under review

சின்னத்தம்பிப் புலவர்: Difference between revisions

From Tamil Wiki
(Corrected text format issues)
(Corrected error in line feed character)
Line 5: Line 5:
== இலக்கிய வாழ்க்கை ==
== இலக்கிய வாழ்க்கை ==
இளமையில் கவி பாடும் திறன் பெற்றிருந்தார். சின்னத்தம்பிப் புலவரை டச்சு ஆட்சியாளர்கள் தவறான வகையில் குற்றச்சாட்டியதால் நகர் காவலில் வைத்தனர். சிவகாமி அம்மை மீது பதிகம் பாடியதால் காவலர்கள் அவரை விடுதலை செய்தனர். சிவகாமி அம்மையின் அருளால் சிறை மீண்டதை சிறை நீக்கு பதிகமாக பாடினார். இணுவை சிவகாமி அம்மையை பாட்டுடைத் தலைவியாகக் கொண்டு சிவகாமியம்மை பிள்ளைத்தமிழ், சிவகாமியம்மை துதி, இணுவைச் சிவகாமசுந்தரி பதிகம், இணுவிற் சிவகாமியம்மை திருவூசல் ஆகியவற்றைப் பாடினார். பஞ்சவன்னத் தூது புதுமையான தூது சிற்றிலக்கிய வடிவத்தைச் சார்ந்த நூல்.  

டச்சு, ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் சிவகாமி அம்மை கோயிலின் அருகே நாடக அரங்கு ஒன்று இருந்தது. அதற்கு புலவர் நொண்டி நாடகம், கோவலன் நாடகம், அனிருத்த நாடகம் போன்ற நாடகங்களை எழுதினார்.  

== நூல்கள் பட்டியல் ==
== நூல்கள் பட்டியல் ==

Revision as of 20:12, 12 July 2023

இணுவில் சிவகாமியம்மை கோவில்

சின்னத்தம்பிப் புலவர் (இணுவில்) (19-ஆம் நூற்றாண்டு) இலங்கை தமிழ், சைவ அறிஞர், சிற்றிலக்கியப் புலவர், நாடக ஆசிரியர்.

வாழ்க்கைக் குறிப்பு

சின்னத்தம்பிப் புலவர் இலங்கை யாழ்ப்பாணம் இணுவிலில் சிதம்பர நாதருக்கு மகனாக 19-ஆம் நூற்றாண்டில் பிறந்தார். கதிர்காமசேகரமானா முதலியார் என்பது இயற்பெயர். டச்சு அரசில் தொம்பு(சாதனம்) எழுதும் பணியில் இருந்தார். இணுவில் சிவகாமி அம்மை மேல் பக்தி கொண்டவர்.

இலக்கிய வாழ்க்கை

இளமையில் கவி பாடும் திறன் பெற்றிருந்தார். சின்னத்தம்பிப் புலவரை டச்சு ஆட்சியாளர்கள் தவறான வகையில் குற்றச்சாட்டியதால் நகர் காவலில் வைத்தனர். சிவகாமி அம்மை மீது பதிகம் பாடியதால் காவலர்கள் அவரை விடுதலை செய்தனர். சிவகாமி அம்மையின் அருளால் சிறை மீண்டதை சிறை நீக்கு பதிகமாக பாடினார். இணுவை சிவகாமி அம்மையை பாட்டுடைத் தலைவியாகக் கொண்டு சிவகாமியம்மை பிள்ளைத்தமிழ், சிவகாமியம்மை துதி, இணுவைச் சிவகாமசுந்தரி பதிகம், இணுவிற் சிவகாமியம்மை திருவூசல் ஆகியவற்றைப் பாடினார். பஞ்சவன்னத் தூது புதுமையான தூது சிற்றிலக்கிய வடிவத்தைச் சார்ந்த நூல்.

டச்சு, ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் சிவகாமி அம்மை கோயிலின் அருகே நாடக அரங்கு ஒன்று இருந்தது. அதற்கு புலவர் நொண்டி நாடகம், கோவலன் நாடகம், அனிருத்த நாடகம் போன்ற நாடகங்களை எழுதினார்.

நூல்கள் பட்டியல்

தூது
  • காலிங்கராயன் பஞ்சவன்னத் தூது
பதிகம்
  • இணுவைச் சிவகாமசுந்தரி பதிகம்
புராணம்
  • இளந்தாரி புராணம்
சதகம்
  • இரட்டை மணிமாலை சதகம்
திருவூசல்
  • இணுவிற் சிவகாமியம்மை திருவூசல்
நாடகம்
  • நொண்டி நாடகம்
  • கோவலன் நாடகம்
  • அனிருத்த நாடகம்

உசாத்துணை

✅Finalised Page