under review

தா. பொன்னம்பலப் பிள்ளை: Difference between revisions

From Tamil Wiki
(Category:எழுத்தாளர்கள் சேர்க்கப்பட்டது)
No edit summary
Line 16: Line 16:
== உசாத்துணை ==
== உசாத்துணை ==
* [https://noolaham.org/wiki/index.php/%E0%AE%88%E0%AE%B4%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%81%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D ஈழநாட்டின் தமிழ்ச் சுடர்மணிகள், தென் புலோலியூர் மு. கணபதிப் பிள்ளை, 1967,  பாரி நிலையம் வெளியீடு]
* [https://noolaham.org/wiki/index.php/%E0%AE%88%E0%AE%B4%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%81%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D ஈழநாட்டின் தமிழ்ச் சுடர்மணிகள், தென் புலோலியூர் மு. கணபதிப் பிள்ளை, 1967,  பாரி நிலையம் வெளியீடு]
{{First review completed}}
{{Finalised}}
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]
[[Category:ஈழத்து ஆளுமைகள்]]
[[Category:ஈழத்து ஆளுமைகள்]]
[[Category:எழுத்தாளர்கள்]]
[[Category:எழுத்தாளர்கள்]]

Revision as of 14:17, 29 May 2023

தா. பொன்னம்பலப் பிள்ளை (பத்தொன்பதாம் நூற்றாண்டு) ஈழத்து தமிழ் எழுத்தாளர். சைவ சமயம் சார்ந்த கட்டுரைகள் எழுதினார்.

வாழ்க்கைக் குறிப்பு

தா. பொன்னம்பலப் பிள்ளை இலங்கை யாழ்ப்பாணத்தில் பிறந்தார். இந்தியாவின் திருவிதாங்கூர் எக்சைஸ் கமிஷனர் உத்தியோகத்தில் பணியாற்றினார். நீண்ட காலமாக நெல்லை மாவட்டத்திலுள்ள சிவசைலத்தில் வாழ்ந்தார். திருவனந்தபுரத்தில் பிரதம நீதிபதியாக இருந்த தா. செல்லப்பாபிள்ளையின் சகோதரர். மனோன்மணிய நாடகாசிரியர் சுந்தரம் பிள்ளையின் நண்பர்.

இலக்கிய வாழ்க்கை

தா. பொன்னம்பலப் பிள்ளை மலபார் குவாட்டர்லி (Malabar Quarterly), தமிழியன் ஆண்டிகுவரி (Tamilian Antiquary) போன்ற இதழ்களில் பல ஆராய்ச்சிக் கட்டுரைகள் எழுதினார். வரலாற்று ஆராய்ச்சியில் ஈடுபாடு கொண்டிருந்தார். தா. பொன்னம்பலப் பிள்ளை இயற்றிய ’வஞ்சிமா நகர்’ நூல் ஆராய்ச்சிக் குறிப்புகளைக் கொண்டது. 1912-ல் காஞ்சிபுரத்தில் நடைபெற்ற தென்னிந்திய சைவ சித்தாந்த சமரச ஆண்டு விழாவுக்கு தா. பொன்னம்பலப் பிள்ளை தலைமை தாங்கினர்.

தா. பொன்னம்பலப் பிள்ளை எழுதிய கட்டுரைகளில், ’மாணிக்க வாசகரும் பூர்விக மலையாளக் கிறிஸ்தவர்களும்’, ‘கொடுங்கோளூர்க் கோயிலின் தோற்ற வரலாறு’, ’நாஞ்சில்நாடு செங்கோடு ஆகியவற்றின் பண்டைப் பெருமை’, ’இராமாயணத்தின் தருமம்’, ’தென்னிந்திய பிரதிநிதித்துவச் சபைகள்’ ஆகியன குறிப்பிடப்படத்தக்கவை. 1911இல், பாளையங்கோட்டை சைவ சமயாபிவிருத்திச்சபை மலரிலும் இவர் ’திருவிடமும் சைவமும்’ என்னும் தலையங்கத்துடன் தமிழ்க் கட்டுரை எழுதினார்.

நூல் பட்டியல்

கட்டுரை
  • மாணிக்க வாசகரும் பூர்விக மலையாளக் கிறித்தவர்களும்
  • கொடுங்கோளூர்க் கோயிலின் தோற்ற வரலாறு
  • நாஞ்சில்நாடு செங்கோடு ஆகியவற்றின் பண்டைப் பெருமை
  • இராமா யணத்தின் தருமம்
  • தென்னிந்திய பிரதிநிதித்துவச் சபைகள்
  • திருவிடமும் சைவமும்

உசாத்துணை


✅Finalised Page