பாலகுமாரன்: Difference between revisions

From Tamil Wiki
No edit summary
Line 8: Line 8:

== இலக்கியவாழ்க்கை ==
== இலக்கியவாழ்க்கை ==
பாலகுமாரன் சென்னையில் சா.கந்தசாமி, ஞானக்கூத்தன் ஆகியோர் நடத்திவந்த கசடதபற சிற்றிதழ்க் குழுவில் இளம் வாசகராக ஈடுபட்டார். டெலிபோன் துடைப்பவள்’ என்னும் தலைப்பில் பாலகுமாரன் எழுதிய கவிதை, முதன்முதலாக கணையாழி இதழில் வெளியானது.  பிறகு சாவி இதழில் சிறுகதைகளும், குறுங்கட்டுரைகளும் எழுதினார். பல்வேறு ஆளுமைகளை பேட்டிகண்டு எழுதினார். டஃபே டிராக்டர் நிறுவனத்தில்,  நடந்த வேலை நிறுத்தபோராட்டத்தில் கலந்துக்கொண்டு அந்த அனுபவங்களை ’மெர்க்குரிப் பூக்கள்’ என்னும் பெயரில் சாவி இதழில் தொடர்கதையாக எழுதினார்.  மெர்க்குரிப் பூக்கள் நாவல் வரவேற்பு பெற்றதை தொடர்ந்து  இரும்புக் குதிரைகள் தொடர்கதையை கல்கி இதழில் எழுதினார். தொடர்ந்து தமிழில் மிக அதிகமாக வாசிக்கப்பட்ட தொடர்கதை எழுத்தாளர்களில் ஒருவராக ஆனார்.   
பாலகுமாரன் சென்னையில் சா.கந்தசாமி, ஞானக்கூத்தன் ஆகியோர் நடத்திவந்த கசடதபற சிற்றிதழ்க் குழுவில் இளம் வாசகராக ஈடுபட்டார். டெலிபோன் துடைப்பவள்’ என்னும் தலைப்பில் பாலகுமாரன் எழுதிய கவிதை, முதன்முதலாக கணையாழி இதழில் வெளியானது.  பிறகு சாவி இதழில் சிறுகதைகளும், குறுங்கட்டுரைகளும் எழுதினார். பல்வேறு ஆளுமைகளை பேட்டிகண்டு எழுதினார். சின்னச்சின்ன வட்டங்கள் அவருடைய முதல் சிறுகதைத் தொகுப்பு.   
 
டஃபே டிராக்டர் நிறுவனத்தில்,  நடந்த வேலை நிறுத்தபோராட்டத்தில் கலந்துக்கொண்டு அந்த அனுபவங்களை ’மெர்க்குரிப் பூக்கள்’ என்னும் பெயரில் சாவி இதழில் தொடர்கதையாக எழுதினார்.  மெர்க்குரிப் பூக்கள் நாவல் வரவேற்பு பெற்றதை தொடர்ந்து  இரும்புக் குதிரைகள் தொடர்கதையை கல்கி இதழில் எழுதினார். தொடர்ந்து தமிழில் மிக அதிகமாக வாசிக்கப்பட்ட தொடர்கதை எழுத்தாளர்களில் ஒருவராக ஆனார்.   

மாலன், சுப்ரமணிய ராஜூ போன்றவர்களுடன் நட்புக்கொண்டிருந்த பாலகுமாரன், எழுத்தின் நுணுக்கங்களை சொல்லிதந்ததாக எழுத்தாளர் சுஜாதா அவர்களை குறிப்பிடுகிறார். பாலகுமாரனின் படைப்புகளில் தி.ஜானகிராமனின் செல்வாக்கு உண்டு

== திரைப்படம் ==
== திரைப்படம் ==
பாலகுமாரன் இயக்குனர் பாலசந்தருடன் புன்னகை மன்னன், சிந்து பைரவி உள்ளிட்ட திரைப்படங்களில் பணியாற்றினார். பிறகு இயக்குனர் பாக்கியராஜுடன் இணைந்து இது நம்ம ஆளு என்கிற திரைப்படத்தை இயக்கினார்.
பாலகுமாரன் 1987ல் மணிரத்னத்தின் நாயகன் படத்தில் எழுத்தாளராக அறிமுகமானார். இயக்குநர் பாலசந்தரிடம் உதவியாளராகப் பணியாற்றினார். பாலசந்தர் இயக்கத்தில் பாலகுமாரன் எழுதிய சிந்து பைரவி தேசிய விருதுபெற்ற படம். இயக்குனர் பாக்கியராஜுடன் இணைந்து இது நம்ம ஆளு என்ற திரைப்படத்தை இயக்கினார். மொத்தம் 27 திரைப்படங்களுக்கு வசனம் எழுதியிருக்கிறார்.
 
== ஆன்மிகம் ==
பாலகுமாரன் திருவண்ணாமலை யோகி ராம்சுரத்குமாரை தன் ஞானாசிரியராக ஏற்றுக்கொண்டார். பக்தியும் வேதாந்தமும் கலந்த ஒரு வழிபாட்டுமுறையை தனக்காக உருவாக்கிக் கொண்டார். அவருக்கு ஆன்மிக மாணவர்களும் இருந்தனர்
 
== மறைவு ==
14 மே 2018 அன்று சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர் மே 15, 2018 அன்று  காலமானார்.

== படைப்புகள் ==
== படைப்புகள் ==
Line 22: Line 30:
* மெர்க்குரிப்பூக்கள்
* மெர்க்குரிப்பூக்கள்
* கரையோர முதலைகள்
* கரையோர முதலைகள்
* தாயுமானவன்
*பச்சைவயல் மனது
*அகல்யா
*செண்பகத்தோட்டம்
*பனிவிழும் மலர்வனம்
*கடல்நீலம்
*பயணிகள் கவனிக்கவும்
*துணை
*மீட்டாத வீணை
*வெற்றிலைக்கொடி
*என்மனது தாமரைப்பூ
*கல்யாணமுருங்கை
*ஆசைக்கடல்
*தாயுமானவன்
* இரும்புக்குதிரைகள்
* இரும்புக்குதிரைகள்
* திருப்பூந்துருத்தி
* திருப்பூந்துருத்தி
Line 39: Line 59:
* சூரியனோடு சில நாட்கள்
* சூரியனோடு சில நாட்கள்
* அந்த ஏழு நாட்கள்
* அந்த ஏழு நாட்கள்
====== கட்டுரைத் தொகுப்புகள் ======
* பாலகுமாரன் கட்டுரைகள்
* சிறுகதைகளும் கட்டுரைகளும்

====== சிறுகதைத் தொகுப்புகள் ======
====== சிறுகதைத் தொகுப்புகள் ======
Line 55: Line 70:
* விட்டில்பூச்சிகள்
* விட்டில்பூச்சிகள்

====== சிறுகதைகளும் கவிதைகளும் தொகுப்புகள் ======
====== ஆன்மிகம் ======
 
*விசிறி சாமியார் (1991 திசம்பர்)
* விசிறி சாமியார் (1991 திசம்பர்)
 
====== வாழ்க்கை வரலாறுகள் ======

* பகவான் யோகி ராம்சுரத்குமார் சரிதம் (2014)
* பகவான் யோகி ராம்சுரத்குமார் சரிதம் (2014)
*குரு

====== தன்வரலாறு ] ======
====== தன்வரலாறு ======

* முன்கதைச் சுருக்கம்
* முன்கதைச் சுருக்கம்
Line 83: Line 96:
== திரையுலக விருதுகள் ==
== திரையுலக விருதுகள் ==

* தமிழ்நாடு மாநில விருது (காதலன் - சிறந்த வசனம்)
* தமிழ்நாடு மாநில விருது (காதலன் - சிறந்த வசனம்) 1994

== உசாத்துணை ==
== உசாத்துணை ==
http://writerbalakumaran.com/
http://writerbalakumaran.com/

Revision as of 01:31, 21 January 2022

பாலகுமாரன் (05-ஜூலை-1946 -15-மே-2018) தமிழில் பொதுவாசிப்புக்கான சமூகநாவல்களையும், வரலாற்று நாவல்களையும் எழுதிய எழுத்தாளர். திரைப்பட எழுத்தாளர். யோகி ராம்சுரத்குமார் வழிவந்த ஆன்மிகவாதி. இந்து ஆன்மிகம் சார்ந்த நூல்களையும் பக்திநூல்களையும் புராண மறுஆக்கக் கதைகளையும் எழுதியவர். தன் காலகட்டத்தின் பொதுவான உளநெருக்கடிகளையும் பாலியல்சிக்கல்களையும் ஆன்மிகத்தேடல்களையும் புனைவுகளாக்கியவர் என்பதனால் பெரும் வாசக எண்ணிக்கை கொண்ட படைப்பாளியாகத் திகழ்ந்தார்

பிறப்பு, கல்வி

பாலகுமாரன், தஞ்சாவூர் மாவட்டத்தில், திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள பழமார்நேரி என்னும் ஊரில் பிறந்தவர். தந்தை பெயர் வைத்தியநாதன். தாயார் சுலோசனா, ஒரு தமிழ் பண்டிதர். தனது தாயாரிடமிருந்தே வாசிப்பு மற்றும் எழுத்தார்வம் பிறந்ததாக கூறியுள்ளார். 1946ம் ஆண்டு பிறந்த பாலகுமாரன், பதினொராம் வகுப்பு வரை பள்ளி படிப்பு முடித்து, சுருக்கெழுத்து மற்றும் தட்டச்சில் தேர்ச்சிப்பெற்று, 1969ம் ஆண்டு சென்னையிலுள்ள டஃபே என்னும் தனியார் நிறுவனத்தில் பணியாற்றதொடங்கினார்.

தனிவாழ்க்கை

பாலகுமாரனுக்கு இரு மனைவியர். கமலா, சாந்தா. மகன் ஸ்ரீகெளரி மகள் சூர்யா.

இலக்கியவாழ்க்கை

பாலகுமாரன் சென்னையில் சா.கந்தசாமி, ஞானக்கூத்தன் ஆகியோர் நடத்திவந்த கசடதபற சிற்றிதழ்க் குழுவில் இளம் வாசகராக ஈடுபட்டார். டெலிபோன் துடைப்பவள்’ என்னும் தலைப்பில் பாலகுமாரன் எழுதிய கவிதை, முதன்முதலாக கணையாழி இதழில் வெளியானது. பிறகு சாவி இதழில் சிறுகதைகளும், குறுங்கட்டுரைகளும் எழுதினார். பல்வேறு ஆளுமைகளை பேட்டிகண்டு எழுதினார். சின்னச்சின்ன வட்டங்கள் அவருடைய முதல் சிறுகதைத் தொகுப்பு.

டஃபே டிராக்டர் நிறுவனத்தில், நடந்த வேலை நிறுத்தபோராட்டத்தில் கலந்துக்கொண்டு அந்த அனுபவங்களை ’மெர்க்குரிப் பூக்கள்’ என்னும் பெயரில் சாவி இதழில் தொடர்கதையாக எழுதினார். மெர்க்குரிப் பூக்கள் நாவல் வரவேற்பு பெற்றதை தொடர்ந்து இரும்புக் குதிரைகள் தொடர்கதையை கல்கி இதழில் எழுதினார். தொடர்ந்து தமிழில் மிக அதிகமாக வாசிக்கப்பட்ட தொடர்கதை எழுத்தாளர்களில் ஒருவராக ஆனார்.

மாலன், சுப்ரமணிய ராஜூ போன்றவர்களுடன் நட்புக்கொண்டிருந்த பாலகுமாரன், எழுத்தின் நுணுக்கங்களை சொல்லிதந்ததாக எழுத்தாளர் சுஜாதா அவர்களை குறிப்பிடுகிறார். பாலகுமாரனின் படைப்புகளில் தி.ஜானகிராமனின் செல்வாக்கு உண்டு

திரைப்படம்

பாலகுமாரன் 1987ல் மணிரத்னத்தின் நாயகன் படத்தில் எழுத்தாளராக அறிமுகமானார். இயக்குநர் பாலசந்தரிடம் உதவியாளராகப் பணியாற்றினார். பாலசந்தர் இயக்கத்தில் பாலகுமாரன் எழுதிய சிந்து பைரவி தேசிய விருதுபெற்ற படம். இயக்குனர் பாக்கியராஜுடன் இணைந்து இது நம்ம ஆளு என்ற திரைப்படத்தை இயக்கினார். மொத்தம் 27 திரைப்படங்களுக்கு வசனம் எழுதியிருக்கிறார்.

ஆன்மிகம்

பாலகுமாரன் திருவண்ணாமலை யோகி ராம்சுரத்குமாரை தன் ஞானாசிரியராக ஏற்றுக்கொண்டார். பக்தியும் வேதாந்தமும் கலந்த ஒரு வழிபாட்டுமுறையை தனக்காக உருவாக்கிக் கொண்டார். அவருக்கு ஆன்மிக மாணவர்களும் இருந்தனர்

மறைவு

14 மே 2018 அன்று சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர் மே 15, 2018 அன்று காலமானார்.

படைப்புகள்

நாவல்கள்

பாலகுமாரன் நூற்றைம்பதுக்கும் மேற்பட்ட நாவல்கள் எழுதியிருக்கிறார். அவற்றில் (நூல்பட்டியல் இணைப்பு*) இவற்றில் முக்கியமானவை சில

  • மெர்க்குரிப்பூக்கள்
  • கரையோர முதலைகள்
  • பச்சைவயல் மனது
  • அகல்யா
  • செண்பகத்தோட்டம்
  • பனிவிழும் மலர்வனம்
  • கடல்நீலம்
  • பயணிகள் கவனிக்கவும்
  • துணை
  • மீட்டாத வீணை
  • வெற்றிலைக்கொடி
  • என்மனது தாமரைப்பூ
  • கல்யாணமுருங்கை
  • ஆசைக்கடல்
  • தாயுமானவன்
  • இரும்புக்குதிரைகள்
  • திருப்பூந்துருத்தி
  • ஆனந்த வயல்
  • கடலோரக் குருவிகள்
  • கண்ணாடிக் கோபுரங்கள்
  • பந்தயப்புறா
  • அப்பம் வடை தயிர்சாதம்
  • உடையார் (6 பகுதிகள்)
  • கங்கைகொண்ட சோழன் ( 4 பகுதிகள்)
கட்டுரைகள்
  • காதலாகிக் கனிந்து
  • ஞாபகச் சிமிழ்
  • சூரியனோடு சில நாட்கள்
  • அந்த ஏழு நாட்கள்
சிறுகதைத் தொகுப்புகள்
  • சின்ன சின்ன வட்டங்கள் (முதலாவது நூல்)
  • சுகஜீவனம்
  • கடற்பாலம்
கவிதைத் தொகுப்புகள்
  • விட்டில்பூச்சிகள்
ஆன்மிகம்
  • விசிறி சாமியார் (1991 திசம்பர்)
  • பகவான் யோகி ராம்சுரத்குமார் சரிதம் (2014)
  • குரு
தன்வரலாறு
  • முன்கதைச் சுருக்கம்
  • இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா?
  • ஒரு சொல் ஒரு வில் ஒரு இல்

விருதுகள்

  • இலக்கியச் சிந்தனை விருது (மெர்க்குரிப் பூக்கள்)
  • ராஜா சர் அண்ணாமலை செட்டியார் ட்ரஸ்ட் விருது (இரும்புக் குதிரைகள்)
  • தமிழ்நாட்டு மாநில விருது (சுகஜீவனம் - சிறுகதை தொகுப்பு)
  • தமிழ்நாடு மாநில விருது (கடற்பாலம் - சிறுகதை தொகுப்பு)
  • கலைமாமணி
  • கவிஞர் வாலி விருது
  • மா.போ.சி விருது

திரையுலக விருதுகள்

  • தமிழ்நாடு மாநில விருது (காதலன் - சிறந்த வசனம்) 1994

உசாத்துணை

http://writerbalakumaran.com/