under review

சந்திரசேகரம் ராசதுரை: Difference between revisions

From Tamil Wiki
No edit summary
(Corrected text format issues)
Line 11: Line 11:
* ந. சிவசுப்பிரமணியம்  
* ந. சிவசுப்பிரமணியம்  
* நா. கணபதிப்பிள்ளை (சின்னமணி)
* நா. கணபதிப்பிள்ளை (சின்னமணி)
== பாராட்டுக்கள் ==
== பாராட்டுக்கள் ==
* அரிச்சந்திரா நாடகத்திற்காக பாராட்டி பொன்னாடை போர்த்தி பொற்கிழி வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
* அரிச்சந்திரா நாடகத்திற்காக பாராட்டி பொன்னாடை போர்த்தி பொற்கிழி வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

Revision as of 14:40, 3 July 2023

சந்திரசேகரம் ராசதுரை (நன்றி: செல்லையா மெற்றாஸ்மயில்)

சந்திரசேகரம் ராசதுரை (பிறப்பு: ஏப்ரல் 12, 1916) ஈழத்து நாட்டுக்கூத்துக் கலைஞர். தவில் வித்துவான். நாடகங்கள் பல நடித்ததுடன் நெறியாள்கை செய்து பல நாடகங்களை அரங்கேற்றினார். தனக்கென சீடர் பரம்பரையை உருவாக்கிய அண்ணாவியார்.

வாழ்க்கைக் குறிப்பு

இலங்கை பருத்தித்துறையில் மாதனை கிராமத்தில் சந்திரசேகரத்திற்கு மகனாக ஏப்ரல் 12, 1916-ல் பிறந்தார். தந்தை நாடகக் கலைஞர். சகோதரர் செல்லத்துரை அண்ணாவியார், 1962-ல் மாதனை கலாமன்றம் அமைத்தவர்களில் முக்கியமானவர். ராசதுரை பள்ளிக்கல்வியை மாதனை மெ.மி.த.க பாடசாலையில் கற்றார். சங்கீதம், நாடகத்துறையில் ஈடுபாடு கொண்டவராக இருந்தார். 1952-களில் மதுரை சோமசுந்தரத்திடம் சங்கீதம் கற்றார்.

கலை வாழ்க்கை

1932-லிருந்து நாடகங்கள் நடித்தார். கர்நாடக சங்கீதத்தில் தவில் வித்துவானாக சந்திரசேகரம் ராசதுரை இருந்தார். ஸ்ரீவல்லிபுரம் ஆழ்வார் ஆலயத்தில் இசைக்கச்சேரி நடத்தினார். இலங்கை ஒலிபரப்புக்கூட்டு ஸ்தாபனத்தில் 1946-ல் 45 நிமிடங்கள் இசைக்கச்சேரி நிகழ்த்தினார். முதன்முதலாக "குலேபகாவலி" என்னும் நாடகத்தில் பதினேழு வயதில் சகோதரனுடன் இணைந்து வவுனியா முருகன் ஆலயத்தில் நடித்தார். இருநூற்றைம்பது தடவைகள் மேடையேற்றப்பட்ட "மயானகாண்டம்" நாடகம் ராசதுரைக்கு புகழைத் தேடித்தந்தது. "சம்பூரண அரிச்சந்திரா" நாடகம் நூற்றுக்கு மேற்பட்டதடவை மேடையேற்றப்பட்டது. 1932-1986-ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலப்பகுதிகளில் நாடகங்களில் நடித்து புகழ்பெற்றார். மாதனை, தும்பளை, அல்வாய், நீர்வேலி, அனலைதீவு, புங்குடுதீவு, வண்ணார்பண்ணை தாவடி, சுன்னாகம், யாழ்ப்பாணம் வவுனியா, கொழும்பு போன்ற இடங்களில் ராசதுரையின் நாடகங்கள் மேடையேற்றப்பட்டது. மயிலிட்டி காசநோய் வைத்தியசாலை நிதிக்காக நாடகம் நடிதார். நீர்வேலி காமாட்சியம்பாள் சனசமூக மூலம் கட்டிடம் கட்டுவதற்கு அரிச்சந்திரா நாடகம் நடித்து கிடைத்த நிதியை வழங்கினார்.

சீடர்கள்
  • து. மகாலிங்கம்
  • நா. நவரத் தினம்
  • சிவபாதசுந்தரம்
  • ந. சிவசுப்பிரமணியம்
  • நா. கணபதிப்பிள்ளை (சின்னமணி)

பாராட்டுக்கள்

  • அரிச்சந்திரா நாடகத்திற்காக பாராட்டி பொன்னாடை போர்த்தி பொற்கிழி வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
  • யாழ்ப்பாணம் வண்ணார்பண்ணையில் நடிப்பைப் பாராட்டி பொன்னாடை போர்த்தி கெளரவிக்கப்பட்டார்.
  • தாவடியில் மயானகாண்டம் நாடகத்திற்கு முதலிடம் கிடைத்தது. ராசதுரை பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப் பட்டார்.
  • சுன்னாகம் கலைக்கழகத்தின் ஆதரவில் நடைபெற்ற சொர்ணலிங்கம் நாடககத்தைப் பாராட்டி கலையரசு "இந்தியாவின் தொனியை இங்குதான் கேட்கின்றேன்" எனக் குறிப்பிட்டார்.

நடித்த நாடகங்களும் பாத்திரங்களும்

  • குலேபகாவலி ஜெயினன் - முற்பாருஷா
  • சம்பூரண அரிச்சந்திரா - அரிச்சந்திரன்
  • சத்தியவான் சாவித்திரி - சத்தியவான்
  • ஜெயசந்திரா நாரதர் - பவளகாந்தன்
  • ஒளவையார் - ஒளவையார்
  • ஸ்ரீவள்ளி - நாரதர்
  • பவளக்கொடி - கிருஸ்ணர்
  • காத்தவராயன் - சிவன்
  • பட்டினத்தார் - பட்டினத்தார்
  • பக்தநந்தனார் - நந்தனார்
  • அல்லி அர்ச்சுனா - சகாதேவன்
  • பாஞ்சாலி சபதம் - துச்சாதனன்
  • தர்மபுத்திரன் - தர்மன்
  • கோவலன் கண்ணகி - கோவலன்
  • திருநீலகண்டநாயனார் - திருநீலகண்டர்
  • நல்லதங்காள் - பின்னணிப் பாடல் பாடியவர்

உசாத்துணை


✅Finalised Page