under review

பேரம்பலப்புலவர்: Difference between revisions

From Tamil Wiki
(Corrected error in line feed character)
No edit summary
Line 24: Line 24:
* [http://kanaga_sritharan.tripod.com/sittilakkiyam.htm#2 17ம் - 20ம் நூற்றாண்டுகளில் வாழ்ந்த ஈழத்து சிற்றிலக்கியப் புலவர்கள், தொகுப்பு: கனக ஸ்ரீதரன் ஆஸ்திரேலியா]
* [http://kanaga_sritharan.tripod.com/sittilakkiyam.htm#2 17ம் - 20ம் நூற்றாண்டுகளில் வாழ்ந்த ஈழத்து சிற்றிலக்கியப் புலவர்கள், தொகுப்பு: கனக ஸ்ரீதரன் ஆஸ்திரேலியா]
* [https://noolaham.org/wiki/index.php/%E0%AE%88%E0%AE%B4%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%81%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D ஈழநாட்டின் தமிழ்ச் சுடர்மணிகள்|மு.கணபதிப்பிள்ளை|பாரி நிலையம் வெளியீடு, 1967]

{{First review completed}}
{{Finalised}}
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]
[[Category:ஈழத்து ஆளுமைகள்]]
[[Category:ஈழத்து ஆளுமைகள்]]
[[Category:புலவர்கள்]]
[[Category:புலவர்கள்]]

Revision as of 09:40, 21 October 2023

பேரம்பலப்புலவர் (1859 - 1938) இலங்கை தமிழ், சைவ அறிஞர், ஆசிரியர், சோதிடர் மற்றும் ஈழத்து சிற்றிலக்கியப் புலவர்.

பிறப்பு, கல்வி

யாழ்ப்பாணம் வேலணையூரில் 1859-ல் கோணமலைக்கும் சிவகாமியம்மைக்கும் பேரம்பலப் புலவர் மகனாகப் பிறந்தார். இவர் பண்டிதர் கா.பொ. இரத்தினம் அவர்களின் தாய்வழிப் பாட்டனாராவார்.

ஐந்தாம் வயதில் வித்தியாரம்பம் செய்விக்கப்பெற்ற பேரம்பலம் தனது ஆரம்பக்கல்வியை வேலணை அமெரிக்கன் மிஷன் பாடசாலையில் கற்றார். சிறுவயதிலேயே செய்யுளியற்றும் திறம் பெற்று விளங்கினார்.

அமெரிக்கன் மிஷன் பாடசாலையின் தலைமையாசிரியராயிருந்த இலக்கண இலக்கிய வித்துவான் கனகசபைப்பிள்ளை அவருக்கு நிகண்டு, பாரதம், நைடதம், ஏனைய இலக்கியங்கள் இலக்கணங்களைக் கற்வித்தார். வேலணை சைவப்பிரகாச வித்தியாசாலை தாபகரும் ஆறுமுகநாவலரின் மாணாக்கருமான கந்தப்பிள்ளை என்பாரிடம் தேவார திருவாசகங்கள், சைவசித்தாந்த சாஸ்திரங்களை கற்றார். குமாரு என்பாரிடம் சோதிடக் கலையைக் கற்றார்.

தனிவாழ்க்கை

பேரம்பலப்புலவர் பெரியநாச்சிப்பிள்ளையை மணந்தார். அவரின் மறைவிற்குப் பின் வள்ளியம்மை என்பவரை மணந்துகொண்டார்.

நொத்தாரிஸ் முருகேசு இவரை தனது எழுத்தாளராக நியமித்தார். அங்கே சிலநாட்கள் மட்டுமே பணிபுரிந்த பேரம்பலம் வேளான் தொழிலை செய்யத்தொடங்கினார். ஓய்வு நேரங்களில் ஆசிரியப்பணி செய்தார்.

இலக்கிய வாழ்க்கை

தனிப்பாடல்கள் பல பாடினார். இலந்தைக்காட்டு சித்திவிநாயகர் இரட்டைமணிமாலை, வண்ணைச் சிலேடை வெண்பா, கடம்பர் யமகவந்தாதி முதலிய நூல்களை எழுதினார். சுன்னாகம் குமாரசாமிப்புலவர் போன்ற பேரறிஞர்களால் பாராட்டப்பட்டார்.

மறைவு

பேரம்பலப்புலவர் 1935-ல் தன் எழுபத்தாறாவது வயதில் காலமானார்.

நூல்கள் பட்டியல்

  • கடம்பர் யமக அந்தாதி
  • வேலணை இலந்தைக் காட்டுச் சித்தி விநாயகர் இரட்டை மணிமாலை
  • வண்ணைச் சிலேடை வெண்பா

உசாத்துணை

✅Finalised Page