under review

சைவ ஆகமங்கள்: Difference between revisions

From Tamil Wiki
No edit summary
No edit summary
Line 1: Line 1:
சைவ ஆகமங்கள் என்பவை சைவ சித்தாந்தத்தின் மூல நூல்கள். ஆகமம் என்னும் சொல்லுக்கு ‘அவ்வாறே வந்தமைந்தது’ என்று பொருள். சிவ வழிபாடு, அதன் முக்கியத்துவம், சிவ ஆலயங்கள் அமைக்கும் முறை, வழிபாட்டு முறை, சிவாலயங்களின் செயல்பாடு சார்ந்த செய்திகள் சைவ ஆகம நூல்களில் உள்ளன.
சைவ ஆகமங்கள் சைவ சித்தாந்தத்தின் மூல நூல்கள். ஆகமம் என்னும் சொல்லுக்கு ‘அவ்வாறே வந்தமைந்தது’ என்று பொருள். சிவ வழிபாடு, அதன் முக்கியத்துவம், சிவ ஆலயங்கள் அமைக்கும் முறை, வழிபாட்டு முறை, சிவாலயங்களின் செயல்பாடு சார்ந்த செய்திகள் சைவ ஆகம நூல்களில் உள்ளன.
== தோற்றம் ==
== தோற்றம் ==
சிவனால் ஐந்து மாமுனிவர்களுக்கு சிவாகமங்கள் அருளப்பட்டன என்பது சைவர்களின் நம்பிக்கை. [[உமாபதி சிவாச்சாரியார்]] “சதாசிவ மூர்த்தியால் அநந்த தேவருக்கும், அநந்ததேவரால் சிறிகண்டருக்கும், சிறிகண்டரால் தேவர்களுக்கும், தேவர்களால் முனிவர்களுக்கும் முனிவர்களால் மனிதருக்கும், மனிதரால் மனிதர்களுக்கும் உபதேசம் செய்யப்பட்டது.” என்று குறிப்பிட்டார்.
சிவனால் ஐந்து மாமுனிவர்களுக்கு சிவாகமங்கள் அருளப்பட்டன என்பது சைவர்களின் நம்பிக்கை. [[உமாபதி சிவாச்சாரியார்]] “ ஆகமங்கள் சதாசிவ மூர்த்தியால் அநந்த தேவருக்கும், அநந்ததேவரால் சிறிகண்டருக்கும், சிறிகண்டரால் தேவர்களுக்கும், தேவர்களால் முனிவர்களுக்கும் முனிவர்களால் மனிதருக்கும், மனிதரால் மனிதர்களுக்கும் உபதேசம் செய்யப்பட்டது.” என்று குறிப்பிட்டார்.
===== திருமூலர் =====
===== திருமூலர் =====
<poem>
<poem>
Line 11: Line 11:


== ஆகம நூல்களின் அமைப்பு ==
== ஆகம நூல்களின் அமைப்பு ==
ஆகமங்களை நான்கு பாதங்களாகப் பிரிக்கலாம். ஆகம உள்ளடக்கத்தின் பெரும்பகுதி 'வித்யா பாதம் அல்லது ஞான பாதம்', 'கிரியா பாதம்' ஆகிய இரண்டு பாதங்களில் அடங்கும். ஞான பாதம் ஆகமங்களின் தத்துவத்தைப் பற்றியும், கிரியா பாதம் சமயக் கிரியைகள் பற்றியும் சொல்லும். 'யோக பாதம்', 'சரியா பாதம்' ஆகிய இரண்டும் நீளம் குறைந்த பகுதிகள்
ஆகமங்களை நான்கு பாதங்களாகப் பிரிக்கலாம். ஆகம உள்ளடக்கத்தின் பெரும்பகுதி 'வித்யா பாதம் அல்லது ஞான பாதம்', 'கிரியா பாதம்' ஆகிய இரண்டு பாதங்களில் அடங்கும். ஞான பாதம் ஆகமங்களின் தத்துவத்தைப் பற்றியும், கிரியா பாதம் சமயக் கிரியைகள் பற்றியும் கூறுகின்றன. 'யோக பாதம்', 'சரியா பாதம்' ஆகிய இரண்டும் நீளம் குறைந்த பகுதிகள்


ஞானபாதம் பதி பசு பாசம் என்னும் முப்பொருள்களையும், யோகபாதம் சிவயோகத்தையும், கிரியாபாதம் மந்திரங்களின் உத்தாரம் சந்தியா வந்தனம் பூஜை ஜெபம் ஹோமம் ஆகியவற்றையும், சரியாபாதம் சமய ஆசாரங்களையும் பற்றிக் கூறுவன.  
ஞானபாதம் பதி பசு பாசம் என்னும் முப்பொருள்களையும், யோகபாதம் சிவயோகத்தையும், கிரியாபாதம் மந்திரங்களின் உத்தாரம் சந்தியா வந்தனம் பூஜை ஜெபம் ஹோமம் ஆகியவற்றையும், சரியாபாதம் சமய ஆசாரங்களையும் பற்றிக் கூறுவன.  
== சைவ ஆகமப் பிரிவுகள் ==
== சைவ ஆகமப் பிரிவுகள் ==
சைவ சித்தாந்தத்துக்கு அடிப்படையான சைவ ஆகமங்கள் 28.  அவற்றுள் காரண ஆகமம்,
சைவ சித்தாந்தத்துக்கு அடிப்படையான சைவ ஆகமங்கள் 28.  அவற்றுள்  
 
* காரண ஆகமம்,


* காமிய ஆகமம்
* காமிய ஆகமம்
Line 55: Line 57:


== உள்ளடக்கம் ==
== உள்ளடக்கம் ==
உயிர்களுக்கு இறைவனைக் காட்டிக் கூட்டிமுடிக்கின்ற வரையில் எல்லாப் பொருள்களையும் சிவாகமங்கள் கூறுவதால் இவை 'முடிந்தமுடிபு' அல்லது 'சித்தாந்தம்' எனப்படும். சைவ ஆகமங்கள்  சிவ வழிபாட்டின் முக்கியத்துவத்தையும், சிவாலயம் அமைக்கும் விதம், பூஜை முறைகள், அபிசேகம், அலங்கார கொள்கைகளையும் விளக்குகின்றன.
உயிர்களுக்கு இறைவனைக் காட்டிக் கூட்டி முடிக்கின்ற வரையில் எல்லாப் பொருள்களையும் சிவாகமங்கள் கூறுவதால் இவை 'முடிந்தமுடிபு' அல்லது 'சித்தாந்தம்' எனப்படும். சைவ ஆகமங்கள்  சிவ வழிபாட்டின் முக்கியத்துவத்தையும், சிவாலயம் அமைக்கும் விதம், பூஜை முறைகள், அபிஷேக, அலங்கார கொள்கைகளையும் விளக்குகின்றன.


சிவன் கோயில்களில் நித்திய, சைமித்திக, பவித்திர முதலிய பூசைகளும், கோயில் கட்டுதல், பிரதிட்டை செய்தல் முதலியனவும், உயிர்களுக்குரிய கரும நியமங்களும், தீக்கை, ஆன்மார்த்த பூசை முதலியனவும் இவற்றில் விதித்தபடியே நடைபெறம்.  
சிவன் கோயில்களில் நித்திய, சைமித்திக, பவித்திர முதலிய பூசைகளும், கோயில் கட்டுதல், பிரதிட்டை செய்தல் முதலியனவும், உயிர்களுக்குரிய கரும நியமங்களும், தீக்கை, ஆன்மார்த்த பூசை முதலியனவும் இவற்றில் விதித்தபடியே நடைபெறம்.  
Line 274: Line 276:
* [https://shaivamfiles.fra1.cdn.digitaloceanspaces.com/articles/ebook-shaivagamangal-or-arimugam-sabaratnam.pdf சைவ ஆகமங்கள் ஓர் அறிமுகம்: எஸ்.பி. சபாரத்தினம்]
* [https://shaivamfiles.fra1.cdn.digitaloceanspaces.com/articles/ebook-shaivagamangal-or-arimugam-sabaratnam.pdf சைவ ஆகமங்கள் ஓர் அறிமுகம்: எஸ்.பி. சபாரத்தினம்]


{{First review completed}}
{{Finalised}}
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]

Revision as of 07:45, 17 October 2023

சைவ ஆகமங்கள் சைவ சித்தாந்தத்தின் மூல நூல்கள். ஆகமம் என்னும் சொல்லுக்கு ‘அவ்வாறே வந்தமைந்தது’ என்று பொருள். சிவ வழிபாடு, அதன் முக்கியத்துவம், சிவ ஆலயங்கள் அமைக்கும் முறை, வழிபாட்டு முறை, சிவாலயங்களின் செயல்பாடு சார்ந்த செய்திகள் சைவ ஆகம நூல்களில் உள்ளன.

தோற்றம்

சிவனால் ஐந்து மாமுனிவர்களுக்கு சிவாகமங்கள் அருளப்பட்டன என்பது சைவர்களின் நம்பிக்கை. உமாபதி சிவாச்சாரியார் “ ஆகமங்கள் சதாசிவ மூர்த்தியால் அநந்த தேவருக்கும், அநந்ததேவரால் சிறிகண்டருக்கும், சிறிகண்டரால் தேவர்களுக்கும், தேவர்களால் முனிவர்களுக்கும் முனிவர்களால் மனிதருக்கும், மனிதரால் மனிதர்களுக்கும் உபதேசம் செய்யப்பட்டது.” என்று குறிப்பிட்டார்.

திருமூலர்

அண்ணல் அருளால் அருளுஞ் சிவாகமம்
எண்ணில் இருபத்தெண் கோடிநூறாயிரம்
விண்ணவர் ஈசன் விழுப்பம் உரைத்தனர்
எண்ணிநின் றப்பொருள் ஏத்துவன் யானே

ஆகம நூல்களின் அமைப்பு

ஆகமங்களை நான்கு பாதங்களாகப் பிரிக்கலாம். ஆகம உள்ளடக்கத்தின் பெரும்பகுதி 'வித்யா பாதம் அல்லது ஞான பாதம்', 'கிரியா பாதம்' ஆகிய இரண்டு பாதங்களில் அடங்கும். ஞான பாதம் ஆகமங்களின் தத்துவத்தைப் பற்றியும், கிரியா பாதம் சமயக் கிரியைகள் பற்றியும் கூறுகின்றன. 'யோக பாதம்', 'சரியா பாதம்' ஆகிய இரண்டும் நீளம் குறைந்த பகுதிகள்

ஞானபாதம் பதி பசு பாசம் என்னும் முப்பொருள்களையும், யோகபாதம் சிவயோகத்தையும், கிரியாபாதம் மந்திரங்களின் உத்தாரம் சந்தியா வந்தனம் பூஜை ஜெபம் ஹோமம் ஆகியவற்றையும், சரியாபாதம் சமய ஆசாரங்களையும் பற்றிக் கூறுவன.

சைவ ஆகமப் பிரிவுகள்

சைவ சித்தாந்தத்துக்கு அடிப்படையான சைவ ஆகமங்கள் 28. அவற்றுள்

  • காரண ஆகமம்,
  • காமிய ஆகமம்
  • மகுடஆகமம்
  • வாதுள ஆகமம்
  • சுப்ரபேத ஆகமம்

ஆகியவை மட்டுமே கிடைக்கின்றன. இதிலும் காமிய ஆகமமே பெரும்பாலான கோவில்களில் பின்பற்றப்படுகிறது. அதைவிடக் குறைந்த அளவில் காரண ஆகமம் பின்பற்றப்படுகிறது. இவற்றின் வழிநூல்கள் நாரசிங்கம்முதல் விசுவான்மகம் ஈறாகிய இருநூற்றியேழு. சைவ ஆகமங்களை 'சிவபேத ஆகமங்கள்', 'ருத்ரபேத ஆகமங்கள்' என இரு வகையாகப் பிரிக்கலாம். இவற்றின் வழிநூல் அல்லது உப ஆகமங்கள் நாரசிங்கம்முதல் விசுவான்மகம் ஈறாக இருநூற்றேழு. உபாகமங்கள் மூலாகமங்களி‎ன் அடிப்படையில் சிற்பச் செய்திகளையும், பலவிதமான உற்சவங்களையும் பற்றிய செய்திகள் அடங்கியவை.

சிவபேத ஆகமங்கள் (10)
  • காமிகம்
  • யோகஜம்
  • சிந்தியம்
  • காரணம்
  • அஜிதம்
  • தீப்தம்
  • சூட்சுமம்
  • சகஸ்ரம்
  • அஞ்சுமான்
  • சுப்ரபேதம்
ருத்ரபேத ஆகமங்கள் (18)
  • விஜயம்
  • நிஸ்வாசம்
  • சுயம்பூதம்
  • ஆக்னேயம்
  • வீரம்
  • இரௌரவம்
  • மகுடம்
  • விமலம்
  • சந்திரஞானம்
  • முகவிம்பம்
  • புரோற்கீதம்
  • லலிதம்
  • சித்தம்
  • சந்தானம்
  • சர்வோத்தம்
  • பரமேசுவரம்
  • கிரணம்
  • வாதுளம்

உள்ளடக்கம்

உயிர்களுக்கு இறைவனைக் காட்டிக் கூட்டி முடிக்கின்ற வரையில் எல்லாப் பொருள்களையும் சிவாகமங்கள் கூறுவதால் இவை 'முடிந்தமுடிபு' அல்லது 'சித்தாந்தம்' எனப்படும். சைவ ஆகமங்கள் சிவ வழிபாட்டின் முக்கியத்துவத்தையும், சிவாலயம் அமைக்கும் விதம், பூஜை முறைகள், அபிஷேக, அலங்கார கொள்கைகளையும் விளக்குகின்றன.

சிவன் கோயில்களில் நித்திய, சைமித்திக, பவித்திர முதலிய பூசைகளும், கோயில் கட்டுதல், பிரதிட்டை செய்தல் முதலியனவும், உயிர்களுக்குரிய கரும நியமங்களும், தீக்கை, ஆன்மார்த்த பூசை முதலியனவும் இவற்றில் விதித்தபடியே நடைபெறம்.

பட்டியல்

ஆகமம் ஆசிரியர் சீடர்கள் கிரந்த எண்ணிக்கை உப ஆகமங்கள்
காமிகம் பிரணவர் திரிகலர், ஹரர் பரார்த்தம் சங்கியை வக்திராரம், பைரவோத்தரம், நாரசிங்கம் கருணானந்த சுவாமிகள் & கேசவ முதலியார்
யோகஜம் சுதன் பஸ்மன், விபு லட்சம் சங்கியை வீணாசிகோத்திரம், தாரம், சந்தம்சந்ததி, ஆத்மயோகம்
சிந்தியம் சுதீப்தன் கோபதி, அம்பிகை லட்சம் கிரந்தம் சுசிந்தியம், சுபகம், வாமம், பாவநாசம், பரோர்த்பவம்ருதம்
காரணம் காரணன் சர்வருத்திரன், பிரஜாபதி கோடி கிரந்தம் காரணம், பாவனம், தௌர்க்கம்மகேந்திரம், பீமம், மாரணம்துவேஷ்டம்
அஜிதம் சுசிவன் சிவன், அச்சுதன் லட்சம் கிரந்தம் பிரபூதம், பரத்பூதம், பார்வதிசங்கிதை, பதுமசங்கிதை
தீப்தம் ஈசன் ஈசானன், ஹூதாசனன் லட்சம் கிரந்தம் அமேயம், சப்தம், ஆச்சாத்தியம், அசங்கியம் அமிதௌஜசம், அனந்தம், மாதவோற்பூதம், அற்புதம், அட்சதம்
சூட்சுமம் சூட்சுமன் வைஸ்ரவணன், பிரபஞ்சன் பத்ம சங்கியை
சகஸ்ரம் காலன் பீமன், தருமன் சங்க சங்கியை அதீதம், மங்கலம், அப்ரமேயம், சுத்தம், ஜாதிபாக்கு, பிரபுத்தம், விபுதம், அத்தம், அலங்காரம், சுபோதகம்
அஞ்சுமான் அம்பு அக்கிரன், இரவி ஐந்து இலட்சம் கிரந்தம் வித்யாபுராணம், வாசவம், நீலலோகிதம், பிரகாரணம், பூதம், ஆத்மாலங்காரம், காசியபம், கௌதமம், ஐந்திரம், பராஹ்மயம், வாசிஷ்டம், ஈசானம்
சுப்பிரபேதம் ததேசன் விக்கினேசுவரன், சசி மூன்றுகோடி கிரந்தம்
விஜயம் அநாதிருத்திரன் பரமேசன் மூன்றுகோடி சங்கியை விஜயம், உற்பவம், அகோரம், சௌம்யம், மிருத்யுநாசனம், குபேரம், மகாகோரம், விமலம்
நிஸ்வாசம் தசார்ணன் சைலஜன் கோடி சங்கியை நிஸ்வாசம், உத்தரநிஸ்வாசம், நிஸ்வாசமுகோதயம், நிஸ்வாசநயனம், நிஸ்வாசகாரிகை, கோரசம்ஞம், யமாக்யம், குஹ்யம்.
சுயம்பூதம் நிதநேசன் பிரம்மன் ஒன்றரைக்கோடி கிரந்தம் பிரஜாபதம், பதுமம், சுவாயம்பவம்
ஆக்னேயம் வியோமன் ஹூதாசனன் முப்பதினாயிரம் கிரந்தம்
வீரம் தேஜசு பிரஜாபதி லட்சம் கிரந்தம் பிரஸ்தாரம், புல்லமல்லம், பிரபோதம், போதம், போதகம், அமோகம், மோகசயம், ஹாகடம், சாகடாதிகம், ஹலம், விலேகனம், பத்திரம், வீரம்
இரௌரவம் பிராமணேசர் நந்திகேசர் எட்டு அற்புதம் காலக்னம், கலாதீதம், இரௌரவம், இரௌரவோத்தரம், மகாகாளம்,ஐந்திரம்.
மகுடம் சிவன் மகாதேவன் லட்சம் கிரந்தம் மகுடம், மகுடோத்தரம்
விமலம் சர்வாத்மகன் வீரபத்திரன் மூன்று இலட்சம் கிரந்தம் அனந்தம், போகம், ஆக்கிராந்தம், விருசபிங்கம், வ்ருஷோற்புதம், வ்ருஷோத்ரம், சுதந்தம், ரௌத்ரம், பத்ரவிதம், அரேவதம், அதிக்ராந்தம், அட்டஹாசம், அலங்க்ருதம், அர்ச்சிதம், தாரணம், தந்திரம்.
சந்திரஞானம் அனந்தன் பிரகஸ்பதி மூன்றுகோடி கிரந்தம் ஸ்திரம், ஸ்தாணு, மஹாந்தம், வாருணம், நந்திகேச்வரம், ஏகபாதம்சங்கரம், நீலருத்ரகம், சிவபத்ரம், கல்பபேதம் ஸ்ரீமுகம், சிவசாசனம், சிவசேகரம், தேவீமதம்.
முகவிம்பம் பிரசாந்தன் ததீசி லட்சம் கிரந்தம் சதுர்முகம், மலையம், அயோகம், சம்ஸ்தோபம், பிரதிவிம்பகம்,ஆத்மாலங்காரம், வாயவியம், தௌடிகம், துடிநீரகம், கலாத்யயம், துலாயோகம், குட்டிமம், பட்டசேகரம், மகாவித்தை, மகாசௌரம்.
புரோத்கீதம் சூலி கவசன் மூன்று இலட்சம் கிரந்தம் கவசம், வராகம், பிங்கலம், பாசபந்தம் தண்டதரம், அங்குசம், தனுர்த்தரம், சிவஞானம், விஞ்ஞானம், ஸ்ரீகாலஞானம், ஆயுர்வேதம், தனுர்வேதம், சதுர்ப்பதம், ஷ்ட்ரீவேதனம், பரதம், கீதம்,ஆதோத்தியம்.
லலிதம் ஆலயேசன் லலிதன் எண்ணாயிரம் கிரந்தம் இலலிதம், இலலிதோத்தரம், கௌமாரம்
சித்தம் பிந்து சண்டேசன் ஒன்றரைக்கோடி கிரந்தம் சாரோத்தரம், ஔசனோத்தரம், சாலாபேதம், சசிகண்டம்
சந்தானம் சிவநிஷ்டன் அசம்வாயன் ஆயிரம் கிரந்தம் இலிங்காயத்ஷம், சுரேத்யக்ஷம்,சங்கரம், அமலேசுவரம், அசங்கியம், அனிலம், துவந்தம்.
சர்வோத்தம் சோமதேவன் நரசிம்மன் இரண்டு இலட்சம் கிரந்தம் சிவதருமோத்தரம், வாயுப்ரோக்தம், திவ்யப்ரோக்தம், ஈசானம், சர்வோத்கீதம்.
பரமேசுவரம் ஸ்ரீதேவி உசனன் பன்னிரெண்டு இலட்சம் கிரந்தம் மதங்கம், யட்சிணிபத்மம், பாரமேசுவரம், பௌஷ்கரம், சுப்பிரயோகம், ஹம்சம், சாமான்னியம்.
கிரணம் தேவவிபவன் சம்வர்த்தனன் ஐந்துகோடி கிரந்தம் காரூடம், நைருதம், நீலம், ரூட்சம், பானுகம், தேனுகம், பிரபுத்தம், புத்தம், காலம்.
வாதுளம் சிவன் மகாகாளன் லட்சம் கிரந்தம் சுசிந்தியம், சுபகம், வாமம், பாவநாசம், பரோர்த்பவம்ருதம்வாதுளம், உத்தரவாதுளம், புரோகிதம், காலஞானம், சர்வம், தர்மாத்மகம், சிரேஷ்டம், நித்யம், சுத்தம், மகானனம், விச்வம், விச்வாத்மகம்.

ஆகம விளக்க நூல்கள்

சைவ ஆகமங்களை விளக்குவதற்காக 18 சிவாச்சார்யர்கள் பதினெட்டு நூல்களை எழுதினர். அகோர சிவாச்சார்யரின் விளக்க நூல் இலங்கையில் அதிகம் பயன்பாட்டில் உள்ளது. இவை தவிர சர்வாத்மசிவ, சர்வேசபண்டித சிவ,வியாபகசிவ, வ்யோமசிவ, உத்துங்க சிவ, பரமானந்த யோகீஸ்வர சிவ, அப்பைய தீட்சிதர் ஆகியோரும் விளக்க நூல்கள் எழுதினர். பொ.யு. 6-7 நூற்றாண்டுகளில் காஷ்மீரில் வாழ்ந்த உக்ரஜ்யோதி, ப்ருஹஸ்பதி, ஸத்யோஜ்யோதி முதலிய ஆசாரியர்கள் ரௌரவம் ஸ்வாயம்புவம் முதலா‎ன ஆகமங்களுக்கு உரை எழுதினர்.

சார்பு நூல்கள்

மூல ஆகமங்களிலும் உப ஆகமங்களிலும் உள்ள ஞான பாதக் கருத்துக்களில் சிலவற்றைத் தொகுத்தும், சிலவற்றை விளக்கியும் எழுதப்பட்ட நூல்கள் எட்டு.

  • தத்துவ பிரகாசிகை - போஜதேவர்
  • தத்துவ சங்கிரகம் - சத்தியோஜோதி
  • தத்துவத்திரய நிர்ணயம் - சத்தியோஜோதி
  • ரத்தின திரயம் - ஸ்ரீகண்டர்
  • போக காரிகை - சத்தியோஜோதி
  • நாத காரிகை - பட்டராமகண்டர்
  • மோஷ காரிகை - சத்தியோஜோதி
  • பரமோக்‌ஷ நிராசகாரிகை - சத்தியோஜோதி
தமிழ் நூல்கள்
  • திருமூலர் எழுதிய திருமந்திரம் ஆகமங்களின் சாரத்தைக் கொண்டது.
  • வாகீச முனிவரால் இயற்றப்பட்ட ஞானாமிர்தம் கிரணாகமத்தை அடிப்படையாகக் கொண்டது.
  • சம்பந்தரின் 'சைவ சமய நெறி' என்னும் நூல், தத்துவ பிரகாசரின் 'தத்துவப்பிரகாச'ம் ஆகியவை சிவாகமங்களை அடிப்படையாகக் கொண்டவை.
  • துறைமங்கலம் சிவப்பிரகாச சுவாமிகள் சிவாகமங்களின் ஞானபாதப் பகுதிகளை ஆதாரமாகக் கொண்டு 'சிவப்பிரகாச விகாசம்' என்னும் நூலை எழுதினார்.
  • சைவ சித்தாந்த விளக்க நூல்களான பதினான்கும் (திருவுந்தியார் முதல் சங்கற்ப நிராகரணம் வரை) சிவாகம ஞானபாதக் கருத்துக்களை விளக்கிக் கூறுபவை.

பதிப்பிக்கப்பட்ட ஆகமங்கள்

  • ரௌரவாகமம் (3 தொகுதிகள்) கிரியாபாதம்
  • மிருகேந்திராகமம்
  • அஜிதாகமம் (3 தொகுதிகள்)
  • மதங்கபாரமேசுவராகமம் (2 தொகுதிகள்) நாற்பாதங்களும்
  • ஸார்த்ததிரிசதிகாலோத்தராகமம் (கிரியாபாதம்)
  • ரௌரவோத்தராகமம்
  • தீப்தாகமம்
  • கிரணாகமம் (ஞானபாதம்)
  • பராக்கியாகமம்

ஆகம நூல்கள் பாதுகாப்பிடம்

  • பிரெஞ்ச் ‏இன்ஸ்டிட்யூட் நிறுவ‎னம்
  • செ‎‎ன்னைக் கீழ்த்திசை சுவடிகள் நூலகம்
  • தஞ்சை சரசுவதி மகால் நூலகம்
  • செ‎ன்னை அடையாறு நூலகம்

உசாத்துணை

இணைப்புகள்


✅Finalised Page