முகுந்தராஜ் சுப்ரமணியன்: Difference between revisions

From Tamil Wiki
Ramya (talk | contribs)
Ramya (talk | contribs)
Line 10: Line 10:
விண்டோஸ் கணினிகளில் தமிழில் தட்டச்சிட உதவும் ஒரு கருவி. இதனை கொண்டு அனைத்து விண்டோஸ் செயலிகளிலும் நேரடியாக தமிழ் தட்டச்ச முடியும்.

* [https://thamizha.com/project/ekalappai எகலப்பை வலைத்தளம்]

===== தமிழ் விசை பயர்பாக்ஸ் நீட்சி =====
தமிழ் விசை பயர்பாக்ஸ் நீட்சி:
 
பயர்பாக்சு இணைய உலாவிக்குள் எந்த வலைப்பக்கத்தில் உலாவினாலும் (உதாரணமாக ஜி-மெயில், யாகூமெயில்) அதற்குள் தமிழில் தட்டச்சிட உதவும் பயர்பாக்சு நீட்சி இது. இதனை ஆசிரியர் உருவாக்கியுள்ளார். பிறகு வாய்ஸ் ஆன் விங்க்சு அவர்களால் மேம்படுத்தப்பட்டது. தற்போது இந்த நீட்சியினை கோபி அவர்கள் மேம்படுத்தி பராமரித்து வருகிறார்.

இதன் வலைத்தளம்: https://addons.mozilla.org/en-US/firefox/addon/tamilvisai-tamilkey/
* தமிழ் விசை பயர்பாக்ஸ் நீட்சி வலைத்தளம்  
 
===== தமிழா! சொல்திருத்தி பயர்பாக்ஸ் நீட்சி =====
தமிழா! சொல்திருத்தி பயர்பாக்ஸ் நீட்சி;
பயர்பாக்ஸ் உலாவியில் பயன்படுத்த உதவும் தமிழ் சொல்திருத்தி. இதன் உருவாக்கத்தில் இதர பல தமிழார்வலர்களுடன் சேர்ந்து பங்களித்து வருகிறார்.

இதன் வலைத்தளம்: https://addons.mozilla.org/en-US/firefox/addon/thamizha-solthiruthi/
சமூகத் திட்டங்களில் பங்களிப்பு:
தற்போது பிரிஸ்பேனில் தாய்த் தமிழ்ப் பள்ளி குயீன்ஸ்லாந்து என்ற பெயரில் ஒரு வார இறுதி தமிழ்ப்பள்ளியை ஆரம்பித்து இங்குள்ள தமிழ் நண்பர்கள் உதவியுடன் நடத்தி வருகிறார்.[https://www.facebook.com/thaai.tamil.school.qld http://www.facebook.com/thaai.tamil.school.qld]
வலைப்பதிவு:

== விருது ==
== விருது ==

Revision as of 13:02, 22 June 2023

முகுந்தராஜ் சுப்ரமணியன் (பிறப்பு: 1972) கணினித்தமிழுக்கு பங்களிப்பு செய்தார்.

வாழ்க்கைக் குறிப்பு

முகுந்தராஜ் சுப்ரமணியன் நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலத்தில் சுப்பிரமணி, அமராவதி இணையருக்கு 1972-ல் பிறந்தார். சேந்தமங்கலத்தில் உள்ள சைனிக்ஸ் பள்ளியில் படித்தார். சென்னை விவேகானந்தர் கல்லூரியில் பட்டப்படிப்பு பயின்றார். 1997இல் அண்ணாமலை பல்கலைக் கழகத்திற்கு உட்பட்ட எம்.ஐ.டி கல்லூரியில் இளநிலை பொறியியல் பட்டம் பெற்றார். மலேசியாவில் பணியாற்றினார். பெங்களூரில் தொழில் நிறுவனம் ஒன்றை நடத்தினார். ஆஸ்திரேலியா நாட்டின் பிரிஸ்பேனில் தனியார் நிறுவனத்தில் மென்பொருள் பொறியாளராகப் பணிபுரிந்தார்.

தமிழ் கணிணிக்கு செய்த பங்களிப்புகள்

தமிழா! கணிமைத்திட்டம்

முகுந்தராஜ் சுப்ரமணியன் தமிழா! கணிமைத்திட்டத்தை மலேசியாவிலுள்ள இளஞ்செழியனுடன் இணை ஆரம்பித்தார். தமிழர்களுக்குப் பயன்படும் கட்டற்ற மென்பொருட்களை தயாரிக்கும் நோக்கத்துடன் தமிழா திட்டம் ஆரம்பிக்கபட்டது.

எகலப்பை

விண்டோஸ் கணினிகளில் தமிழில் தட்டச்சிட உதவும் ஒரு கருவி. இதனை கொண்டு அனைத்து விண்டோஸ் செயலிகளிலும் நேரடியாக தமிழ் தட்டச்ச முடியும்.

தமிழ் விசை பயர்பாக்ஸ் நீட்சி

பயர்பாக்சு இணைய உலாவிக்குள் எந்த வலைப்பக்கத்தில் உலாவினாலும் (உதாரணமாக ஜி-மெயில், யாகூமெயில்) அதற்குள் தமிழில் தட்டச்சிட உதவும் பயர்பாக்சு நீட்சி இது. இதனை ஆசிரியர் உருவாக்கியுள்ளார். பிறகு வாய்ஸ் ஆன் விங்க்சு அவர்களால் மேம்படுத்தப்பட்டது. தற்போது இந்த நீட்சியினை கோபி அவர்கள் மேம்படுத்தி பராமரித்து வருகிறார்.

  • தமிழ் விசை பயர்பாக்ஸ் நீட்சி வலைத்தளம்
தமிழா! சொல்திருத்தி பயர்பாக்ஸ் நீட்சி

பயர்பாக்ஸ் உலாவியில் பயன்படுத்த உதவும் தமிழ் சொல்திருத்தி. இதன் உருவாக்கத்தில் இதர பல தமிழார்வலர்களுடன் சேர்ந்து பங்களித்து வருகிறார்.

விருது

  • தமிழ் இலக்கியத் தோட்டம், காலச்சுவடு அறக்கட்டளை இணைந்து வழங்கும் தமிழ்க் கணிமைக்கான சுந்தர ராமசாமி விருது (2012)

உசாத்துணை

இணைப்புகள்

🔏Being Created

Please do not write any content below this line. This section is only for editing templates & categories.