first review completed

108 சக்தி பீடங்கள்: Difference between revisions

From Tamil Wiki
(Para Added and Edited: Table Created: Link Created: Proof Checked.)
No edit summary
Line 451: Line 451:
* [https://tamilandvedas.com/2019/12/13/108-%e0%ae%9a%e0%ae%95%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%aa%e0%af%80%e0%ae%9f%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8dpost-no-7335/ தமிழ் அண்ட் வேதாஸ் தளம்]  
* [https://tamilandvedas.com/2019/12/13/108-%e0%ae%9a%e0%ae%95%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%aa%e0%af%80%e0%ae%9f%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8dpost-no-7335/ தமிழ் அண்ட் வேதாஸ் தளம்]  
* [https://m.dinamalar.com/detail.php?id=2210677 தினமலர் இதழ் கட்டுரை]  
* [https://m.dinamalar.com/detail.php?id=2210677 தினமலர் இதழ் கட்டுரை]  
{{Ready for review}}
{{First review completed}}

Revision as of 01:24, 19 December 2023

சக்தி பீடம் என்பதற்கு சக்தியின் அமைவிடம் என்பது பொருள். தட்சனின் மகளான தாட்சாயணியின் உடல் பாகங்கள் விழுந்த 108 இடங்களில் அமைந்த ஆலயங்களே 108 சக்தி பீடங்களாகக் கருதப்படுகின்றன.

108 சக்தி பீடங்கள் – விளக்கம்

108 சக்தி பீடங்கள் பற்றி தேவி பாகவதத்திலும் பிற புராண நூல்களிலும் கூறப்பட்டுள்ளது. தேவி பாகவதத்தின் ஏழாம் ஸ்கந்தத்தில், முப்பதாவது அத்தியாயத்தில் 108 சக்தி பீடங்கள் பற்றிய குறிப்பு உள்ளது. அதில், ஜனமேய மகாராஜா, வியாஸரிடம், 108 சக்தி பீடங்கள் பற்றிக் கேட்டதாகவும், அவர் 108 சக்தி பீடங்கள் பற்றி விளக்கியதாகவும் குறிப்பு உள்ளது.

108 சக்தி பீடங்கள்

எண் பீடம் அன்னையின் திருப்பெயர்
1 காசி விசாலாஷி
2 நைமிசாரண்யம் லிங்க தாரணீ
3 பிரயாகை லலிதை
4 கந்தமாதனம் காமுகீ
5 மானசரஸ் குமுதா
6 மானசரஸின் தென்திசை விசுவகாமா பகவதி
7 மானசரஸின் வடதிசை விஸ்வகாமப்பூரணி
8 கோமந்தகம் கோமதி
9 மந்தரம் காமசாரிணீ
10 சயித்திரரதம் மதோத்கடை
11 அஸ்தினாபுரம் ஜயந்தி
12 கன்யாகுப்ஜம் கௌரி
13 மலையாசலம் ரம்பை
14 ஏகாம்பர பீடம் கீர்த்திமதி
15 விஸ்வம் விஸ்வேஸ்வரி
16 புஷ்பகரம் புருஹீதை
17 கேதார பீடம் சன்மார்க்கதாயினி
18 இமயமலையின் பின்புறம் மந்தா தேவி
19 கோகர்ணம் பத்திரகர்ணிகா தேவி
20 பவானியில் ஸ்தானேஸ்வரி
21 வில்வ பத்திரிகை பில்வகை
22 ஸ்ரீசைலம் மாதவி
23 பத்திரை பத்திரேஸ்வரி
24 வராக மலை ஜயை
25 கமலாலயம் கமலை
26 ருத்ரகோடி ருத்திராணி
27 காலஞ்சரம் காளி
28 சாளக்கிராமம் மகாதேவி
29 சிவலிங்கம் ஜலப்பிரபை
30 மகாலிங்கம் கபிலை
31 மாகோட்டம் மகுடேஸ்வரி
32 மாயாபுரி குமாரி
33 சந்தானம் லலிதாம்பிகை
34 கயை மங்களாம்பிகை
35 புருஷோத்தமம் விமலை
36 சகஸ்ராஷம் உத்பலாட்சி
37 இரணாஷம் மகோத்பலை
38 விபசா அமோகாஷி
39 புண்டரவர்த்தனம் பாடலீ
40 சுபாரு சுவம் நாராயணி
41 திரிகூட பர்வதம் ருத்திர சுந்தரி
42 விபுலம் விபுலாதேவி
43 மலையாசலம் கல்யாணி
44 சஹ்ய பர்வதம் ஏகவீனர்
45 அரிச்சந்திரம் சந்திரிகாதேவி
46 ராமதீர்த்தம் ரமணீ
47 யமுனா தீர்த்தம் மிருகாவதி
48 கோடிக்கரை கோடவீ
49 மாதவனம் சுகந்தா தேவி
50 கோதாவரியில் திரிசந்தி
51 கங்காதுவாரம் ரதப்பிரியை
52 சிவகுண்டம் சுபானந்தை
53 தேவிகாதடம் நந்தினி
54 துவாரகை ருக்மிணி
55 பிருந்தாவனம் ராதை
56 மதுரை தேவகி
57 பாதாளம் பரமேஸ்வரி
58 சித்திரகூடம் சீதாதேவி
59 விந்தியம் விந்தியாவாசினி
60 கரவீரம் மகாலஷ்மி
61 வைத்தியநாதம் ஆரோக்யை
62 விநாயகத்தலம் உமாதேவி
63 மகாகளம் மகேஸ்வரி
64 உஷ்ண தீர்த்தம் அபயாம்பிகை
65 விந்தியமலை நிதம்பை
66 மாண்டவியம் மாண்டவி
67 மகேஸ்வரபுரம் ஸ்வாஹாதேவி
68 சகலண்டலம் பிரசண்டை
69 அமரகண்டம் சண்டிகாதேவி
70 சோமேஸ்வரம் வராரோகை
71 பிரபாசம் புஷ்கராவதி
72 மகாலயம் மகாபாகை
73 சரஸ்வதி நதித்தலம் தேவமாதை
74 பயோஷணியம் பிங்களேஸ்வரி
75 கிருத சௌக்யம் சிம்மாகை
76 கார்த்திகை ஆதிசங்கரி
77 உற்பலாவர்தம் லோலாதேவி
78 சோணசங்கமம் சுபத்திரா
79 சித்தவதனம் லஷ்மி
80 பரதாசிரமம் அனங்கை
81 ஜாலந்தரம் விஸ்வமுகி
82 கிஷ்கிந்த மலை தாராதேவி
83 தேவதாரு வனம் யுஷ்டிர்மேதை
84 காஷ்மீரம் பீமாதேவி
85 ஹிமாத்திரி துஷ்டி விஸ்வேஸ்வரி
86 கபால மோசனம் சுத்தி
87 காயாரோகணம் மாதாதேவி
88 சங்கோத்தரம் தாரா
89 பிண்டாரக ஆலயம் திருதி
90 சந்திரபாகா நதி கலாதேவி
91 அச்சோதயம் சிவதாரணி
92 வேணியாறு அமுதாதேவி
93 பத்ரி உரசி
94 உத்தரகிரி ஔஷதை
95 குசத்வீபம் குசோதகா தேவி
96 ஏமகூடம் மன்மதை
97 குமுதம் சத்தியத்வாதினி
98 அஸ்வம் வந்தினி
99 குபோலயம் நிதிதேவி
100 தேவ முகம் காயத்திரி தேவி
101 பிரம்மா முகம் சரஸ்வதி
102 சிவ சந்நிதி பார்வதி தேவி
103 தேவலோகம் இந்திராணி
104 சூரியபிம்பம் பிரபாதேவி
105 சப்த மாதர்களில் வைஷ்ணவி
106 பதிவிரதைகளில் அருந்ததி
107 அழகான மங்கையரில் திலோத்தமை
108 சகல உயிர்களின் எண்ணத்தில் பிரம்ம கலை

தமிழ்நாட்டில் 108 சக்தி பீடங்கள்

காஞ்சிபுரம், சுங்குவார்சத்திரத்தை அடுத்துள்ள கண்ணந்தாங்கல் கிராமத்தில் 108 சக்தி பீட ஆலயம் அமைந்துள்ளது. இங்கு 108 பீட சக்தி தேவிகளும் தனித் தனிச் சன்னதிகளில் காட்சி தருகின்றனர். மூலவராக ஸ்வர்ண காமாட்சி அம்மன் எழுந்தருளியுள்ளார்.

உசாத்துணை


🖒 First review completed

Please do not write any content below this line. This section is only for editing templates & categories.