சுந்தர முதலியார்: Difference between revisions
Subhasrees (talk | contribs) m (Subhasrees moved page சுந்தர முதலியார் to சுந்தர முதலியார் without leaving a redirect) |
Subhasrees (talk | contribs) mNo edit summary |
||
Line 7: | Line 7: | ||
சுந்தர முதலியார், சிவராம சங்கீர்த்தனம் என்னும் முக்கியமான கீர்த்தனைநூலை இயற்றியவர். இதுதவிர மயிலை வழிநடைக்கும்மி என்ற 180 கண்ணிகள் கொண்ட ஒரு நூலையும் இயற்றியிருக்கிறார். | சுந்தர முதலியார், சிவராம சங்கீர்த்தனம் என்னும் முக்கியமான கீர்த்தனைநூலை இயற்றியவர். இதுதவிர மயிலை வழிநடைக்கும்மி என்ற 180 கண்ணிகள் கொண்ட ஒரு நூலையும் இயற்றியிருக்கிறார். | ||
இவரது புலமை குறித்து அக்காலத்தில் சைவசாஸ்திர நிபுணராகவும், புலவராகவும் அறியப்பட்ட பூவை கலியாண சுந்தர முதலியார் ’பதுமப்ந்தம்’ என்றொரு சித்திரக்கவி இயற்றியிருக்கிறார். | இவரது புலமை குறித்து அக்காலத்தில் சைவசாஸ்திர நிபுணராகவும், புலவராகவும் அறியப்பட்ட பூவை கலியாண சுந்தர முதலியார் ’பதுமப்ந்தம்’ என்றொரு [[சித்திரக்கவி]] இயற்றியிருக்கிறார். | ||
====== சிவராம சங்கீர்த்தனம் ====== | ====== சிவராம சங்கீர்த்தனம் ====== |
Revision as of 20:33, 6 March 2022
சுந்தர முதலியார் கர்னாடக இசைப்பாடல்கள் இயற்றியவர். சிவராம சங்கீர்த்தனம் இவருடைய முக்கியமான படைப்பு
இளமை
இவரது தந்தை வியாசர்பாடியைச் சேர்ந்த அப்பாசாமி முதலியார்.
இசைப்பணி
சுந்தர முதலியார், சிவராம சங்கீர்த்தனம் என்னும் முக்கியமான கீர்த்தனைநூலை இயற்றியவர். இதுதவிர மயிலை வழிநடைக்கும்மி என்ற 180 கண்ணிகள் கொண்ட ஒரு நூலையும் இயற்றியிருக்கிறார்.
இவரது புலமை குறித்து அக்காலத்தில் சைவசாஸ்திர நிபுணராகவும், புலவராகவும் அறியப்பட்ட பூவை கலியாண சுந்தர முதலியார் ’பதுமப்ந்தம்’ என்றொரு சித்திரக்கவி இயற்றியிருக்கிறார்.
சிவராம சங்கீர்த்தனம்
சிவராம சங்கீர்த்தனத்தின் முதல் பதிப்பு 1876க்கு முன்னர் அச்சாகி இருக்கிறது. மூன்றாவது பதிப்பு 1904ல் அச்சானது.மீனாட்சிசுந்தரம் பிள்ளை முதலான பல தமிழ்புலவர்கள் இந்நூலுக்கு சிறப்புப்பாயிரம் எழுதியிருக்கிறார்கள்.
சுந்தர முதலியார் திருவள்ளுவரை ஆன்ம சத்குருவாகக் கொண்டவர். அவர் மீது தனிப்பாடல்களும் இயற்றியிருக்கிறார். சிவராம சங்கீர்த்தனத்தில் திருவள்ளுவர் மீது வருணப் பஞ்சமம், நாமாவளி எனப் பிரபந்தங்களும் பாடியிருக்கிறார். விநாயகர், சரஸ்வதி, சற்குரு, சைவசமயம், சைவசமயாசாரியார், சிவதீர்த்தம் எனத்தொடங்கி இந்நூலில் தலக்கீர்த்தனங்களும் எழுதியிருக்கிறார். பஞ்சபூதத்தலங்கள் தொடங்கி கயிலை, காசி முதல் திருக்கோகர்ணம் வரை 61 தலங்கள் மீது இசைப்பாடல்கள். பின் அம்பிகைத்தலங்கள் 12ம், முருகனின் அறுபடை வீடுகள் உள்ளிட்ட 13 தலங்கள் மீதும் பாடல்கள் பாடியிருக்கிறார்.
சிவராம சங்கீர்த்தனத்தில் கட்டியம், நாமாவளி, ஊசல், எச்சரிக்கை, லாலி, வாழ்த்து, கும்மி, ஆனந்தக்களிப்பு எனப் பல வடிவங்களில் பல தெய்வங்கள் மீதும் பாடல்கள் எழுதியிருக்கிறார்.
கீர்த்தனைகளில் மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட சரணங்கள் எழுதியிருக்கிறார். பல கீர்த்தனைகளின் இறுதியில் நாமாவளி என இரண்டடிகள் எழுதியிருக்கிறார்.
எடுத்துக்காட்டு
தில்லை மீது இவர் பாடிய தலப்பாடல் கீர்த்தனை:
ராகம்: கௌளி பந்து, தாளம்: ஆதி
பல்லவி:
நமக்கினி நமன் பயம் ஏது - தில்லை நடராஜனிருக்கும்போது
அனுபல்லவி:
அமரர் முனிவர்தொழப் பொன்னம் பலத்தினில்
ஆனந்தக் கூத்தாடும் அற்புதன் இருக்க (நமக்கினி)
உசாத்துணை
இந்த பக்கம் தற்பொழுது மெய்ப்பு பார்க்கப்படுகிறது. மாற்றம் எதுவும் செய்ய வேண்டாம்
Ready for review
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.