under review

சூரியவம்சம்: Difference between revisions

From Tamil Wiki
(Moved categories to bottom of article)
(Corrected text format issues)
Line 1: Line 1:
[[File:சூரியவம்சம்.png|thumb|சூரியவம்சம்]]
[[File:சூரியவம்சம்.png|thumb|சூரியவம்சம்]]
சூரியவம்சம் ( 2019) சிவசங்கரி எழுதிய தன் வரலாறு. இரண்டு பகுதிகள் கொண்ட இந்நூல் சிவசங்கரியின் வாழ்க்கை, அவருடைய இலக்கிய அனுபவங்கள் ஆகியவற்றை விரிவாக விவரிக்கிறது.
சூரியவம்சம் ( 2019) சிவசங்கரி எழுதிய தன் வரலாறு. இரண்டு பகுதிகள் கொண்ட இந்நூல் சிவசங்கரியின் வாழ்க்கை, அவருடைய இலக்கிய அனுபவங்கள் ஆகியவற்றை விரிவாக விவரிக்கிறது.
பார்க்க :[[சூரியவம்சம் (நாவல்)]]
பார்க்க :[[சூரியவம்சம் (நாவல்)]]
== எழுத்து, வெளியீடு ==
== எழுத்து, வெளியீடு ==
Line 13: Line 12:
* [https://www.dinakaran.com/ladies_Detail.asp?Nid=5226 சிவசங்கரி தன் வரலாறு பற்றிய பேட்டி. தினகரன்]
* [https://www.dinakaran.com/ladies_Detail.asp?Nid=5226 சிவசங்கரி தன் வரலாறு பற்றிய பேட்டி. தினகரன்]
* [https://puthu.thinnai.com/%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/ சூரியவம்சம் சிவசங்கரி நினைவலைகள். திண்ணை]

{{Finalised}}
{{Finalised}}
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]

Revision as of 14:42, 3 July 2023

சூரியவம்சம்

சூரியவம்சம் ( 2019) சிவசங்கரி எழுதிய தன் வரலாறு. இரண்டு பகுதிகள் கொண்ட இந்நூல் சிவசங்கரியின் வாழ்க்கை, அவருடைய இலக்கிய அனுபவங்கள் ஆகியவற்றை விரிவாக விவரிக்கிறது. பார்க்க :சூரியவம்சம் (நாவல்)

எழுத்து, வெளியீடு

சிவசங்கரி எழுதிய சூரிய வம்சம் இரண்டு பகுதிகள் கொண்டது. சிவசங்கரி சொல்ல ஜி.மீனாட்சியால் எழுத்துவடிவமாக்கப்பட்டது. இந்நூலை வானதி பதிப்பகம் 2019-ல் வெளியிட்டது.

பெயர்க்காரணம்

சிவசங்கரி சூரியவம்சம் நூலின் பெயர்க்காரணத்தை இவ்வாறு சொல்கிறார். தன் தந்தை பெயர் சூரியநாராயணன். ஆகவே தன்னை சூரிய புத்திரி என உருவகித்துக்கொண்டு இப்பெயரைச் சூட்டிக்கொண்டார்.

உள்ளடக்கம்

சிவசங்கரி தன்னை அன்னையாக நினைத்து நீண்டநாள் உடனிருந்த லலிதாவின் கோரிக்கைக்கு ஏற்ப, அவர் மறைவுக்குப் பின் இந்நூலை எழுதியதாகச் சொல்கிறார். இதில் நேரடியாக தன் வரலாற்றைச் சொல்லவில்லை. பலரை காயப்படுத்தவேண்டியிருக்கும் என்பதனால் நல்ல நினைவுகளை மட்டுமே கூறியதாக குறிப்பிடுகிறார். சிவசங்கரியின் வாழ்க்கை அவருடைய குழந்தைப் பருவம், மணமானது, வங்கிப்பணி, தொழிற்சாலைப்பணிக்காக விழுப்புரம் அருகே வழுதரெட்டிக்குச் சென்றது, எழுத ஆரம்பித்தது என நீள்கிறது. அவருடைய இலக்கிய நண்பர்கள், அவர் சென்ற பயணங்கள், அயோவா பல்கலை அனுபவங்கள் என நீண்டு அவருடைய நிகழ்கால வாழ்க்கையில் முடிகிறது.

உசாத்துணை

✅Finalised Page