வண்ணக் களஞ்சியப் புலவர்: Difference between revisions
| Line 1: | Line 1: | ||
வண்ணக் களஞ்சியப் புலவர்(முகம்மது இபுராகிம்) இஸ்லாமியத் தமிழ் கவிஞர் | வண்ணக் களஞ்சியப் புலவர்(முகம்மது இபுராகிம்) (பொ.யு. 18-19-ஆம் நூற்றாண்டு) இஸ்லாமியத் தமிழ் கவிஞர். வண்ணப்பாடல்கள், சந்தப் பாடல்கள்- பாடும் திறமையால் 'வண்ணக் களஞ்சியப் புலவர்' எனப் பெயர் பெற்றார். இராஜ நாயகம் என்னும் இஸ்லாமியக் காப்பியம் உட்பட பல இஸ்லாமிய இலக்கியங்கள் இயற்றினார். | ||
== வாழ்க்கைக் குறிப்பு == | == வாழ்க்கைக் குறிப்பு == | ||
| Line 9: | Line 9: | ||
வண்ணக் களஞ்சியப் புலவர் சந்தப் பாக்களும் வண்ணப்பாக்களும் பாடுவதில் வல்லமை பெற்றிருந்தார். [[உமறுப்புலவர்|உமறுப்புலவரின்]] கவிநயத்தால் ஈர்க்கப்பட்டார். இஸ்லாமியக் காப்பியங்களில் குறிப்பிடத்தக்க '[[இராஜ நாயகம்]]' வண்ணக் களஞ்சியப் புலவரால் இயற்றப்பட்டது. திருக்குர்ஆனில் கூறப்படும் தாவூது நபி, சுலைமான் நபி ஆகியோரின் வாழ்க்கை வரலாற்றைக் கூறுகிறது. விவிலியத்தில் (BIBLE) இடம் பெற்றுள்ள தாவீதையும் சாலோமனையும் பற்றியும் கூறுகிறது. நாற்பத்தாறு படலங்களையும் 2240 செய்யுட்களையும் உடைய இந்நூல் காப்பிய இலக்கணங்கள் அனைத்தும் அமையப்பெற்ற பெருங்காப்பியம். இந்நூலின் இறுதிப்பாடல் இது 1808-ம் ஆண்டை ஒட்டி அரங்கேற்றப்பட்டதாகக் குறிப்பிடுகிறது. "இராஜ நாயகம் பாடவந்த வண்ணக் களஞ்சியப் புலவர் உமறுப் புலவரின் திறமையினால் பெரிதும் ஈர்ப்புண்டு அவரை அடி ஒற்றியே தன் காப்பியத்தை யாக்க முயன்றிருக்கின்றார்" என்று [[மு.மு. இஸ்மாயில்]] 'இனிக்கும் இராஜ நாயகம்' நூலில் குறிப்பிடுகிறார். | வண்ணக் களஞ்சியப் புலவர் சந்தப் பாக்களும் வண்ணப்பாக்களும் பாடுவதில் வல்லமை பெற்றிருந்தார். [[உமறுப்புலவர்|உமறுப்புலவரின்]] கவிநயத்தால் ஈர்க்கப்பட்டார். இஸ்லாமியக் காப்பியங்களில் குறிப்பிடத்தக்க '[[இராஜ நாயகம்]]' வண்ணக் களஞ்சியப் புலவரால் இயற்றப்பட்டது. திருக்குர்ஆனில் கூறப்படும் தாவூது நபி, சுலைமான் நபி ஆகியோரின் வாழ்க்கை வரலாற்றைக் கூறுகிறது. விவிலியத்தில் (BIBLE) இடம் பெற்றுள்ள தாவீதையும் சாலோமனையும் பற்றியும் கூறுகிறது. நாற்பத்தாறு படலங்களையும் 2240 செய்யுட்களையும் உடைய இந்நூல் காப்பிய இலக்கணங்கள் அனைத்தும் அமையப்பெற்ற பெருங்காப்பியம். இந்நூலின் இறுதிப்பாடல் இது 1808-ம் ஆண்டை ஒட்டி அரங்கேற்றப்பட்டதாகக் குறிப்பிடுகிறது. "இராஜ நாயகம் பாடவந்த வண்ணக் களஞ்சியப் புலவர் உமறுப் புலவரின் திறமையினால் பெரிதும் ஈர்ப்புண்டு அவரை அடி ஒற்றியே தன் காப்பியத்தை யாக்க முயன்றிருக்கின்றார்" என்று [[மு.மு. இஸ்மாயில்]] 'இனிக்கும் இராஜ நாயகம்' நூலில் குறிப்பிடுகிறார். | ||
காதிறிய்யா என்னும் ஆன்மீக வழியை நிறுவிய முகியித்தீன் அப்துல் காதிறு ஜீலானி ( ரலி என்னும் நாகூர் தர்க்காவில் வாழ்ந்த துறவியின் | காதிறிய்யா என்னும் ஆன்மீக வழியை நிறுவிய முகியித்தீன் அப்துல் காதிறு ஜீலானி ( ரலி) என்னும் நாகூர் தர்க்காவில் வாழ்ந்த துறவியின் மீது , 'முகைதீன் புராணம்' (குதுபு நாயகம்) என்னும் நூலை எழுதி நாகூரில் அரங்கேற்றினார். (இப்பெரியவரின் வாழ்க்கையை [[செய்கு அப்துல் காதிறு நயினார் லெப்பை ஆலிம் புலவர்|ஆலிம் புலவர்]] 'முஹயித்தீன் ஆண்டவர் புராணம்' என்ற பெயரிலும் இலங்கையில் வாழ்ந்த பதிறுத்தீன் புலவர் 'முகைதீன் புராணம்' என்ற பெயரிலும் இயற்றியுள்ளனர்). இதனால் மகிழ்ந்த ஒரு செல்வந்தர் தன் மகளை இவருக்கு மணம் முடித்ததாகக் கூறப்படுகிறது. | ||
வண்ணக் களஞ்சியப் புலவர் 'தீன் புராணம்' என்னும் காப்பியத்தையும் இயற்றினார். தம் மூதாதை இபுறாஹீம் ஷஹீதின் வாழ்க்கையையும், மதுரைப் பாண்டிய மன்னனோடு அவர் நிகழ்த்திய போர்களையும் , இறுதியில் அவனை வென்று மதுரையில் இருந்து ஆட்சி செய்ததையும் கூறுகிறார். வீரச்சுவை நிறைந்த இந்நூல் ஹிஜ்ரி 1236 -ல் இராமநாதபுர மாவட்டம் ஏர்வாடி ( ஏறுபாடி ) என்னும் இடத்தில் இருக்கும் இபுறாஹீம் ஷகீது வலியுல்லாவின் தர்காவில் அரங்கேற்றப்பட்டது. | வண்ணக் களஞ்சியப் புலவர் 'தீன் புராணம்' என்னும் காப்பியத்தையும் இயற்றினார். தம் மூதாதை இபுறாஹீம் ஷஹீதின் வாழ்க்கையையும், மதுரைப் பாண்டிய மன்னனோடு அவர் நிகழ்த்திய போர்களையும் , இறுதியில் அவனை வென்று மதுரையில் இருந்து ஆட்சி செய்ததையும் கூறுகிறார். வீரச்சுவை நிறைந்த இந்நூல் ஹிஜ்ரி 1236 -ல் (பொ.யு. 1820-21) இராமநாதபுர மாவட்டம் ஏர்வாடி ( ஏறுபாடி ) என்னும் இடத்தில் இருக்கும் இபுறாஹீம் ஷகீது வலியுல்லாவின் தர்காவில் அரங்கேற்றப்பட்டது. | ||
வண்ணக் களஞ்சியப் புலவர் 'அலி பாதுஷா நாடகம்' என்ற நாடக நூலையும் 'சீறா வண்ணம்' முதலிய பல வண்ண நூல்களையும் இயற்றினார். | வண்ணக் களஞ்சியப் புலவர் 'அலி பாதுஷா நாடகம்' என்ற நாடக நூலையும் 'சீறா வண்ணம்' முதலிய பல வண்ண நூல்களையும் இயற்றினார். | ||
| Line 29: | Line 29: | ||
* இராஜ நாயகம் | * இராஜ நாயகம் | ||
* முகைதீன் புராணம் | * முகைதீன் புராணம்(குதுபு நாயகம்) | ||
* தீன் புராணம் | * தீன் புராணம் | ||
* அலி பாதுஷா நாடகம் | * அலி பாதுஷா நாடகம் | ||
| Line 37: | Line 37: | ||
[https://archive.org/details/dli.jZY9lup2kZl6TuXGlZQdjZM8luQy.TVA_BOK_0001564/page/190/mode/1up?view=theater இனிக்கும் இராஜ நாயகம் -மு.மு.இஸ்மாயில், ஆர்கைவ் வலைத்தளம்] | [https://archive.org/details/dli.jZY9lup2kZl6TuXGlZQdjZM8luQy.TVA_BOK_0001564/page/190/mode/1up?view=theater இனிக்கும் இராஜ நாயகம் -மு.மு.இஸ்மாயில், ஆர்கைவ் வலைத்தளம்] | ||
{{ | {{Ready for review}} | ||
[[Category:Tamil Content]] | [[Category:Tamil Content]] | ||
Revision as of 05:34, 12 September 2023
வண்ணக் களஞ்சியப் புலவர்(முகம்மது இபுராகிம்) (பொ.யு. 18-19-ஆம் நூற்றாண்டு) இஸ்லாமியத் தமிழ் கவிஞர். வண்ணப்பாடல்கள், சந்தப் பாடல்கள்- பாடும் திறமையால் 'வண்ணக் களஞ்சியப் புலவர்' எனப் பெயர் பெற்றார். இராஜ நாயகம் என்னும் இஸ்லாமியக் காப்பியம் உட்பட பல இஸ்லாமிய இலக்கியங்கள் இயற்றினார்.
வாழ்க்கைக் குறிப்பு
முகமது இபுராஹிம் இராமநாதபுர மாவட்டம் முதுகுளத்தூரின் பக்கத்திலுள்ள சிற்றூராகிய மீசலில் பிறந்தார். பின்னர் மதுரையில் வாழ்ந்தார். மதுரையில் அமைந்த ஆதீன மடத்தின் தலைவரிடம் தமிழ், வடமொழி ஆகியவற்றைக் கற்றார். நாகூரில் பலகாலம் வாழ்ந்தார். நாகூரில் அடக்கமான ஷாகுல் ஹமீது நாயகம் எனப்படும் காதிறு ஒலி ஆண்டகையின் மீது மிகுந்த பக்தியும் ஈடுபாடும் கொண்டிருந்தார்.
தஞ்சையை ஆண்ட அரசர் இவரது சிறப்பு அறிந்து, சிங்கமுகப் பொற்சிவிகை பரிசளித்தார் எனக் குறிப்பிடுகின்றனர். இராமநாதபுர இராசசிங்க மங்கலத்தின் பக்கத்திலுள்ள தும்பட்டிகா என்ற கோட்டையில் தனது 89-ஆவது வயதில் இறந்தார். வண்ணக் களஞ்சியப் புலவர் இலக்கியப் பயிற்சியும், தமிழ்ப்புலமையும், சமயப் பற்றும் உடையவராக இருந்தார். .
இலக்கிய வாழ்க்கை
வண்ணக் களஞ்சியப் புலவர் சந்தப் பாக்களும் வண்ணப்பாக்களும் பாடுவதில் வல்லமை பெற்றிருந்தார். உமறுப்புலவரின் கவிநயத்தால் ஈர்க்கப்பட்டார். இஸ்லாமியக் காப்பியங்களில் குறிப்பிடத்தக்க 'இராஜ நாயகம்' வண்ணக் களஞ்சியப் புலவரால் இயற்றப்பட்டது. திருக்குர்ஆனில் கூறப்படும் தாவூது நபி, சுலைமான் நபி ஆகியோரின் வாழ்க்கை வரலாற்றைக் கூறுகிறது. விவிலியத்தில் (BIBLE) இடம் பெற்றுள்ள தாவீதையும் சாலோமனையும் பற்றியும் கூறுகிறது. நாற்பத்தாறு படலங்களையும் 2240 செய்யுட்களையும் உடைய இந்நூல் காப்பிய இலக்கணங்கள் அனைத்தும் அமையப்பெற்ற பெருங்காப்பியம். இந்நூலின் இறுதிப்பாடல் இது 1808-ம் ஆண்டை ஒட்டி அரங்கேற்றப்பட்டதாகக் குறிப்பிடுகிறது. "இராஜ நாயகம் பாடவந்த வண்ணக் களஞ்சியப் புலவர் உமறுப் புலவரின் திறமையினால் பெரிதும் ஈர்ப்புண்டு அவரை அடி ஒற்றியே தன் காப்பியத்தை யாக்க முயன்றிருக்கின்றார்" என்று மு.மு. இஸ்மாயில் 'இனிக்கும் இராஜ நாயகம்' நூலில் குறிப்பிடுகிறார்.
காதிறிய்யா என்னும் ஆன்மீக வழியை நிறுவிய முகியித்தீன் அப்துல் காதிறு ஜீலானி ( ரலி) என்னும் நாகூர் தர்க்காவில் வாழ்ந்த துறவியின் மீது , 'முகைதீன் புராணம்' (குதுபு நாயகம்) என்னும் நூலை எழுதி நாகூரில் அரங்கேற்றினார். (இப்பெரியவரின் வாழ்க்கையை ஆலிம் புலவர் 'முஹயித்தீன் ஆண்டவர் புராணம்' என்ற பெயரிலும் இலங்கையில் வாழ்ந்த பதிறுத்தீன் புலவர் 'முகைதீன் புராணம்' என்ற பெயரிலும் இயற்றியுள்ளனர்). இதனால் மகிழ்ந்த ஒரு செல்வந்தர் தன் மகளை இவருக்கு மணம் முடித்ததாகக் கூறப்படுகிறது.
வண்ணக் களஞ்சியப் புலவர் 'தீன் புராணம்' என்னும் காப்பியத்தையும் இயற்றினார். தம் மூதாதை இபுறாஹீம் ஷஹீதின் வாழ்க்கையையும், மதுரைப் பாண்டிய மன்னனோடு அவர் நிகழ்த்திய போர்களையும் , இறுதியில் அவனை வென்று மதுரையில் இருந்து ஆட்சி செய்ததையும் கூறுகிறார். வீரச்சுவை நிறைந்த இந்நூல் ஹிஜ்ரி 1236 -ல் (பொ.யு. 1820-21) இராமநாதபுர மாவட்டம் ஏர்வாடி ( ஏறுபாடி ) என்னும் இடத்தில் இருக்கும் இபுறாஹீம் ஷகீது வலியுல்லாவின் தர்காவில் அரங்கேற்றப்பட்டது.
வண்ணக் களஞ்சியப் புலவர் 'அலி பாதுஷா நாடகம்' என்ற நாடக நூலையும் 'சீறா வண்ணம்' முதலிய பல வண்ண நூல்களையும் இயற்றினார்.
பாடல் நடை
ஆகம கலைகட்கு அனந்த ஆபரண
அழகு எனும் திருப் பெயர் அரசை
ஏக சிற்பர மெய்ப் பொருள் ஒளி தெளிவை
எமக்கு எமை காட்டு தர்ப்பணத்தை
சேகர பல கற்பனை கடந்த உயர்ந்த
செம்மலை, நரர் உயிர்க்கு உயிராம்
தேக தத்துவ நிர்மல மகுமூதை
தியானம் செய் மனங்களே மனங்கள் !!
நூல்கள்
- இராஜ நாயகம்
- முகைதீன் புராணம்(குதுபு நாயகம்)
- தீன் புராணம்
- அலி பாதுஷா நாடகம்
- சீறா வண்ணம்
உசாத்துணை
இனிக்கும் இராஜ நாயகம் -மு.மு.இஸ்மாயில், ஆர்கைவ் வலைத்தளம்
இந்த பக்கம் தற்பொழுது மெய்ப்பு பார்க்கப்படுகிறது. மாற்றம் எதுவும் செய்ய வேண்டாம்
Ready for review
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.