being created

என். கே. ரகுநாதன்: Difference between revisions

From Tamil Wiki
(Corrected error in line feed character)
Tag: Manual revert
No edit summary
Line 1: Line 1:
[[File:Image 05.png|thumb|287x287px|என்.கே.ரகுநாதன் (1929-2018). நன்றி - tamilauthors.com]]
[[File:Image 05.png|thumb|287x287px|என்.கே.ரகுநாதன் (1929-2018). நன்றி - tamilauthors.com]]
என். கே. ரகுநாதன் (ஜூலை 9, 1929 - ஜூன் 11, 2018) ஈழத்தமிழ் எழுத்தாளர். சிறுகதை, நாவல், நாடகம் எழுதியுள்ளார்.
என். கே. ரகுநாதன் (ஜூலை 9, 1929 - ஜூன் 11, 2018) ஈழத்தமிழ் எழுத்தாளர். சிறுகதை, நாவல், நாடகம் எழுதியுள்ளார். இலங்கையில் ஒடுக்கப்பட்ட சாதியைச் சேர்ந்த மக்களுக்காக போராடியவர்.
== பிறப்பு ==
== பிறப்பு ==
என். கே. ரகுநாதன் இலங்கையின் யாழ்ப்பாணம், வடமராட்சி, பருத்திதுறைப் பகுதியிலுள்ள வராத்துப்பளை என்னும் கிராமத்தில் ஜூலை 9, 1929-ல் பிறந்தார். அம்மா வள்ளியம்மை.
என். கே. ரகுநாதன் இலங்கையின் யாழ்ப்பாணம், வடமராட்சி, பருத்திதுறைப் பகுதியிலுள்ள வராத்துப்பளை என்னும் கிராமத்தில் ஜூலை 9, 1929-ல் பிறந்தார். அம்மா வள்ளியம்மை.
== தனிவாழ்க்கை ==
== தனிவாழ்க்கை ==
என். கே. ரகுநாதன் காதல் திருமணம் செய்துகொண்டார் (மனைவி பெயர்....). பிள்ளைகள் திலீபன், தமயந்தி, சஞ்சயன், ஜெயதேவன் ஆகியோர் கனடா, லண்டன், ஜெர்மனியில் இருக்கிறார்கள். கடைசிப் பெண் ஜனனி இலங்கையில் தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறார். இலங்கையில் ஆசிரியராகப் பணியாற்றிய ரகுநாதன் இலங்கை ஆசிரியர் சங்கம் எச். என். பெர்னாண்டோ தலைமையில் இயங்கிய காலப்பகுதியில் சங்கத்தின் வடபிரதேசக்கிளையில் அங்கம் வகித்தார். அப்போது தனது தோழர்களுடனும் அடிநிலை மக்களுடனும் இணைந்து ஆலயப்பிரவேசப் போராட்டங்களிலும் தேநீர்க்கடை பிரவேசப்போராட்டங்களிலும் ஈடுபட்டார்.  
என். கே. ரகுநாதன் காதல் திருமணம் செய்துகொண்டார் .பிள்ளைகள் திலீபன், தமயந்தி, சஞ்சயன், ஜெயதேவன் ஆகியோர் கனடா, லண்டன், ஜெர்மனியில் இருக்கிறார்கள். கடைசிப் பெண் ஜனனி இலங்கையில் தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறார்.
 
== அரசியல் ==
இலங்கையில் ஆசிரியராகப் பணியாற்றிய ரகுநாதன் இலங்கை ஆசிரியர் சங்கம் எச். என். பெர்னாண்டோ தலைமையில் இயங்கிய காலப்பகுதியில் சங்கத்தின் வடபிரதேசக்கிளையில் அங்கம் வகித்தார். அப்போது தனது தோழர்களுடனும் அடிநிலை மக்களுடனும் இணைந்து ஆலயப்பிரவேசப் போராட்டங்களிலும் தேநீர்க்கடை பிரவேசப்போராட்டங்களிலும் ஈடுபட்டார்.  
[[File:Image06.png|thumb|194x194px|சிறுகதைத் தொகுப்பு,1962]]
[[File:Image06.png|thumb|194x194px|சிறுகதைத் தொகுப்பு,1962]]
== இலக்கியப்பணி ==
== இலக்கியப்பணி ==
Line 26: Line 29:
* தச மங்கலம் - சிறுகதைத் தொகுப்பு, ஜெயசக்தி பிரசுரம், 1996
* தச மங்கலம் - சிறுகதைத் தொகுப்பு, ஜெயசக்தி பிரசுரம், 1996
* ஒரு பனஞ்சோலைக் கிராமத்தின் எழுச்சி - நாவல், இரண்டாம் பதிப்பு, கருப்புப் பிரதிகள் வெளியீடு, 2014
* ஒரு பனஞ்சோலைக் கிராமத்தின் எழுச்சி - நாவல், இரண்டாம் பதிப்பு, கருப்புப் பிரதிகள் வெளியீடு, 2014
[[File:Image09.png|thumb|197x197px|வாழ்க்கைத் தொகுப்பு, 2021]]
[[File:Image09.png|thumb|333x333px|வாழ்க்கைத் தொகுப்பு, 2021]]
== வாழ்க்கைத் தொகுப்பு ==
== வாழ்க்கைத் தொகுப்பு ==
* என்.கே.ரகுநாதம், தொகுப்பு: கற்சுறா, கருப்புப் பிரதிகள் வெளியீடு, 2021
* என்.கே.ரகுநாதம், தொகுப்பு: கற்சுறா, கருப்புப் பிரதிகள் வெளியீடு, 2021
Line 37: Line 40:
* [https://www.vallinam.com.my/issue44/balamurugan.html ஈழச் சிறுகதைகள் ஒரு மீட்டுணர்வு... 6 - கே. பாலமுருகன்]
* [https://www.vallinam.com.my/issue44/balamurugan.html ஈழச் சிறுகதைகள் ஒரு மீட்டுணர்வு... 6 - கே. பாலமுருகன்]
* [https://noelnadesan.com/2018/06/13/%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%87-%E0%AE%B0%E0%AE%95%E0%AF%81%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D-1929-2018-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95/ என்.கே. ரகுநாதன் (1929-2018) நினைவுகள்! - முருகபூபதி]

* [https://www.tamilauthors.com/Ahil_Pakkam/006.html என்.கே.ரகுநாதன் வாழ்க்கைக்குறிப்பு]
== வெளி இணைப்புகள் ==
== வெளி இணைப்புகள் ==
* [https://noolaham.net/project/716/71584/71584.pdf ஒரு பனஞ்சோலைக் கிராமத்தின் எழுச்சி]
* [https://noolaham.net/project/716/71584/71584.pdf ஒரு பனஞ்சோலைக் கிராமத்தின் எழுச்சி]

Revision as of 19:15, 13 July 2023

என்.கே.ரகுநாதன் (1929-2018). நன்றி - tamilauthors.com

என். கே. ரகுநாதன் (ஜூலை 9, 1929 - ஜூன் 11, 2018) ஈழத்தமிழ் எழுத்தாளர். சிறுகதை, நாவல், நாடகம் எழுதியுள்ளார். இலங்கையில் ஒடுக்கப்பட்ட சாதியைச் சேர்ந்த மக்களுக்காக போராடியவர்.

பிறப்பு

என். கே. ரகுநாதன் இலங்கையின் யாழ்ப்பாணம், வடமராட்சி, பருத்திதுறைப் பகுதியிலுள்ள வராத்துப்பளை என்னும் கிராமத்தில் ஜூலை 9, 1929-ல் பிறந்தார். அம்மா வள்ளியம்மை.

தனிவாழ்க்கை

என். கே. ரகுநாதன் காதல் திருமணம் செய்துகொண்டார் .பிள்ளைகள் திலீபன், தமயந்தி, சஞ்சயன், ஜெயதேவன் ஆகியோர் கனடா, லண்டன், ஜெர்மனியில் இருக்கிறார்கள். கடைசிப் பெண் ஜனனி இலங்கையில் தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறார்.

அரசியல்

இலங்கையில் ஆசிரியராகப் பணியாற்றிய ரகுநாதன் இலங்கை ஆசிரியர் சங்கம் எச். என். பெர்னாண்டோ தலைமையில் இயங்கிய காலப்பகுதியில் சங்கத்தின் வடபிரதேசக்கிளையில் அங்கம் வகித்தார். அப்போது தனது தோழர்களுடனும் அடிநிலை மக்களுடனும் இணைந்து ஆலயப்பிரவேசப் போராட்டங்களிலும் தேநீர்க்கடை பிரவேசப்போராட்டங்களிலும் ஈடுபட்டார்.

சிறுகதைத் தொகுப்பு,1962

இலக்கியப்பணி

சிறுவயதில் இருந்தே நன்றாக வாசிக்கும் பழக்கம் உள்ள ரகுநாதனுக்கு யாழ்ப்பாணக் கவிஞர் பசுபதியும், சுதந்திரன் பத்திரிகையின் ஆசிரியர் அ.ந. கந்தசாமியும் இலக்கிய ஆர்வமூட்டினர். ரகுநாதனின் முதல் சிறுகதையான 'நிலவிலே பேசுவோம்’கதையை தன்னுடைய 19-வது வயதில் 1948 ல் எழுதினார். அது "சுதந்திரன்" இதழில் 1951 ல் வெளிவந்தது. 1951 ம் ஆண்டு எழிலன் என்ற புனைபெயரில் ரகுநாதன் எழுதிய ’முந்திவிட்டாள்’ என்ற சிறுகதை இந்தியாவில் வெளிவந்த ’பொன்னி’ இதழில் அட்டைப் படத்துடன் வெளிவந்தது. 'நெருப்பு’ கதை 1961 ல் சரஸ்வதி இதழில் வெளியானது. 1983 ஜூலைக் கலவரத்தையொட்டி :இலக்கியப் பாலம்’ என்ற தமிழக சிற்றேடு அதை மீள் பிரசுரம் செய்தது. கே.ஜி. அமரதாஸ் அதனை சிங்களத்தில் மொழிபெயர்த்து சாகித்திய வெளியீடான 'நவசம்ஸ் கிருத்ய’ (நவீன கலாச்சாரம்) என்னும் காலாண்டிதழில் வெளியிட்டார்.

சிறுகதைத் தொகுப்பு, 1996

ரகுநாதனின் புகழ்பெற்ற சிறுகதையான 'நிலவிலே பேசுவோம்' தலைப்பிலேயே முதல் சிறுகதைத்தொகுதி 1962 ல் தமிழகத்தில் பாரி பதிப்பகத்தின் விற்பனை உரிமையுடன் வெளியாகியது. யாழ்ப்பாணத்திலிருந்து வெளியான திசை இதழில் (மார்ச் 1990) ’பஜகோவிந்தம்’ எனும் சிறுகதையை கார்த்திநேசன் என்ற புனைப்பெயரில் எழுதினார்.

துன்பச்சுழல், வெண்ணிலா, வரையண்ணல் ஆகிய புனைப்பெயர்களிலும் எழுதினார். ஈழகேசரி, பொன்னி, சுதந்திரன், தினகரன், வீரகேசரி ஆகிய பத்திரிகைகளில் சிறுகதைகள் வெளிவந்துள்ளன.

முதல் கதைத்தொகுதி நிலவில் பேசுவோம் (1962) வெளிவந்து 34 வருடங்களுக்குப் பிறகு இரண்டாவது சிறுகதைத் தொகுப்பான தசமங்கலம் (1996) வெளிவந்தது. மாவிட்டபுர போராட்ட காலத்தில் 1969 ல் 'கந்தன் கருணை’ என்ற நாடகத்தை எழுதினார், ரகுநாதனின் நண்பர் இளைய பத்மநாதன் 'கந்தன் கருணை’ நாடகத்தை காத்தான்கூத்து பாணிக்கு மாற்றி நெறிப்படுத்தி வடஇலங்கைப் பிரதேசம் முழுவதும் மேடையேற்றினார். 'கந்தன் கருணை’ 1999 ல் நூலாக வெளிவந்தது.

இலக்கிய இடம்

நாவல், இரண்டாம் பதிப்பு-2014

வாழ்க்கைக்கும் எழுத்துக்கும் தொடர்பு இருக்க வேண்டும், நான் என் அனுபவங்களை எழுதுகிறேன் எனச் சொல்லும் என்.கே. ரகுநாதனின் எழுத்து ஈழத்தில் நிலவிய சாதியத்துக்கும் சாதிய ஏற்றத்தாழ்வுகளுக்கும் எதிரான இயக்கமாக இருந்தது. ரகுநாதனின் ’ஒரு பனஞ்சோலைக் கிராமத்தின் எழுச்சி’ கதை ஒரு இலட்சியவாத சிந்தனை. சாதிக்குள் நிகழும் கொடூரத்தின் ஒரு பகுதியை அடையாளம் காட்டுகிறது. அதனை நோக்கி ஒரு மாபெரும் எழுச்சி கனவை விதைக்கிறது. என்.கே.ரகுநாதனின் படைப்புகள் இலங்கைத் தமிழர் பிரச்சினையுடன் புறக்கணிக்க முடியாத ஒரு கோணத்தை இணைத்துப் பார்க்கத் தூண்டுகிறது.

நிலவில் பேசுவோம், நெருப்பு, குடை போன்ற கதைகள் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கின்றன.

ரகுநாதனின் சிறுகதைகள், நாடகம், நாவல், கவிதைகள், கடிதங்கள், நேர்காணல்கள், அவருடன் பழகியவர்களின் நினைவுக்குறிப்புகள், அவரது மறைவுக்குப் பின் எழுதப்பட்ட அஞ்சலிக் கட்டுரைகள் என அனைத்தையும் இணைத்து முழுத்தொகுப்பாக ’என்.கே.ரகுநாதம்’ என்னும் நூல் வெளியிடப்பட்டுள்ளது.

நூல்கள்

  • நிலவிலே பேசுவோம் - சிறுகதைத் தொகுப்பு, பாரி நிலையம், 1962
  • கந்தன் கருணை(ஓரங்க நாடகம்), 1999 - தன் பதிப்பு
  • தச மங்கலம் - சிறுகதைத் தொகுப்பு, ஜெயசக்தி பிரசுரம், 1996
  • ஒரு பனஞ்சோலைக் கிராமத்தின் எழுச்சி - நாவல், இரண்டாம் பதிப்பு, கருப்புப் பிரதிகள் வெளியீடு, 2014
வாழ்க்கைத் தொகுப்பு, 2021

வாழ்க்கைத் தொகுப்பு

  • என்.கே.ரகுநாதம், தொகுப்பு: கற்சுறா, கருப்புப் பிரதிகள் வெளியீடு, 2021

விருது

இலங்கை அரசின் சாகித்திய மண்டலப் பரிசு, 1996 - தசமங்கலம் சிறுகதைத் தொகுப்புக்கு

மறைவு

என். கே. ரகுநாதன் ஜூன் 11, 2018 ல் தனது 89 வது வயதில் கனடா டொரன்டோவில் மறைந்தார்.

உசாத்துணை

வெளி இணைப்புகள்

🔏Being Created

Please do not write any content below this line. This section is only for editing templates & categories.