கோடீஸ்வர ஐயர்: Difference between revisions
(Inserted READ ENGLISH template link to English page) |
(Corrected text format issues) Tag: Reverted |
||
Line 6: | Line 6: | ||
== இசை வாழ்க்கை == | == இசை வாழ்க்கை == | ||
கோடீசுவர ஐயர் 200-க்கு மேற்பட்ட கீர்த்தனங்களைப் பாடினார். இளமையில் மதுரை சுந்தரேசர் மீனாட்சியம்மை மீது வெண்பா, பதிகம், மதுரைச் சித்திவிதாயகர் பதிகம், செண்பகமாலை, பதிற்றுப்பத்தந்தாதி, கயற்கண்ணி மாலை பாடினார். | கோடீசுவர ஐயர் 200-க்கு மேற்பட்ட கீர்த்தனங்களைப் பாடினார். இளமையில் மதுரை சுந்தரேசர் மீனாட்சியம்மை மீது வெண்பா, பதிகம், மதுரைச் சித்திவிதாயகர் பதிகம், செண்பகமாலை, பதிற்றுப்பத்தந்தாதி, கயற்கண்ணி மாலை பாடினார். | ||
72 மேளகர்த்தா ராகங்களில் 72-க்கும் மேற்பட்ட தனித்தனிக் கீர்த்தனங்கள் பாடினார். இந்த மேளகர்த்தா ராகங்களில் ஆரோஹண, அவரோஹண, சம்பூர்ணப் பிரயோகங்களைப் பயன்படுத்திக் கீர்த்தனம் செய்தார். இந்த ராகங்களுக்கு இவருக்கு முன்னால் பின்பற்றுவதற்கான லட்சண கீதங்கள் இல்லை. சுரவடிவங்கள் மட்டுமே செய்யப்பட்டிருந்தன. அவற்றை இணைத்துப இசைவடிவம் அமைத்துத் தனி ராக வடிவம் கொடுத்தார். ஜீவசுரங்களின் நிர்ணயம், சஞ்சாரம், சக்திப் பிரயோகங்கள் அடிப்படையில் புதுக்கீர்த்தனங்கள் செய்தார். ஓட்டமுடைய சாகித்தியம், பக்திபூர்வமாக குறித்த ராகத்தின் சாயல் தெரிவிக்கும்படி கந்தகானாமுதம் என்ற நூலை எழுதினார். 'கவிகுஞ்சரதாசன்' என்ற முத்திரையைத் தம் பாடல்களில் இவர் வைத்திருந்தார். தோடி ராகம் பாடுவதில் வல்லவர். இவருடைய கீர்த்தனங்களில் ௮ச்சாகாத சிலவும் உள்ளன. | 72 மேளகர்த்தா ராகங்களில் 72-க்கும் மேற்பட்ட தனித்தனிக் கீர்த்தனங்கள் பாடினார். இந்த மேளகர்த்தா ராகங்களில் ஆரோஹண, அவரோஹண, சம்பூர்ணப் பிரயோகங்களைப் பயன்படுத்திக் கீர்த்தனம் செய்தார். இந்த ராகங்களுக்கு இவருக்கு முன்னால் பின்பற்றுவதற்கான லட்சண கீதங்கள் இல்லை. சுரவடிவங்கள் மட்டுமே செய்யப்பட்டிருந்தன. அவற்றை இணைத்துப இசைவடிவம் அமைத்துத் தனி ராக வடிவம் கொடுத்தார். ஜீவசுரங்களின் நிர்ணயம், சஞ்சாரம், சக்திப் பிரயோகங்கள் அடிப்படையில் புதுக்கீர்த்தனங்கள் செய்தார். ஓட்டமுடைய சாகித்தியம், பக்திபூர்வமாக குறித்த ராகத்தின் சாயல் தெரிவிக்கும்படி கந்தகானாமுதம் என்ற நூலை எழுதினார். 'கவிகுஞ்சரதாசன்' என்ற முத்திரையைத் தம் பாடல்களில் இவர் வைத்திருந்தார். தோடி ராகம் பாடுவதில் வல்லவர். இவருடைய கீர்த்தனங்களில் ௮ச்சாகாத சிலவும் உள்ளன. | ||
== மறைவு == | == மறைவு == |
Revision as of 14:40, 3 July 2023
To read the article in English: Koteeswara Iyer.
கோடீஸ்வர ஐயர் (1869 - அக்டோபர் 21, 1938) இசைப்புலவர். 200 கீர்த்தனைகளும், 72 மேளகர்த்தா ராகங்களும் இவர் இசையுலகிற்கு வழங்கினார்.
வாழ்க்கைக் குறிப்பு
19-ஆம் நூற்றாண்டைச் சார்ந்த கவி குஞ்சர பாரதியின் மகள் வயிற்றுப் பேரர். இவரின் முன்னோர் திருநெல்வேலியில் இருந்து இரண்யகர்ப்ப திருமலை சேதுபதி மன்னரால் சேதுநாட்டில் குடியமர்த்தப்பட்டனர். இராமநாதபுரம் மாவட்டம், நந்தனூர் கிராமத்தில் நாகநாத ஐயருக்கும் பார்வதியம்மாளுக்கும் மகனாக 1869-ல் பிறந்தார். இவரை, சிவகங்கை, இராமநாதபுர சமஸ்தானங்கள் அரசவைக் கலைஞராக பணியில் அமர்த்தின. பி.ஏ பட்டம் பெற்று உயர்நீதி மன்றத்தில் மொழிபெயர்ப்பாளராக பணி செய்தார். இராமநாதபுரம் ஸ்ரீனிவாசய்யங்காரிடமும், பட்டணம் சுப்பிரமணிய ஐயரிடமும் இசை பயின்றார்.
இசை வாழ்க்கை
கோடீசுவர ஐயர் 200-க்கு மேற்பட்ட கீர்த்தனங்களைப் பாடினார். இளமையில் மதுரை சுந்தரேசர் மீனாட்சியம்மை மீது வெண்பா, பதிகம், மதுரைச் சித்திவிதாயகர் பதிகம், செண்பகமாலை, பதிற்றுப்பத்தந்தாதி, கயற்கண்ணி மாலை பாடினார். 72 மேளகர்த்தா ராகங்களில் 72-க்கும் மேற்பட்ட தனித்தனிக் கீர்த்தனங்கள் பாடினார். இந்த மேளகர்த்தா ராகங்களில் ஆரோஹண, அவரோஹண, சம்பூர்ணப் பிரயோகங்களைப் பயன்படுத்திக் கீர்த்தனம் செய்தார். இந்த ராகங்களுக்கு இவருக்கு முன்னால் பின்பற்றுவதற்கான லட்சண கீதங்கள் இல்லை. சுரவடிவங்கள் மட்டுமே செய்யப்பட்டிருந்தன. அவற்றை இணைத்துப இசைவடிவம் அமைத்துத் தனி ராக வடிவம் கொடுத்தார். ஜீவசுரங்களின் நிர்ணயம், சஞ்சாரம், சக்திப் பிரயோகங்கள் அடிப்படையில் புதுக்கீர்த்தனங்கள் செய்தார். ஓட்டமுடைய சாகித்தியம், பக்திபூர்வமாக குறித்த ராகத்தின் சாயல் தெரிவிக்கும்படி கந்தகானாமுதம் என்ற நூலை எழுதினார். 'கவிகுஞ்சரதாசன்' என்ற முத்திரையைத் தம் பாடல்களில் இவர் வைத்திருந்தார். தோடி ராகம் பாடுவதில் வல்லவர். இவருடைய கீர்த்தனங்களில் ௮ச்சாகாத சிலவும் உள்ளன.
மறைவு
கோடீஸ்வர ஐயர் அக்டோபர் 21, 1938-ல் காலமானார்.
நூல்கள்
- கந்தகானாமுதம்
- மதுரை பொற்றாமரை சித்திவிநாயகர் பதிகம்
- மதுரை சண்முகமாலை
- சுந்தரேசுவரர் பதிகம்
- கயற்கண்ணி பதிற்றுப்பத்தந்தாதி
- இந்திய மான்மியம்
பதிப்பித்தவை
- கந்தபுராணக் கீர்த்தனை
- அழகர் குறவஞ்சி
- பேரின்பக் கீர்த்தனை
உசாத்துணை
- தமிழ் இசை இலக்கிய வரலாறு (தொகுதி - 1) - அசிரியர் மு. அருணாசலம்: பதிப்பாசிரியர் உல. பாலசுப்பிரமணியன் - அக்டோபர் 2009.
- http://www.tamilisaisangam.in/isai_kalaivanargal.php
- தினமணி அக்டோபர் 21,2012 இசைத்தமிழ் வளர்த்த இனியவர்
- தமிழ் இணையக் கல்விக்கழகம்/தமிழர் வளர்த்த அழகுக் கலைகள்
✅Finalised Page