first review completed

யுவகிருஷ்ணா: Difference between revisions

From Tamil Wiki
(Corrected text format issues)
(Corrected error in line feed character)
Line 5: Line 5:
==தனிவாழ்க்கை.==
==தனிவாழ்க்கை.==
''தினமலர்'' நாளிதழில் செய்தியாளராகச் சேர்ந்தார். பின்னர் பல்வேறு விளம்பர நிறுவனங்களில் பத்து ஆண்டு அனுபவம். பிரமிட் சாய்மீரா என்ற கார்ப்பரேட் சினிமா நிறுவனத்தில் சில ஆண்டுகள் பணி புரிந்த பின் ''புதிய தலைமுறை'' வார இதழில் மூத்த நிருபராக பணியில் சேர்ந்தார். ''தினகரன்'' நாளிதழின் இணைப்புகளுக்கு ஆசிரியராக பணிபுரிகிறார். தற்போது தனியார் டிஜிட்டல் மீடியா நிறுவனம் ஒன்றில் தயாரிப்பாளராகப் பணிபுரிகிறார்.

2005-ல் திருமணம். மனைவி யுவராணி. மகள்கள் கி.யு.தமிழ்மொழி, கி.யு.தமிழ்நிலா.
2005-ல் திருமணம். மனைவி யுவராணி. மகள்கள் கி.யு.தமிழ்மொழி, கி.யு.தமிழ்நிலா.
==எழுத்துப் பணி==
==எழுத்துப் பணி==

Revision as of 20:17, 12 July 2023

யுவகிருஷ்ணா

யுவகிருஷ்ணா (ஆகஸ்ட் 4, 1978) இதழாளர், எழுத்தாளர். தமிழில் இதழியல் கட்டுரைகளும், புனைவுகளும் எழுதி வருகிறார்

பிறப்பு, கல்வி

யுவகிருஷ்ணாவின் இயற்பெயர் இல.மோகனகிருஷ்ணகுமார். காஞ்சிபுரத்தில் ஆகஸ்ட் 4, 1978-ல் இலட்சுமிபதிக்கும் சுசிலாவுக்கும் பிறந்தார். சென்னையிலேயே பள்ளிப்படிப்பு முடித்து பல்லூடகத்துறையில் பட்டயப்படிப்பு முடித்தார்

தனிவாழ்க்கை.

தினமலர் நாளிதழில் செய்தியாளராகச் சேர்ந்தார். பின்னர் பல்வேறு விளம்பர நிறுவனங்களில் பத்து ஆண்டு அனுபவம். பிரமிட் சாய்மீரா என்ற கார்ப்பரேட் சினிமா நிறுவனத்தில் சில ஆண்டுகள் பணி புரிந்த பின் புதிய தலைமுறை வார இதழில் மூத்த நிருபராக பணியில் சேர்ந்தார். தினகரன் நாளிதழின் இணைப்புகளுக்கு ஆசிரியராக பணிபுரிகிறார். தற்போது தனியார் டிஜிட்டல் மீடியா நிறுவனம் ஒன்றில் தயாரிப்பாளராகப் பணிபுரிகிறார்.

2005-ல் திருமணம். மனைவி யுவராணி. மகள்கள் கி.யு.தமிழ்மொழி, கி.யு.தமிழ்நிலா.

எழுத்துப் பணி

யுவகிருஷ்ணா என்ற பெயரில் சமூக வலைத்தளங்களிலும் இணைய இதழ்களிலும் தொடர்ச்சியாக எழுதி வருகிறார். லக்கிலுக் என்னும் பெயரிலும் எழுதியிருக்கிறார்.

விருதுகள்

உயிர்மை இதழும் சுஜாதா அறக்கட்டளையும் இணைந்து பல்வேறு பிரிவுகளில் வழங்கும் சுஜாதா விருதினை 2011-ஆம் ஆண்டு பெற்றிருக்கிறார்.

இலக்கிய இடம்

யுவகிருஷ்ணா சுவாரசியமான நடையில் சமகாலச் செய்திகளை எழுதுபவராக அறியப்பட்டிருக்கிறார். திராவிட இயக்கச் சார்புள்ள அரசியல் கொண்டவர். இவருடைய அழிக்கப்பிறந்தவன் பொதுவாசிப்புக்குரிய பரபரப்பு நாவல்.

நூல்கள்

நாவல்
  • அழிக்கப் பிறந்தவன்
பொது
  • சுண்டி இழுக்கும் விளம்பர உலகம்
  • விஜயகாந்த்
  • தேமுதிக
  • சைபர் க்ரைம்
  • சரோஜாதேவி
  • காதல் வழியும் கோப்பை
  • நடிகைகளின் கதை
  • கங்கையிலிருந்து கூவம் வரை ம்)
  • ரைட்டர்ஸ் உலா
  • தாம்பூலம் முதல் திருமணம் வரை
  • பழைய பேப்பர்
  • காட்ஃபாதர்
  • சினிமாவுக்கு கதை எழுத கத்துக்கலாம்
  • அணையா விளக்கு
  • தல
கிண்டில் நூல்கள்
  • நன்றி மறந்த நாடு
  • தற்கொலைப்படை
  • பிழியப் பிழிய காதல்
  • சீத்தலைப் பாட்டனார் கவிதைகள்
  • கோவை எக்ஸ்பிரஸ்
  • லுங்கி
  • இந்தித் திணிப்பை என்றும் எதிர்ப்போம்
  • ராஜராஜ சோழனுக்கு என்ன ஆச்சு?

உசாத்துணை

🖒 First review completed

Please do not write any content below this line. This section is only for editing templates & categories.