under review

பௌத்தமும் தமிழும்: Difference between revisions

From Tamil Wiki
(Corrected text format issues)
(Corrected text format issues)
Tag: Reverted
Line 24: Line 24:
== இலக்கிய இடம் ==
== இலக்கிய இடம் ==
’தமிழ் நாட்டுப் பௌத்த மத வரலாற்றினைக் கூறுவதும் பௌத்தர் தமிழ் மொழிக்குச் செய்த தொண்டுகளை ஒருங்காராய்ந்து விளக்குவதுமான நூல், தமிழ் மொழியில், யாம் அறிந்தவரையில், இதுவே முதலாவதாகும். இதுவரையில் மறைந்து கிடந்தனவும் மாய்ந்து போகுந்தருவாயிலிருந்தனவுமான வரலாறுகளும் செய்திகளும் இவ்வாராய்ச்சியால் உயிர்ப்பிக்கப்பட்டு வெளிப் படுத்தப்படுகின்றன’ என மயிலை சீனி.வேங்கடசாமி நூல் முன்னுரையில் சொல்கிறார்.

தமிழக இலக்கிய வரலாறும் பண்பாட்டு வரலாறும் எழுதப்பட்டுக் கொண்டிருந்த தொடக்க காலத்தில் பௌத்த மதத்திற்கு போதிய கவனம் அளிக்கப்படவில்லை. சமண, பௌத்த மதங்கள் நிலவிய களப்பிரர் காலம் இருண்டகாலம் என்னும் நம்பிக்கை நிலவியது. இந்நூல் அந்த முடிவுகளை உடைத்து தமிழ் இலக்கியம், பண்பாடு ஆகியவற்றில் பௌத்தம் அளித்த பங்களிப்பை நிறுவிய முன்னோடி நூல்.

== உசாத்துணை ==
== உசாத்துணை ==

Revision as of 14:48, 3 July 2023

பௌத்தமும் தமிழும்

பௌத்தமும் தமிழும் (1940) மயிலை சீனி.வேங்கடசாமி எழுதிய நூல். தமிழிலக்கியத்திலும் பண்பாட்டிலும் பௌத்த மதம் ஆற்றிய பங்களிப்பு பற்றிய முன்னோடி ஆய்வு.

எழுத்து, வெளியீடு

மயிலை சீனி. வேங்கடசாமி ஜனவரி 5, 1940-ல் இந்நூலை எழுதினார். இதை திருநெல்வேலி சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம் வெளியிட்டது. இந்நூலை தன் ஆசிரியரான ச.த.சற்குணருக்கு மயிலை சீனி வேங்கடசாமி காணிக்கையாக்கினார். இந்நூலின் இரண்டாம் பதிப்புக்கு சிங்கள பௌத்த அறிஞ்சர் ஏ.டி.எஸ்..ஜி.புஞ்சிஹோவா அணிந்துரை வழங்கினார். மயிலை சீனி.வேங்கடசாமி கூவம் ஆற்றங்கரையில் கண்டுபிடித்த புத்தரின் சிலை இந்நூலின் முகப்பில் உள்ளது.

உள்ளடக்கம்

மயிலை சீனி.வேங்கடசாமி பௌத்தமும் தமிழும் நூலில் புத்தரின் வரலாறு, பௌத்த மதக்கோட்பாடுகள் ஆகியவற்றை அறிமுகம் செய்கிறார். தமிழகத்திலிருந்த பௌத்த ஆலயங்கள், பௌத்த கட்டிடக் கலை ஆகியவற்றை விளக்குகிறார். சைவம் வைணவம் ஆகியவற்றுக்கும் பௌத்ததிற்குமான உறவு, பௌத்த போதிசத்வர்கள் சாஸ்தா அல்லது ஐயனார் என்ற பெயரில் இந்துமதத்திற்குள் நுழைந்தது, புத்தர் இந்து மதத்திற்குள் ஏற்கப்பட்டமை, பௌத்த நாட்டுப்புற தெய்வங்கள், பௌத்த அறம் ஆகியவற்றை இந்நூல் ஆவணப்படுத்துகிறது.

அத்தியாயங்கள்
  • பௌத்த மதம் தமிழ்நாடு வந்த வரலாறு.
  • பௌத்தம் தமிழ் நாட்டில் வளர்ச்சிபெற்ற வரலாறு.
  • பௌத்தமதம் மறைந்த வரலாறு.
  • பௌத்த திருப்பதிகள்
  • இந்து மதத்தில் பௌத்தமதக் கொள்கைகள்.
  • பௌத்தரும் தமிழும்
  • தமிழ்நாட்டு பௌத்தப் பெரியார்
  • பௌத்தர் இயற்றிய தமிழ் நூல்கள்.
  • தமிழில் பாளிமொழிச் சொற்கள்.
  • புத்தர் தோத்திரப் பாக்கள்
  • ஆசீவக மதம்.
  • சாத்தனார் - ஐயனார்.
  • கடற்காவல் தெய்வம் மணிமேகலை
  • அகத்தியர்.
  • மணிமேகலை நூலின் காலம்.
  • வீரசோழியம்.

இலக்கிய இடம்

’தமிழ் நாட்டுப் பௌத்த மத வரலாற்றினைக் கூறுவதும் பௌத்தர் தமிழ் மொழிக்குச் செய்த தொண்டுகளை ஒருங்காராய்ந்து விளக்குவதுமான நூல், தமிழ் மொழியில், யாம் அறிந்தவரையில், இதுவே முதலாவதாகும். இதுவரையில் மறைந்து கிடந்தனவும் மாய்ந்து போகுந்தருவாயிலிருந்தனவுமான வரலாறுகளும் செய்திகளும் இவ்வாராய்ச்சியால் உயிர்ப்பிக்கப்பட்டு வெளிப் படுத்தப்படுகின்றன’ என மயிலை சீனி.வேங்கடசாமி நூல் முன்னுரையில் சொல்கிறார். தமிழக இலக்கிய வரலாறும் பண்பாட்டு வரலாறும் எழுதப்பட்டுக் கொண்டிருந்த தொடக்க காலத்தில் பௌத்த மதத்திற்கு போதிய கவனம் அளிக்கப்படவில்லை. சமண, பௌத்த மதங்கள் நிலவிய களப்பிரர் காலம் இருண்டகாலம் என்னும் நம்பிக்கை நிலவியது. இந்நூல் அந்த முடிவுகளை உடைத்து தமிழ் இலக்கியம், பண்பாடு ஆகியவற்றில் பௌத்தம் அளித்த பங்களிப்பை நிறுவிய முன்னோடி நூல்.

உசாத்துணை

✅Finalised Page