under review

எஸ். சதானந்த்: Difference between revisions

From Tamil Wiki
(Changed incorrect text: {{ready for review}})
No edit summary
Line 2: Line 2:
எஸ். சதானந்த் (சுவாமிநாதன் சதானந்த்) (1900-1953) சுயாதீனப் பத்திரிகையாளர், சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்றார். ஃப்ரீ பிரஸ் ஆஃப் இந்தியா ஏஜென்சி, ஃப்ரீ பிரஸ் ஜர்னல், தினமணி ஆகியவற்றின் நிறுவனர்.  

== வாழ்க்கைக் குறிப்பு ==
== வாழ்க்கைக் குறிப்பு ==
எஸ். சதானந்த் 1900இல் சி.வி சுவாமிநாத ஐயருக்கு மகனாகப் பிறந்தார். தந்தை விவேகசிந்தாமணியின் ஆசிரியர். பள்ளிக்கல்வி சென்னையில் பயின்றார். எஸ். சதானந்த் கல்லூரிக்குச் செல்லவில்லை.
எஸ். சதானந்த் 1900-ல் சி.வி சுவாமிநாத ஐயருக்கு மகனாகப் பிறந்தார். தந்தை 'விவேகசிந்தாமணி'யின் ஆசிரியர். சதானந்த் பள்ளிக்கல்வியை சென்னையில் பயின்றார். அவர் கல்லூரிக்குச் செல்லவில்லை.
== அரசியல் வாழ்க்கை ==
== அரசியல் வாழ்க்கை ==
இளம்வயதிலிருந்தே அரசியலில் ஈடுபாடு கொண்டிருந்தார். 1919 ரெளலட் சட்ட எதிர்ப்பு தீர்மானத்தில் கையெழுத்திட்டார். இந்திய தேசிய காங்கிரஸின் விளம்பர அலுவலராக சில காலம் காதி மற்றும் கிராமம் சார்ந்த துறையை கவனித்துக் கொண்டார். இரண்டாவது மற்றும் மூன்றாவது வட்டமேசை மாநாட்டில் பங்கேற்றார்.
சதானந்த் இளம்வயதிலிருந்தே அரசியலில் ஈடுபாடு கொண்டிருந்தார். 1919-ல் ரெளலட் சட்ட எதிர்ப்பு தீர்மானத்தில் கையெழுத்திட்டார். இந்திய தேசிய காங்கிரஸின் விளம்பர அலுவலராக சில காலம் காதி மற்றும் கிராமம் சார்ந்த துறையைக் கவனித்துக் கொண்டார். இரண்டாவது மற்றும் மூன்றாவது வட்டமேசை மாநாட்டில் பங்கேற்றார்.
== இதழியல் ==
== இதழியல் ==
எஸ். சதானந்த் 1920முதல் அலகாபாத்தில் ரூட்டர்(Reuter) பத்திரிக்கையின் உதவி எடிட்டராக இருந்தார். 1927இல் சதானந்த் ஃப்ரீ பிரஸ் ஆஃப் இந்தியா ஏஜென்சியைத் தொடங்கினார். இது இந்தியர்களால் நிர்வகிக்கப்பட்ட முதல் செய்தி நிறுவனம். 1930இல் தி ஃப்ரீ பிரஸ் ஜர்னலின் நிறுவனரானார். காங்கிரஸ் கட்சியின் ஆதரவாகச் செயல்பட்டது. ஃப்ரி இந்தியா, நவம பிரத் (குஜராத்தி), நவசக்தி (மராட்டி) ஆகிய இதழ்களை நடத்தினார்.
எஸ். சதானந்த் 1920 முதல் அலகாபாத்தில் ரூட்டர்(Reuter) பத்திரிக்கையின் உதவி எடிட்டராக இருந்தார். 1927-ல் சதானந்த் 'ஃப்ரீ பிரஸ் ஆஃப் இந்தியா' ஏஜென்சியைத் தொடங்கினார். இது இந்தியர்களால் நிர்வகிக்கப்பட்ட முதல் செய்தி நிறுவனம். 1930-ல் தி ஃப்ரீ பிரஸ் ஜர்னலின் நிறுவனரானார். ஃப்ரீ பிரஸ் ஜர்னல் காங்கிரஸ் கட்சியின் ஆதரவாகச் செயல்பட்டது. 'ஃப்ரி இந்தியா', 'நவம பிரத்' (குஜராத்தி), 'நவசக்தி' (மராட்டி) ஆகிய இதழ்களை நடத்தினார்.

1933இல் அவர் இந்தியன் எக்ஸ்பிரஸ் வரதராஜுலு நாயுடுவிடமிருந்து வாங்கினார். 1934இல் தினமணி இதழைத் தொடங்கினார்.  தி ஃப்ரீ பிரஸ் ஜர்னல் மூடப்பட்டதால் தி இந்தியன் எக்ஸ்பிரஸ் ராம்நாத் கோயங்காவின் கட்டுப்பாட்டிற்குள் சென்றது.1947 நிறுவப்பட்ட பிரஸ் டிரஸ்ட் ஆஃப் இந்தியாவின் ஏழு ஆரம்ப பங்குதாரர்களில் இவரும் ஒருவர்.
1933-ல் சதானந்த் இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழை வரதராஜுலு நாயுடுவிடமிருந்து வாங்கினார். 1934-ல் தினமணி இதழைத் தொடங்கினார்.  தி ஃப்ரீ பிரஸ் ஜர்னல் மூடப்பட்டதால் 'தி இந்தியன் எக்ஸ்பிரஸ்' ராம்நாத் கோயங்காவின் கட்டுப்பாட்டிற்குள் சென்றது.1947 -ல் நிறுவப்பட்ட பிரஸ் டிரஸ்ட் ஆஃப் இந்தியாவின் ஏழு ஆரம்ப பங்குதாரர்களில் இவரும் ஒருவர்.
== இடம் ==
== இடம் ==
ஜே.கே. சிங் ”எஸ். சதானந்த் ஒரு சிறந்த பத்திரிகையாளர், ஆனால் ஒரு நல்ல வணிக மேலாளர் அல்ல” என்றும், ரங்கஸ்வாமி பார்த்தசாரதி சதானந்தை ”ஒரு திறமையான ஆசிரியர்” என்றும் புதுமைப்பித்தன் இவரை “அச்சமற்ற தேசபக்தர்” என்றும் மதிப்பிட்டனர்.

Revision as of 02:52, 19 November 2023

எஸ். சதானந்த்

எஸ். சதானந்த் (சுவாமிநாதன் சதானந்த்) (1900-1953) சுயாதீனப் பத்திரிகையாளர், சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்றார். ஃப்ரீ பிரஸ் ஆஃப் இந்தியா ஏஜென்சி, ஃப்ரீ பிரஸ் ஜர்னல், தினமணி ஆகியவற்றின் நிறுவனர்.

வாழ்க்கைக் குறிப்பு

எஸ். சதானந்த் 1900-ல் சி.வி சுவாமிநாத ஐயருக்கு மகனாகப் பிறந்தார். தந்தை 'விவேகசிந்தாமணி'யின் ஆசிரியர். சதானந்த் பள்ளிக்கல்வியை சென்னையில் பயின்றார். அவர் கல்லூரிக்குச் செல்லவில்லை.

அரசியல் வாழ்க்கை

சதானந்த் இளம்வயதிலிருந்தே அரசியலில் ஈடுபாடு கொண்டிருந்தார். 1919-ல் ரெளலட் சட்ட எதிர்ப்பு தீர்மானத்தில் கையெழுத்திட்டார். இந்திய தேசிய காங்கிரஸின் விளம்பர அலுவலராக சில காலம் காதி மற்றும் கிராமம் சார்ந்த துறையைக் கவனித்துக் கொண்டார். இரண்டாவது மற்றும் மூன்றாவது வட்டமேசை மாநாட்டில் பங்கேற்றார்.

இதழியல்

எஸ். சதானந்த் 1920 முதல் அலகாபாத்தில் ரூட்டர்(Reuter) பத்திரிக்கையின் உதவி எடிட்டராக இருந்தார். 1927-ல் சதானந்த் 'ஃப்ரீ பிரஸ் ஆஃப் இந்தியா' ஏஜென்சியைத் தொடங்கினார். இது இந்தியர்களால் நிர்வகிக்கப்பட்ட முதல் செய்தி நிறுவனம். 1930-ல் தி ஃப்ரீ பிரஸ் ஜர்னலின் நிறுவனரானார். ஃப்ரீ பிரஸ் ஜர்னல் காங்கிரஸ் கட்சியின் ஆதரவாகச் செயல்பட்டது. 'ஃப்ரி இந்தியா', 'நவம பிரத்' (குஜராத்தி), 'நவசக்தி' (மராட்டி) ஆகிய இதழ்களை நடத்தினார்.

1933-ல் சதானந்த் இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழை வரதராஜுலு நாயுடுவிடமிருந்து வாங்கினார். 1934-ல் தினமணி இதழைத் தொடங்கினார். தி ஃப்ரீ பிரஸ் ஜர்னல் மூடப்பட்டதால் 'தி இந்தியன் எக்ஸ்பிரஸ்' ராம்நாத் கோயங்காவின் கட்டுப்பாட்டிற்குள் சென்றது.1947 -ல் நிறுவப்பட்ட பிரஸ் டிரஸ்ட் ஆஃப் இந்தியாவின் ஏழு ஆரம்ப பங்குதாரர்களில் இவரும் ஒருவர்.

இடம்

ஜே.கே. சிங் ”எஸ். சதானந்த் ஒரு சிறந்த பத்திரிகையாளர், ஆனால் ஒரு நல்ல வணிக மேலாளர் அல்ல” என்றும், ரங்கஸ்வாமி பார்த்தசாரதி சதானந்தை ”ஒரு திறமையான ஆசிரியர்” என்றும் புதுமைப்பித்தன் இவரை “அச்சமற்ற தேசபக்தர்” என்றும் மதிப்பிட்டனர்.

மறைவு

எஸ். சதானந்த் 1953இல் மைலாப்பூரில் காலமானார்.

உசாத்துணை

இந்த பக்கம் தற்பொழுது மெய்ப்பு பார்க்கப்படுகிறது. மாற்றம் எதுவும் செய்ய வேண்டாம்

Ready for review

Please do not write any content below this line. This section is only for editing templates & categories.