under review

செண்டலங்காரன் விறலிவிடு தூது: Difference between revisions

From Tamil Wiki
No edit summary
No edit summary
Line 34: Line 34:
[https://www.tamildigitallibrary.in/book-detail?id=jZY9lup2kZl6TuXGlZQdjZM7jupy&tag=%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81+%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A4%E0%AF%81#book1/ செண்டலங்காரர் விறலி விடு தூது-தமிழ் இணைய கல்விக்கழகம்]
[https://www.tamildigitallibrary.in/book-detail?id=jZY9lup2kZl6TuXGlZQdjZM7jupy&tag=%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81+%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A4%E0%AF%81#book1/ செண்டலங்காரர் விறலி விடு தூது-தமிழ் இணைய கல்விக்கழகம்]


{{First review completed}}
{{Finalised}}
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]

Revision as of 10:00, 18 August 2023

தமிழ் இணைய கல்விக் கழகம்

செண்டலங்காரன் விறலிவிடு தூது செண்டலங்காரன் என்னும் மன்னனைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு இயற்றப்பட்ட தூது என்னும் சிற்றிலக்கியம்.

ஆசிரியர்

இந்நூலை இயற்றிய ஆசிரியரின் பெயர் அறியவரவில்லை. சரஸ்வதி மகால் நூலகத்திலிருந்த ஓலைச்சுவடி மூலத்திலிருந்து பிரதியெடுக்கப்பட்டது. இந்நூலின் பாட்டுடைத்தலைவனான செண்டலங்காரன் தஞ்சை சகசி மன்னரின் ஆட்சியில் கிராம மணியத்து அட்டவணை அதிகாரியாக இருந்தவர் என நூலின் 544, 545-ஆவது கண்ணிகள் தெரிவிக்கின்றன.சகசி மன்னரின் ஆட்சிக்காலம் பொ.யு. 1634 -1714. எனவே நூலின் ஆசிரியரும் இக்காலத்தில் வாழ்ந்தவராக இருக்கவேண்டும் என்று கருதப்படுகிறது.

நூல் அமைப்பு

செண்டலங்காரன் சோழ நாட்டின் ராஜமன்னார்குடியில் வாழ்ந்தவர். 'வண்டுவரை தன்னில் வருவோன், சீராசை திகழ் செண்டலங்காரன்' என்ற வரிகளின் மூலம் இதை அறியலாம்.

நாகப்பட்டிணத்தில் வாழ்ந்த வாகுப்பட்டன் இரு மனைவியருடன் வாழ்ந்து வந்தான். இளைய மனைவி அபரஞ்சி அவனிடம் ஊடல் கொண்டாள். மனம் வருந்திய பட்டன் கங்கையில் நீராடி தவமியற்ற வடக்கே சென்றான். செல்லும் வழியில் சித்திரவல்லியென்னும் கணிகையிடம் மயங்கி பொருளனைத்தையும் இழந்து அவமானப்பட்டான். தல யாத்திரை சென்று வழிபட்டபின் செண்டலங்காரரிடம் சென்று பல செல்வங்களைக் கொடையாகப் பெற்றான். இல்லம் திரும்பியவன் அபரஞ்சியின் ஊடல் தீராததைக்கண்டு விறலியைத் தூதனுப்பினான். விறலி தூது வெற்றியில் முடிய, அபரஞ்சி ஊடல் தீர்ந்து பட்டன் மகிழ்ச்சியாக வாழ்ந்தான்.

பாடல் நடை

செண்டலங்காரனின் பெருமை

சீர்கொண்ட செம்பதுமச்‌ செல்வி மணவாளன்‌
கார்கொண்ட மேனிக்‌ கருணைமால்‌--ஏர்கொண்ட
செண்டழகன்‌ பேரழகன்‌ செய்யதனிச்‌ சேலையுள
தண்ட ழகன்‌ செண்பகப்பூந்‌ தாரழகன்- வேண்டுவரை
குன்னில்‌ வருவோன்‌ தனிமாலைத்‌ தாரழசன்‌
பொன்னி லழகன்‌ புகழழகன்‌--செந்நெலார்‌
சீராசை வாழுந்‌ திகழ்செண்‌ டலங்காரன்‌
காராசை கொண்ட தடம்புயத்தான்‌--பாருலகில்‌
முன்னிலும்‌ பின்னழகள்‌ முச்ச கமு முண்டுமிழ்ந்த..

விறலி தூது செல்லல்

மாது விறலி மகிழ்ந்துமட.. வார்கள்முன்‌
ஓதுமங்க ளந்கானொன்‌ றுண்டென்னச்‌-சேதுமுதற்
காசியினும்‌ போனவுங்கள்‌ காதலர்வந்‌ தாரெனவும்‌
பேசலுமே லாஞ்சைப்‌ பெரிதுகந்து

உசாத்துணை

செண்டலங்காரர் விறலி விடு தூது-தமிழ் இணைய கல்விக்கழகம்


✅Finalised Page