அத்யாத்ம ராமாயணம்: Difference between revisions

From Tamil Wiki
(Created page with "அத்யாத்ம ராமாயணம் ( ) பிற்காலத்தைய ராமாயணங்களில் ஒன்று. சம்ஸ்க்ருத மொழியில் அமைந்தது. ராமனை முழுமுதல் கடவுளாக முன்னிறுத்தும் பக்திப்படைப்பு. பல்வேறு நாட்டார் ராமாயணங்களையும்...")
 
No edit summary
Line 1: Line 1:
அத்யாத்ம ராமாயணம் ( ) பிற்காலத்தைய ராமாயணங்களில் ஒன்று. சம்ஸ்க்ருத மொழியில் அமைந்தது. ராமனை முழுமுதல் கடவுளாக முன்னிறுத்தும் பக்திப்படைப்பு. பல்வேறு நாட்டார் ராமாயணங்களையும் வட்டார ராமாயணங்களையும் இணைத்துக்கொண்டு ராமசர்மா என்னும் ஆசிரியரால் எழுதப்பட்டது.
அத்யாத்ம ராமாயணம் (பொயு 13 -15) பிற்காலத்தைய ராமாயணங்களில் ஒன்று. சம்ஸ்க்ருத மொழியில் அமைந்தது. ராமனை முழுமுதல் கடவுளாக முன்னிறுத்தும் பக்திப்படைப்பு. பல்வேறு நாட்டார் ராமாயணங்களையும் வட்டார ராமாயணங்களையும் இணைத்துக்கொண்டு ராமசர்மா என்னும் ஆசிரியரால் எழுதப்பட்டது.
 
== பெயர் ==
அத்யாத்ம என்றா சொல் ஆன்மிக என்னும் சொல்லுக்கு சமானமானது. ஆத்மவிடுதலை சார்ந்தது என பொருள்கொள்ளலாம்.
 
== ஆசிரியர் ==
அத்யாத்ம ராமாயணத்தின் ஆசிரியர் வியாசர் என்பது வைதிகநம்பிக்கை. இந்நூல் பிரம்மாண்டபுராணத்தின் ஒரு பகுதியாக அமைந்துள்ளது. இதன் ஆசிரியர் பொயு 13 அல்லது 15 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ராமானந்தர் என்பவர் என்றும் ராமசர்மா என்பவர் என்றும் வெவ்வேறு கூற்றுகள் உள்ளன. 
 
== அமைப்பு ==
அத்யாத்ம ராமாயணம் 7 காண்டங்களிலாக 65 அத்தியாயங்களும் 4500 செய்யுட்களும் கொண்டது. சிவனும் பார்வதியும் ராமனின் பிறப்பு முதல் ராமாயணாக்கதையை சொல்வதாக இதன் அமைப்பு உள்ளது.
 
== உள்ளடக்கம் ==
 
====== பாலகாண்டம் ======
பிரம்மத்தின் இயல்பு, பிரம்மமே மானுட குணங்களுடன் ராமனாக வந்தது,  ராமனின் பிறப்பு மற்றும் அகலியை சாபவிமோசனம் ஆகியவை இதில் பேசப்பட்டுள்ளன
 
====== அயோத்யா காண்டம் ======
ராமன் காடுசெல்வது, தசரதனின் மறைவு வரையில் இதில் பேசப்பட்டுள்ளன
 
====== ஆரண்யகாண்டம் ======
சீதை ராவணனால் கவரப்படுவது வரை இதில் விவரிக்கப்படுகிறது
 
====== கிஷ்கிந்தா காண்டம் ======
கிஷ்கிந்தையில் ராமன் வாலியை கொல்வது, சீதையை தேடிச்செல்வது ஆகியவை பேசப்படுகின்றன
 
====== சுந்தர காண்டம் ======
அனுமனின் பிறப்பு , ஆற்றல் மற்றும் அனுமன் இலங்கைக்குச் சென்ற கதை இதில் உள்ளது
 
====== இலங்கைக்காண்டம் ======
ராமனுக்கும் ராவணனுக்குமான போர். ராமன் சீதையை மீட்டு அயோத்தி திரும்புதல்
 
====== உத்தர காண்டம் ======
சீதையை ராமன் காட்டுக்கு அனுப்புதல், ராமனின் மைந்தர்களான லவன் குசன் ஆகியோர் பிறத்தல், ராமன் வைகுண்டம் செல்லுதல் ஆகியவை இப்பகுதியில் உள்ளன.
 
== தத்துவம் ==
அத்யாத்ம ராமாயணம் பக்தி இயக்கத்தின் வெளிப்பாடாக அமைந்த நூல். ராமனை ஓர் அரசனாக அன்றி முழுமுதல் தெய்வமாகவும், பிரம்மத்தின் வடிவமாகவும் இந்நூல் முன்வைக்கிறது. அதை சிவனே பார்வதியிடம் விளக்குவதுபோல் அமைந்திருப்பதனால் வைணவத்தின் முதன்மையையும் இந்நூல் வலியுறுத்துகிறது.
 
இந்நூலில் ராமனுக்கும் லட்சுமணனுக்குமான உரையாடல் உள்ளது. அது ராமகீதை என அழைக்கப்படுகிறது. வேதாந்தத்தின் நோக்கில் பக்தியை முன்வைக்கும் ஒரு சிறு தத்துவநூலாக இது கருதப்படுகிறது.
 
== உசாத்துணை ==
[https://www.tamildigitallibrary.in/book-detail?id=jZY9lup2kZl6TuXGlZQdjZMelJly&tag=%E0%AE%85%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AE+%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D#book1/ அத்யாத்ம ராமாயணம் இணையநூலகம்]

Revision as of 11:31, 11 December 2023

அத்யாத்ம ராமாயணம் (பொயு 13 -15) பிற்காலத்தைய ராமாயணங்களில் ஒன்று. சம்ஸ்க்ருத மொழியில் அமைந்தது. ராமனை முழுமுதல் கடவுளாக முன்னிறுத்தும் பக்திப்படைப்பு. பல்வேறு நாட்டார் ராமாயணங்களையும் வட்டார ராமாயணங்களையும் இணைத்துக்கொண்டு ராமசர்மா என்னும் ஆசிரியரால் எழுதப்பட்டது.

பெயர்

அத்யாத்ம என்றா சொல் ஆன்மிக என்னும் சொல்லுக்கு சமானமானது. ஆத்மவிடுதலை சார்ந்தது என பொருள்கொள்ளலாம்.

ஆசிரியர்

அத்யாத்ம ராமாயணத்தின் ஆசிரியர் வியாசர் என்பது வைதிகநம்பிக்கை. இந்நூல் பிரம்மாண்டபுராணத்தின் ஒரு பகுதியாக அமைந்துள்ளது. இதன் ஆசிரியர் பொயு 13 அல்லது 15 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ராமானந்தர் என்பவர் என்றும் ராமசர்மா என்பவர் என்றும் வெவ்வேறு கூற்றுகள் உள்ளன.

அமைப்பு

அத்யாத்ம ராமாயணம் 7 காண்டங்களிலாக 65 அத்தியாயங்களும் 4500 செய்யுட்களும் கொண்டது. சிவனும் பார்வதியும் ராமனின் பிறப்பு முதல் ராமாயணாக்கதையை சொல்வதாக இதன் அமைப்பு உள்ளது.

உள்ளடக்கம்

பாலகாண்டம்

பிரம்மத்தின் இயல்பு, பிரம்மமே மானுட குணங்களுடன் ராமனாக வந்தது, ராமனின் பிறப்பு மற்றும் அகலியை சாபவிமோசனம் ஆகியவை இதில் பேசப்பட்டுள்ளன

அயோத்யா காண்டம்

ராமன் காடுசெல்வது, தசரதனின் மறைவு வரையில் இதில் பேசப்பட்டுள்ளன

ஆரண்யகாண்டம்

சீதை ராவணனால் கவரப்படுவது வரை இதில் விவரிக்கப்படுகிறது

கிஷ்கிந்தா காண்டம்

கிஷ்கிந்தையில் ராமன் வாலியை கொல்வது, சீதையை தேடிச்செல்வது ஆகியவை பேசப்படுகின்றன

சுந்தர காண்டம்

அனுமனின் பிறப்பு , ஆற்றல் மற்றும் அனுமன் இலங்கைக்குச் சென்ற கதை இதில் உள்ளது

இலங்கைக்காண்டம்

ராமனுக்கும் ராவணனுக்குமான போர். ராமன் சீதையை மீட்டு அயோத்தி திரும்புதல்

உத்தர காண்டம்

சீதையை ராமன் காட்டுக்கு அனுப்புதல், ராமனின் மைந்தர்களான லவன் குசன் ஆகியோர் பிறத்தல், ராமன் வைகுண்டம் செல்லுதல் ஆகியவை இப்பகுதியில் உள்ளன.

தத்துவம்

அத்யாத்ம ராமாயணம் பக்தி இயக்கத்தின் வெளிப்பாடாக அமைந்த நூல். ராமனை ஓர் அரசனாக அன்றி முழுமுதல் தெய்வமாகவும், பிரம்மத்தின் வடிவமாகவும் இந்நூல் முன்வைக்கிறது. அதை சிவனே பார்வதியிடம் விளக்குவதுபோல் அமைந்திருப்பதனால் வைணவத்தின் முதன்மையையும் இந்நூல் வலியுறுத்துகிறது.

இந்நூலில் ராமனுக்கும் லட்சுமணனுக்குமான உரையாடல் உள்ளது. அது ராமகீதை என அழைக்கப்படுகிறது. வேதாந்தத்தின் நோக்கில் பக்தியை முன்வைக்கும் ஒரு சிறு தத்துவநூலாக இது கருதப்படுகிறது.

உசாத்துணை

அத்யாத்ம ராமாயணம் இணையநூலகம்