தமிழ்த்தாய் வாழ்த்து: Difference between revisions

From Tamil Wiki
No edit summary
Line 7: Line 7:

மனோன்மணீயம் நாடகத்தின் தொடக்கத்தில் பாயிரமாக முதலில் இறைவணக்கமாக சிவபெருமானை வாழ்த்தும் 'வேதசிகையும் விரிகலையும்...' என்னும் பாடல் அமைந்துள்ளது. இரண்டாவதாக தமிழ்த்தெய்வ வணக்கம் என்னும் பாடல் அமைந்துள்ளது.

== பாடல் ==

===== மூலம் =====
===== மூலம் =====
Line 44: Line 46:
பல உயிர்களையும் பல உலகங்களையும் படைத்து காத்து உடைத்தாலும் எல்லையற்ற பரம்பொருள் முன்பே இருந்ததுபோலவே இருப்பதுபோல கன்னடமும் தெலுங்கும் மலையாளமும் துளுவும் உன் வயிற்றில் பிறந்து பலவாக வளர்ந்தாலும் ஆரியம் (சம்ஸ்கிருதம்) போல வழக்கொழிந்து சிதையாத உன் சீர் இளமைச் சிறப்பை வியந்து செயல் மறந்து  வாழ்த்துகிறோம்.   

===== அரசேற்பு பெற்ற வடிவம் =====
 
====== அரசேற்பு பெற்ற வடிவம் ======
''நீராரும் கடலுடுத்த நில மடந்தைக்கு  எழிலொழுகும்''
''நீராரும் கடலுடுத்த நில மடந்தைக்கு  எழிலொழுகும்''

Line 66: Line 66:
நீராலான கடலை உடுத்த பூமிப்பெண்ணின் அழகு திகழும் சீரான முகம் என திகழும் பாரத கண்டத்தில் (இந்திய துணைக்கண்டத்தில்) தக்காணம் பொருத்தமான சிறிய நெற்றியாகவும், அந்த நெற்றியில் அணிந்த அழகான பொட்டு போல திராவிட நாடும் திகழ்கின்றன. அந்த பொட்டின் வாசனைபோல அனைத்து உலகமும் இன்பம் அடையும்படியாக எல்லா திசையிலும் புகழ் மணக்க திகழும் தமிழன்னையே. உன் சீர் மிகுந்த இளமையின் சிறப்பை வியந்து மெய்மறந்து வாழ்த்துகிறோம்.

== தமிழ்நாட்டுப்பாடல் ==
== தமிழ்நாட்டு மாநிலப்பாடல் ==
தமிழ்நாட்டுக்கென ஒரு பாடல் தேவை என்னும் எண்ணம் [[உமாமகேஸ்வரனார்]] [[ந.மு. வேங்கடசாமி நாட்டார்]] ஆகியோருக்கு உருவாகியது. 1911ல் உருவான கரந்தை தமிழ்ச்சங்கத்தில் அதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டு நீராரும் கடலுடுத்த என்னும் பாடல் தேர்வு செய்யப்பட்டு அச்செய்தி 1913-ஆம் ஆண்டு கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் மூன்றாவது ஆண்டறிக்கையில் இடம்பெற்றது. கரந்தை தமிழ்ச்சங்கத்துடன் தொடர்புள்ள நிகழ்வுகளில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டுவந்தது. தமிழக அரசு இப்பாடலை அரசுப்பாடலாக அறிவிக்கவேண்டும் என்னும் கோரிக்கையை தமிழறிஞர்கள் முன்வைத்தனர்.

Revision as of 20:52, 6 April 2023

1970 அரசாணை
அரசாணை 2021

தமிழ்த்தாய் வாழ்த்து ( 1891) தமிழக அரசால் தமிழ்நாட்டின் அரசுப்பாடலாக அறிவிக்கப்பட்டுள்ள வாழ்த்துப்பாடல். தமிழ்த்தாயின் பெருமையைச் சொல்லி வாழ்த்துரைக்கும் இப்பாடல் மனோன்மணியம் பெ.சுந்தரம் பிள்ளையால் இயற்றப்பட்டது. மனோன்மணீயம் என்னும் நாடகத்தில் அமைந்துள்ளது

எழுத்து, வெளியீடு

பெ.சுந்தரம் பிள்ளை 1891ல் மனோன்மணீயம் என்னும் நாடகத்தை எழுதி வெளியிட்டார். அதிலுள்ள பாயிரத்தில் அமைந்த 'நீராடும் கடலுடுத்த' எனத்தொடங்கும் பாடல் பின்னாளில் தமிழக அரசின் பாடலாக அறிவிக்கப்பட்டது. இப்பாடல் தமிழ்த்தாய் வாழ்த்து எனப்படுகிறது.

மனோன்மணீயம் நாடகத்தின் தொடக்கத்தில் பாயிரமாக முதலில் இறைவணக்கமாக சிவபெருமானை வாழ்த்தும் 'வேதசிகையும் விரிகலையும்...' என்னும் பாடல் அமைந்துள்ளது. இரண்டாவதாக தமிழ்த்தெய்வ வணக்கம் என்னும் பாடல் அமைந்துள்ளது.

பாடல்

மூலம்
தமிழ்த் தெய்வ வணக்கம்

(பஃறாழிசைக் கொச்சகக்கலிப்பா. இவை யிரண்டும் ஆறடித்தரவு)

நீராருங் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகுஞ்

சீராரும் வதனமெனத் திகழ்பரத கண்டமிதில் த

க்கசிறு பிறைநுதலுந் தரித்தநறுந் திலகமுமே

தெக்கணமு மதிற்சிறந்த திராவிடநற் றிருநாடும்

அத்திலக வாசனைபோ லனைத்துலகு மின்பமுற

எத்திசையும் புகழ்மணக்க விருந்தபெருந் தமிழணங்கே

பல்லுயிரும் பலவுலகும் படைத்தளித்துத் துடைக்கினுமோர்

எல்லையறு பரம்பொருள்முன் னிருந்தபடி யிருப்பதுபோல்

கன்னடமும் களிதெலுங்குங் கவின்மலையாளமுந்துளுவும்

உன்னுதரத் துதித்தெழுந்தே யொன்றுபல வாயிடினும்

ஆரியம்போ லுலகவழக் கழிந்தொழிந்துசிதையாவுன்

சீரிளமைத் திறம்வியந்து செயல்மறந்து வாழ்த்துதுமே.

பொருள்

நீராலான கடலை உடுத்த பூமிப்பெண்ணின் அழகு திகழும் சீரான முகம் என திகழும் பாரத கண்டத்தில் (இந்திய துணைக்கண்டத்தில்) தக்காணம் பொருத்தமான சிறிய நெற்றியாகவும், அந்த நெற்றியில் அணிந்த அழகான பொட்டு போல திராவிட நாடும் திகழ்கின்றன. அந்த பொட்டின் வாசனைபோல அனைத்து உலகமும் இன்பம் அடையும்படியாக எல்லா திசையிலும் புகழ் மணக்க திகழும் தமிழன்னையே.

பல உயிர்களையும் பல உலகங்களையும் படைத்து காத்து உடைத்தாலும் எல்லையற்ற பரம்பொருள் முன்பே இருந்ததுபோலவே இருப்பதுபோல கன்னடமும் தெலுங்கும் மலையாளமும் துளுவும் உன் வயிற்றில் பிறந்து பலவாக வளர்ந்தாலும் ஆரியம் (சம்ஸ்கிருதம்) போல வழக்கொழிந்து சிதையாத உன் சீர் இளமைச் சிறப்பை வியந்து செயல் மறந்து வாழ்த்துகிறோம்.

அரசேற்பு பெற்ற வடிவம்

நீராரும் கடலுடுத்த நில மடந்தைக்கு எழிலொழுகும்

சீராரும் வதனமெனத் திகழ் பரதக் கண்டமதில்

தெக்கணமும் அதில் சிறந்த திராவிட நல் திருநாடும்

தக்க சிறு பிறைநுதலும் தரித்த நறும் திலகமுமே

அத்திலக வாசனை போல் அனைத்துலகும் இன்பமுற

எத்திசையும் புகழ் மணக்க இருந்தபெரும் தமிழணங்கே! தமிழணங்கே!

உன் சீர் இளமைத் திறம் வியந்து செயல் மறந்து வாழ்த்துதுமே!

வாழ்த்துதுமே! வாழ்த்துதுமே!

பொருள்

நீராலான கடலை உடுத்த பூமிப்பெண்ணின் அழகு திகழும் சீரான முகம் என திகழும் பாரத கண்டத்தில் (இந்திய துணைக்கண்டத்தில்) தக்காணம் பொருத்தமான சிறிய நெற்றியாகவும், அந்த நெற்றியில் அணிந்த அழகான பொட்டு போல திராவிட நாடும் திகழ்கின்றன. அந்த பொட்டின் வாசனைபோல அனைத்து உலகமும் இன்பம் அடையும்படியாக எல்லா திசையிலும் புகழ் மணக்க திகழும் தமிழன்னையே. உன் சீர் மிகுந்த இளமையின் சிறப்பை வியந்து மெய்மறந்து வாழ்த்துகிறோம்.

தமிழ்நாட்டு மாநிலப்பாடல்

தமிழ்நாட்டுக்கென ஒரு பாடல் தேவை என்னும் எண்ணம் உமாமகேஸ்வரனார் ந.மு. வேங்கடசாமி நாட்டார் ஆகியோருக்கு உருவாகியது. 1911ல் உருவான கரந்தை தமிழ்ச்சங்கத்தில் அதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டு நீராரும் கடலுடுத்த என்னும் பாடல் தேர்வு செய்யப்பட்டு அச்செய்தி 1913-ஆம் ஆண்டு கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் மூன்றாவது ஆண்டறிக்கையில் இடம்பெற்றது. கரந்தை தமிழ்ச்சங்கத்துடன் தொடர்புள்ள நிகழ்வுகளில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டுவந்தது. தமிழக அரசு இப்பாடலை அரசுப்பாடலாக அறிவிக்கவேண்டும் என்னும் கோரிக்கையை தமிழறிஞர்கள் முன்வைத்தனர்.

1967 சென்னை மாநில சட்டமன்றத் தேர்தலில் திராவிடமுன்னேற்றக் கழகம் சி.என்.அண்ணாத்துரை தலைமையில் வென்று ஆட்சியமைத்தபோது தமிழ்த்தாய் வாழ்த்து ஒன்றை அரசுப்பாடலாக்கவேண்டும் என்னும் தமிழறிஞர்களின் கோரிக்கை பரிசீலிக்கப்பட்டது. மனோன்மணீயம் சுந்தரனாரின் நீராரும் கடலுடுத்த பாடலும், கரந்தை கவியரசு இயற்றிய வானார்ந்த பொதியின்மிசை வளர்கின்ற மதியே என்ற பாடலும் பரிந்துரைக்கப்பட்டன. 1969ல் சி.என். அண்ணாத்துரை மறைந்தபின் ஆட்சிக்கு வந்த மு.கருணாநிதியின் அரசு நீராரும் கடலுடுத்த பாடலை தமிழ்த்தாய் வாழ்த்தாக அறிவித்தது அதிகார

இதன்பிறகு மு. கருணாநிதி முதலமைச்சராகத் பொறுப்பேற்றதையடுத்து, ஆரியம் போலத் தமிழ் உலகவழக்கழிந்து சிதையவில்லை என்று கூறும் வரிகள் தள்ளப்பட்டு தமிழ்த்தாயைப் புகழும் வகையில் அமைந்த வரிகள் மட்டும் ஏற்று இப்பாடலை 1970 மார்ச்சு 11 அன்று தமிழக அரசு தமிழ்த்தாய் வாழ்த்தாக அறிவித்தது. 2021-ஆம் ஆண்டு திசம்பர் 17-தேதி அன்று மு. க. ஸ்டாலின் தலைமையின் கீழ் செயற்பட்ட தமிழக அரசு தமிழ்நாடு அரசின் மாநிலப் பாடலாகத் தமிழ்த்தாய் வாழ்த்தை அறிவித்தது.

1970ல் திரு மு.கருணாநிதி தமிழக முதல்வராக இருந்தபோது தமிழ்த்தாய் வாழ்த்து தமிழக அரசின் பாடலாக மார்ச் 11 அன்று அறிவிக்கப்பட்டது. நவம்பர் 23 ல் தமிழக அரசு நிகழ்வுகளிலும் பள்ளிகளிலும் நிகழ்வுகளுக்கு முன் பாடப்படவேண்டிய பாடலாக அரசாணை வழியாக நிலைநிறுத்தப்பட்டது. தமிழக அரசின் அன்றைய பொதுத்துறை ( Public (Political) Department) அரசாணை (Memo Number 3584/70-4, 23rd November 1970) டி.வி.வெங்கடராமன் , இணைச்செயலர் (ஒப்பம்) ( T.V.Venkataraman Joint Secretary To Government )

எனினும் மாநில அரசின் பாடலாக தமிழ்த்தாய் வாழ்த்து முறையாக அறிவிக்கப்படவில்லை. 17 டிசம்பர் 2021ல் முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாடு அரசின் மாநிலப் பாடலாகத் தமிழ்த்தாய் வாழ்த்தை சட்டச்சபையில் அறிவித்தார்.

நெறிகள்

தமிழக அரசு வெளியிட்ட அரசாணைப்படி தமிழக அரசின் வழிகாட்டு நெறிகள்: (அரசாணை. அலுவல் சார்பற்ற குறிப்பு எண். 9909/பொகா 2021/நாள் 8 நவம்பர் 2021)

  • தமிழ்த்தாய் வாழ்த்தின் ஏற்கப்பட்ட வடிவம் 55 வினாடிகளில் முல்லைப்பாணி பண்ணில் (மோகன ராகம்) மூன்றன் நடையில் (திஸ்ரம்) பாடப்படவேண்டும்.
  • தமிழகத்தில் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்துப் பொது அமைப்புகளின் நிகழ்ச்சிகளிலும், நிகழ்வு தொடங்குவதற்கு முன்பு தமிழ்த்தாய் வாழ்த்து கட்டாயம் பாடப்பட வேண்டும்.
  • தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படும் போது அனைவரும் தவறாமல் எழுந்து நிற்க வேண்டும். மாற்றுத் திறனாளிகளுக்கு இவ்வரசாணையின்படி தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் பாடப்படும் போது எழுந்து நிற்பதில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.
  • பொது நிகழ்வுகளில் 'தமிழ்த்தாய் வாழ்த்து' இசை வட்டுக்களைக் கொண்டு இசைப்பதைத் தவிர்த்து பயிற்சி பெற்றவர்களால் வாய்ப்பாட்டாகப் பாடப்பட வேண்டும்.
  • தமிழ்நாட்டில் நடைபெறும் தனியார் அமைப்புகள் நடத்திடும் கலை, இலக்கிய மற்றும் பொது நிகழ்வுகளின் தொடக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படுவது ஊக்குவிக்கப்படும்

இசையமைப்பு

கரந்தை தமிழ்ச்சங்கம் செவ்வழிப் பண்ணில் இப்பாடலை இசையமைத்திருந்தது. முதன்முதலில் இந்தப் பாடலை மேடையில் பாடியவர் கூடலூர் வே.இராமசாமி.

தமிழ்த்தாய் வாழ்த்தின் ஏற்றுக்கொள்ளப்பட்ட இசையமைப்பைச் செய்தவர் இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன். இப்பாடல் எம்.எஸ்.விஸ்வநாதனால் மோகனராகத்தில் அமைக்கப்பட்டுள்ளது.

ஒலிவடிவம் இணைப்பு

விவாதங்கள்

திருத்தங்களுக்கு எதிர்ப்பு

கரந்தை தமிழ்ச்சங்கம் முன்வைத்த பெ.சுந்தரம் பிள்ளையின் மூலவடிவில் உள்ள இரண்டாம் பகுதி தமிழக அரசின் பாடலாக அமைக்கப்பட்டபோது தவிர்க்கப்பட்டது. தென்னக மொழிகள் தமிழில் இருந்து பிறந்தவை என்னும் கருத்தையும், ஆரியம்போல் வழக்கொழியாமல் தமிழ் நின்றுள்ளது என்னும் குறிப்பையும் நீக்கவே அவ்வாறு செய்யப்பட்டது என்னும் குற்றச்சாட்டு எழுந்தது. ஆனால் ஒரு வாழ்த்துப்பாடலில் வழக்கொழிதல் போன்ற எதிர்மறைச் சொற்கள் வரலாகாது என்னும் தமிழ்மரபின்படியே அவை நீக்கப்பட்டன. அம்முடிவை மு.கருணாநிதி எடுத்ததாகச் சொல்லப்படுகிறது.

மு.கருணாநிதி செய்த திருத்தங்களை எதிர்த்து ஜெபமணி ஜனதா கட்சியின் பொது செயலாளரான ஜெ.மோகன்ராஜ் உயர் நீதிமன்றத்தில் 2007ல் வழக்கு தொடர்ந்தார். திருத்தப்பட்ட பாடலை தமிழ் பாடப்புத்தங்களில் இடம்பெற செய்துள்ளதையும், விழாக்களில் பாடுவதையும் சட்டவிரோதமானது என அறிவிக்க வேண்டுமென கோரிக்கை வைத்திருந்தார். அதை தமிழக உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி முனீஷ்வர் நாத் பண்டாரி, நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய அமர்வு 21 ஜனவரி 2022ல் தள்ளுபடி செய்து தீர்ப்பளித்தது.

நெறிமுறைகள் விவாதம்

24 ஜனவரி 2018ல் சென்னையில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் மற்றும் காஞ்சி இளைய சங்கராச்சாரியார் விஜயேந்திர சரஸ்வதி உள்ளிட்டோர் விருந்தினர்களாக கலந்து கொண்ட நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டபோது மேடையில் அமர்ந்திருந்த விருந்தினர்கள் அனைவரும் எழுந்த நின்று மரியாதை செலுத்திய நிலையில் மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி எழாமல் அமர்ந்திருந்தார். அது பரவலான கண்டனத்திற்கு உள்ளாகியது.

ராமேஸ்வரம் காஞ்சி மடத்துக்குள் நுழைந்த தமிழ் ஆர்வலர்கள் சங்கராச்சாரியார் விஜயேந்திரருக்கு எதிராக கோஷம் எழுப்பினர். போலிஸார் இதுதொடர்பாக வழக்குப் பதிவு வழக்கில் சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக்கிளையின் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் "தமிழ்த்தாய் வாழ்த்து இறை வணக்கப்பாடல். தேசிய கீதம் அல்ல. அதற்குக் கட்டாயம் எழுந்து நிற்க வேண்டிய அவசியம் இல்லை. அது தொடர்பாக உத்தரவும் எதுவும் இல்லை" என்று தீர்ப்பளித்தார்.அதன் விளைவாகவே மு.க.ஸ்டாலின் முதல்வர் பதவி ஏற்றபின் 17 டிசம்பர் 2021ல் தமிழ்த்தாய் வாழ்த்து அரசுப்பாடலாக அறிவிக்கப்பட்டு நெறிகளும் வகுத்து அளிக்கப்பட்டன.

உசாத்துணை