under review

மறுமலர்ச்சி: Difference between revisions

From Tamil Wiki
(Corrected text format issues)
(Corrected error in line feed character)
Line 7: Line 7:
== உள்ளடக்கம் ==
== உள்ளடக்கம் ==
மறுமலர்ச்சி முழுமையாகவே ஒரு நவீன இலக்கிய இதழ். தமிழகத்தில் இருந்து வெளிவந்துகொண்டிருந்த மணிக்கொடி, கலைமகள் இதழ்களின் அமைப்பு உள்ளடக்கம் ஆகியவற்றால் தூண்டுதல் பெற்றது. மணிக்கொடி இதழில் இருந்த பொதுவாசகர்களுக்கான சமரசங்கள் கூட இல்லாத இதழ். சிறுகதைகள் கவிதைகளுக்கு அதிக இடம் அளித்தது.

வரதரின் மறுமலர்ச்சி சஞ்சிகையில் வெளிவந்த 64 சிறுகதைகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட 25 சிறுகதைகளை செங்கை ஆழியான் மறுமலர்ச்சிச் சிறுகதைகள் என்ற பெயரில் தொகுத்து நூலாக்கியுள்ளார் (1997). அதில் வெளிவந்த 51 கவிதைகள் அனைத்தையும் தொகுத்து செல்லத்துரை சுதர்சன் அவர்கள் மறுமலர்ச்சிக் கவிதைகள் என்ற பெயரில் நூலாக்கியுள்ளார் (2006). மறுமலர்ச்சி சஞ்சிகையின் இணை ஆசிரியர் பஞ்சாட்சர சர்மா அவர்களது மகன் கோப்பாய் சிவம் அவர்களும் திரு. செல்லத்துரை சுதர்சனும் இணைந்து மறுமலர்ச்சி இதழ்களின் தொகுப்பை வெளியிட்டுள்ளனர் (2016).   

== இலக்கிய இடம் ==
== இலக்கிய இடம் ==
[[File:மறுமலர்ச்சி3.png|thumb|மறுமலர்ச்சி முழுத்தொகுதி]]

மறுமலர்ச்சி எழுத்தாளர்கள் தமது தீவிர எழுத்துக்களால் ஈழத்து இலக்கிய வரலாற்றில் மறுமலர்ச்சிக் காலம் (1943-1956) எனும் புதிய காலப்பகுப்பையே உருவாக்கினர்.'இந்தியாவில் மணிக்கொடிக்காலம் எனப் படைப்பிலக்கிய நலனாய்வாளர்கள் கூறுவதுபோல ஈழத்தில் மறுமலர்ச்சிக்காலம் என 1940 களை கலாநிதி கைலாசபதியே கணிப்பிட்டுக் கூறுவார்" என  செ.கணேசலிங்கன் கூறுகிறார். (வரதர்-80, ஞானம் பதிப்பக வெளியீடு, பக் 11)  

மறுமலர்ச்சி இதழ் பற்றி பேராசிரியர் கா.சிவத்தம்பி  'முற்போக்கு இயக்கம் (பிற்பட்ட காலத்தில்) இவ்வளவு மிகச் செழிப்பாக தொடங்கி வளர்வதற்கு காரணமாக இருந்தது என்னவென்றால் ஏற்கனவே இருந்த சூழல். அந்தச் சூழல் மறுமலர்ச்சி இயக்கத்தினால் ஏற்பட்டது." (ஞானம் நேர்காணல்)

== உசாத்துணை ==
== உசாத்துணை ==

Revision as of 20:16, 12 July 2023

மறுமலர்ச்சி1

மறுமலர்ச்சி (1946-1948) இலங்கையில் இருந்து வெளிவந்த இலக்கிய இதழ். மறுமலர்ச்சி சங்கம் என்னும் இலக்கிய அமைப்பால் இது வெளியிடப்பட்டது

வரலாறு

ஈழகேசரி இதழ் நவீன இலக்கியத்திற்கு போதிய இடம் அளிக்கவில்லை என்றும் அது மரபிலக்கிய ஆய்வையே முதன்மையாகக் கருதியது என்றும் அதன்மேல் விமர்சனம் உருவாகியது. ஈழகேசரியில் எழுதியிருந்த அ.ச.முருகானந்தன், நாவற்குழியூர் நடராசன், வரதர், பண்டிதர் பஞ்சாட்சர சர்மா க. இ. சரவணமுத்து ஆகியோர் ஜுன் 13, 1943-ல் மறுமலர்ச்சி சங்கம் என்னும் அமைப்பை நிறுவினர். மறுமலர்ச்சி என்னும் பெயரில் கையெழுத்து இதழ் ஒன்றை நடத்தினர். மறுமலர்ச்சி 1943-1946 வரை கையெழுத்து இதழாக 24 இதழ்கள் வெளியாகியது. பின்னர் அதேபேரில் நவீன இலக்கிய இதழ் ஒன்றை தொடங்கினர்.

மறுமலர்ச்சி2

1946 மார்ச் மாதத்திலிருந்து 1948 அக்டோபர் மாதம் வரை 23 இதழ்கள் அச்சு இதழ்களாக மறுமலர்ச்சி இதழ்கள் வெளிவந்தன. மறுமலர்ச்சி இதழ் ஈழத்தின் முதலாவது நவீன இலக்கியச் சிற்றிதழ் என்று கூறப்படுகிறது. மறுமலர்ச்சி இதழின் இணை ஆசிரியர்களாக முதலில் வரதரும். அ.செ. முருகானந்தனும் இருந்தனர். 1948-ல் ஆறாவது இதழிலிருந்து இணை ஆசிரியர்களாக வரதரும் பண்டிதர் ச. பஞ்சாட்சர சர்மாவும் விளங்கினர்.

உள்ளடக்கம்

மறுமலர்ச்சி முழுமையாகவே ஒரு நவீன இலக்கிய இதழ். தமிழகத்தில் இருந்து வெளிவந்துகொண்டிருந்த மணிக்கொடி, கலைமகள் இதழ்களின் அமைப்பு உள்ளடக்கம் ஆகியவற்றால் தூண்டுதல் பெற்றது. மணிக்கொடி இதழில் இருந்த பொதுவாசகர்களுக்கான சமரசங்கள் கூட இல்லாத இதழ். சிறுகதைகள் கவிதைகளுக்கு அதிக இடம் அளித்தது.

வரதரின் மறுமலர்ச்சி சஞ்சிகையில் வெளிவந்த 64 சிறுகதைகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட 25 சிறுகதைகளை செங்கை ஆழியான் மறுமலர்ச்சிச் சிறுகதைகள் என்ற பெயரில் தொகுத்து நூலாக்கியுள்ளார் (1997). அதில் வெளிவந்த 51 கவிதைகள் அனைத்தையும் தொகுத்து செல்லத்துரை சுதர்சன் அவர்கள் மறுமலர்ச்சிக் கவிதைகள் என்ற பெயரில் நூலாக்கியுள்ளார் (2006). மறுமலர்ச்சி சஞ்சிகையின் இணை ஆசிரியர் பஞ்சாட்சர சர்மா அவர்களது மகன் கோப்பாய் சிவம் அவர்களும் திரு. செல்லத்துரை சுதர்சனும் இணைந்து மறுமலர்ச்சி இதழ்களின் தொகுப்பை வெளியிட்டுள்ளனர் (2016).

இலக்கிய இடம்

மறுமலர்ச்சி முழுத்தொகுதி

மறுமலர்ச்சி எழுத்தாளர்கள் தமது தீவிர எழுத்துக்களால் ஈழத்து இலக்கிய வரலாற்றில் மறுமலர்ச்சிக் காலம் (1943-1956) எனும் புதிய காலப்பகுப்பையே உருவாக்கினர்.'இந்தியாவில் மணிக்கொடிக்காலம் எனப் படைப்பிலக்கிய நலனாய்வாளர்கள் கூறுவதுபோல ஈழத்தில் மறுமலர்ச்சிக்காலம் என 1940 களை கலாநிதி கைலாசபதியே கணிப்பிட்டுக் கூறுவார்" என செ.கணேசலிங்கன் கூறுகிறார். (வரதர்-80, ஞானம் பதிப்பக வெளியீடு, பக் 11)

மறுமலர்ச்சி இதழ் பற்றி பேராசிரியர் கா.சிவத்தம்பி 'முற்போக்கு இயக்கம் (பிற்பட்ட காலத்தில்) இவ்வளவு மிகச் செழிப்பாக தொடங்கி வளர்வதற்கு காரணமாக இருந்தது என்னவென்றால் ஏற்கனவே இருந்த சூழல். அந்தச் சூழல் மறுமலர்ச்சி இயக்கத்தினால் ஏற்பட்டது." (ஞானம் நேர்காணல்)

உசாத்துணை

✅Finalised Page