under review

தீன் விளக்கம்: Difference between revisions

From Tamil Wiki
(Changed incorrect text:  )
(category and template text moved to bottom of text)
 
Line 6: Line 6:


== நூல் தோற்றம் ==
== நூல் தோற்றம் ==
[[Category:Tamil Content]]
 
செய்யிது இப்ராகீமின் வரலாற்றை, அவர் மரபில் வந்த நல்ல இபுறாஹீம் சாஹிப் எழுதினார். அவருக்குப்பின், அவர்தம் மகனான முத்து இபுறாஹீம் லெப்பையும், வரிசை இபுறாஹீம் லெப்பையும், செய்கு இபுறாஹீம் லெப்பையும் அதனை விரித்துரைத்து அம்மானை நூலாக இயற்றினர். அந்த அம்மானை நூலைக் காப்பியமாக இயற்றித்தர வேண்டும் என செய்யிது இப்ராகீமின் வழி வந்தவர்கள், [[வண்ணக் களஞ்சியப் புலவர்|வண்ணக்களஞ்சியப் புலவரிடம்]] கேட்டுக் கொண்டதால், அவர் அதனை தீன் விளக்கம் என்னும் காப்பிய நூலாக இயற்றினார். இந்நூல், 1821-ல், ஏர்வாடியில், சுல்தான் செய்யிது இப்ராகீமின் தர்காவில், இஸ்லாமியச் சான்றோர்கள், புலவர்கள் முன்னிலையில் அரங்கேற்றம் செய்யப்பட்டது.
செய்யிது இப்ராகீமின் வரலாற்றை, அவர் மரபில் வந்த நல்ல இபுறாஹீம் சாஹிப் எழுதினார். அவருக்குப்பின், அவர்தம் மகனான முத்து இபுறாஹீம் லெப்பையும், வரிசை இபுறாஹீம் லெப்பையும், செய்கு இபுறாஹீம் லெப்பையும் அதனை விரித்துரைத்து அம்மானை நூலாக இயற்றினர். அந்த அம்மானை நூலைக் காப்பியமாக இயற்றித்தர வேண்டும் என செய்யிது இப்ராகீமின் வழி வந்தவர்கள், [[வண்ணக் களஞ்சியப் புலவர்|வண்ணக்களஞ்சியப் புலவரிடம்]] கேட்டுக் கொண்டதால், அவர் அதனை தீன் விளக்கம் என்னும் காப்பிய நூலாக இயற்றினார். இந்நூல், 1821-ல், ஏர்வாடியில், சுல்தான் செய்யிது இப்ராகீமின் தர்காவில், இஸ்லாமியச் சான்றோர்கள், புலவர்கள் முன்னிலையில் அரங்கேற்றம் செய்யப்பட்டது.


Line 100: Line 100:
* [https://www.tamilvu.org/courses/degree/a011/a0113/html/a01135l8.htm தீன் விளக்கம்: தமிழ் இணையக் கல்விக் கழகப் பாடம்]
* [https://www.tamilvu.org/courses/degree/a011/a0113/html/a01135l8.htm தீன் விளக்கம்: தமிழ் இணையக் கல்விக் கழகப் பாடம்]
{{Finalised}}
{{Finalised}}
[[Category:Tamil Content]]

Latest revision as of 07:11, 16 November 2023

தீன் விளக்கம்

தீன் விளக்கம் (1821) இஸ்லாமியக் காப்பிய நூல். இதனை இயற்றியவர் வண்ணக்களஞ்சியப் புலவர். தீன் எனும் அரபுச் சொல்லுக்கு ‘இஸ்லாமிய நெறி’ என்பது பொருள். மதீனாவில் இருந்து இஸ்லாமிய நெறிகளைப் பரப்புவதற்காகத் தமிழகம் வந்த செய்யிது இப்ராகீம் அவர்களது வரலாற்றைக் கூறும் காப்பிய நூல் இது. ஏர்வாடியில் இந்நூல் அரங்கேற்றம் செய்யப்பட்டது.

ஆசிரியர்

தீன் விளக்கம் நூலை இயற்றியவர் வண்ணக் களஞ்சியப் புலவர். வண்ணப்பாடல்கள், சந்தப் பாடல்கள் பாடும் திறமையால் 'வண்ணக் களஞ்சியப் புலவர்' எனப் பெயர் பெற்றார். இராஜ நாயகம் என்னும் இஸ்லாமியக் காப்பியம் உட்பட பல இஸ்லாமிய இலக்கியங்களை இயற்றினார்.

நூல் தோற்றம்

செய்யிது இப்ராகீமின் வரலாற்றை, அவர் மரபில் வந்த நல்ல இபுறாஹீம் சாஹிப் எழுதினார். அவருக்குப்பின், அவர்தம் மகனான முத்து இபுறாஹீம் லெப்பையும், வரிசை இபுறாஹீம் லெப்பையும், செய்கு இபுறாஹீம் லெப்பையும் அதனை விரித்துரைத்து அம்மானை நூலாக இயற்றினர். அந்த அம்மானை நூலைக் காப்பியமாக இயற்றித்தர வேண்டும் என செய்யிது இப்ராகீமின் வழி வந்தவர்கள், வண்ணக்களஞ்சியப் புலவரிடம் கேட்டுக் கொண்டதால், அவர் அதனை தீன் விளக்கம் என்னும் காப்பிய நூலாக இயற்றினார். இந்நூல், 1821-ல், ஏர்வாடியில், சுல்தான் செய்யிது இப்ராகீமின் தர்காவில், இஸ்லாமியச் சான்றோர்கள், புலவர்கள் முன்னிலையில் அரங்கேற்றம் செய்யப்பட்டது.

பதிப்பு, வெளியீடு

தீன் விளக்கம் நூலை காயல் பட்டணம் காலி அலாவுத்தீனின் புதல்வர் சோ. முகமது அப்துல் காதிரின் வேண்டுகோளின்படி, காயல் பட்டணம் உசைனுத்தீன் புலவர், முதன் முதலில் அச்சிட்டு வெளியிட்டார். இரண்டாம் பதிப்பை, 1891-ல், கண்ணகுமது மகுதூமுகமதுப் புலவர் பதிப்பித்தார். இந்நூலின் மூன்றாம் பதிப்பை மில்லத் பப்ளிஷர்ஸ் நிறுவனம், டிசம்பர், 1984-ல், அச்சிட்டு வெளியிட்டது. செய்யிது முஹம்மது ஹஸன் இந்நூலைப் பதிப்பித்தார்.

கதைச் சுருக்கம்

செய்யது இப்ராகீம், நபிகள் நாயகத்தின் பதினெட்டாம் தலைமுறையில் தோன்றியவர். இவர், தனது 42-ம் வயதில் மதீனாவிலிருந்து தனது படைகளுடன் பாண்டிய நாட்டுக்கு வந்தார். பன்னிரண்டாம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியான அக்காலக்கட்டத்தில் விக்கிரம பாண்டியன், பாண்டிய நாட்டின் பவுத்திர மாணிக்கப் பட்டினம் என்னும் பகுதியை ஆட்சி செய்து வந்தான். விக்கிரம பாண்டியனுக்கும் செய்யிது இப்ராகீமுக்கும் போர் நடந்தது. போரின் இறுதியில் செய்யது இப்ராகீம் வெற்றி பெற்றார். பாண்டிய நாட்டை பன்னிரண்டு ஆண்டு ஏழு மாதங்கள் ஆட்சி புரிந்தார். இஸ்லாமிய நெறியைத் தமிழகத்தில் நிலைநாட்டினார். இறுதியில் திருப்பாண்டியனோடு நிகழ்ந்த போரில் கொல்லப்பட்டார். ஏர்வாடியில் உள்ள அவரது தர்காவில் சாதிமத பேதமின்றி மக்கள் வழிபட்டனர். இவ்வரலாற்றுச் செய்திகள் தீன் விளக்கம் காப்பியத்தில் இடம் பெற்றுள்ளன.

நூல் அமைப்பு

தீன் விளக்கம் 22 படலங்களைக் கொண்டுள்ளது. அவை,

  • கடவுள் வாழ்த்துப் படலம்
  • நாட்டுப் படலம்
  • நகரப் படலம்
  • தலைமுறைப் படலம்
  • திருவாக்கருள் படலம்
  • சமர் யாத்திரைப் படலம்
  • விக்கிரம பாண்டியனுக்கு தூதுவிட்ட படலம்
  • முதல் நாள் போர்புரி படலம்
  • இரண்டாம் நாள் போர்புரி படலம்
  • மூன்றாம் நாள் போர்புரி படலம்
  • நான்காம் நாள் போர்புரி படலம்
  • ஐந்தாம் நாள் போர்புரி படலம்
  • ஆறாம் நாள் போர்புரி படலம்
  • ஏழாம் நாள் போர்புரி படலம்
  • எட்டாம் நாள் போர்புரி படலம்
  • ஒன்பதாம் நாள் போர்புரி படலம்
  • பத்தாம் நாள் போர்புரி படலம்
  • அரசாட்சிப் படலம்
  • செய்யிதிசுகாக்கு மங்கலப் படலம்
  • செய்யிதிபுறாகீமொலி சகீதுப் படலம்
  • தலைமுறை விருத்திப் படலம்
  • சேதுபதி சந்ததி பெற்ற படலம்

தீன் விளக்கம் காப்பிய நூலில், காப்புச் செய்யுள் 1713 விருத்தப் பாடல்கள் இடம் பெறுகின்றன. 10 படலங்களில் 920 பாடல்கள் போர் பற்றிய வருணனைப் பாடல்கள். கடவுள் வாழ்த்து, நாடு, நகரப் படலங்கள், பத்துப் போர்ப் படலங்கள், மீதி ஒன்பது படலங்களில் பிற செய்திகள் அமைந்துள்ளன. பெரும்பாலான படலங்கள் போர் நிகழ்ச்சிகளாகவே அமைந்துள்ளன. இறுதியில் உள்ள தலைமுறை விருத்திப் படலம் இறைநேசச் செல்வரின் தலைமுறையினரது வரலாற்றை விளக்குகிறது. சேதுபதி சந்ததி பெற்ற படலம் செய்யிது இப்ராகீமின் ஆன்மீக ஆற்றலைக் கூறுகிறது.

பாடல்கள் நடை

படை வீரர்களின் போர் வீரம்

வடவைபோல் கொதிப்பன்
  சண்டமாருதம் போல்எதிர்ப்பன்
இடிகள்போல் எதிர்ப்பன்
  போரில் ஏழுலகம் இவனுக்கு ஈடோ
கடிதினில் எதிர்த்து
  யானும் கையிழந்தேன் இங்கே
உடல் உயிரொடுமே சேர்ந்தது
  ஊன்றிய விதி ஒன்றாமே

போரில் இளவர்சன் இந்திர பாண்டியன் மறைவுக்கு விக்கிரம பாண்டியன் புலம்புவது

என்னரசி லெண்மடங்கா யெங்குமொரு கோல்செலுத்தி
உன்னரசு செய்வாயென் நுள்ளம்பூ ரித்திருந்தேன்
பின்னரசு செய்யவொரு பிள்ளையில்லாப் பாவியென்று
மன்னர்சவை தோறும் வசைக்கவைத்துப் போயினையே

இந்திர பாண்டியனின் தாய் புலம்புவது

தென்னாட்டார் போற்றுஞ் சிறப்புனக்குப் போதாமற்
பொன்னாட்டார் போற்றப் புகுந்தாயோ மேலுலகிற்
கன்னாட்டாய் நாட்டிக் கதித்துவள ருன்புகழ்போ
லென்னாட் டரசெனுமவ் விந்திரனும் பெற்றானோ


முன்ன முதியவனோ முப்பதுக்கோ ராறுகுறை
சின்ன வயதிலிந்தத் தீவினையுந் தான்வருமோ
மன்னவர்கள் போற்றிசெயு மைந்தா உனைஇழந்தே
இன்னமுயிர் வைத்திருந்தே னென்னைப்போல் நீலியுண்டோ

சேதுபதி மன்னர் ஏர்வாடி தர்காவில் வந்து வேண்டுதல்

அரசுபெற் றுறையுங் கால மரியவ னொலிமபொற் றாளிற்
பரிவுறு மகிபா யேறு படியினில் வந்து சேர்ந்து
விரவிய துறவோர் போற்ற விளங்கிய தறுகா மேவிக்
கரமலர் கூப்பி யேற்றிக் கணத்தொடு மிறைஞ்சி னானே,

நன்கிபு றாகீம் பாத நாருசா நல்க வாங்கி
யங்கமு மனமும் பூரி தருளவுண் டிங்கு நண்ணித்
தங்கமுன் னருள்கி ராமந் தனில்விய னாகச் சேர்
விங்குள செவ்வற் புன்செய் நிலமெலா மீந்திட் டானே...

மதிப்பீடு

தீன் விளக்கம், இஸ்லாமியக் காப்பிய நூல்களில் வீர காப்பியம் என்னும் வகையில் அமைந்தது. பூம்பொழில் நுகர்தல், புனல் விளையாடல், புலவியிற் புலத்தல், கலவியிற் களித்தல் ஆகிய காப்பிய மரபுகள் இக்காப்பிய நூலில் இடம்பெறவில்லை. பாண்டிய மன்னர்கள் பற்றிய பல்வேறு வரலாற்றுச் செய்திகள் தீன் விளக்கம் காப்பியத்தில் இடம் பெற்றுள்ளன.

உசாத்துணை


✅Finalised Page