under review

திருமெய்ஞானம் டி.பி.என். ராமநாதன்: Difference between revisions

From Tamil Wiki
(Inserted READ ENGLISH template link to English page)
Line 1: Line 1:
{{Read English|Name of target article=Thirumeignanam T.P.N. Ramanathan|Title of target article=Thirumeignanam T.P.N. Ramanathan}}
[[File:T.P.N. Ramanathan.jpg|thumb]]
[[File:T.P.N. Ramanathan.jpg|thumb]]
திருமெய்ஞானம் டி.பி.என். ராமநாதன் (பிறப்பு: மே 23, 1978) நாதஸ்வரக் கலைஞர்.  அவரது மூத்த சகோதரர் திருமெய்ஞானம் டி.பி.என். வேணுகோபாலின் மாணவர்.  
திருமெய்ஞானம் டி.பி.என். ராமநாதன் (பிறப்பு: மே 23, 1978) நாதஸ்வரக் கலைஞர்.  அவரது மூத்த சகோதரர் திருமெய்ஞானம் டி.பி.என். வேணுகோபாலின் மாணவர்.  

Revision as of 06:22, 21 July 2023

To read the article in English: Thirumeignanam T.P.N. Ramanathan. ‎

T.P.N. Ramanathan.jpg

திருமெய்ஞானம் டி.பி.என். ராமநாதன் (பிறப்பு: மே 23, 1978) நாதஸ்வரக் கலைஞர். அவரது மூத்த சகோதரர் திருமெய்ஞானம் டி.பி.என். வேணுகோபாலின் மாணவர்.

பிறப்பு, கல்வி

டி.பி.என். ராமநாதன், ஜி. யுவராஜ் இணையினர்

திருமெய்ஞானம் டி.பி.என். ராமநாதன் மே 23, 1978 அன்று திருவாரூர் மாவட்டம் கீரனூரில் திருமெய்ஞானம் டி.பி. நடராஜ சுந்தரம்பிள்ளை, ராமு அம்மாள் தம்பதியருக்கு பிறந்தார். உடன்பிறந்தவர்கள் மூன்று அண்ணன்கள், இரண்டு அக்காக்கள். சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைகழகத்தில் இசையில் டிப்ளமோ பட்டம் பெற்றார்.

தனி வாழ்க்கை

டி.பி.என். ராமநாதன் ஜூன் 1, 2006 அன்று மங்கையர்கரசியை திருமணம் செய்துக் கொண்டார். ராமநாதன், மங்கையர்கரசி தம்பதியருக்கு ஒரு மகன் - சாய்சுதன், ஒரு மகள் - பவதாரணி. (தொடர்புக்கு- திருமெய்ஞானம் டி.பி.என்.ராமநாதன் : +91 9443439600)

இசைப்பணி

திருமெய்ஞானம் டி.பி.என். ராமநாதன் 1992-ஆம் ஆண்டு முதல் தனது அண்ணன் திருமெய்ஞானம் வேணுகோபாலிடம் மாணவராக சேர்ந்து அவருடன் கச்சேரிகளில் பங்கேற்றார். அண்ணாமலைப் பல்கலைகழகத்தில் 1993-ல் செம்பனார்கோவில் எஸ்.ஆர்.டி. வைத்தியநாதன் பிள்ளையின் மாணவராக டிப்ளமோ பயிலச் சென்றார்.1996-ல் அண்ணாமலை பல்கலைகழகத்தின் 'இசைக் கலைமணி' பட்டமும், தங்கபதக்கமும் பெற்று முதல் மாணவராக தேர்ச்சி பெற்றார். 2015 முதல் நாதஸ்வரக் கலைஞர் பாண்டமங்கலம் ஜி. யுவராஜ் உடன் இணைந்து வாசித்து வருகிறார். சிங்கப்பூர் கிருஷ்ணன் கோவிலில் ஐந்து ஆண்டுகள் கோவில் நாதஸ்வரக் கலைஞராக வாசித்தார். 2018-ஆம் ஆண்டு கிளீவ்லேண்ட் தியாகராஜ ஆராதனையில் பங்கேற்றார். திருச்சி அகில இந்திய வானொலி நிலையத்தில் 'ஏ'-கிரேட் கலைஞர். காஞ்சி காமகோடி மடத்தின் ஆஸ்தான வித்வான்.

விருதுகள்

  • காஞ்சி காமகோடி மடத்தின் ஆஸ்தான வித்வான்
  • ’கலை ஞான சிகரம்’, தென் சோழ மண்டல இசை வேளாளர் சங்கம், நாகப்பட்டினம் மாவட்டம்
  • பெருவங்கிய கலையரசு விருது
  • இசை ஞான சுடரொளி விருது

இணைப்புகள்


✅Finalised Page