்பவர்கள், அல்லது உடனடியாக இணையத்தில் தரவுகள் எடுக்க முடிந்த நிலையில் இருப்பவர்கள் பதிவுகளை எழுதலாம். பதிவில் தேவையானவை தரவுகள், மிகப்பொதுவான கருத்துக்கள். எதையும் புதியதாகச் சொல்லி நிறுவவேண்டியது இல்லை. தேவையான நூல்கள் எல்லாம் இன்று ஆர்க்கேவ்ஸ் களில் உள்ளன. மின்னூல்களாக கிடைக்கின்றன. நமக்குத்தேவை அடிப்படையான செய்திகள் மட்டுமே. அவற்றை தொகுத்தளிக்க நாட்கணக்கில் வேலைசெய்யவேண்டியதில்லை. ஆகவே எழுதிக்கொண்டே இருக்கவும். ஆய்வுநடக்கிறது என்பதெல்லாம் வேலைக்காகாது.

மதிப்பீடு

கலைக்களஞ்சியம் அடிப்படையான மிகப்பொதுவான எல்லாராலும் ஏற்கப்பட்ட கருத்துகளையே பொதுவாகச் சொல்லவேண்டும். அது ஓர் அழகியல்தரப்பாகவவும் இருக்க வேண்டும்.

  • ஒரு கட்டுரையில் சொல்லப்படும் மதிப்பீட்டுக்கருத்து அதை எழுதுபவருக்கு ஏற்புடையதாக இருந்தால் போதாது. பொதுவாக அழகியல் தரப்புக்கு ஏற்புடையதாக, பாஸிட்டிவானதாக இருக்கவேண்டும். ஆகவே விவாதத்திற்குரிய கருத்துக்கள், மேற்கோள்கள் இருக்கலாகாது.
  • கடுமையான கறாரான விமர்சனக்கருத்துக்களை இந்த கலைக்களஞ்சியம் சொல்லாது. எந்தக் கலைக்களஞ்சியமும் சொல்வதில்லை. ஆனால் அதில் ஒரு மதிப்பீடு இருக்கும். ஒருவரின் இடமென்ன மதிப்பென்ன என்று.
  • அதன் அடிப்படையிலேயே கலைக்களஞ்சியம் ஒருவரை பற்றி எழுதுகிறது. இன்னொருவரை தவிர்க்கிறது. ஒருவருக்கு அதிக இடம் அளிக்கிறது. இந்த ‘விகிதம்’ மிக முக்கியமானது.
  • அந்த தெரிவு ஏன் நடந்தது என்பதற்கான விளக்கமே அந்த மதிப்பீடு - பங்களிப்புக் குறிப்பு.
  • அந்த மதிப்புக்குறிப்பு பொதுவாக எதிர்மறையாக எழுதப்படக்கூடாது. ‘இவர் வணிக எழுத்தாளர் மட்டுமே’ என எழுதப்படலாகாது. ‘இவர் பொதுவாசிப்புக்கான நூல்களை எழுதியவர்’ என்று பாஸிட்டிவாகவே குறிப்பிடும்

முதல் பத்தி

ஒரு தலைப்பைப் பற்றி எதுவுமே தெரியாத ஒருவருக்கு சொல்லுவதுபோல் இருக்கவேண்டும்.

  • ஆசிரியரைப்பற்றிய ஒரு வரி அறிமுகம். அவர் யார் என்ன செய்கிறார் என்பது.
  • அவருடைய முக்கியத்துவம், அவருடைய பங்களிப்பு பற்றிய ஒரு வரையறை

அதாவது ஒரு வாசகர் அந்த ஒரு பத்தியை மட்டுமே படித்துவிட்டுக்கூட வெளியே செல்லலாம். வேண்டுமென்றால் தொடர்ந்து படிக்கலாம். அவர் யார், என்ன செய்தார், என்ன முக்கியத்துவம் மூன்றும் முதல் பத்தியில் இருக்கவேண்டும்

முதல் வரி அத்தலைப்பைப் பற்றி ஒற்றை வரியில் சொல்லமுடியுமென்றால் என்ன சொல்வோமோ அதுவாக இருக்கவேண்டும். அதாவது அது ஒரு ஃபைனல் டெஃபனிஷன்.

உதாரணமாக பாரதியார் என்னும் தலைப்பில் ‘இவர் எட்டையபுரத்தில் பிறந்தவர்’ என்பது முதல்வரியாக இருக்கமுடியாது. ‘தமிழ்மொழியில் நவீனக்கவிதை இயக்கத்தை தொடங்கிவைத்த முன்னோடி’ என்று இருக்கலாம்.
  • தொடர்ந்து அடுத்தடுத்து அவரை வரையறை செய்யும் துணை வரையறைகள். உதா ‘தமிழில் நவீன உரைநடையை உருவாக்கிய முன்னோடிகளில் ஒருவர். இந்திய விடுதலைப்போரில் ஈடுபட்ட போராளி. இதழியலில் மொழியையும் மரபுகளையும் உருவாக்கிய முன்னுதாரண ஆளுமை; ‘தமிழில் புதிய காலகாடத்திற்குரிய இசைப்பாடல்களை எழுதியவர்’ ‘ ‘சமூகசீர்திருத்தவாதி’ ‘பெண்கல்விக்காகவும் சாதிக்கொடுமைகளுக்கு எதிராகவும் போராடியவர்’ ‘தேசியக்கல்விக்காக வாதிட்டவர்’ இப்படி. இவை அனைத்தும். அவருடைய எல்லா முகங்களும்.
  • தலைப்பில் தரவுகள் தேவையில்லை [பிறந்தநாள் தவிர] ஒரே சாதனை இருக்குமென்றால் அதைச் சொல்லலாம். உம். தமிழின் முதல்நாவலை எழுதியவர் ...போல
  • முதல் பத்தியில் சொல்லப்பட்டவற்றுக்கான தரவுகளாகவே முழுக்கட்டுரையும் அமையவேண்டும்.

கலைக்களஞ்சிய மொழி சார்ந்து

* Standards*

  1. ஆண்டுகள், தேதிகள் டிசம்பர் 19, 2000 என்னும் பாணியில் அமையவேண்டும். தமிழில் மாதங்களைச் சொல்வது கூடாது.
  2. பெயர்களை அளிக்கும் பொழுது, கீழுள்ள முறையை பின் பற்ற வேண்டும்:
"INITIAL-DOT-SPACE-NAME" அல்லது
"INITIAL-DOT-NOSPACE-INITIAL-DOT-SPACE-NAME"

எ.கா: ஆர். சண்முகசுந்தரம், டி.எஸ். துரைசாமி

* Guidelines*

  1. நாம் "நமக்கு" போன்ற சொற்கள் இருக்கக்கூடாது
  2. "என்று கூறலாம்" – என்பதுபோன்ற தோராயமான சொற்றொடர்கள் கூடாது
  3. "தற்போது" போன்ற சொற்கள் தேவையில்லை. ஏனென்றால் இது நிரந்தரமான பதிவு.
  4. ஆகவே "குழந்தைகளின் வயது" குறிப்பிடக்கூடாது. எவருடைய வயதும் சொல்லப்படலாகாது [பிறந்த ஆண்டு சொல்லலாம்]
  5. "இவரது", "அவருடைய" போன்ற சொற்கள் கூடுமானவரை தவிர்க்கப்படவேண்டும். திரும்பத்திரும்ப அந்த நூல் அல்லது ஆசிரியர் பெயரே பயன்படுத்தப்படவேண்டும்
  6. ‘முத்திரை பதித்தார்’ ‘சாதனை புரிந்தார்’ போன்ற மிகைச்சொல்லாட்சிகள், க்ளீஷேக்கள் இருக்கக்கூடாது
  7. ஏதேனும் ஒரு தகவல் இல்லாத சம்பிரதாயமான வரி இருக்கலாகாது. ‘இவருக்கு தேசப்பற்று மிகுதி’ ‘இவர் மிகக்கடுமையான உழைப்பாளி’ போன்ற வரிகள்.
  8. 'மிகையான கிளெயிம்' இருக்கக்கூடாது. ‘தமிழிலக்கியத்தின் தலைசிறந்த’ ‘ஒப்பாரும் மிக்காரும் இல்லாத’ போன்ற வரிகள்
  9. விமர்சனம் என ஏதும் இருக்கக்கூடாது. ‘இவர் நாலாந்தர வணிக இலக்கியங்களையே எழுதினார்’ ‘இவருடைய படைப்புகள் வெறும் பரபரப்பு கொண்டவை’ போன்ற வரிகள் தேவையில்லை. நாம் வகுத்துக்கூறவே முற்படவேண்டும். மேலே சொன்ன கருத்தையே ‘இவர் பொழுதுபோக்கு படைப்புகளை எழுதியவர்’ ‘பொதுவாசிப்புக்குரிய நூல்களை எழுதியவர்’ என வரையறை செய்யலாம். எதிர்மறை தன்மை கலைக்களஞ்சியங்களுக்கு இருக்கலாகாது
  10. 'புதினம்', 'திங்கள்', 'அகவை' போன்ற தனித்தமிழ் சொற்கள் வேண்டாம். 'நாவல்', 'மாதம்', 'வயது' போன்றவை போதும்.
  11. 'பெயர்கள் தமிழ்ப்படுத்தப்படவே கூடாது'. அந்த அசட்டுப்போக்குக்கு எதிராகவே இந்த தளம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது

புகைப்படங்கள்

  • பொதுவாக புகைப்படங்கள் முகம் அண்மையில் தெளிவாக இருப்பவையாக இருக்கவேண்டும். குறைவான ரெசலூஷன் கொண்டிருக்கவேண்டும். நாம் என்சைக்ளோப்பீடியாவில் புகைப்படங்களை பார்ப்பது வேறு படங்களை சரிபார்த்துக்கொள்ளவே.
  • புகைப்படங்களில் முகங்கள் முக்கியமாக இருக்கும்படி வெட்டி பயன்படுத்தவும். சூழல் தேவையில்லை.
  • எப்போதும் பக்கவாட்டில் நீளமான புகைப்படங்களை பயன்படுத்தவும். படங்கள் செங்குத்தான நீளம் கொண்டிருந்தால் ஃபார்மாட் சரியாக வருவதில்லை. (Prefer landscape or sqaure photos, avoid vertical)