being created

சுப்ரமண்ய ராஜு: Difference between revisions

From Tamil Wiki
(Created page with "சுப்ரமண்ய ராஜு (ஜூன் 6, 1948 – டிசம்பர் 10, 1987) நவீனத்தமிழ் எழுத்தாளர். 39 வயதில் இறந்த சுப்ரமண்ய ராஜு எழுதிய கவிதைகளும் புனைவுகளும் அக்காலகட்டத்தில் முக்கியமானவையாக கருதப்பட்டது. == வா...")
 
Line 20: Line 20:
* சுப்ரமண்ய ராஜு கதைகள்(கிழக்கு பதிப்பகம்)
* சுப்ரமண்ய ராஜு கதைகள்(கிழக்கு பதிப்பகம்)
== உசாத்துணை ==
== உசாத்துணை ==
* எழுத்தாளர் சுப்ரமண்ய ராஜுவைத் தெரியுமா?: மனைவி பாரதியுடன் நேர்காணல்: சு.அருண் பிரசாத்: ஆனந்தவிகடன்
* [https://www.vikatan.com/literature/arts/the-life-and-times-of-tamil-writer-subramanya-raju எழுத்தாளர் சுப்ரமண்ய ராஜுவைத் தெரியுமா?: மனைவி பாரதியுடன் நேர்காணல்: சு.அருண் பிரசாத்: ஆனந்தவிகடன்]
* சுப்ரமண்ய ராஜு: ‘வித்தியாசமானதெல்லாம் விசேசமானதல்ல’: சு.அருண் பிரசாத் வலைதளம்
* சுப்ரமண்ய ராஜு: ‘வித்தியாசமானதெல்லாம் விசேசமானதல்ல’: சு.அருண் பிரசாத் வலைதளம்
* சுப்ரமண்ய ராஜு: ஒரு காலகட்டத்தின் பிரதிபலிப்பு!: இந்து தமிழ்திசை சு.அருண் பிரசாத்
* சுப்ரமண்ய ராஜு: ஒரு காலகட்டத்தின் பிரதிபலிப்பு!: இந்து தமிழ்திசை சு.அருண் பிரசாத்

Revision as of 07:21, 24 January 2023

சுப்ரமண்ய ராஜு (ஜூன் 6, 1948 – டிசம்பர் 10, 1987) நவீனத்தமிழ் எழுத்தாளர். 39 வயதில் இறந்த சுப்ரமண்ய ராஜு எழுதிய கவிதைகளும் புனைவுகளும் அக்காலகட்டத்தில் முக்கியமானவையாக கருதப்பட்டது.

வாழ்க்கைக் குறிப்பு

சுப்ரமண்ய ராஜுவின் இயற்பெயர் விஸ்வநாதன். பாண்டிச்சேரியில் பிறந்தார். சென்னை சுந்தரம் க்ளைடன் மற்றும் டி.டி.கே. நிறுவனங்களில் பணியாற்றினார். எழுத்தாளர் சரோஜா ராமமூர்த்தி, து. ராமமூர்த்தியின் மகளான பாரதியைத் திருமணம் செய்து கொண்டார். இரு மகள்கள்.

இலக்கிய வாழ்க்கை

சிறுகதைகள், குறுநாவல்கள் மட்டுமல்லாமல் புனைபெயர்களில் சினிமா விமர்சனங்களையும் சுப்ரமண்ய ராஜு எழுதினார்.

ஆனால் ஒரு பெரும் தலைமுறையையே பாதித்த எழுத்தாளர் அவர். அவருக்கு முந்தைய தலைமுறையைச் சேர்ந்த எழுத்தாளர்கள் முதல் இன்றைக்குப் புதிதாகத் தோன்றியிருக்கும் தலைமுறைவரை அவரைக் கொண்டாடவும் ஆராதிக்கவும் செய்கிறார்கள்.

2006-ல் கிழக்கு பதிப்பகம் வெளியீடாக “சுப்ரமண்ய ராஜு கதைகள் (முழுத்தொகுப்பு) வெளிவந்தது. 486 பக்கங்கள் கொண்ட இத்தொகுப்பில் 32 கதைகள் உள்ளன. சுப்ரமண்ய ராஜுவின் இறப்பிற்குப் பின் அவரின் நெருங்கிய நண்பர்களான பாலகுமாரனும் மாலனும் இணைந்து 20 எழுத்தாளர்களின் சிறுகதைகளைத் தொகுத்து அவரது நினைவைப் போற்றும் விதமாக ‘அன்புடன்’ என்ற தொகுதியைக் கொண்டுவந்தனர்.

இலக்கிய இடம்

“நவீன வாழ்க்கை முறை இளைஞர்களை எவ்வாறு கட்டமைக்கிறது என்பது குறித்த அவர் கதைகள் முக்கியமானவை. நுட்பம் சார்ந்த எழுத்து அவருடையது” என்று ராஜுவின் கதைகள் குறித்தும் “சென்னைக்கு வந்த நாள் தொட்டு அவருடன் நட்பு கூடியது எனக்கு. எங்கள் நட்பு வட்டத்தில், ஒரு நல்ல வேலையும் சம்பளமும் வாய்த்த மனிதர் அவர். அக்காலத்து எழுத்தாளர் பலருக்கும் என்னையும் உள்ளிட்டு கணிசமாக உதவியர் அவர் என்று அவருடனான நட்பு குறித்தும் பிரபஞ்சன் கூறுகிறார்.

‘காலத்தைக் கடந்தும் படிக்கிற மாதிரியாக இருக்கக்கூடிய ஒரு இருபத்தைந்து சிறுகதைகளுக்காகக் காத்துக் கொண்டிருக்கிறேன். இதுவரை பத்துதான் தேறி இருக்கின்றன. அதில் சுப்ரமண்ய ராஜுவின் கதை ஒன்று’ என சுஜாதா மதிப்பிடுகிறார்.

பாடலாசிரியர்

‘24C வேதபுரம் முதல் வீதி’ என்ற வெளிவராத படத்துக்கு ராஜு எழுதியிருந்த ஒரு பாடல், கங்கை அமரனின் இசையமைப்பில் சுசீலா பாடி ஒலிப்பதிவும் ஆகியது.

மறைவு

டிசம்பர் 10, 1987இல் தன் 39 வயதில் சென்னை நந்தனம் சிக்னல் அருகே ஏற்பட்ட விபத்தில் சுப்ரமண்ய ராஜு காலமானார்

நூல் பட்டியல்

  • இன்று நிஜம்
  • சுப்ரமண்ய ராஜு கதைகள்(கிழக்கு பதிப்பகம்)

உசாத்துணை

இணைப்புகள்

  • சுப்ரமண்ய ராஜு படங்கள்: சு.அருண் பிரசாத் வலைதளம்
  • காதலிக்கணும் சார்… சிறுகதை:சுப்ரமண்ய ராஜு: சிறுகதைகள்.காம்



🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.