under review

கண்ணன் (இதழ்): Difference between revisions

From Tamil Wiki
No edit summary
m (Created/reviewed by Je)
Line 22: Line 22:
* https://www.panchumittai.com/2020/02/17/254/
* https://www.panchumittai.com/2020/02/17/254/


{{being created}}
{{ready for review}}
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]

Revision as of 12:41, 3 March 2022

கண்ணன்

கண்ணன் ( 1949-1971) தமிழில் வெளிவந்த சிறுவர் மாத இதழ் . கலைமகள் நிறுவனத்தால் ந.இராமரத்தினத்தை வெளியீட்டாளராக கொண்டு பிரசுரமானது. எழுத்தாளர் எழுத்தாளர் ஆர்வி தொடர்ச்சியாக 22 ஆண்டுகள் இதன் ஆசிரியராக இருந்திருக்கிறார். (பார்க்க சிறுவர் இதழ்கள்)

வெளியீடு

கலைமகள் நிறுவனத்தாரால் 1949ல் மாத இதழாகத் தொடங்கிய கண்ணன் பின்னர் இரண்டணா விலையில் மாதமிருமுறையாக வெளியானது.

உள்ளடக்கம்

தி.ஜ.ரங்கநாதன், கி. வா. ஜகந்நாதன், கொத்தமங்கலம் சுப்பு ஆகியோர் இம்மலர்களில் எழுதினர். தீபாவளி மலர்கள் தொடர்ந்து வெளியாயின. தொடர்கதைப் போட்டி வைத்து பரிசுகள் வழங்கியது. சிறுகதைகள் படக்கதைகள் வெளியாயின

அமைப்புப்பணிகள்

  • கண்ணன் சிறுவர் இதழ் வழியாக கண்ணன் கழகங்களை ஏற்படுத்தி, உறுப்பினர்களைச் சேர்த்து ஒருங்கிணைத்து அமைப்பாக நடத்தியது கண்ணன் இதழ்
  • கண்ணன் பேனாநண்பர்கள் என்னும் அமைப்பை உருவாக்கி குழந்தைகளை கடிதத் தொடர்பு கொள்ளச் செய்தது.

தொகுப்பு

கண்ணன் இதழில் வெளிவந்த சிறுகதைகள் தொகுக்கப்பட்டு “கண்ணன் கதை களஞ்சியம்” என பன்னிரெண்டு தொகுதிகளாக கலைஞன் பதிப்பகம் .திரு.மாசிலாமணியால் வெளியிடப்பட்டுள்ளது.

உசாத்துணை

  • தமிழம் சேகரிப்பு பொள்ளாச்சி நசன் https://www.thamizham.net/
  • https://www.keetru.com/index.php/2010-06-24-04-31-11/ungalnoolagam-mar19/36849-2019-03-22-10-48-09
  • https://www.panchumittai.com/2020/02/17/254/


இந்த பக்கம் தற்பொழுது மெய்ப்பு பார்க்கப்படுகிறது. மாற்றம் எதுவும் செய்ய வேண்டாம்


Ready for review


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.