under review

ஹிஸ்ஸெல்லெ தருமரதன தேரர்: Difference between revisions

From Tamil Wiki
m (Spell Check done)
(Corrected text format issues)
Line 11: Line 11:
====== ஆசிரியப் பணி ======
====== ஆசிரியப் பணி ======
தருமரதன தேரர் யாழ்ப்பாணம் ஹிந்து கல்லூரியில் சேர்ந்து தமிழையும் ஆங்கிலத்தையும் முறையாகக் கற்று தமிழில் பண்டிதர் பட்டம் பெற்றார். கொழும்பில் நடந்த O.S.S. தமிழ்ப் பண்டிதத் தேர்விலும் தேர்ச்சி பெற்றார். தொடர்ந்து யாழ்ப்பாணம் சாவகச்சேரி இந்துக் கல்லூரியில் ஆசிரியராகப் பணியில் சேர்ந்தார். மாணவர்களுக்குச் சமஸ்கிருதம், சிங்களம் ஆகிய மொழிகளைக் கற்பித்தார்.

தருமரதன தேரர், ஆசிரியராகப் பணியாற்றிக் கொண்டே தனது மேற்கல்வியைத் தொடர்ந்தார். 1949-ல், இலங்கைச் சர்வ கலாசாலைப் பிரவேசத் தேர்வில் தேர்ச்சி பெற்றார். தொடர்ந்து சிங்களத்தை முதல் மொழியாகவும் தமிழை இரண்டாவது மொழியாகவும் பயின்று, 1953-ல் பி.ஏ. பட்டம் பெற்றார். இலங்கை மத்திய மாகாணத்தைச் சேர்ந்த நாவலப்பிட்டியில் உள்ள கதிரேசன் கல்லூரியில் ஆசிரியராகப் பணியாற்ற வந்த வாய்ப்பை ஏற்றுக் கொண்டார். தொடர்ந்து 1957-ல், சஹிரா கல்லூரியில் சில காலம் ஆசிரியராகப் பணிபுரிந்தார். பின் தன் குரு மகாதேரோவின் விருப்பப்படி சரஸ்வதி பிரிவேணை கலாசாலையின் துணை முதல்வரானார்.

அதுவரை மாணவர்கள் பயின்று வந்த சிங்களம், சமஸ்கிருதம், பாலி, பௌத்த தருமம் முதலிய பாடங்களோடு ஆங்கிலம், தமிழ், வரலாறு, கணிதம் போன்றவற்றையும் பாடத் திட்டத்தில் சேர்த்தார்.1963-ல் சரஸ்வதி பிரிவேணை கலாசாலை, வித்தியோதயப் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டு சரஸ்வதி வித்யோதயப் பிரிவேணை என்று அழைக்கப்பட்டது. தருமரதன தேரர், 1958-ல், இலண்டன் பல்கலைக்கழகத்தில் நடந்த பி.ஏ.தேர்வில் தேர்ச்சி பெற்றார்.

[[File:Buddhism in south india.jpg|thumb|தென்னிந்தியாவில் பௌத்த மதம்]]
[[File:Buddhism in south india.jpg|thumb|தென்னிந்தியாவில் பௌத்த மதம்]]
Line 19: Line 17:
== இலக்கிய வாழ்க்கை ==
== இலக்கிய வாழ்க்கை ==
தருமரதன தேரர் புத்தரின் தென்னிந்தியப் பயணம் பற்றி ஆய்வுகளை மேற்கொண்டு "Buddhism in South India" என்ற தலைப்பில் நூலாக வெளியிட்டார். தமிழ் - சிங்கள அகராதியையும் உருவாக்கி வெளியிட்டார். சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவகசிந்தாமணி போன்ற தமிழ் இலக்கியங்களை சிங்களத்துக்கு மொழிபெயர்த்தார். இலங்கை அரசின் வேண்டுகோளின்படி 'மகா வம்சம்’ நூலை பாலி பாஷையிலிருந்து தமிழுக்கு மொழிபெயர்த்தார்.

தருமரதன தேரர், பல்வேறு தமிழ் மற்றும் இலக்கியச் சங்கங்களில் தலைவர், துணைத் தலைவர், உறுப்பினர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளை வகித்தார்.  
தருமரதன தேரர், பல்வேறு தமிழ் மற்றும் இலக்கியச் சங்கங்களில் தலைவர், துணைத் தலைவர், உறுப்பினர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளை வகித்தார்.  
== விருதுகள், கௌரவங்கள் ==
== விருதுகள், கௌரவங்கள் ==
Line 45: Line 42:
* [https://sangam.org/buddhist-heritage-tamil-nadu-links-lanka/ இலங்கை தமிழ்ச் சங்கக் கட்டுரை]
* [https://sangam.org/buddhist-heritage-tamil-nadu-links-lanka/ இலங்கை தமிழ்ச் சங்கக் கட்டுரை]
* [http://www.dhammikaweb.com/?p=21699 தருமரதன தேரரின் புத்தகம்]
* [http://www.dhammikaweb.com/?p=21699 தருமரதன தேரரின் புத்தகம்]
{{Finalised}}
{{Finalised}}
[[Category:சிங்களத் தமிழ் அறிஞர்கள்]]
[[Category:சிங்களத் தமிழ் அறிஞர்கள்]]

Revision as of 14:51, 3 July 2023

ஹிஸ்ஸெல்லெ தருமரதன தேரர் - மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் கட்டுரை

ஹிஸ்ஸெல்லெ தருமரதன தேரர் (Hisselle Dhammaratana Mahadera)(பண்டிட் ஹிஸ்ஸெல்லெ தம்மரதன மஹாதேரா) (தருமபாலர்; ஜனவரி 1, 1914; ஜூன் 04, 1972) சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவக சிந்தாமணி போன்ற தமிழ் இலக்கியங்களை சிங்களத்துக்கு மொழிபெயர்த்த முன்னோடி சிங்கள அறிஞர். தமிழ்-சிங்கள அகராதியைத் தந்தவர்.

பிறப்பு, கல்வி

ஹிஸ்ஸெல்லெ தருமரதன தேரர், ஜனவரி 1, 1914-ல், இலங்கை, கொழும்பில் உள்ள ஹிஸ்ஸெல்லை என்ற ஊரில், கருணாநாயக பதிரன்ன ஹொலாஹே என்னும் புகழ்பெற்ற குடும்பத்தில், ஹெர்மானிஸ் அப்புஹாமி-புஞ்சினேனா குமாரசிங்க ஹாமினே இணையருக்கு மூன்றாவது மகனாகப் பிறந்தார். அவரது இயற்பெயர் தருமபாலர். உள்ளூர் பாடசாலையில் அடிப்படைக் கல்வி பயின்றார்.

தனிவாழ்க்கை

துறவு

ஹிஸ்ஸெல்லெ தருமரதன தேரர், சிறு வயதிலேயே தனது உறவினரான பௌத்தத் துறவி ஞானோதய தேரர் என்பவரை அணுகி, அவருக்குச் சீடரானார். 1930-ல் புத்த சங்கம் மூலம் துறவியானார். பிக்ஷூவானவுடன் தம்மரதன மஹாதேரோ என்று பெயர் சூட்டப்பட்டார். ஹிஸ்ஸெல்லெ தருமரதன தேரர், ஞானோதய மகாதேரரால் நிறுவப்பட்ட சரஸ்வதி பிரிவேணா என்னும் கலாசாலையில் சேர்ந்து பாலி, சமஸ்கிருதம், சிங்களம் ஆகியவற்றைப் பயின்றார். 1936-ல் அடிப்படைத் தேர்விலும், 1939-ல் மத்தியத் தேர்விலும் தேர்ச்சி பெற்றார். 1945-ல் பண்டிதர் பட்டம் பெற்றார்.

தமிழ்க்கல்வி

சரஸ்வதி பிரிவேணா கலாசாலையில் சில வருடம் ஆசிரியராகப் பணியாற்றிய தருமரதன தேரர், பின் ஆங்கிலம் பயில்வதற்காகத் தனது சொந்த ஊரான ஹிஸ்ஸெல்லைக்குச் சென்றார். அங்குள்ள மருத்துவமனையில் தலைமை மருத்துவராக இருந்த டாக்டர். ஏ. சின்னதம்பிக்கு சிங்களம் கற்றுக்கொடுத்து தானும் தமிழ் கற்றுக்கொண்டார். தமிழில் மேற்கல்வி பயில யாழ்ப்பாணம் ஹிந்துக் கல்லூரிக்குச் செல்லுமாறும் ஏ.சின்னத்தம்பி ஆலோசனை கூறினார்.

ஆசிரியப் பணி

தருமரதன தேரர் யாழ்ப்பாணம் ஹிந்து கல்லூரியில் சேர்ந்து தமிழையும் ஆங்கிலத்தையும் முறையாகக் கற்று தமிழில் பண்டிதர் பட்டம் பெற்றார். கொழும்பில் நடந்த O.S.S. தமிழ்ப் பண்டிதத் தேர்விலும் தேர்ச்சி பெற்றார். தொடர்ந்து யாழ்ப்பாணம் சாவகச்சேரி இந்துக் கல்லூரியில் ஆசிரியராகப் பணியில் சேர்ந்தார். மாணவர்களுக்குச் சமஸ்கிருதம், சிங்களம் ஆகிய மொழிகளைக் கற்பித்தார். தருமரதன தேரர், ஆசிரியராகப் பணியாற்றிக் கொண்டே தனது மேற்கல்வியைத் தொடர்ந்தார். 1949-ல், இலங்கைச் சர்வ கலாசாலைப் பிரவேசத் தேர்வில் தேர்ச்சி பெற்றார். தொடர்ந்து சிங்களத்தை முதல் மொழியாகவும் தமிழை இரண்டாவது மொழியாகவும் பயின்று, 1953-ல் பி.ஏ. பட்டம் பெற்றார். இலங்கை மத்திய மாகாணத்தைச் சேர்ந்த நாவலப்பிட்டியில் உள்ள கதிரேசன் கல்லூரியில் ஆசிரியராகப் பணியாற்ற வந்த வாய்ப்பை ஏற்றுக் கொண்டார். தொடர்ந்து 1957-ல், சஹிரா கல்லூரியில் சில காலம் ஆசிரியராகப் பணிபுரிந்தார். பின் தன் குரு மகாதேரோவின் விருப்பப்படி சரஸ்வதி பிரிவேணை கலாசாலையின் துணை முதல்வரானார். அதுவரை மாணவர்கள் பயின்று வந்த சிங்களம், சமஸ்கிருதம், பாலி, பௌத்த தருமம் முதலிய பாடங்களோடு ஆங்கிலம், தமிழ், வரலாறு, கணிதம் போன்றவற்றையும் பாடத் திட்டத்தில் சேர்த்தார்.1963-ல் சரஸ்வதி பிரிவேணை கலாசாலை, வித்தியோதயப் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டு சரஸ்வதி வித்யோதயப் பிரிவேணை என்று அழைக்கப்பட்டது. தருமரதன தேரர், 1958-ல், இலண்டன் பல்கலைக்கழகத்தில் நடந்த பி.ஏ.தேர்வில் தேர்ச்சி பெற்றார்.

தென்னிந்தியாவில் பௌத்த மதம்
தருமரதன தேரர் நூல்

இலக்கிய வாழ்க்கை

தருமரதன தேரர் புத்தரின் தென்னிந்தியப் பயணம் பற்றி ஆய்வுகளை மேற்கொண்டு "Buddhism in South India" என்ற தலைப்பில் நூலாக வெளியிட்டார். தமிழ் - சிங்கள அகராதியையும் உருவாக்கி வெளியிட்டார். சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவகசிந்தாமணி போன்ற தமிழ் இலக்கியங்களை சிங்களத்துக்கு மொழிபெயர்த்தார். இலங்கை அரசின் வேண்டுகோளின்படி 'மகா வம்சம்’ நூலை பாலி பாஷையிலிருந்து தமிழுக்கு மொழிபெயர்த்தார். தருமரதன தேரர், பல்வேறு தமிழ் மற்றும் இலக்கியச் சங்கங்களில் தலைவர், துணைத் தலைவர், உறுப்பினர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளை வகித்தார்.

விருதுகள், கௌரவங்கள்

  • 1960-ல், இலங்கை, பதுளை நகரத்தில் உள்ள மலையகக் கலை இலக்கிய மன்றம் தரும ரதன தேரருக்கு வெள்ளிப் பதக்கம் அளித்துக் கௌரவித்தது.
  • 1962-ல், இலங்கைத் தமிழ் எழுத்தாளர் சங்கம் தரும ரதன தேரருக்கு வெள்ளி விளக்கு வழங்கிச் சிறப்பித்தது.
  • இவரது பத்தினி தெய்யோ, தென் இந்தியாவில் பௌத்த மத வரலாறு முதலிய நூல்களுக்கு இலங்கை அரசாங்கமும், இலங்கை சாகித்திய மண்டலமும், யுனெஸ்கோ நிறுவனமும் பரிசுகள் வழங்கியுள்ளன.
  • 1966-ல், சென்னைத் தமிழ் எழுத்தாளர் சங்கம் இவருக்கு வெள்ளிப் பதக்கம் வழங்கிக் கௌரவப்படுத்தியது.

மறைவு

ஜூன் 4, 1972-ல் ஹிஸ்ஸெல்லெ தருமரதன தேரர் காலமானார்.

இலக்கிய இடம்

தமிழின் முக்கியமான இலக்கியங்கள் சிலவற்றை சிங்களத்திற்குக் கொண்டு சென்ற தமிழறிஞர் ஹிஸ்ஸெல்லெ தருமரதன தேரர். இவரது வாழ்க்கையை மயிலை சீனி. வேங்கடசாமி ஆவணப்படுத்தியுள்ளார்.

நூல்கள்

  • தமிழ் - சிங்கள அகராதி
  • இரகுவமிசகதாமிருத அரும்பதவுரை (சிங்களம்)
  • மணிமேகலைச் சம்பு (மணிமேகலை காப்பியத்தின் சிங்கள மொழிபெயர்ப்பு)
  • பத்தினி தெய்யோ (சிலப்பதிகாரத்தின் சிங்கள மொழிபெயர்ப்பு)
  • தென் இந்தியாவில் பெளத்தமத வரலாறு (சிங்களம்)
  • தமிழ் இலக்கணம் (சிங்கள மொழிபெயர்ப்பு)
  • மகாவமிசம் (பாலியிலிருந்து தமிழுக்கு மொழிபெயர்ப்பு)
  • ஆர்திக வித்யா பிரவேசம் (சிங்களப் பொருளியல் நூலின் தமிழ் மொழிபெயர்ப்பு)
  • சீவகசிந்தாமணி (சிங்கள் மொழிபெயர்ப்பு)
  • Tamil Influence on Sinhalese Language

உசாத்துணை

✅Finalised Page