being created

குறிஞ்சிப்பாட்டு: Difference between revisions

From Tamil Wiki
mNo edit summary
mNo edit summary
Line 12: Line 12:
கபிலர், செல்வக் கடுங்கோ வாழியாதனைப் பதிற்றுப்பத்து ஏழாம்பத்தில் சிறப்பித்துப் பாடியதால், அம்மன்னன் இவருக்கு நூறாயிரம் கானம் (நூறாயிரம் பொற்காசும்) வழங்கினான். ‘நன்றா என்றும் குன்றேறி நின்று கண்ணில் கண்ட நாடெல்லாம் காட்டிக் கொடுத்தான்’ என்று ஏழாம்பத்தின் பதிகம் தெரிவிக்கிறது.

== குறிஞ்சி நிலம் அறிமுகம் ==
== நிலம் அறிமுகம் ==
மலையும் மலைசார்ந்த நிலமும் குறிஞ்சி நிலம். குளிர்காலமும் யாமப்பொழுதும் குறிஞ்சி நிலத்துக்கு உரியன. காதலர் புணர்ச்சி பற்றிக் கூறுவது குறிஞ்சித் திணைக்கு உரிய பொருள். குறிஞ்சி நிலத்தின் தெய்வம் முருகன். இந்தக் குறிஞ்சிப்பாட்டின் களம் குறிஞ்சிநிலமாகும். இந்த நூலில் காதலர் வாழ்ந்த மலைநிலத்தில் பூத்திருந்த 96 வகையான பூக்கள் கூறப்பட்டுள்ளன. தலைவி தன் தோழிமாருடன் இணைந்து அந்தப் பூக்களைப் பறித்துப் பாறைமீது குவித்து விளையாடியதாக இந்தப் பாடலில் குறிப்பு இடம்பெற்றுள்ளது.  

== பா வகை அறிமுகம் ==
குறிஞ்சிப்பாட்டு தமிழ் இலக்கணம் வகுத்தள்ள நால்வகைப் பாக்களுள் ஆசிரியப்பாவினால் அமைக்கப்பட்டுள்ளது. ஆசிரியப்பாவுக்குத் தனிச் சிறப்பு உண்டு. இலக்கணக் கட்டுக்கோப்புகள் குறைவாக அமைந்து, கவிஞரின் மனப்போக்குக்கும் மொழிவழி வெளியீட்டுக்கும் இடைவெளி ஏற்படாதபடி அவருக்கு மிகுதியான உரிமையை வழங்குவது ஆசிரியப்பாவே ஆகும். இது அகவற்பா எனவும் வழங்கும். சங்க இலக்கியம், சிலப்பதிகாரம், மணிமேகலை,பெருங்கதை போன்ற காப்பியங்கள் ஆகியவற்றில் பெருமளவு இடம் பெற்றிருப்பது ஆசிரியப்பாவே ஆகும். 

== நூல் அமைப்பு ==
== நூல் அமைப்பு ==

Revision as of 18:20, 20 February 2022

🔏Being Created

Please do not write any content below this line. This section is only for editing templates & categories.

குறிஞ்சிப்பாட்டு என்பது, சங்க இலக்கிய பத்துப்பாட்டு நூல்களுள் எட்டாவதாக அமைந்துள்ளது. புலவர் கபிலர் ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் மக்களின் அக ஒழுக்கம் சார்ந்த பண்பாட்டினை விளக்குவதற்காகப் பாடியது. இது 261 அடிகளை உடையது.

புலவர் அறிமுகம்

குறிஞ்சிப்பாட்டைப் பாடியவர் புலவர் கபிலர். சங்க இலக்கியப் பாடல்களில் மிகுதியான பாடல்கள் கபிலர் இயற்றியவையே. இவர் பாடிய அகப்பாடல்கள் 197. நற்றிணை 20, குறுந்தொகை 29, ஐங்குறுநூறு(குறிஞ்சி) 100, பதிற்றுப்பத்து (ஏழாம்பத்து) 10, அகநானூறு 18, புறநானூறு 28, குறிஞ்சிப்பாட்டு 1, கலித்தொகை (குறிஞ்சிக்கலி) 29. இவற்றுள் குறிஞ்சித்திணை சார்ந்த பாடல்கள் மட்டுமே 193 இருக்கின்றன.

கபிலர் அகப்பாடல்களை மட்டும் பாடுவதில் வல்லவர் அல்லர். புறப்பாடல்களைப் புனைவதிலும் வல்லவர்தான். புறநானூற்றிலே 28 பாடல்களும், பதிற்றுப்பத்தில் பத்துப்பாடல்களும் என 38 புறப்பாடல்கள் இவருடையன.

கபிலரால் பாடப்பெற்ற மன்னர்கள் செல்வக் கடுங்கோ வாழியாதன், அகுதை,அந்துவன், ஆரிய அரசன் பிரகதத்தன், இருங்கோவேள், எவ்வி, ஓரி, காரி, நள்ளி, பாரி,பேகன், விச்சிக்கோன், பொறையன் போன்றோர். இவர்களைத் தவிர பாரி மகளிர்,கழாத்தலையார் மற்றும் பேகனின் மனைவி கண்ணகியும் அவரின் கவிதைவரிகளுக்குள் கால் பதித்தவர்கள்.

கபிலர், செல்வக் கடுங்கோ வாழியாதனைப் பதிற்றுப்பத்து ஏழாம்பத்தில் சிறப்பித்துப் பாடியதால், அம்மன்னன் இவருக்கு நூறாயிரம் கானம் (நூறாயிரம் பொற்காசும்) வழங்கினான். ‘நன்றா என்றும் குன்றேறி நின்று கண்ணில் கண்ட நாடெல்லாம் காட்டிக் கொடுத்தான்’ என்று ஏழாம்பத்தின் பதிகம் தெரிவிக்கிறது.

நிலம் அறிமுகம்

மலையும் மலைசார்ந்த நிலமும் குறிஞ்சி நிலம். குளிர்காலமும் யாமப்பொழுதும் குறிஞ்சி நிலத்துக்கு உரியன. காதலர் புணர்ச்சி பற்றிக் கூறுவது குறிஞ்சித் திணைக்கு உரிய பொருள். குறிஞ்சி நிலத்தின் தெய்வம் முருகன். இந்தக் குறிஞ்சிப்பாட்டின் களம் குறிஞ்சிநிலமாகும். இந்த நூலில் காதலர் வாழ்ந்த மலைநிலத்தில் பூத்திருந்த 96 வகையான பூக்கள் கூறப்பட்டுள்ளன. தலைவி தன் தோழிமாருடன் இணைந்து அந்தப் பூக்களைப் பறித்துப் பாறைமீது குவித்து விளையாடியதாக இந்தப் பாடலில் குறிப்பு இடம்பெற்றுள்ளது.

பா வகை அறிமுகம்

குறிஞ்சிப்பாட்டு தமிழ் இலக்கணம் வகுத்தள்ள நால்வகைப் பாக்களுள் ஆசிரியப்பாவினால் அமைக்கப்பட்டுள்ளது. ஆசிரியப்பாவுக்குத் தனிச் சிறப்பு உண்டு. இலக்கணக் கட்டுக்கோப்புகள் குறைவாக அமைந்து, கவிஞரின் மனப்போக்குக்கும் மொழிவழி வெளியீட்டுக்கும் இடைவெளி ஏற்படாதபடி அவருக்கு மிகுதியான உரிமையை வழங்குவது ஆசிரியப்பாவே ஆகும். இது அகவற்பா எனவும் வழங்கும். சங்க இலக்கியம், சிலப்பதிகாரம், மணிமேகலை,பெருங்கதை போன்ற காப்பியங்கள் ஆகியவற்றில் பெருமளவு இடம் பெற்றிருப்பது ஆசிரியப்பாவே ஆகும்.

நூல் அமைப்பு

இந்தப் பாட்டில் தோழி ஒருத்தி தலைவியின் தாயிடம், தலைவி தலைவனைத் தினைப்புனத்தில் எப்படிச் சந்தித்தாள், காட்டு யானையிடமிருந்து தலைவன் அவர்களை எப்படிக் காப்பாற்றினான்,  தலைவனுக்கும் தலைவிக்கும் இடையே எவ்வாறு அன்பு ஏற்பட்டது,  தலைவன் எவ்வாறு திருமணத்தை நாடுகின்றான், தலைவன் கொடூரமான பாதையில் இரவில் தனியே வருவதால் அவனுக்குத் துன்பம் நேரிடும் என்று தலைவி வருந்துகின்றாள், என்றெல்லாம் விவரமாகக் கூறுகின்றாள்.

[[Category:Tamil Content]]