being created

அனார்: Difference between revisions

From Tamil Wiki
(Created page with "அனார் (1974) ஈழத்துத் தமிழ்க் கவிஞர். == வாழ்க்கைக் குறிப்பு == அனாரின் இயற்பெயர் 'இஸ்ஸத் ரீஹானா முஹம்மட் அஸீம்’.ம்கிழக்கு இலங்கையின் சாய்ந்தமருதுவில் பிறந்தார். == இலக்கிய வாழ்க்கை...")
 
Line 29: Line 29:
== உசாத்துணை ==
== உசாத்துணை ==
== இணைப்புகள் ==
== இணைப்புகள் ==
* அனார்: கவிதைகள்: நூலகம்


{{Being created}}
{{Being created}}
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]

Revision as of 16:52, 3 January 2023

அனார் (1974) ஈழத்துத் தமிழ்க் கவிஞர்.

வாழ்க்கைக் குறிப்பு

அனாரின் இயற்பெயர் 'இஸ்ஸத் ரீஹானா முஹம்மட் அஸீம்’.ம்கிழக்கு இலங்கையின் சாய்ந்தமருதுவில் பிறந்தார்.

இலக்கிய வாழ்க்கை

1990களின் நடுப்பகுதியிலிருந்து 'அனார்' என்ற புனைபெயரில் கவிதைகள் எழுதினார். ’ஓவியம் வரையாத தூரிகை’ என்ற முதல் கவிதைத் தொகுப்பு 2004-ல் வெளியானது. 2007-ல் இவரின் இரண்டாவது கவிதைத்தொகுப்பான ‘எனக்குக் கவிதை முகாம்’ வெளியானது.

இலக்கிய இடம்

ஈழத்து தமிழின் நவீன கவிதைகளுக்குப் புதிய முகங்களைத் தருபவராக இருக்கிறார். பெண்ணிருப்பின் உணர்வு நிலையாகவும் பெண்ணை இயற்கையின் பேருயிராகக் காணும் அறிவாகவும் அமைபவை அவரது கவிதைகள். இலக்கியப் பரப்பில் அதிகம் பேசப்படாத கிழக்கிலங்கை முஸ்லிம் வாழ்க்கையை கவிதையில் அறிமுகப்படுத்தியவர், முன்னெடுத்துச் செல்பவர் என்ற தகுதிகளும் அனாருக்குப் பொருந்தும். அனார், கவி மொழியாலும் கருப்பொருளாலும் தம் தனித்தன்மையை இயல்பாக நிறுவிக்கொண்டவர். அடையாளங்கள் அனுபவ வெளியை விரிவாக்க உதவுபவையே தவிர, அவற்றுக்குள் முடங்கிவிடக்கூடாது என்னும் உணர்வுடையவர். சொற்களால் உருவாக்கும் காட்சிப் படிமங்கள் வியப்பையும் அதிர்ச்சியையும் கொடுப்பவை. இழந்த காலங்களைப் பற்றிய ஏக்கம் கொண்ட கவிதைகள் இன்றைய பொதுப்போக்கு. இப்பொதுப்போக்கில் இணைந்தாலும், நுட்பம் செறிந்த தம் பார்வையை அதற்க்குள் வைத்து தனித்துவமாக கவி செய்பவர் அனார்.

விருதுகள்

  • தேசிய இளைஞர் சேவை விருது - கொழும்பு
  • இளம் படைப்பாளி விருது (உலக இஸ்லாமிய இலக்கிய மாநாடு-கொழும்பு) (2002)
  • அரச சாஹித்திய மண்டல விருது - கொழும்பு (2005)
  • வட-கிழக்கு மாகாண இலக்கிய விருது - திருகோணமலை (2005)
  • கம்பன் கழகத்தின் மகரந்தச் சிறகு விருது - கொழும்பு (2007)
  • கனடா தமிழ் இலக்கியத் தோட்ட கவிதை இயல் விருது - ரொறண்டோ, கனடா
  • 2013 - Award for Excellence in the Filed of Literature (விஜய் தொலைக்காட்சியின் - சிகரம் தொட்ட பெண்கள் விருது) - சென்னை (2011)
  • Sparrow Literary Award - Mumbai (2015)
  • ஆத்மாநாம் இலக்கிய விருது, சென்னை (2017)

நூல்கள்

கவிதை
  • ஓவியம் வரையாத தூரிகை (மூன்றாவது மனிதன் வெளியீடு) (2004)
  • எனக்குக் கவிதை முகம் (காலச்சுவடு வெளியீடு) (2007)
  • உடல் பச்சை வானம் (காலச்சுவடு வெளியீடு) (2009)
  • பெருங்கடல் போடுகிறேன் (காலச்சுவடு வெளியீடு) (2013)
  • பொடுபொடுத்த மழைத்தூத்தல் (க்ரியா வெளியீடு) (2013)
  • ஜின்னின் இரு தோகை (காலச்சுவடு வெளியீடு) (2017)
ஆங்கிலம்
  • Leaving - நீங்குதல் (Poetry Translation Center, UK) (2021)

உசாத்துணை

இணைப்புகள்

  • அனார்: கவிதைகள்: நூலகம்



🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.