தாரா செரியன்: Difference between revisions

From Tamil Wiki
No edit summary
Line 1: Line 1:
[[File:தாரா செரியன்.png|thumb|தாரா செரியன்]]
தாரா செரியன் (Tara Cherian) (மே 1913 - நவம்பர் 7, 2000) சென்னை மாநகராட்சியின் முதல் பெண் மேயர், இந்தியாவின் முதல் பெண் மேயர். சமூக செயற்பாட்டாளர், அரசியல்வாதி.
தாரா செரியன் (Tara Cherian) (மே 1913 - நவம்பர் 7, 2000) சென்னை மாநகராட்சியின் முதல் பெண் மேயர், இந்தியாவின் முதல் பெண் மேயர். சமூக செயற்பாட்டாளர், அரசியல்வாதி.
== வாழ்க்கைக் குறிப்பு ==
== வாழ்க்கைக் குறிப்பு ==

Revision as of 10:52, 22 January 2023

தாரா செரியன்

தாரா செரியன் (Tara Cherian) (மே 1913 - நவம்பர் 7, 2000) சென்னை மாநகராட்சியின் முதல் பெண் மேயர், இந்தியாவின் முதல் பெண் மேயர். சமூக செயற்பாட்டாளர், அரசியல்வாதி.

வாழ்க்கைக் குறிப்பு

தாரா செரியன் மே 1913இல் பிறந்தார். சென்னை பல்கலைக்கழகத்தில் படித்தார். ‘கில்ட் ஆஃப் சர்வீஸ்’ நிறுவனத்தில் இணைந்து வேலை பார்த்தார். கணவர் செரியனும் மேயராக இருந்தார்.

அரசியல் வாழ்க்கை

தாரா செரியன் 1957இல் சென்னை மாநகராட்சியின் மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டார். சிங்காரச் சென்னைக்கு அடித்தளம் அமைத்தவர். பெரிய திட்டங்களை இயற்றாமல், அன்றாட வாழ்க்கைக்குத் தேவைப்படும் சின்ன சின்ன விஷயங்களில் கவனத்தைச் செலுத்தி மக்களின் வாழ்வை மேம்படுத்தினார். சேரிகளில் வசிப்பவர்களுக்குச் சுத்தமான தண்ணீர், முறையான மின்சாரம், கழிவறை போன்றவற்றை வழங்குவதில் கவனம் செலுத்தினார். சென்னை மாநகராட்சிப் பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளுக்கு மதிய உணவுத் திட்டத்தை 1958-லேயே கொண்டு வந்தார். அவரது சேவையைப் பாராட்டும் விதமாக அவருக்கு 1967-ல் ‘பத்ம பூஷன்' பட்டம் வழங்கப்பட்டது.

விருது

  • 1967 ஆம் ஆண்டில் இந்திய அரசு தாரா செரியனுக்கு பத்ம பூஷன் விருதை வழங்கியது.

மறைவு

தாரா செரியன் நவம்பர் 7, 2000இல் தாரா செரியன் காலமானார்.

உசாத்துணை