மு. வரதராசன்: Difference between revisions

From Tamil Wiki
Line 28: Line 28:
== இலக்கியவாழ்க்கை ==
== இலக்கியவாழ்க்கை ==
மு. வரதராசன், கல்வியாளராக  தனது இலக்கிய வாழ்வை தொடங்கினார். நாவல்கள், சிறுகதைகள், சிறுவர் இலக்கியம், நாடகங்கள், இலக்கணம், கட்டுரைகள், தமிழ் இலக்கிய நூல்கள், பயணக் கட்டுரை, முன்னுரைகள், மொழிபெயர்ப்பு, மேற்கோள்கள் என 91 நூல்களை எழுதியுள்ளார்.

குழந்தை பாடல்கள், கதைகள் எழுதுவதில் மு. வரதராசனுக்கு ஆர்வமிருந்தது. அவருடைய முதல் நூல் "குழந்ததைப் பாடல்கள்" 1939இல் எழுதப்பட்டது.

மு. வரதராசன், தான் எழுதிய நூல்கள் பெரும்பாலானவற்றை தனது சொந்த நிறுவனமான தாயக வெளியீட்டின் வழியாக வெளியிட்டார்.
மு. வரதராசன், தான் எழுதிய நூல்கள் பெரும்பாலானவற்றை தனது சொந்த நிறுவனமான தாயக வெளியீட்டின் வழியாக வெளியிட்டார்.
Line 39: Line 41:
மு. வரதராசன் அவரது காலகட்டத்தில் திராவிட இயக்கம் முன்வைத்த மரபார்ந்த அறத்தையும் ஒழுக்கவியலையும் அன்றைய இளம் வாசகனுக்கு கதைவடிவில் கொண்டுசென்றவர்.
மு. வரதராசன் அவரது காலகட்டத்தில் திராவிட இயக்கம் முன்வைத்த மரபார்ந்த அறத்தையும் ஒழுக்கவியலையும் அன்றைய இளம் வாசகனுக்கு கதைவடிவில் கொண்டுசென்றவர்.

அவரது கதைகள் பெண்சுதந்திரம், தனிமனித அறம், பொதுக்குடிமைப்பண்புகள் போன்றவற்றை பிரச்சாரம்செய்யும் ஆக்கங்களாக அமைந்தவை. மு. வரதராசன் ஒருகாலகட்டத்தின் இலட்சியங்களை ஒரு சாராருக்கு எடுத்துச் சென்ற அளவில்  தமிழ்ச் சிந்தனை மரபிலும் இலக்கிய வரலாற்றிலும் இடம் பெற்றார்.  
அவரது கதைகள் பெண்சுதந்திரம், தனிமனித அறம், பொதுக்குடிமைப்பண்புகள் போன்றவற்றை பிரச்சாரம்செய்யும் ஆக்கங்களாக அமைந்தவை. மு. வரதராசன் ஒருகாலகட்டத்தின் இலட்சியங்களை ஒரு சாராருக்கு எடுத்துச் சென்ற அளவில்  தமிழ்ச் சிந்தனை மரபிலும் இலக்கிய வரலாற்றிலும் இடம் பெற்றவர்.  

மரபிலக்கிய தளத்தில் மு. வரதராசனின் முக்கியமான சாதனை என்று சொல்லப்பட வேண்டியது அவரது நூலான திருக்குறள் தெளிவுரை.  
மரபிலக்கிய தளத்தில் மு. வரதராசனின் முக்கியமான சாதனை என்று சொல்லப்பட வேண்டியது அவரது நூலான திருக்குறள் தெளிவுரை.  

Revision as of 22:52, 10 March 2022

மு. வரதராசன்

மு. வரதராசன் (ஏப்ரல் 25, 1912 - அக்டோபர் 10, 1974) கல்வியாளர், இலக்கிய ஆராய்ச்சியாளார், நாவலாசிரியர் எனபன்முகத் தன்மை உடைய தமிழறிஞர். மாணவர்களுக்கான எளிய திருக்குறள் உரை எழுதிய ஆசிரியர்.

பிறப்பு, இளமை

மு. வரதராசன், வட ஆற்காடு மாவட்டம், திருப்பத்தூரில் ஏப்ரல் 25, 1912 இல் பிறந்தார். இவருடைய பெற்றோர் முனுசாமி முதலியார் - அம்மாக்கண்ணு. இயற்பெயர் திருவேங்கடம். தாத்தாவின் பெயரான வரதராசன் என்ற பெயரே அவருக்கு நிலைத்துவிட்டது.

ஆரம்ப கல்வியை வேலூர் மாவட்டம், வாலாஜாப்பேட்டை அருகிலுள்ள வேலம் என்னும் ஊரில் பெற்றார். உயர்நிலைக் கல்வியைத் திருப்பத்தூரில் கற்றுத் தேர்ந்தார். பதினாறு வயதில் பள்ளி இறுதித் தேர்வில் வெற்றி பெற்றார். திருப்பத்தூர் முருகைய முதலியார் என்பவரிடம் தமிழ் கற்றார்.

தனி வாழ்க்கை

மு. வரதராசன், 1928-ஆம் ஆண்டில் திருப்பத்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் சில காலம் எழுத்தராகப் பணியாற்றினார். 1935 முதல் 1938 வரை திருப்பத்தூர் பள்ளியில் தமிழ் ஆசிரியராகப் இருந்தார்.

1935-ஆம் ஆண்டு தம் மாமன் மகளான ராதா அம்மையாரை மணந்தார். இவர்களுக்குத் திருநாவுக்கரசு, நம்பி, பாரி ஆகிய மகன்கள் உள்ளனர்.

கல்வித்துறை பணி

மு. வரதராசன், 1931-இல் வித்வான் முதல் நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்றார். பின்னர் 1935-இல் வித்வான் தேர்வு எழுதி, அதில் மாநிலத்திலேயே முதல் மாணாக்கராகத் தேர்ச்சி பெற்றார்.1939-இல் பி.ஓ.எல். தேர்ச்சி பெற்றார்.

1944-இல் "தமிழ் வினைச் சொற்களின் தோற்றமும் வளர்ச்சியும்" என்ற தலைப்பில் ஆய்வு மேற்கொண்டு எம்.ஓ.எல். பட்டம் பெற்றார்.

1948-இல் சென்னை பல்கலைக் கழகத்தின் மூலம் "சங்க இலக்கியத்தில் இயற்கை" என்ற தலைப்பில் ஆராய்ச்சி செய்து முனைவர் பட்டம் பெற்றார். சென்னைப் பல்கலைக் கழகத்தின் மூலம் முதல் முதலாகத் தமிழில் முனைவர் பட்டம் பெற்ற பெருமைக்குரியவர்.

1972 ஆம் ஆண்டில் அமெரிக்காவின் ஊஸ்டர் கல்லூரி மு. வரதராசனாருக்கு இலக்கியப் பேரறிஞர் (டி.லிட்) என்ற சிறப்புப் பட்டத்தை வழங்கியது. அமெரிக்கப் பல்கலைக் கழகம் ஒன்றில் டி.லிட். என்னும் சிறப்புப் பட்டம் பெற்ற முதல் தமிழறிஞர் மு. வரதராசன் அவர்களே.

1939-ஆம் ஆண்டில் பச்சையப்பன் கல்லூரில் கீழ்த்திசை மொழிகளில் விரிவுரையாளராகவும்,1945-இல் அக்கல்லூரியின் தமிழ்த் துறைத் தலைவர் பணியாற்றினார். 1961 முதல் 1971 வரை சென்னைப் பல்கலைக் கழகத்தின் தமிழ்த்துறைத் தலைவராகப் இருந்தார். பின்னர் 1971 முதல் 1974 வரை  மதுரைப் பல்கலைக்கழகத் துணைவேந்தராகப் பொறுப்பேற்று பணியாற்றினார்.

தமிழ், ஆங்கிலம், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் தேர்ச்சி பெற்றிருந்தார்.

இலக்கியவாழ்க்கை

மு. வரதராசன், கல்வியாளராக  தனது இலக்கிய வாழ்வை தொடங்கினார். நாவல்கள், சிறுகதைகள், சிறுவர் இலக்கியம், நாடகங்கள், இலக்கணம், கட்டுரைகள், தமிழ் இலக்கிய நூல்கள், பயணக் கட்டுரை, முன்னுரைகள், மொழிபெயர்ப்பு, மேற்கோள்கள் என 91 நூல்களை எழுதியுள்ளார்.

குழந்தை பாடல்கள், கதைகள் எழுதுவதில் மு. வரதராசனுக்கு ஆர்வமிருந்தது. அவருடைய முதல் நூல் "குழந்ததைப் பாடல்கள்" 1939இல் எழுதப்பட்டது.

மு. வரதராசன், தான் எழுதிய நூல்கள் பெரும்பாலானவற்றை தனது சொந்த நிறுவனமான தாயக வெளியீட்டின் வழியாக வெளியிட்டார்.

சாகித்ய அகாடமி, பாரதிய ஞானபீடம், தேசியப் புத்தகக் குழு, இந்திய மொழிக் குழு, சென்னைப் பல்கலைக்கழகத்தின் ஆங்கிலம்-தமிழ் அகராதிக் குழு உள்ளிட்ட ஏராளமான அமைப்புகளில் அங்கம் வகித்துள்ளார்.

அகல்விளக்கு எனும் நாவலுக்கு 1961ல் சாகித்திய அகாதெமி விருது பெற்றார்.

இலக்கிய இடம்

மு. வ வின் திருக்குறள் தெளிவுரை

மு. வரதராசன் அவரது காலகட்டத்தில் திராவிட இயக்கம் முன்வைத்த மரபார்ந்த அறத்தையும் ஒழுக்கவியலையும் அன்றைய இளம் வாசகனுக்கு கதைவடிவில் கொண்டுசென்றவர்.

அவரது கதைகள் பெண்சுதந்திரம், தனிமனித அறம், பொதுக்குடிமைப்பண்புகள் போன்றவற்றை பிரச்சாரம்செய்யும் ஆக்கங்களாக அமைந்தவை. மு. வரதராசன் ஒருகாலகட்டத்தின் இலட்சியங்களை ஒரு சாராருக்கு எடுத்துச் சென்ற அளவில் தமிழ்ச் சிந்தனை மரபிலும் இலக்கிய வரலாற்றிலும் இடம் பெற்றவர்.

மரபிலக்கிய தளத்தில் மு. வரதராசனின் முக்கியமான சாதனை என்று சொல்லப்பட வேண்டியது அவரது நூலான திருக்குறள் தெளிவுரை.

மறைவு

மு.வரதராசனார்  சென்னையில் அக்டோபர் 10, 1974 அன்று காலமானார்.

விருதுகள்

  • சாகித்ய அகாதெமி விருது - அகல் விளக்கு நாவல் (1961)
  • தமிழக அரசின் விருது - கள்ளோ காவியமோ, அரசியல் அலைகள், மொழியியல் கட்டுரைகள்
  • தமிழ் வளர்ச்சிக் கழகத்தின் பாராட்டுப் பத்திரங்கள் - திருவள்ளுவர் அல்லது வாழ்க்கை விளக்கம், மொழிநூல், கள்ளோ காவியமோ,அரசியல் அலைகள், விடுதலையா, ஓவச் செய்தி.

படைப்புகள்

சிறுவர்க்கான இலக்கியங்கள்
  • குழந்தைப் பாடல்கள்
  • இளைஞருக்கான இரு சிறுகதைகள்
  • படியாதவர் படும்பாடு
  • கண்ணுடைய வாழ்வு
தழுவல் மொழிபெயர்ப்புகள்
  • கழகச் சிறுகதைகள் 1
  • கழகச் சிறுகதைகள் 2
  • கழகச் சிறுகதைகள் 3
மொழிபெயர்ப்புகள்
  • சிறுவர்க்கான ஷேஸ்பியர்  கதைகள் – 1
  • சிறுவர்க்கான ஷேஸ்பியர்  கதைகள் – 2
இலக்கணம்
  • கழகத் தமிழ் இலக்கணம் 1
  • கழகத் தமிழ் இலக்கணம் 2
  • கழகத் தமிழ் இலக்கணம் 3
நாவல்கள்
  • செந்தாமரை
  • கள்ளோ? காவியமோ?
  • கி.பி. 2000
  • பாவை
  • அந்த நாள்
  • மலர்விழி
  • பெற்ற மனம்
  • அல்லி
  • கரித்துண்டு
  • கயமை
  • நெஞ்சில் ஒரு முள்
  • அகல்விளக்கு
  • மண்குடிசை
  • வாடா மலர்
சிறுகதை
  • விடுதலையா?
  • குறட்டை ஒலி
  • பழியும் பாவமும்
நாடகம்
  • பச்சையப்பர்
  • மூன்று நாடகங்கள்
  • காதல் எங்கே?
  • மனச்சான்று
கடித இலக்கியம்
  • அன்னைக்கு
  • தம்பிக்கு
  • தங்கைக்கு
  • நண்பர்க்கு
  • டாக்டர் மு.வ.வின் கடிதங்கள்
பயண இலக்கியம்
  • யான் கண்ட இலங்கை
வாழ்க்கை வரலாறு
  • அறிஞர் பெர்னாட்ஷா
  • காந்தியண்ணல்
  • கவிஞர் தாகூர்
  • திரு.வி.க
திறனாய்வு
  • இலக்கிய ஆராய்ச்சி
  • இலக்கியத் திறன்
  • இலக்கிய மரபு
  • இலக்கியக் காட்சிகள்
இலக்கிய ஆய்வு
  • ஓவச் செய்தி
  • தமிழ் நெஞ்சம்
  • மணல்வீடு
  • திருக்குறள் அல்லது வாழ்க்கை விளக்கம்
  • கண்ணகி
  • மாதவி
  • முல்லைத்திணை
  • நற்றிணைவிருந்து
  • நற்றிணைச் செல்வம்
  • குறுந்தொகை விருந்து
  • குறுந்தொகைச் செல்வம்
  • நெடுந்தொகை விருந்து
  • நெடுந்தொகைச் செல்வம்
  • நடைவண்டி
  • கொங்குதேர் வாழ்க்கை
  • புலவர் கண்ணீர்
  • இளங்கோ அடிகள்
  • குறள் காட்டும் காதலர்
  • தாயுமானவர்
  • மு.வ.வின் கட்டுரைகள் பகுதி1
  • மு.வ.வின் கட்டுரைகள் பகுதி2
உரை
  • திருக்குறள் தெளிவுரை
இலக்கிய வரலாறு
  • தமிழ் இலக்கிய வரலாறு
சிந்தனைக் கட்டுரைகள்
  • அறமும் அரசியலும்
  • அரசியல் அலைகள்
  • குழந்தை
  • கல்வி
  • மொழிப்பற்று
  • நாட்டுப்பற்று
  • குருவிப்போர்
  • பெண்மை வாழ்க
  • உலகப்பேரேடு
  • மண்ணின் மதிப்பு
  • நல்வாழ்வு
மொழியியல்
  • மொழிநூல்
  • மொழியின் கதை
  • எழுத்தின் கதை
  • சொல்லின் கதை
  • மொழி வரலாறு
  • மொழியியற் கட்டுரைகள்
முன்னுரைகள்
  • மு.வ.வின் முன்னுரைகள்
மேற்கோள்கள்
  • டாக்டர் மு.வ.வின் மணிமொழிகள்
ஆங்கில நூல்கள்
  • The Treatment of Nature in Sangam Literature
  • Ilango Adigal

உசாத்துணை

 மு.வரதராசனார் - தமிழ் விக்கிப்பீடியா

மு.வ- ஒரு மதிப்பீடு - ஜெயமோகன்.இன்

டாக்டர் மு. வரதராசன்