under review

காலசக்கரத் திசை: Difference between revisions

From Tamil Wiki
No edit summary
No edit summary
 
Line 23: Line 23:
* [https://www.tamildigitallibrary.in/book-detail?id=jZY9lup2kZl6TuXGlZQdjZM3l0Uy&tag=%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D#book1/23 காலச்சக்கரம்: தஞ்சை சரஸ்வதி மகால் பதிப்பு:தமிழ் இணையக்கழகம்]
* [https://www.tamildigitallibrary.in/book-detail?id=jZY9lup2kZl6TuXGlZQdjZM3l0Uy&tag=%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D#book1/23 காலச்சக்கரம்: தஞ்சை சரஸ்வதி மகால் பதிப்பு:தமிழ் இணையக்கழகம்]


{{First review completed}}
{{Finalised}}
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]

Latest revision as of 10:24, 15 November 2023

காலசக்கரத் திசை ஜோதிடத்தில் பயன்படுத்தப்படும் சொல். காலவட்டம் என்ற பொருளில் வரும். ஒருவரின் ஜோதிடத்தைக் கணிக்கப்பயன்படும் தசாமுறை.

காலவட்டம்

காலவட்டம் வலமாகவும் (பிரதட்சணம் அல்லது சவ்யம்), இடமாகவும் (அப்பிரதட்சணம் அல்லது அபசவ்யம்) இயங்கி மக்கள், தேவர்கள், பித்ருக்களால் கணக்கிடப்பட்டு அவர்களுக்கு இன்ப துன்பங்களைத் தந்து அவர்களால் அறியப்பட்டு விளங்குகிறது.

வலவோட்டு இடவோட்டு

  • வலவோட்டாகவும் இடவோட்டாகவும் இயங்கும் காலவட்டத்தை உணர்வதற்கு கருவியாக இருப்பது இருபத்தியேழு நாட்கள்.
  • இருபத்தியேழு நாட்களுள் அஸ்வதி, பரணி, கார்த்திகை மூன்றும் வலவோட்டு நாட்கள்.
  • ரோகிணி, மிருகசீஷம், திருவாதிரை மூன்றும் இடவோட்டு நாட்கள்.
  • இம்முறையே மாறி மாறி மும்முன்றாகக் கொண்டால் வலவோட்டு நாள் பதினைந்து, இடவோட்டு நாள் பன்னிரெண்டு.
பிரிவு
  • வலவோட்டில் முதல் நாள்(5): அஸ்வதி, புனர்பூசம், அத்தம், மூலம், பூரட்டாதி
  • வலவோட்டில் இடை நாள்(5): பரணி, பூசம், சித்திரை, பூராடம், உத்திரட்டாதி
  • வலவோட்டில் கடை நாள்(5): கார்த்திகை, ஆயில்யம், சுவாதி, உத்திராடம், ரேவதி
  • இடவோட்டில் முதல் நாள்(4): ரோகிணி, மகம், விசாகம், திருவோணம்
  • இடவோட்டில் இடை நாள்(4): மிருகசீஷம், பூரம், அனுடம், அவிட்டம்
  • இடவோட்டில் கடை நாள்(4): திருவாதிரை, உத்தரம், கேட்டை, சதயம்

பிற

  • திசை கொள்ளும் முறை: நட்சத்திரக்கால்களால் திசை கொள்ளப்படும். இதனால் அங்கிசத்திசை என்பர்.
  • புத்தி கொள்ளும் முறை: ஒவ்வொரு திசைக்கும் ஒன்பது புத்திகள் உள்ளன.
  • வலவோட்டு திசை பன்னிரெண்டு, இடவோட்டு திசை பன்னிரெண்டு என காலச்சக்கர திசை இருபத்தி நான்கு

விவாதம்

கிரகங்களின் தசையில் மற்ற கிரகங்களின் புத்தி நடப்பதுபோல், இங்கேயும் ஒரு ராசியின் தசையில் மற்ற ராசிகளின் புத்தி நடக்கும். அவற்றைக் கூர்ந்து கவனித்தால் அங்கேயும் ஏராளமான சிக்கல்கள் உண்டு. இதனால்தான் இத்தசாமுறை பெரும்பாலும் கவனிக்கப்படாமல் போனது.

இணைப்புகள்


✅Finalised Page