being created

து. ராமமூர்த்தி: Difference between revisions

From Tamil Wiki
Line 11: Line 11:


== நினைவேந்தல் ==
== நினைவேந்தல் ==
'கணையாழியில் எழுதிய 'குடிசை' என்ற புதினம் து.ரா.வின் மகன் ஜெயபாரதியால் 1979-இல் திரைப்படமாக ஆக்கப்பட்டது.  
'கணையாழியில் எழுதிய 'குடிசை' என்ற நாவல் து.ரா.வின் மகன் ஜெயபாரதியால் 1979-இல் திரைப்படமாக ஆக்கப்பட்டது.
 
== மறைவு ==
== மறைவு ==
து. ராமமூர்த்தி அக்டோபர் 31, 1999இல் காலமானார்.
து. ராமமூர்த்தி அக்டோபர் 31, 1999இல் காலமானார்.

Revision as of 16:49, 24 January 2023

சரோஜா, து. ராமமூர்த்தி

து. ராமமூர்த்தி (செப்டம்பர் 11, 1916 - அக்டோபர் 31, 1999) நவீனத் தமிழ் எழுத்தாளர், பத்திரிக்கையாளர்.

வாழ்க்கைக் குறிப்பு

து. ராமமூர்த்தி தஞ்சாவூர் மாவட்டம் மன்னார்குடியில் செப்டம்பர் 11, 1916இல் துரைசாமி, ராஜம் இணையருக்குப் பிறந்தார். பொருளாதாரத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார். எழுத்தாளர் சரோஜா ராமமூர்த்தியை பல எதிர்ப்புகளை மீறி பதிவுத் திருமணம் செய்துகொண்டார். இந்திய தலைமைக் கணக்கு அலுவலர் அலுவலகத்தில் தணிக்கை அலுவலராகப் பணிபுரிந்து ஓய்வு பெற்றார்.

இதழியல்

து.ராமமூர்த்தி 'அசோகா' என்ற இதழின் கௌரவ ஆசிரியராக இருந்தார். கல்கி இதழின் துணையாசிரியராக பல காலம் இருந்தார்.

இலக்கிய வாழ்க்கை

"கழைக்கூத்தன்” சிறுகதை 'சக்தி' இதழில் 1943இல் வெளிவந்தது. கணையாழி, கல்கி போன்ற இதழ்களில் எழுதினார். விகடன் முத்திரைக்கதைகள் எழுதினார். “கதம்பச்சரம் சிரித்தது” என்ற சிறுகதைத் தொகுப்பு வெளிவந்தது. சிற்றிதழ் சூழலில் சிறுகதைகள் வெட்டப்பட்டு பிரசூரிப்பதற்கு கடுமையான எதிர்க்குரல் எழுப்பியதால் பலரையும் பகைத்துக் கொண்டார் எனவும், பெரும்பாலான கதைகளை எழுதி பிரசூரிக்காமல் தன்னிடமே வைத்துக் கொண்டதாகவும் மகள் பாரதி குறிப்பிடுகிறார்.

நினைவேந்தல்

'கணையாழியில் எழுதிய 'குடிசை' என்ற நாவல் து.ரா.வின் மகன் ஜெயபாரதியால் 1979-இல் திரைப்படமாக ஆக்கப்பட்டது.

மறைவு

து. ராமமூர்த்தி அக்டோபர் 31, 1999இல் காலமானார்.

நூல்கள்

சிறுகதைகள்
  • கதம்பச்சரம் சிரிப்பது
குறுநாவல்
  • வானத்தாரகை
நாவல்
  • குடிசை

உசாத்துணை




🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.