இந்துமதி: Difference between revisions
No edit summary |
|||
Line 4: | Line 4: | ||
== பிறப்பு, கல்வி == | == பிறப்பு, கல்வி == | ||
[[File:இந்துமதி பெற்றோருடன்.jpg|thumb|இந்துமதி பெற்றோருடன்]] | [[File:இந்துமதி பெற்றோருடன்.jpg|thumb|இந்துமதி பெற்றோருடன்]] | ||
திருவண்ணாமலை மாவட்டம் மேல்நர்மா என்னும் ஊரைச்சேர்ந்த | திருவண்ணாமலை மாவட்டம் மேல்நர்மா என்னும் ஊரைச்சேர்ந்த லட்சுமிநரசிம்மன் ராஜம்மா இணையருக்குப் பிறந்தவர். இந்துமதி அவரது பெற்றோர் இட்ட பெயர் அல்ல. அவரது கடைசித்தங்கை பெயர் இந்துமதி. அப்பெயரிலேயே இந்துமதி தனது படைப்புகளை எழுதினார். | ||
== இலக்கியவாழ்க்கை == | == இலக்கியவாழ்க்கை == | ||
இந்துமதி Story of a Woman என்னும் திரைப்படத்தின் தாக்கத்தில் தனது பதினாறாம் வயதில் ஆனந்தவிகடன் இதழில் முதல் கதையை எழுதினார். தரையில் இறங்கும் விமானங்கள், அந்தரத்தில் ஒரு ஊஞ்சல், அசோகவனம், நினைவே இல்லையா நித்யா, தொட்டுவிடும் தூரம், சக்தி 90, நெருப்பு மலர், தொடுவான மனிதர்கள் உள்ளிட்ட பல படைப்புகளை எழுதியுள்ளார். இரு சிறுகதைத் தொகுதிகளும், 100-க்கும் மேற்பட்ட நெடுங்கதைகளும் எழுதியுள்ளார். வழக்கமான அவரது பாணியிலிருந்து மாறி யார் எனும் துப்பறியும் கதையையும் எழுதியுள்ளார். எழுத்தாளர் சிவசங்கரியுடன் இணைந்து இரண்டு பேர் எனும் தொடர்கதையை குமுதம் இதழில் எழுதியுள்ளார். எழுத்தாளர் ஜெயமோகனின் தமிழ் நாவல்கள் விமரிசகன் சிபாரிசில் தரையில் இறங்கும் விமானங்கள் சிறந்த சமூக மிகு கற்பனைப் படைப்புகள் பட்டியலில் இடம்பெறுகிறது. | இந்துமதி Story of a Woman என்னும் திரைப்படத்தின் தாக்கத்தில் தனது பதினாறாம் வயதில் ஆனந்தவிகடன் இதழில் முதல் கதையை எழுதினார். தரையில் இறங்கும் விமானங்கள், அந்தரத்தில் ஒரு ஊஞ்சல், அசோகவனம், நினைவே இல்லையா நித்யா, தொட்டுவிடும் தூரம், சக்தி 90, நெருப்பு மலர், தொடுவான மனிதர்கள் உள்ளிட்ட பல படைப்புகளை எழுதியுள்ளார். இரு சிறுகதைத் தொகுதிகளும், 100-க்கும் மேற்பட்ட நெடுங்கதைகளும் எழுதியுள்ளார். வழக்கமான அவரது பாணியிலிருந்து மாறி யார் எனும் துப்பறியும் கதையையும் எழுதியுள்ளார். எழுத்தாளர் சிவசங்கரியுடன் இணைந்து இரண்டு பேர் எனும் தொடர்கதையை குமுதம் இதழில் எழுதியுள்ளார். எழுத்தாளர் ஜெயமோகனின் தமிழ் நாவல்கள் விமரிசகன் சிபாரிசில் தரையில் இறங்கும் விமானங்கள் சிறந்த சமூக மிகு கற்பனைப் படைப்புகள் பட்டியலில் இடம்பெறுகிறது. |
Revision as of 22:00, 10 October 2023
To read the article in English: Indhumathi.
இந்துமதி தமிழ் எழுத்தாளர். பொதுவாசிப்புக்குரிய கதைகளை பெரிய வார இதழ்களில் தொடராக எழுதியவர். பெண்களின் உலகைச் சித்தரிப்பவர் என புகழ்பெற்றவர். திரைப்படங்களுக்கும் எழுதியிருக்கிறார்
பிறப்பு, கல்வி
திருவண்ணாமலை மாவட்டம் மேல்நர்மா என்னும் ஊரைச்சேர்ந்த லட்சுமிநரசிம்மன் ராஜம்மா இணையருக்குப் பிறந்தவர். இந்துமதி அவரது பெற்றோர் இட்ட பெயர் அல்ல. அவரது கடைசித்தங்கை பெயர் இந்துமதி. அப்பெயரிலேயே இந்துமதி தனது படைப்புகளை எழுதினார்.
இலக்கியவாழ்க்கை
இந்துமதி Story of a Woman என்னும் திரைப்படத்தின் தாக்கத்தில் தனது பதினாறாம் வயதில் ஆனந்தவிகடன் இதழில் முதல் கதையை எழுதினார். தரையில் இறங்கும் விமானங்கள், அந்தரத்தில் ஒரு ஊஞ்சல், அசோகவனம், நினைவே இல்லையா நித்யா, தொட்டுவிடும் தூரம், சக்தி 90, நெருப்பு மலர், தொடுவான மனிதர்கள் உள்ளிட்ட பல படைப்புகளை எழுதியுள்ளார். இரு சிறுகதைத் தொகுதிகளும், 100-க்கும் மேற்பட்ட நெடுங்கதைகளும் எழுதியுள்ளார். வழக்கமான அவரது பாணியிலிருந்து மாறி யார் எனும் துப்பறியும் கதையையும் எழுதியுள்ளார். எழுத்தாளர் சிவசங்கரியுடன் இணைந்து இரண்டு பேர் எனும் தொடர்கதையை குமுதம் இதழில் எழுதியுள்ளார். எழுத்தாளர் ஜெயமோகனின் தமிழ் நாவல்கள் விமரிசகன் சிபாரிசில் தரையில் இறங்கும் விமானங்கள் சிறந்த சமூக மிகு கற்பனைப் படைப்புகள் பட்டியலில் இடம்பெறுகிறது.
நூல் பட்டியல்
- கண் சிமிட்டும் மின்மினிகள்
- வீணையில் உறங்கும் ராகங்கள்
- என் வீட்டு ரோஜா உன் வீட்டு ஜன்னலில்
- பகல் நேர நிலா
- தரையில் இறங்கும் விமானங்கள்
- மணல் வீடுகள்
- இன்றும் வரம் தரும் யோகினி சித்தர்கள்
- அக்னி நட்சத்திரங்கள்
- குருத்து
உசாத்துணை
- வெறும் கற்பனை கதைகளை நான் எழுதுவதில்லை- இந்துமதி பேட்டி குங்குமம் தோழி இதழ்
- இந்துமதியின் அம்மா தினமணி
- இந்துமதி உரை -YouTube
- இந்துமதி books Chillzee.in
- இந்துமதி நேர்காணல் - தின மணி
- தி.ஜானகிராமன் நூற்றாண்டைக் கொண்டாடலாம் வாங்க: எழுத்தாளர் இந்துமதி!
- பாதையற்ற நிலம் 19: ரசனைக்கு உவப்பான எழுத்து-இந்து தமிழ் திசை
- இந்துமதி நேர் காணல் - News7 TV
✅Finalised Page