standardised

கொங்கர்புளியங்குளம் (எண்பெருங்குன்றம்): Difference between revisions

From Tamil Wiki
(Created page with "thumb|''கொங்கர்புளியங்குளம் புடைப்புச் சிற்பம்'' கொங்கர்புளியங்குளம் குன்று மதுரையைச் சுற்றி அமைந்த எண்பெருங்குன்றம் என்னும் எட்டு சமண மலைப்பள்ளிகளு...")
 
(Moved to Standardised)
Line 15: Line 15:
* எண்பெருங்குன்றங்கள் - முனைவர். வெ. வேதாசலம்
* எண்பெருங்குன்றங்கள் - முனைவர். வெ. வேதாசலம்


[[Category:Ready for Review]]
{{Standardised}}
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]

Revision as of 08:28, 4 March 2022

கொங்கர்புளியங்குளம் புடைப்புச் சிற்பம்

கொங்கர்புளியங்குளம் குன்று மதுரையைச் சுற்றி அமைந்த எண்பெருங்குன்றம் என்னும் எட்டு சமண மலைப்பள்ளிகளுள் ஒன்று. இக்குன்று மதுரையில் இருந்து கம்பம் செல்லும் வழியில் மதுரைக்கு பதினேழு கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. கி.மு. இரண்டாம் நூற்றாண்டளவில் சமணப்பள்ளியாக இவை உருவானபோது இக்குகைத்தளங்களில் வளவளப்பான நீண்ட கற்படுக்கைகள் செய்யப்பட்டன.

கொங்கர்புளியங்குளம்

கொங்கர்புளியங்குளம் கிராமத்திற்கு வடகிழக்கே நாகமலையை ஒட்டி பஞ்சபாண்டவர்மலை என்றழைக்கப்படும் சிறிய குன்று உள்ளது. இக்குன்றின் தென்மேற்குப் பகுதியில் இயற்கையாக அமைந்த ஆறு குகைத்தளங்கள் உள்ளன. முற்காலப் பாண்டியர் காலத்திலும் சமணர் குன்றாக இது விளங்கியுள்ளது.

கல்வெட்டு சான்றுகள்

குகைத்தளம் ஒன்றின் முகப்பில் கி.மு. இரண்டாம் நூற்றாண்டைச் சார்ந்த மூன்று கல்வெட்டுகள் உள்ளன. இவற்றில் இப்பள்ளியை உருவாக்கிய உபாசகன் உப்பறுவன், சிறு ஆதன், பாகனூர்ப் பேராதன் பிட்டன் ஆகியோர் குறிப்பிடப்பட்டுள்ளனர்.

சிற்பம்

முற்காலப்பாண்டியர் காலத்தில் இக்குன்று சமணர் குன்றாக விளங்கியதற்கு சான்றாக குகைத்தளத்தின் வெளிப்புறம் உள்ள பாறையில் பத்தாம் நூற்றாண்டைச் சேர்ந்த தீர்த்தங்கரர் திருமேனி புடைப்புச் சிற்பம் உள்ளது. அசோகமரத்தின் கீழே முக்குடை நிழலில் அர்த்தபரியங்காசனத்தில் அமர்ந்த தீர்த்தங்கரர் உருவத்தை அச்சணந்தி என்ற சமண முனிவர் செய்துள்ளார். இதனை தெரிவிக்கும் வட்டெழுத்துக் கல்வெட்டு இச்சிற்பத்தின் அடியில் பொறிக்கப்பட்டுள்ளது.

உசாத்துணை

  • எண்பெருங்குன்றங்கள் - முனைவர். வெ. வேதாசலம்



⨮ Standardised


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.