under review

கருணை ஐயர்: Difference between revisions

From Tamil Wiki
No edit summary
No edit summary
Line 30: Line 30:
*[https://noolaham.net/project/10/962/962.pdf பாவலர் சரித்திர தீபகம்: அ. சதாசிவம்பிள்ளை: கொழும்பு தமிழ்ச்சங்கம்]
*[https://noolaham.net/project/10/962/962.pdf பாவலர் சரித்திர தீபகம்: அ. சதாசிவம்பிள்ளை: கொழும்பு தமிழ்ச்சங்கம்]


{{First review completed}}
{{Finalised}}
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]

Revision as of 14:44, 7 August 2023

கருணை ஐயர் (பொ.யு. 19-ஆம் நூற்றாண்டு) ஈழத்து தமிழ்ப்புலவர். விருத்தங்கள் பல பாடினார்.

வாழ்க்கைக் குறிப்பு

கருணை ஐயர் துறைமங்கலஞ் சிவப்பிரகாச சுவாமிகள் பரம்பரையில் 19-ஆம் நூற்றாண்டில் பிறந்தார்.

இலக்கிய வாழ்க்கை

கருணை ஐயர் விருத்தப்பாடல்கள் பல பாடினார். சிதம்பரநாதர் பதிகமும், சிதம்பரநாதர் பஞ்சரத்தினத் துறையும் பாடினார். சிதம்பரநாதர் பதிகத்தில் பதினொன்று ஆசிரிய விருத்தங்கள் உள்ளன. சிதம்பரநாதர் பஞ்சரத்தினத் துறையில் ஐந்து கட்டளைக் கலித்துறைகள் உள்ளன.

பாடல் நடை

  • விருத்தம்

உருவல்ல வருவல்ல வுருவருவ மல்லவிங்
கொருவிதத் தறிவதல்ல
ஒன்றல விரண்டுமல வுள்ளல்ல வெளியல்ல
வொன்றினுந் தோய்வதல்ல
இருளல்ல வொளியல்ல விலதல்ல வுளதல்ல
வின்பதுன் பங்களல்ல
இங்குநிர்ச் சித்தல்ல வெங்குநிர சத்தல்ல
வீறுமுத லுடையதல்ல
மருளுடன் பகலின்றி யிரவின்றி நின்றவர்கள்
மாசற்ற மனவொளியெனு
மாகனக சபைநடுவி லேயென்று மொழியாக
மனோலயா னந்தமயமாய்த்
தெருளென்று நின்றநின் குஞ்சித பதத்தையென்
சிந்தைமற வாதுகண்டாய்
செகம்பணி திகம்பர சிதம்பர நடேசனே
சிற்சொரூ பானந்தனே

நூல் பட்டியல்

  • சிதம்பரநாதர் பதிகம்
  • சிதம்பரநாதர் பஞ்சரத்தினத்துறை

உசாத்துணை


✅Finalised Page