under review

தச்சாம்பாடி மகாவீரர் கோயில்: Difference between revisions

From Tamil Wiki
(Category:சமணத் தலங்கள் சேர்க்கப்பட்டது)
(Corrected text format issues)
Line 1: Line 1:
[[File:தச்சாம்பாடி மகாவீரர் கோயில் (நன்றி பத்மாராஜ்).png|thumb|261x261px|தச்சாம்பாடி மகாவீரர் கோயில் (நன்றி பத்மாராஜ்)]]

தச்சாம்பாடி மகாவீரர் கோயில் (பொ.யு. 16-ஆம் நூற்றாண்டு) வடதமிழ்நாட்டு (தொண்டைமண்டல) விழுப்புரம் (வட ஆர்க்காடு) மாவட்டம் தச்சாம்பாடியில் அமைந்த சமணக் கோயில். இருபத்தி நான்காவது தீர்த்தங்கரராகிய மகாவீரருக்குத் தனிக்கோயில் உள்ளது.  

== இடம் ==
== இடம் ==
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் வழியாக செஞ்சி, சேத்பட், போளூர் சாலையை அடையலாம். சேத்பட்டிலிருந்து ஒன்பது கிலோமீட்டர் தொலைவில் தச்சாம்பாடி மகாவீரர் கோயில் உள்ளது.

== வரலாறு ==
== வரலாறு ==
[[File:தச்சாம்பாடி மகாவீரர் .png|thumb|215x215px|தச்சாம்பாடி மகாவீரர் ]]

இக்கோயிலின் கலைப்பாணியைக் கொண்டு பொ.யு. 16-ஆம் நூற்றாண்டு என இதன் காலத்தை வரையறை செய்யலாம்.

==== சாசனங்கள் ====
==== சாசனங்கள் ====
சாசனங்கள் எவையும் இல்லை. செவிவழிச்செய்தி வழியாக இத்தலத்தின் வழிபாட்டுச்செலவுகளுக்கு நாயக்கமன்னர்கள் பல்வேறுவகையான தானங்களை அளித்து அறிய முடிகிறது. கோயிலின் விமானம் மேற்பகுதி சிதைந்தமையால், அதனை அகற்றிவிட்டு புதியதாக சுண்ணச்சாந்தினால் மேல் தளப்பகுதி அமைக்கப்பட்டுள்ளது. இதன் பண்டைய கட்டடக்கலையம்சங்கள் மறைக்கப்படவில்லை.

== அமைப்பு ==
== அமைப்பு ==
இத்திருக்கோயில் கருவறை, அர்த்தமண்டபம், மகாமண்டபம் பகுதிகளைக் கொண்டு திராவிடக் கட்டிடக்கலைபாணியில் விளங்குகிறது. இதில் அடித்தளத்திலிருந்து கொடுங்கை வரையிலும் கருங்கல்லும் அதற்கு மேலுள்ள விமானப்பகுதி செங்கல் சுண்ணாம்பு சாந்து ஆகியவற்றைக் கொண்டு கட்டப்பட்டுள்ளது. கோயிலின் அடித்தளம் உபானம், கண்டரம், ஜகதி, குமுதம் பட்டிகை முதலிய உறுப்புகளைக் கொண்டது. கருவறை, மண்டபம் ஆகிய வற்றின் புறச்சுவர்களில் அரைத் தூண்களும், தேவ கோட்டங்களும் உள்ளன. இந்த தேவ கோட்டங்களில் தற்போது சிற்பங்கள் எவையும் இல்லை. மண்டபத்திலுள்ள தூண்கள் சதுரம், கட்டு எனப்படும் அமைப்புகளைப் பெற்று மேற்பகுதியில் புஷ்ப போதிகைகளைக் கொண்டுள்ளது.

[[File:தச்சாம்பாடி கோயில் சிலைகள்.png|thumb|தச்சாம்பாடி கோயில் சிலைகள்]]

கருவறையில் மகாவீரர் அமர்ந்த கோலத்தில் உள்ளார். தலைக்குப் பின்புறம் அலங்கார வேலைப்பாடுகளையுடைய அரைவட்ட பிரபையும் இதற்கு மேலாக முக்குடையும் உள்ளன. இவரது இருபுறமும் சாமரம் வீசுவோர் சிறிய அளவில் உள்ளனர். இந்த சாமரம் வீசுவோர் அணிந்திருக்கும் மகுடம், குண்டலங்கள், கண்டிகைகள், கேயூரங்கள், கைவளைகள், ஆடை முதலியனவும் அலங்கார வேலைப்பாடுடையனவாய் திகழ்கின்றன. இவை பொ.யு. 16ஆம் நூற்றாண்டைச் சார்ந்தவை.

அர்த்தமண்டபத்தினுள் சிறிய அளவிலான உலோகத் திருவுருவங்கள் பல உள்ளன. இவற்றுள் ரிஷப நாதர், பார்சுவதேவர், சுபார்சுவநாதர், சாந்தி நாதர், நேமிநாதர், மகாவீரர் முதலிய தீர்த்தங்கரர் திருவுருவங்களும்; நவதேவைகள், சதுர்விம்சதி தீர்த்தங்கரர்கள். ஜுவாலமாலினி, பத்மாவதி, தரும தேவி, தரணேந்திரன் முதலியோரைக் குறிக்கும் படிமங்களும் உள்ளன. இவையனைத்தும் பொ.யு. 18-20- ஆம் நூற்றாண்டு வரையுள்ள காலகட்டத்தில் பல்வேறு நபர்களால் அன்பளிப்பாக வழங்கப்பட்டது.

== தேவராஜ மாமுனிவர் ==
== தேவராஜ மாமுனிவர் ==
[[File:தேவராஜ முனிவர் பாதங்கள்.png|thumb|255x255px|தேவராஜ முனிவர் பாதங்கள்]]

தச்சாம்பாடியில் சில நூற்றாண்டுகளுக்கு முன்பு தேவராஜ மாமுனிவர் என்னும் அறநெறியாளர் சமணநெறிகளைப் போதித்து வந்ததார். இவர் சமயப்பணிகளை தச்சாம்பாடியிலும், அதற்கு அருகிலுள்ள சமணத்தலங்களிலும் செய்தார். தச்சாம்பாடியில் இவரது திருவடிகள் வழிபடப்படுகின்றன. ஜினேந்திரஞானத் திருப்புகழ் எனும் நூலை இயற்றினார்.

== உசாத்துணை ==
== உசாத்துணை ==
* தொண்டை நாட்டுச் சமணக் கோயில்கள் (டாக்டர்.ஏ. ஏகாம்பர நாதன்-1991)

{{Finalised}}
{{Finalised}}
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]
[[Category:சமணத் தலங்கள்]]
[[Category:சமணத் தலங்கள்]]

Revision as of 14:43, 3 July 2023

தச்சாம்பாடி மகாவீரர் கோயில் (நன்றி பத்மாராஜ்)

தச்சாம்பாடி மகாவீரர் கோயில் (பொ.யு. 16-ஆம் நூற்றாண்டு) வடதமிழ்நாட்டு (தொண்டைமண்டல) விழுப்புரம் (வட ஆர்க்காடு) மாவட்டம் தச்சாம்பாடியில் அமைந்த சமணக் கோயில். இருபத்தி நான்காவது தீர்த்தங்கரராகிய மகாவீரருக்குத் தனிக்கோயில் உள்ளது.

இடம்

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் வழியாக செஞ்சி, சேத்பட், போளூர் சாலையை அடையலாம். சேத்பட்டிலிருந்து ஒன்பது கிலோமீட்டர் தொலைவில் தச்சாம்பாடி மகாவீரர் கோயில் உள்ளது.

வரலாறு

தச்சாம்பாடி மகாவீரர்

இக்கோயிலின் கலைப்பாணியைக் கொண்டு பொ.யு. 16-ஆம் நூற்றாண்டு என இதன் காலத்தை வரையறை செய்யலாம்.

சாசனங்கள்

சாசனங்கள் எவையும் இல்லை. செவிவழிச்செய்தி வழியாக இத்தலத்தின் வழிபாட்டுச்செலவுகளுக்கு நாயக்கமன்னர்கள் பல்வேறுவகையான தானங்களை அளித்து அறிய முடிகிறது. கோயிலின் விமானம் மேற்பகுதி சிதைந்தமையால், அதனை அகற்றிவிட்டு புதியதாக சுண்ணச்சாந்தினால் மேல் தளப்பகுதி அமைக்கப்பட்டுள்ளது. இதன் பண்டைய கட்டடக்கலையம்சங்கள் மறைக்கப்படவில்லை.

அமைப்பு

இத்திருக்கோயில் கருவறை, அர்த்தமண்டபம், மகாமண்டபம் பகுதிகளைக் கொண்டு திராவிடக் கட்டிடக்கலைபாணியில் விளங்குகிறது. இதில் அடித்தளத்திலிருந்து கொடுங்கை வரையிலும் கருங்கல்லும் அதற்கு மேலுள்ள விமானப்பகுதி செங்கல் சுண்ணாம்பு சாந்து ஆகியவற்றைக் கொண்டு கட்டப்பட்டுள்ளது. கோயிலின் அடித்தளம் உபானம், கண்டரம், ஜகதி, குமுதம் பட்டிகை முதலிய உறுப்புகளைக் கொண்டது. கருவறை, மண்டபம் ஆகிய வற்றின் புறச்சுவர்களில் அரைத் தூண்களும், தேவ கோட்டங்களும் உள்ளன. இந்த தேவ கோட்டங்களில் தற்போது சிற்பங்கள் எவையும் இல்லை. மண்டபத்திலுள்ள தூண்கள் சதுரம், கட்டு எனப்படும் அமைப்புகளைப் பெற்று மேற்பகுதியில் புஷ்ப போதிகைகளைக் கொண்டுள்ளது.

தச்சாம்பாடி கோயில் சிலைகள்

கருவறையில் மகாவீரர் அமர்ந்த கோலத்தில் உள்ளார். தலைக்குப் பின்புறம் அலங்கார வேலைப்பாடுகளையுடைய அரைவட்ட பிரபையும் இதற்கு மேலாக முக்குடையும் உள்ளன. இவரது இருபுறமும் சாமரம் வீசுவோர் சிறிய அளவில் உள்ளனர். இந்த சாமரம் வீசுவோர் அணிந்திருக்கும் மகுடம், குண்டலங்கள், கண்டிகைகள், கேயூரங்கள், கைவளைகள், ஆடை முதலியனவும் அலங்கார வேலைப்பாடுடையனவாய் திகழ்கின்றன. இவை பொ.யு. 16ஆம் நூற்றாண்டைச் சார்ந்தவை. அர்த்தமண்டபத்தினுள் சிறிய அளவிலான உலோகத் திருவுருவங்கள் பல உள்ளன. இவற்றுள் ரிஷப நாதர், பார்சுவதேவர், சுபார்சுவநாதர், சாந்தி நாதர், நேமிநாதர், மகாவீரர் முதலிய தீர்த்தங்கரர் திருவுருவங்களும்; நவதேவைகள், சதுர்விம்சதி தீர்த்தங்கரர்கள். ஜுவாலமாலினி, பத்மாவதி, தரும தேவி, தரணேந்திரன் முதலியோரைக் குறிக்கும் படிமங்களும் உள்ளன. இவையனைத்தும் பொ.யு. 18-20- ஆம் நூற்றாண்டு வரையுள்ள காலகட்டத்தில் பல்வேறு நபர்களால் அன்பளிப்பாக வழங்கப்பட்டது.

தேவராஜ மாமுனிவர்

தேவராஜ முனிவர் பாதங்கள்

தச்சாம்பாடியில் சில நூற்றாண்டுகளுக்கு முன்பு தேவராஜ மாமுனிவர் என்னும் அறநெறியாளர் சமணநெறிகளைப் போதித்து வந்ததார். இவர் சமயப்பணிகளை தச்சாம்பாடியிலும், அதற்கு அருகிலுள்ள சமணத்தலங்களிலும் செய்தார். தச்சாம்பாடியில் இவரது திருவடிகள் வழிபடப்படுகின்றன. ஜினேந்திரஞானத் திருப்புகழ் எனும் நூலை இயற்றினார்.

உசாத்துணை

  • தொண்டை நாட்டுச் சமணக் கோயில்கள் (டாக்டர்.ஏ. ஏகாம்பர நாதன்-1991)

✅Finalised Page