குலாம் காதிறு நாவலர்: Difference between revisions

From Tamil Wiki
(Created page with "குலாம் காதிறு நாவலர் தமிழ் புலவர். இவரது நூல்களை தமிழக அரசு 2007இல் நாட்டுடைமையாக்கியது. == இலக்கிய வாழ்க்கை == இவர் தமிழ், அரபு, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் புலமை பெற்றிருந்தார். கவிதை...")
 
No edit summary
Line 1: Line 1:
குலாம் காதிறு நாவலர் தமிழ் புலவர். இவரது நூல்களை தமிழக அரசு 2007இல் நாட்டுடைமையாக்கியது.   
குலாம் காதிறு நாவலர் (1833)தமிழ் புலவர். காப்பியப் புலவர், உரைநடை ஆசிரியர், மொழிபெயர்ப்பாளர், பேச்சாளர், பத்திரிக்கை ஆசிரியர் என பன்முகம் கொண்டவர். நான்காம் தமிழ்ச்சங்கம் அமையக் காரணமானவர்களில் ஒருவர்; அதன் முதற்பெரும் புலவர். இவரது நூல்களை தமிழக அரசு 2007இல் நாட்டுடைமையாக்கியது.   
 
== பிறப்பு, கல்வி ==
நாகப்பட்டினம் மாவட்டம் நாகூரில் 1833இல் ஆயுர்வேத பாஸ்கர பண்டித வாப்பு ராவுத்தரின் மகனாக குலாம் காதிறு நாவலர் பிறந்தார்.
 
எழுத்துச்சுவடி, எண்சுவடி, திவாகரம், பிங்கலம், நிகண்டு ஆகியவைகளை திண்ணைப் பள்ளிகளில் கற்றுத்தேர்ந்தார். நாகூர் பெரும்புலவர் நாராயணசுவாமி பண்டிதர், மீனாட்சி சுந்தரம்பிள்ளை ஆகியோரிடம் தமிழ் பயின்றார்.

== இலக்கிய வாழ்க்கை ==
== இலக்கிய வாழ்க்கை ==
இவர் தமிழ், அரபு, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் புலமை பெற்றிருந்தார். கவிதை இலக்கியங்கள் பத்தொன்பது. உரைநடை இலக்கியங்கள் ஏழு. மொழிபெயர்ப்பு நூல்கள் மூன்று. இலக்கண நூல்கள் இரண்டு. இதர நூல்கள் இரண்டு. காப்பியங்கள், கலம்பகங்கள், கோவைகள், அந்தாதிகள், மாலைகள், உரை நூல்கள் என இவர் 24 நூல்களை எழுதினார். காப்பியங்கள், கலம்பகம், கோவைகள், அந்தாதிகள், மாலைகள், உரைநூல்கள் என அவர் இயற்றிய இலக்கிய வகைகள். நாகூர் நாயகத்தின் வரலாற்றை முதல் முதலில் நூலாகக் கொண்டு வந்தவர் குலாம் காதிறு நாவலர். நான்காவது நக்கீரர் என்று அழைக்கப்படுகிறார். மறைமலை அடிகளார் இவரின் மாணவர்.
தமிழ், அரபு, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் புலமை பெற்றிருந்தார். இவர் பத்தொன்பது கவிதை நூல்கள், ஏழு உரைநடை நூல்கள், மூன்று மொழிபெயர்ப்பு நூல்கள், இரண்டு இலக்கண நூல்கள் எழுதியுள்ளார். காப்பியங்கள், கலம்பகம், கோவைகள், அந்தாதிகள், மாலைகள், உரைநூல்கள் என பல இலக்கிய வகைகளில் எழுதியுள்ளார். நாகூர் நாயகத்தின் வரலாற்றை முதல் முதலில் நூலாகக் கொண்டு வந்தார். செல்வந்தர் பெ.மா. மதுரைப்பிள்ளையை வாழ்த்தி மதுரைக்கோவை நூலைப் படைத்தார். நான்காவது நக்கீரர் என்று அழைக்கப்படுகிறார். மறைமலை அடிகளார் இவரின் மாணவர்.
 
== விருது ==
* செல்வந்தர் பெ.மா. மதுரைப்பிள்ளை புலவர் குலாம் காதிறுவுக்கு நாவலர் பட்டத்தை தங்கத் தாம்பாளத்தில் பொறித்து அளித்தார். இது முதல் குலாம் காதிறு நாவலர் என்று அழைக்கப்பட்டார்.

== நூல் பட்டியல் ==  
== நூல் பட்டியல் ==  
Line 21: Line 29:
* மும்மணிக் கோவை
* மும்மணிக் கோவை
* மதுரைக் கோவை
* மதுரைக் கோவை
* சச்சிதானந்தமாலை
* அபிநயஒத்து
* இசை நுணுக்கம்
* சித்திரக்கவித்திரட்டு
* சித்திரக்கவித்திரட்டு
* சீறா வசன காவியம்
* சீறா வசன காவியம்
Line 32: Line 43:
== உசாத்துணை ==
== உசாத்துணை ==
* https://ta.xn----7sbiewaowdbfdjyt.pp.ua/97065/1/%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D.html

*https://www.dinamani.com/tamilnadu/2019/mar/11/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%95%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE-3111356.html

Revision as of 14:11, 9 March 2022

குலாம் காதிறு நாவலர் (1833)தமிழ் புலவர். காப்பியப் புலவர், உரைநடை ஆசிரியர், மொழிபெயர்ப்பாளர், பேச்சாளர், பத்திரிக்கை ஆசிரியர் என பன்முகம் கொண்டவர். நான்காம் தமிழ்ச்சங்கம் அமையக் காரணமானவர்களில் ஒருவர்; அதன் முதற்பெரும் புலவர். இவரது நூல்களை தமிழக அரசு 2007இல் நாட்டுடைமையாக்கியது.

பிறப்பு, கல்வி

நாகப்பட்டினம் மாவட்டம் நாகூரில் 1833இல் ஆயுர்வேத பாஸ்கர பண்டித வாப்பு ராவுத்தரின் மகனாக குலாம் காதிறு நாவலர் பிறந்தார்.

எழுத்துச்சுவடி, எண்சுவடி, திவாகரம், பிங்கலம், நிகண்டு ஆகியவைகளை திண்ணைப் பள்ளிகளில் கற்றுத்தேர்ந்தார். நாகூர் பெரும்புலவர் நாராயணசுவாமி பண்டிதர், மீனாட்சி சுந்தரம்பிள்ளை ஆகியோரிடம் தமிழ் பயின்றார்.

இலக்கிய வாழ்க்கை

தமிழ், அரபு, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் புலமை பெற்றிருந்தார். இவர் பத்தொன்பது கவிதை நூல்கள், ஏழு உரைநடை நூல்கள், மூன்று மொழிபெயர்ப்பு நூல்கள், இரண்டு இலக்கண நூல்கள் எழுதியுள்ளார். காப்பியங்கள், கலம்பகம், கோவைகள், அந்தாதிகள், மாலைகள், உரைநூல்கள் என பல இலக்கிய வகைகளில் எழுதியுள்ளார். நாகூர் நாயகத்தின் வரலாற்றை முதல் முதலில் நூலாகக் கொண்டு வந்தார். செல்வந்தர் பெ.மா. மதுரைப்பிள்ளையை வாழ்த்தி மதுரைக்கோவை நூலைப் படைத்தார். நான்காவது நக்கீரர் என்று அழைக்கப்படுகிறார். மறைமலை அடிகளார் இவரின் மாணவர்.

விருது

  • செல்வந்தர் பெ.மா. மதுரைப்பிள்ளை புலவர் குலாம் காதிறுவுக்கு நாவலர் பட்டத்தை தங்கத் தாம்பாளத்தில் பொறித்து அளித்தார். இது முதல் குலாம் காதிறு நாவலர் என்று அழைக்கப்பட்டார்.

நூல் பட்டியல்

  • புலவராற்றுப்படை
  • நாகூர்ப் புராணம்
  • ஆரிபு நாயகப் புராணம்
  • ஆரிபு நாயக வசனம்
  • உமறு பாஷா யுத்த சரித்திரம் (நான்கு பாகங்கள்)
  • கன்ஜுல் கறாமத்து
  • அரபுத் தமிழ் அகராதி
  • முகாஷஃபா மாலை
  • பொருந்தா இலக்கணம்
  • குவாலீர்க் கலம்பகம்
  • நாகூர்க் கலம்பகம்
  • திருமக்காத் திரிபந்தாதி
  • சமுத்திர மாலை
  • பிரபந்தத் திரட்டு
  • மும்மணிக் கோவை
  • மதுரைக் கோவை
  • சச்சிதானந்தமாலை
  • அபிநயஒத்து
  • இசை நுணுக்கம்
  • சித்திரக்கவித்திரட்டு
  • சீறா வசன காவியம்
  • திருமணிமாலை வசனம்
  • நன்னூல் விளக்கம்
  • தரீக்குல் ஜன்னா உரை
  • நபிகள் பிரான் நிர்யாணமான்மிய உரை
  • பதாயிகுக் கலம்பகம்
  • அறபுத்தமிழ் அகராதி

உசாத்துணை