under review

தமிழ் இணையக் கல்விக்கழகம்: Difference between revisions

From Tamil Wiki
(Corrected text format issues)
(Corrected error in line feed character)
 
Line 3: Line 3:
== நோக்கம் ==
== நோக்கம் ==
தமிழ் இணையக் கல்விக்கழகம் (முந்தைய பெயர்: தமிழ் இணையப் பல்கலைக்கழகம்) சென்னையில், பிப்ரவரி, 2001-ல் தோற்றுவிக்கப்பட்டது. உலகெங்கும் வாழும் தமிழ் மக்களுக்கும், தமிழில் ஈடுபாடு உள்ள மற்றவர்க்கும், தமிழ் மொழியைக் கற்பிக்க உதவுவது; தமிழர் வரலாறு, கலை, இலக்கியம், பண்பாடு பற்றி அவர்கள் அறிந்து கொள்ள வழிகாட்டுவது; கல்வி கற்க வேண்டிய வாய்ப்புகளை இணையம் வழியாக அளிப்பது போன்றவை தமிழ் இணையக் கல்விக்கழகத்தின் அடிப்படை நோக்கங்களாகும்.

தமிழர்களால் உருவாக்கப்பட்ட அனைத்து கல்விப் பொருண்மைகளைத் தொகுத்துப் பொதுமக்களுக்கு அளித்தல்; தமிழியலில் சான்றிதழ், பட்டயம், பட்டம் போன்ற படிப்புகளை அளித்தல்; கணினித்தமிழை வளர்த்தல் போன்றவை தமிழ் இணையக் கல்விக்கழகத்தின் பிற நோக்கங்களாகும். தமிழ் இணையக் கல்விக்கழகம் ஆட்சிக்குழு ஒன்றால் வழி நடத்தப்பட்டு, முழுநேர இயக்குநர் பொறுப்பில் செயற்பட்டு வருகிறது.

== செயல்பாடுகள் ==
== செயல்பாடுகள் ==
Line 31: Line 32:
===== சுவ‌டிக்காட்சிய‌க‌ம் =====
===== சுவ‌டிக்காட்சிய‌க‌ம் =====
உ.வே. சாமிநாதையர் படித்த, பதிப்பித்த சுவடிகள், அவருக்கு வந்த கடிதங்கள், அவர் பயன்படுத்திய நூல்கள் பற்றிய குறிப்புகள், அவர் கைப்பட எழுதிய குறிப்புகள் போன்றவை இச்சுவடிக் காட்சியகத்தில் இடம்பெற்றுள்ளன.

(பார்க்க: [https://www.tamilvu.org/ta/library-suvadi-html-suvd0ind-162080 உ.வே.சா. சுவடிக் காட்சியகம்])

===== ப‌ண்பாட்டுக் காட்சிய‌க‌ம் =====
===== ப‌ண்பாட்டுக் காட்சிய‌க‌ம் =====
Line 70: Line 72:
==== தகவலாற்றுப்படை ====
==== தகவலாற்றுப்படை ====
தமிழர் தகவலாற்றுப்படை, பண்டைத் தமிழர் வாழ்வின் வரலாற்றுக் காப்பகமாக அமைந்துள்ளது. தொல்லியல் மற்றும் வரலாறு சார்ந்த பிரிவுகளில் தொல் பழங்காலம், அகழாய்வுகள், கல்வெட்டுகள், வழிபாட்டுத் தலங்கள், சிற்பங்கள், நாணயங்கள், செப்பேடுகள், வரலாற்றுச் சின்னங்கள் மற்றும் ஓவியங்கள் தொடர்பான விளக்கங்கள் விரிவாக வழங்கப்பட்டுள்ளன.  

(பார்க்க: [https://www.tagavalaatruppadai.in/ தமிழர் தகவலாற்றுப்படை])

== உசாத்துணை ==
== உசாத்துணை ==

Latest revision as of 20:13, 12 July 2023

தமிழ் இணையக் கல்விக்கழகம்

தமிழ் இணையக் கல்விக்கழகம், பிப்ரவரி 2001-ல் சென்னையில் தோற்றுவிக்கப்பட்டது. உலகின் பல பகுதிகளில் வாழும் தமிழர்களின் மரபுகளை, பண்பாட்டைக் காப்பதும், அவர்களிடையே இலக்கியத் தொடர்பினை மேம்படுத்துவதும் கழகத்தின் அடிப்படை நோக்கங்கள். தமிழ் இணையக் கல்விக்கழகம், தலைவர் மற்றும் இயக்குநர் பொறுப்பில் செயற்பட்டு வருகிறது.

நோக்கம்

தமிழ் இணையக் கல்விக்கழகம் (முந்தைய பெயர்: தமிழ் இணையப் பல்கலைக்கழகம்) சென்னையில், பிப்ரவரி, 2001-ல் தோற்றுவிக்கப்பட்டது. உலகெங்கும் வாழும் தமிழ் மக்களுக்கும், தமிழில் ஈடுபாடு உள்ள மற்றவர்க்கும், தமிழ் மொழியைக் கற்பிக்க உதவுவது; தமிழர் வரலாறு, கலை, இலக்கியம், பண்பாடு பற்றி அவர்கள் அறிந்து கொள்ள வழிகாட்டுவது; கல்வி கற்க வேண்டிய வாய்ப்புகளை இணையம் வழியாக அளிப்பது போன்றவை தமிழ் இணையக் கல்விக்கழகத்தின் அடிப்படை நோக்கங்களாகும்.

தமிழர்களால் உருவாக்கப்பட்ட அனைத்து கல்விப் பொருண்மைகளைத் தொகுத்துப் பொதுமக்களுக்கு அளித்தல்; தமிழியலில் சான்றிதழ், பட்டயம், பட்டம் போன்ற படிப்புகளை அளித்தல்; கணினித்தமிழை வளர்த்தல் போன்றவை தமிழ் இணையக் கல்விக்கழகத்தின் பிற நோக்கங்களாகும். தமிழ் இணையக் கல்விக்கழகம் ஆட்சிக்குழு ஒன்றால் வழி நடத்தப்பட்டு, முழுநேர இயக்குநர் பொறுப்பில் செயற்பட்டு வருகிறது.

செயல்பாடுகள்

கல்வித் திட்டங்கள்

தமிழ் இணையக் கல்விக்கழகம் மழலையர் கல்வி முதல் பட்டப்படிப்பு வரையான கல்வித் திட்டங்களை வழங்குகிறது. மழலைக் கல்வி, சான்றிதழ்க் கல்வி, பட்டயம், மேற்பட்டயம், இளநிலைத் தமிழியல் பட்டம் போன்ற கல்வித் திட்டங்களை அளித்து வருகிறது.

தமிழ் இணையக் கல்விக் கழக நூலகம்

நூல்கள்

தமிழ் இணையக் கல்விக் கழக நூலகத்தில் கீழ்காணும் தலைப்புகளில் நூல்கள் மின்னூலாக்கம் செய்யப்பட்டு சேகரிக்கப்பட்டுள்ளன.

  • சொல்லடைவு
  • தமிழ் எண் சுவடி
  • இலக்கணம்
  • சங்க இலக்கியம்
  • பதினெண் கீழ்க்கணக்கு
  • காப்பியங்கள்
  • சமய இலக்கியங்கள்
  • சிற்றிலக்கியங்கள்
  • நெறி நூல்கள்
  • சித்தர் இலக்கியம்
  • இருபதாம் நூற்றாண்டு இலக்கியங்கள் (கவிதைகள்)
  • இருபதாம் நூற்றாண்டு இலக்கியங்கள் (உரைநடைகள்)
  • நாட்டுப்புற இலக்கியங்கள்
  • சிறுவர் இலக்கியங்கள்
  • நிகண்டுகள்
  • அக‌ராதிக‌ள்
  • க‌லைச்சொற்க‌ள்
  • க‌லைக்க‌ள‌ஞ்சிய‌ம்

(பார்க்க: தமிழிணைய நூலகம்)

சுவ‌டிக்காட்சிய‌க‌ம்

உ.வே. சாமிநாதையர் படித்த, பதிப்பித்த சுவடிகள், அவருக்கு வந்த கடிதங்கள், அவர் பயன்படுத்திய நூல்கள் பற்றிய குறிப்புகள், அவர் கைப்பட எழுதிய குறிப்புகள் போன்றவை இச்சுவடிக் காட்சியகத்தில் இடம்பெற்றுள்ளன.

(பார்க்க: உ.வே.சா. சுவடிக் காட்சியகம்)

ப‌ண்பாட்டுக் காட்சிய‌க‌ம்

ப‌ண்பாட்டுக்காட்சிய‌க‌த்தில், கீழ்காணும் பொருண்மைகளில் தரவுகள் இடம் பெற்றுள்ளன.

  • திருத்தலங்கள்
  • திருவிழாக்கள்
  • வரலாற்றுச்சின்னங்கள்
  • கலைகள்
  • விளையாட்டுகள்
  • திருக்கோயில்கள் சாலை வரைபடம்

(பார்க்க: பண்பாட்டுக் காட்சியகம்)

தமிழ் இணையம் மின்னூலகம்

தமிழ் இணைய மின்னூலகத்தில் கீழ்காணும் பொருண்மைகளில் நூல்கள்/சுவடிகள் வலையேற்றம் செய்யப்பட்டுள்ளன.

அச்சு நூல்கள்
  • அரிய நூல்கள்
  • நாட்டுடைமை ஆக்கப்பட்ட நூல்கள்
  • தமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் கழக நூல்கள்
பருவ வெளியீடுகள்
  • ஆய்விதழ்கள்
  • இதழ்கள்
  • தமிழரசு இதழ்
சுவடிகள்
  • ஓலைச்சுவடிகள்
அரசு ஆவணங்கள்
  • ஆவணக்காப்பக அட்டவணைகள்
  • ஆவணக்காப்பக அட்டவணைகள் (கையெழுத்துப் பிரதி)
  • விடுதலை இயக்கத்தின் வரலாறு

(பார்க்க: தமிழிணையம் - மின்னூலகம்)

கணித்தமிழ்

இணையத்தில் தமிழின் பங்களிப்பை வளப்படுத்துதல், கணித் தமிழ் மற்றும் தமிழ் பயன்பாட்டு மென்பொருள்களை உருவாக்கம் செய்ய ஊக்குவித்தல், மாணவர்களுக்கு அகநிலை பயிற்சி அளித்தல், கணிப்பொறியில் தமிழ் உள்ளீட்டு பயிற்சியினை ஆசிரியர்கள், மாணவர்கள், கணிப்பொறி ஆர்வலர்களுக்கு வழங்குதல், கட்டற்ற மென்பொருள் பயன்பாட்டை முன்னெடுத்தல், கணித்தமிழ்த் திருவிழா நடத்துதல், தமிழ் மென்பொருள், குறுஞ்செயலி உருவாக்கம், மின் உள்ளடக்கப் பயிற்சி வழங்குதல், கணித்தமிழ் சார்ந்த பயன்பாட்டை ஊக்குவிக்க கோடை கால முகாம் நடத்துதல் கலைக்களஞ்சிய உருவாக்கம் ஆகியனவற்றை இலக்குகளாகக் கொண்டு கணித்தமிழ் செயல்பட்டு வருகிறது.

கணித் தமிழ் பேரவை

தமிழ் இணையக் கல்விக்கழகத்தின் பரப்புரை அலகே கணித்தமிழ்ப் பேரவை. கணினித் தமிழ் ஆய்வினை ஊக்குவிக்க, தமிழ் இணையக் கல்விக்கழகம் தேவையான தரவுகளையும் தமிழ் மென்பொருட்களையும் உருவாக்குகிறது. தமிழ் இணையக் கல்விக்கழகத்தின் மின்னூலகத்தை அனைத்து மின்னனு சாதனங்களிலும் இயங்கும்படியாக வடிவமைத்து, மேம்படுத்தி வருகிறது.

தமிழ்ப் பெருங்களஞ்சியம்

அனைத்துத் துறைகளிலும் தமிழ் உள்ளடக்கங்களை கலைக்களஞ்சிய வடிவில் உருவாக்கிட கணித்தமிழ்ப்பேரவைச் செயல்படுத்தும் திட்டமே தமிழ்ப்பெருங்களஞ்சியத் திட்டம். தமிழ்ப் பெருங்களஞ்சியத்தில் வேளாண்மை, மீன்வளம், வேதியியல், உயிரியியல், இயற்பியல் போன்ற துறை சார்ந்த கட்டுரைகள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. எதிர்காலத்தில், இவை பல்லூடகப் பொருள்களாக அளிக்கப்படும்.

ஆய்வு மற்றும் உருவாக்கம்

தமிழ் ஆராய்ச்சியாளர்கள், மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்குச் சிறந்த ஆய்வுச்சூழலை உருவாக்க தமிழ் இணையக் கல்விக்கழகம் தமிழ் மொழித் தொழில்நுட்பம் மற்றும் இயற்கை மொழி ஆய்விற்காக பல்வேறு நீண்ட கால ஆராய்ச்சித் திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது.

தமிழ் மென்பொருள்கள் உருவாக்கம்

மென்பொருட்களைச் செம்மையாக்குவது, ஒருங்குறி மாற்றி, உரை உணர்தல், உரைச் சுருக்கம் தருதல், பேச்சு உணர்தல் மற்றும் பகுத்தல், தானியங்கி மொழிபெயர்ப்பு போன்ற பலவகைப் பயன்பாட்டு மென்பொருட்கள் உருவாக்கப்படுகின்றன. தமிழ் மொழியியல் ஆராய்ச்சிக்காக மிகப்பெரிய தரவகம் மற்றும் மின்-அகராதி உருவாக்கம் நடைபெற்று வருகிறது. தமிழ் எழுத்துருக்கள் உருவாக்கம், வளர்ச்சிக்கு உதவி வருகிறது.

தகவலாற்றுப்படை

தமிழர் தகவலாற்றுப்படை, பண்டைத் தமிழர் வாழ்வின் வரலாற்றுக் காப்பகமாக அமைந்துள்ளது. தொல்லியல் மற்றும் வரலாறு சார்ந்த பிரிவுகளில் தொல் பழங்காலம், அகழாய்வுகள், கல்வெட்டுகள், வழிபாட்டுத் தலங்கள், சிற்பங்கள், நாணயங்கள், செப்பேடுகள், வரலாற்றுச் சின்னங்கள் மற்றும் ஓவியங்கள் தொடர்பான விளக்கங்கள் விரிவாக வழங்கப்பட்டுள்ளன.

(பார்க்க: தமிழர் தகவலாற்றுப்படை)

உசாத்துணை

✅Finalised Page