under review

மண்டயம் வீரம்புடி சீனிவாசன்: Difference between revisions

From Tamil Wiki
No edit summary
No edit summary
 
Line 42: Line 42:
* [https://www.science.org.au/learning/general-audience/history/interviews-australian-scientists/professor-mandyam-veerambudi Professor Mandyam Veerambudi Srinivasan, bioengineer and neuroscientist]
* [https://www.science.org.au/learning/general-audience/history/interviews-australian-scientists/professor-mandyam-veerambudi Professor Mandyam Veerambudi Srinivasan, bioengineer and neuroscientist]
* [https://www.scienceinpublic.com.au/prime-ministers-prize/srinivasan 2006 Prime Minister’s Prize for Science, Science in Public]
* [https://www.scienceinpublic.com.au/prime-ministers-prize/srinivasan 2006 Prime Minister’s Prize for Science, Science in Public]
{{Finalised}}
[[Category:Tamil Content]]

Latest revision as of 23:42, 21 November 2023

மண்டயம் வீரம்புடி சீனிவாசன்

மண்டயம் வீரம்புடி சீனிவாசன் ((Mandyam Veerambudi Srinivasa) (பிறப்பு: 15, செப்டெம்பர் 1948) ஆஸ்திரேலியக் குடிமகனாகிய உயிரியல் வல்லுநர். மண்டயம் மரபு என்னும் புகழ்மிக்க தென்கலை வைணவப்பிரிவைச் சேர்ந்தவர். குயின்ஸ்லாந்து பல்கலைக்கழகத்தில் ஆய்வுப்பணியாற்றியவர். தேனீக்களைப் பற்றிய ஆய்வுக்காக புகழ்பெற்றவர்

பிறப்பு, கல்வி

மண்டயம் வீரம்புடி சீனிவாசன் இந்தியாவில் புனே நகரில் செப்டெம்பர் 15, 1948ல் பிறந்தார். மண்டயம் மரபு என்னும் புகழ்பெற்ற தென்கலை வைணவக் குடியில் பிறந்தவர். அவர் தந்தை ராணுவக் கணக்குத்துறை ஊழியர்.பணிநிமித்தம் அவர்களின் குடும்பம் கல்கத்தாவுக்கும் டெல்லிக்கும் இடம்பெயர்ந்தபின் பெங்களூரில் வாழ்ந்தது. புனாவிலும் கல்கத்தாவிலும் டெல்லியிலும் ஆரம்பப்பள்ளிக் கல்வியை முடித்த வீரம்புடி சீனிவாசன் 1962ல் தன் பள்ளிக்கல்வியை பிஷப் காட்டன் ஆண்கள் உயர்நிலைப்பள்ளியில் முடித்தார்

  • 1967ல் பெங்களூர் பல்கலையில் இளங்கலை பொறியியல் (மின்னியல்) முடித்தார்.
  • 1970ல் இந்தியன் இன்ஸ்டிடியுட் ஆஃப் சயன்ஸ் (IISc), பெங்களூரில் மின்னியல் மற்றும் தானியங்கியலில் முதுகலைப் பொறியியல் கல்வியை முடித்தார்.
  • 1973ல் அமெரிக்காவின் யேல் பல்கலையில் பொறியியலில் இளமுனைவர் (எம்.ஃபில்) படிப்பை முடித்தார்.
  • 1977 யேல் பல்கலையில் பொறியியலில் முனைவர் பட்டம் பெற்றார்.
  • 1994ல் நரம்பியலில் (Neuroethology)ஆஸ்திரேலிய தேசியப் பல்கலையில் முதுமுனைவர் (DSc) பட்டம் பெற்றார்.

ஆய்வுப்பொறுப்புகள்

  • 1978-ல் சீனிவாசன் ஆஸ்திரேலியாவின் கன்பெரா நகருக்கு பணியேற்றுச்சென்றார். அங்கே ஆஸ்திரேலிய தேசிய நூலகத்தில் கணிதம் மற்றும் நரம்பியல் கற்பித்தார்.
  • 1982-ல் சீனிவாசன் சுவிட்சர்லாந்தில் சூரிச் நகரில் பூச்சியியல் ஆய்வுக்காக சென்றார். அங்கே தேனீக்களைப் பற்றி ஆராய்ச்சி செய்தார்
  • 1985-ல் சீனிவாசன் மீண்டும் ஆஸ்திரேலிய தேசியப் பல்கலையில் பதவியேற்றார். அங்கே தேனீக்களின் தொடர்புமுறைகள் பற்றி ஆய்வுசெய்தார்.
  • 2007-ல் சீனிவாசன் குயின்ஸ்லாந்து மூளைநரம்பியல் கழகத்தின் (Queensland Brain Institute) பொறுப்பை ஏற்றார்.

ஆய்வுப்பணிகள்

மண்டயம் சீனிவாசன் தேனீக்கள் மற்றும் பூச்சிகளின் நுண்புலன்கள் மற்றும் மூளை பற்றிய ஆய்வுகளுக்காகப் புகழ்பெற்றவர். தேனீக்களின் கண்களும் அவற்றின் உடலசைவுகளும் செயல்படும் முறைமை பற்றிய அவருடைய ஆய்வு நுண்ணிய இயந்திர உடல்கள் (ரோபோக்கள்) செயல்படுவதில் முக்கியமான முன்னேற்றங்களை உருவாக்கியது. தேனீக்கள் தாங்கள் பறந்த தொலைவை கணக்கிட்டு அவற்றை பிற தேனீக்களுக்கு தெரிவிக்கின்றன என்றும், அவை பறக்கும்போது நிலம், அருகிலுள்ள பொருட்களுக்கு ஏற்ப தங்கள் வேகத்தை கட்டுப்படுத்துவதில் அவற்றின் கண் எந்த அளவுக்குப் பங்களிக்கிறது என்றும் விரிவாக ஆராய்ந்து வகுத்துரைத்தார்.

விருதுகள்

சீனிவாசன் முக்கியமான விருதுகள் பலவற்றை பெற்றவர்.

  • 1995 -ஆஸ்திரேலியஅறிவியல் கழக கௌரவ உறுப்பினர்( Fellowship of the Australian Academy of Science (FAA))
  • 2001 - ஆஸ்திரேலிய ஆய்வுக்குழு (Australian Research Council ) விருது
  • 2001 - ஆஸ்திரேலிய அறிவியல் விருது (Australasian Science Prize )
  • 2001 - ராயல் சொசைட்டி ஆஃப் லண்டன் கௌரவ உறுப்பினர் (Fellowship of the Royal Society of London (FRS)
  • 2003 - ஆஸ்திரேலிய நூற்றாண்டு பதக்கம்
  • 2006 - நியூசிலாந்து ராயல் சொசைட்டி கௌரவம் ( Royal Society of New Zealand Distinguished Visitor)
  • 2008 - ராங்க் விருது (Rank Prize for Optoelectronics (UK)
  • 2012 - ஆஸ்திரேலிய உயர்விருது (Membership of the Order of Australia (AM)

நூல்கள்

சீனிவாசன் 20 நூல்களை எழுதியுள்ளார். 189 ஆய்வுக்கட்டுரைகளும் 69 ஆய்வக உரைகளும் வெலியிட்டுள்ளார். இரண்டு உரிமைப்பதிவுகள்(patents) பெற்றுள்ளார்.

உசாத்துணை


✅Finalised Page