இராமநாடகக் கீர்த்தனை: Difference between revisions
(Corrected error in line feed character) |
m (→நூல் அமைப்பு) |
||
Line 18: | Line 18: | ||
ஸ்ரீரங்கத்தில் அவருடைய 60-ஆவது வயதில் இராமநாடகக் கீர்த்தனையை அரங்கேற்றம் செய்தார். | ஸ்ரீரங்கத்தில் அவருடைய 60-ஆவது வயதில் இராமநாடகக் கீர்த்தனையை அரங்கேற்றம் செய்தார். | ||
== நூல் அமைப்பு == | == நூல் அமைப்பு == | ||
இராமநாடகக் கீர்த்தனை | இராமநாடகக் கீர்த்தனை 268 இசைப்பாடல்களின் தொகுப்பு. அவற்றுள் | ||
தரு என்ற கீர்த்தன வகைப்பாடல்கள் 197-ம், திபதை(த்வி+பத) எனப்படும் இரண்டு அடிக்கண்ணிகளால் ஆன பாடல்கள் | தரு என்ற கீர்த்தன வகைப்பாடல்கள் 197-ம், திபதை(த்வி+பத) எனப்படும் இரண்டு அடிக்கண்ணிகளால் ஆன பாடல்கள் 59-ம், தோடையம் எனப்படும் நான்கடிகொண்ட விருத்தப்பாடல்களால் ஆன ஆறு கடவுள் வாழ்த்துப்பாடல்களும் அமைந்திருக்கின்றன. | ||
இந்நூலில் இடம்பெற்றுள்ள பாக்களில் 268 விருத்தங்கள், 6 கொச்சகக்கலிப்பா, 2 வெண்பா, | இந்நூலில் இடம்பெற்றுள்ள பாக்களில் 268 விருத்தங்கள், 6 கொச்சகக்கலிப்பா, 2 வெண்பா, ஒன்று கலிப்பா, ஒன்று தோயம், ஒன்று வசனம் வகையில் இயற்றப்பட்டிருக்கின்றன. வேறு பல நாடகக் கீர்த்தனைகள் போல் இதில் வசனப்பகுதி(கட்டியம்) இல்லை. ஒரே ஓர் இடத்தில் இரண்டு வரிகள் மட்டும் வசனப்பகுதி இடம்பெற்றிருக்கிறது. | ||
== உள்ளடக்கம் == | == உள்ளடக்கம் == | ||
அருணாசலக் கவிராயர் இராமநாடகக் கீர்த்தனை முழுவதையும் கம்பராமாயணக் காட்சிகளை அடிப்படையாகக் கொண்டு ஆறு காண்டங்களாக இயற்றியிருக்கிறார். படலச் செய்திகளை நாடக அமைப்பிற்கேற்ப பகுத்துக்கொண்டு பாத்திரக்கூற்றாகவும், கவிக்கூற்றாகவும் தலைப்பிட்டு அமைத்துள்ளார்.<ref>[https://archive.org/details/dli.jZY9lup2kZl6TuXGlZQdjZM0l0Qy.TVA_BOK_0008345/TVA_BOK_0008345_%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D?q=%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88 இராமநாடகக் கீர்த்தனைகள்]</ref> தரு என்ற கீர்த்தனைப் பகுதிகள் முழுமையும் பாடி ஆடி நடிக்கும் பகுதி. விருத்தம் முதலான பகுதிகள் ஆசிரியர் கூற்றாக கதைத் தொடர்பை விவரிக்கும் பகுதிகள். | அருணாசலக் கவிராயர் இராமநாடகக் கீர்த்தனை முழுவதையும் கம்பராமாயணக் காட்சிகளை அடிப்படையாகக் கொண்டு ஆறு காண்டங்களாக இயற்றியிருக்கிறார். படலச் செய்திகளை நாடக அமைப்பிற்கேற்ப பகுத்துக்கொண்டு பாத்திரக்கூற்றாகவும், கவிக்கூற்றாகவும் தலைப்பிட்டு அமைத்துள்ளார்.<ref>[https://archive.org/details/dli.jZY9lup2kZl6TuXGlZQdjZM0l0Qy.TVA_BOK_0008345/TVA_BOK_0008345_%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D?q=%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88 இராமநாடகக் கீர்த்தனைகள்]</ref> தரு என்ற கீர்த்தனைப் பகுதிகள் முழுமையும் பாடி ஆடி நடிக்கும் பகுதி. விருத்தம் முதலான பகுதிகள் ஆசிரியர் கூற்றாக கதைத் தொடர்பை விவரிக்கும் பகுதிகள். | ||
Line 94: | Line 94: | ||
== வெளி இணைப்புகள் == | == வெளி இணைப்புகள் == | ||
# ராமநாடக இசைப்பாடல்கள் மின்னூல் | # ராமநாடக இசைப்பாடல்கள் மின்னூல் | ||
# கல்கி விமர்சனம் பட உதவி நன்றி: http://periscope-narada.blogspot.com/2014/07/yaro-ivar-yaro-critical-review-of.html | # கல்கி விமர்சனம் பட உதவி நன்றி: [https://periscope-narada.blogspot.com/2014/07/yaro-ivar-yaro-critical-review-of.html http://periscope-narada.blogspot.com/2014/07/yaro-ivar-yaro-critical-review-of.html] | ||
# சுதேசமித்திரன் படங்கள் உதவி நன்றி: [https://s-pasupathy.blogspot.com/search/label/%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%20%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF பசுபதிவுகள்: அருணாசலக் கவி (s-pasupathy.blogspot.com)] | # சுதேசமித்திரன் படங்கள் உதவி நன்றி: [https://s-pasupathy.blogspot.com/search/label/%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%20%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF பசுபதிவுகள்: அருணாசலக் கவி (s-pasupathy.blogspot.com)] | ||
# யாரோ இவர் யாரோ மதுரை மணி ஐயர் | # யாரோ இவர் யாரோ மதுரை மணி ஐயர் |
Revision as of 13:48, 26 July 2023
To read the article in English: Ramanataka Kirthanai.
இராமநாடகக் கீர்த்தனை தமிழ் மொழியில் எழுதப்பட்ட முதல் இசை நாடக நூல். 1771-ல் இந்த நாடகக் கீர்த்தனை நூல் அருணாசலக் கவிராயரால் இயற்றப்பட்டது.
பதிப்பு
இராமநாடகக் கீர்த்தனைக்கு பழமையான சில பதிப்புகள் இருந்திருக்கின்றன. யாப்பருங்கலம், தொல்காப்பியம் முதலியவற்றை பதிப்பித்த திவான்பகதூர் பவானந்தம் பிள்ளை இராமநாடகக் கீர்த்தனையையும் நந்தனார் சரித்திரக் கீர்த்தனையையும் கீர்த்தனைக்கொத்து மலர் 1, மலர் 2 என்று அச்சிட்டு அதில் 11 ஐதீகப் படங்களையும் சேர்த்து பதிப்பித்தார். 1914-ல் இந்த பதிப்பு வெளியானது.
ஆனால் இப்பதிப்பில் உதவிச்சிறப்பு என்ற பெயரில், உதவிசெய்த மூவர் பெயரில் பாடப்பட்ட மூன்று கீர்த்தனைகள் இடம்பெற்றிருக்கின்றன. இவை இராமநாடகத்தின் பகுதியை சேர்ந்தவை அல்ல.
ஆசிரியர்
இந்நூலின் ஆசிரியர் அருணாசலக் கவிராயர் (1711-1778) சீர்காழி அருகே தில்லையாடியில் பிறந்தவர்.
உருவாக்கம்
அருணாசலக் கவிராயரின் காலத்தில் தஞ்சையில் மராட்டிய ஆட்சி நடந்து வந்தது. எனவே தமிழ்நாட்டில் பல இடங்களிலும் மகாராஷ்டிர பாணியில் கதாகாலட்சேபங்கள் நிகழ்ந்து வந்தன. தமிழில் அதற்கு முன்னர் குறவஞ்சி நாடகங்கள் இருந்திருக்கின்றன. ஆனால் இதுபோன்ற இசை, நாடகம் இரண்டும் கலந்த பாடல்கள் தமிழில் அதுவரை இல்லை. அவரிடம் கம்பராமாயணம் பயின்ற வேங்கடராமய்யர், கோதண்டராமய்யர் இருவரின் வேண்டுகோளின் படி கம்பராமாயணத்தில் நல்ல புலமை கொண்டிருந்த அருணாசலக் கவிராயர் கதைப்பிரசங்கத்துக்கு உரிய வடிவத்தில் தமிழில் முதல் இசை நாடகமாகிய இராமநாடகக் கீர்த்தனையை எழுத முற்பட்டார்.
இப்படைப்பை எழுதுவதன் முன்னரே, ராமாயணத்தை சுருக்கமாக ஒற்றைப் பாடலாகப் பாடும் ’இராமாயண ஓரடி கீர்த்தனை’ என்று சொல்லப்பட்ட அக்கால வழக்கப்படி அருணாசலக் கவிராயரும் தோடி ராகத்தில் பாடியிருக்கிறார். "கோதண்ட தீட்சா குருவே பக்தர் இதய கோகனமலர் மருவே" என்ற பல்லவி யும் மிக நீண்ட அனுபல்லவி யும் 242 அடி கொண்ட சரணமுமாக இந்த ’இராமாயண ஓரடி கீர்த்தனையை இயற்றி இருந்தார். பின்னர் இதையே விரித்து இராமநாடகக் கீர்த்தனையாக இயற்றியிருக்கலாம்.
ஸ்ரீரங்கத்தில் அவருடைய 60-ஆவது வயதில் இராமநாடகக் கீர்த்தனையை அரங்கேற்றம் செய்தார்.
நூல் அமைப்பு
இராமநாடகக் கீர்த்தனை 268 இசைப்பாடல்களின் தொகுப்பு. அவற்றுள்
தரு என்ற கீர்த்தன வகைப்பாடல்கள் 197-ம், திபதை(த்வி+பத) எனப்படும் இரண்டு அடிக்கண்ணிகளால் ஆன பாடல்கள் 59-ம், தோடையம் எனப்படும் நான்கடிகொண்ட விருத்தப்பாடல்களால் ஆன ஆறு கடவுள் வாழ்த்துப்பாடல்களும் அமைந்திருக்கின்றன.
இந்நூலில் இடம்பெற்றுள்ள பாக்களில் 268 விருத்தங்கள், 6 கொச்சகக்கலிப்பா, 2 வெண்பா, ஒன்று கலிப்பா, ஒன்று தோயம், ஒன்று வசனம் வகையில் இயற்றப்பட்டிருக்கின்றன. வேறு பல நாடகக் கீர்த்தனைகள் போல் இதில் வசனப்பகுதி(கட்டியம்) இல்லை. ஒரே ஓர் இடத்தில் இரண்டு வரிகள் மட்டும் வசனப்பகுதி இடம்பெற்றிருக்கிறது.
உள்ளடக்கம்
அருணாசலக் கவிராயர் இராமநாடகக் கீர்த்தனை முழுவதையும் கம்பராமாயணக் காட்சிகளை அடிப்படையாகக் கொண்டு ஆறு காண்டங்களாக இயற்றியிருக்கிறார். படலச் செய்திகளை நாடக அமைப்பிற்கேற்ப பகுத்துக்கொண்டு பாத்திரக்கூற்றாகவும், கவிக்கூற்றாகவும் தலைப்பிட்டு அமைத்துள்ளார்.[1] தரு என்ற கீர்த்தனைப் பகுதிகள் முழுமையும் பாடி ஆடி நடிக்கும் பகுதி. விருத்தம் முதலான பகுதிகள் ஆசிரியர் கூற்றாக கதைத் தொடர்பை விவரிக்கும் பகுதிகள்.
இந்நூலில் 40 ராகங்களைப் பயன்படுத்தி இருக்கிறார். அவற்றுள் அசாவேரி, கல்யாணி, சாவேரி, தோடி, மத்யமாவதி, மோகனம் ஆகியவை 15-20 முறை வருகின்றன. ஆனந்தபைரவி, சங்கராபரணம், சௌராஷ்டிரம், புன்னாகவராளி முதலான ராகங்கள் 11-13 முறையும் மற்றவை 10க்கு குறைவான முறைகள் இடம்பெறுகின்றன. த்விஜாவந்தி, மங்களகௌசிகம், சயிந்தவி போன்ற அரிய ராகங்களிலும் பாடல்கள் அமைத்திருக்கிறார்[2].
தாளங்களில் ஆதிதாளம் 146 பாடலும், அட தாளச்சாபு 78 பாடலும் ஏனைய தாளங்கள் குறைவாகவும் அமைந்திருக்கின்றன.
யுத்தகாண்டப் பாடல்கள் பெருங்காப்பியத்தன்மையோடு வருணித்திருக்கிறார். லக்ஷ்மணனுக்கும் இந்திரஜித்துக்கும் நடந்த இரண்டாம் யுத்தத்தை பெருங்கீர்த்தனமாக இயற்றி இருக்கிறார். 'பெருஞ்சண்டை பாரீர்’ என்ற இப்பெருங்கீர்த்தனம் 8 சரணங்கள் ஒவ்வொன்றிலும் 22 அடிகள் கொண்ட நீண்ட பாடல்களாக இயற்றப்பட்டிருக்கிறது. ’மூலபல சண்டையைக் கேளும்’ என்ற பந்துவராளி ராகத் தரு அனைத்தையும் விட மிக நீண்டது, 3 சரணங்களில் 362 அடிகள் கொண்டது. இதன் அனுபல்லவி
’மு’ என்ற எழுத்தில் தொடங்கும் 21 அடிகளைக் கொண்டது.
மற்றவை
இராமநாடகக் கீர்த்தனையில் பல பாடல்கள் பொதுமக்களிடையே மிகவும் புகழ்பெற்றிருந்தது.
பாலகாண்டத்தில் சீதையைப் பார்த்து ராமன் பாடுவதாக அமைந்த "யாரோ இவர் யாரோ" என்ற கீர்த்தனை எம்.எஸ்.சுப்புலக்ஷ்மியாலும் டி.கே. பட்டம்மாளாலும் பாடப்பட்டு ஒலி நாடா மூலம் மிகப் பிரபலமடைந்தது. சுதேசமித்திரனில் பல பாடல்கள் அரியக்குடி ராமானுஜ ஐயங்கார் எழுதிய இசைக்குறிப்புகளோடு தொடராக வெளிவந்தது.
ராகம்: பைரவி. தாளம்:ஆதிதாளம்
பல்லவி
யாரோ இவர் யாரோ -என்ன பேரோ அறியேனே (யாரோ)அனுபல்லவி
கார் உலாவும் சீர் உலாவும் மிதிலையில்கன்னி மாடந்தன்னில் முன்னே நின்றவர் (யாரோ)
சரணம்
சந்திர விம்பமுக மலராலே-என்னைத் தானே பார்க்கிறார் ஒருக்காலேஅந்த நாளில் தொந்தம் போலே உருகிறார்
இந்த நாளில் வந்து சேவை தருகிறார் (யாரோ)
இராவணன் பேசியதைக் கேட்டு அனுமன் ராவணனைப் பலமுறை 'அடா’ என விளித்து இகழ்ந்து பாடும் ’ ராமசாமி தூதன் நான்அடா[3]’ பாடல் மிகப் புகழ்பெற்றது.
ராகம்: மோகனம், தாளம்: அடதாளசாப்பு
பல்லவி
ராமசாமி தூதன் நான்அடா-அடடராவணா
நானடா என்பேர் அனு மானடா (ராமா)
அநுபல்லவி
மாமலர் தலைவாசனும் கயிலாசனும் ரிஷிகேசனும்மறைந்துநின்று தந்தநான் அல்லடா
புறம்பே நின்று வந்தநான் அல்லடா (ராமா)
சரணம்
காலமும் பலமும் தெரியாமல் குதிக்கிறாய்என்ன மாயமோ
காமத்தாலே தர்மபுத்தியை கடக்கிறாய்இதுஉ பாயமோ
சாலமோ கேடு காலமா அடாஉனக்கும் தெய்வச காயமோ
தங்கை மூக்கறுப் புண்டதல்லவோ சண்டாளாஇது ஞாயமோ
வாலியும் போனான் உன்னைச் சிறை வைத்த
வாலும் போய்விட்டது அஞ்சாதே மெத்த
வெளி இணைப்புகள்
- ராமநாடக இசைப்பாடல்கள் மின்னூல்
- கல்கி விமர்சனம் பட உதவி நன்றி: http://periscope-narada.blogspot.com/2014/07/yaro-ivar-yaro-critical-review-of.html
- சுதேசமித்திரன் படங்கள் உதவி நன்றி: பசுபதிவுகள்: அருணாசலக் கவி (s-pasupathy.blogspot.com)
- யாரோ இவர் யாரோ மதுரை மணி ஐயர்
- யாரோ இவர் யாரோ – டி கே பட்டம்மாள்
அடிக்குறிப்புகள்
✅Finalised Page