கி. இளம்பூரணன்: Difference between revisions
(Created page with "thumb கி. இளம்பூரணன் ஒரு மலேசிய எழுத்தாளர். இவர் சிறுகதைகளும் கட்டுரைகளும் எழுதியுள்ளார். கி. இளம்பூரணன் இடைநிலைப்பள்ளி மாணவர்களிடையே இலக்கியத்தை முன்னெடுப்பதை முதன்மை பண...") |
(Category:சிறுகதையாசிரியர்கள் சேர்க்கப்பட்டது) |
||
Line 94: | Line 94: | ||
[[Category:Tamil Content]] | [[Category:Tamil Content]] | ||
[[Category:மலேசிய ஆளுமைகள்]] | [[Category:மலேசிய ஆளுமைகள்]] | ||
[[Category:சிறுகதையாசிரியர்கள்]] |
Revision as of 20:26, 31 December 2022
கி. இளம்பூரணன் ஒரு மலேசிய எழுத்தாளர். இவர் சிறுகதைகளும் கட்டுரைகளும் எழுதியுள்ளார். கி. இளம்பூரணன் இடைநிலைப்பள்ளி மாணவர்களிடையே இலக்கியத்தை முன்னெடுப்பதை முதன்மை பணியாகக் கொண்டவர்.
பிறப்பு, கல்வி
கி. இளம்பூரணன் பிப்ரவரி 28, 1977 ல் கிள்ளானில் பிறந்தார். இளம்பூரணன் தந்தை பெயர் கிராமணி. தாயார் பெயர் பாப்பா. முனீஸ்வரி, மங்கையர்க்கரசி எனும் இரண்டு சகோதரிகளும் ஜெயவர்மன் என்ற தம்பியும் உள்ள குடும்பத்தில் இளம்பூரணன் மூன்றாவது பிள்ளையாகப் பிறந்தார்.
இளம்பூரணன் தன் ஆரம்ப கல்வியை 1984 முதல் 1989 வரை கிள்ளானில் உள்ள எமரால்ட் தோட்டத் தமிழ்ப்பள்ளியில் பயின்றார். 1990 முதல் 1995வரை கிள்ளானில் உள்ள இராஜா மகாடியில் இடைநிலைக்கல்வியைத் தொடர்ந்தார். தொடர்ந்து 1996 - 97 ஆகிய ஆண்டுகளில் இன்ஸ்ட்யூட் மக்மூர் இடைநிலைப்பள்ளியில் படிவம் ஆறை முடித்தார்.
பள்ளி/ படிப்பை முடித்த கி. இளம்பூரணன் 1998 முதல் 2001 வரை மலாயாப் பல்கலைக்கழகத்தில் ஊடகவியல், தமிழ்மொழி துறையில் இளங்கலை படிப்பை முடித்தார். தொடர்ந்து துவாங்கு பைனுன் ஆசிரியர் பயிற்சிக் கழகத்தில் 2002ஆம் ஆண்டு ஆசிரியர் பயிற்சியைப் பெற்றார். தொடர்ந்து 2011 முதல் 2015 வரை உப்சி பல்கலைக்கழகத்தில் பயின்று தமிழ் இலக்கியத்தில் முதுகலைப் பட்டமும் அதே துறையில் 2017 முதல் 2022 வரை பயின்று முனைவர் பட்டத்தையும் பெற்றார்.
தொழில், திருமணம்
இளம்பூரணன் 2001ல் ஜெய பக்தி பதிப்பகத்தில் பதிப்பாசிரியராகப் பணியைத் தொடங்கினார். தொடர்ந்து ஆசிரியர் பயிற்சி பெற்ற பிறகு இடைநிலைப் பள்ளி தமிழாசிரியராகப் பணியைத் தொடர்ந்தார். 2003இல் கேமரன் மலையில் உள்ள சுல்தான் அமாட் ஷா இடைநிலைப்பள்ளி, 2008இல் கிள்ளானில் உள்ள ஷா பண்டாராயா இடைநிலைப்பள்ளி, 2009இல் கேமரன் மலையில் உள்ள ரிங்லெட் இடைநிலைப்பள்ளி, 2013இல் கிள்ளானில் உள்ள இராஜா மகாடி இடைநிலைப்பள்ளி ஆகியப் பள்ளிகளில் பணியாற்றினார்.
கி. இளம்பூரணன் மே 27, 2007ல் சவித்தா என்பவரைத் திருமணம் செய்துக்கொண்டார். இவருக்கு இரண்டு குழந்தைகள்.
இலக்கிய வாழ்க்கை
இளம்பூரணன் வாசிப்பின் காரணமாகவும் சமூகத்தின் மீது இருந்த விமர்சனங்களின் காரணமாகவும் எழுத வந்தார், இவரது முதல் படைப்பு, மலாயாப் பல்கலைக் கழகத் தமிழ்ப்பேரவை சிறுகதைப் போட்டியின் மாணவர் பிரிவில் முதல் பரிசு பெற்றது. 2006இல் எழுதப்பட்ட அச்சிறுகதை 'சங்கொலி' எனும் தலைப்பைக் கொண்டது. தொடர்ந்து கி. இளம்பூரணன் போட்டிகளில் அதிகம் பங்கெடுத்து பரிசுகள் வென்றார். மலேசியாவில் உள்ள இதழ்களில் இவரது படைப்புகள் இடம்பெற்றன.
ஆசிரியர் தொழில் பங்களிப்பு
கி. இளம்பூரணன் முதன்மையாக இடைநிலைப்பள்ளி மாணவர்களிடையே தமிழ் இலக்கியத்தை வளர்க்க முனைப்பு காட்டியவர். இடைநிலைப்பள்ளி ஆசிரியராக அவரது பங்களிப்புகள்:
1. கலைத்திட்ட மேம்பாட்டுப் பிரிவின் தமிழ் இலக்கியக் கலைத்திட்ட/ அமைக்கும் பணி - 2018 , 2019
2. தமிழ் இலக்கியக் கலைத்திட்டத்தின் தேசிய முதன்மைப் பயிற்றுனர். - 2019
3. தமிழ் இலக்கிய புதிய பாடநூல்களுக்கான வழிகாட்டி கையேடு - 2021
4. மலேசிய தேர்வு வாரியத்தில் இலக்கியப் பாடத்தின் பணிகள் - 2005-2022
5. தமிழ் இலக்கியப் பாட புதிய தேர்வு அணுகுமுறையின் முதன்மைப் பயிற்றுனர் - 2021
6. கல்வி அமைச்சின் ‘டிடெக் டீவி’ தமிழ் இலக்கியப் பாடத்தின் படைப்பாளர் - 2020-2022
7. தேசிய அளவிலான செந்தமிழ் விழா வினைக்குழு உறுப்பினர் & நடுவர் - 2018-2022
8. யாழ் பதிகம் ஏற்பாடு செய்த தேசிய நிலையிலான இடைநிலைப்பள்ளி மாணவர்களுக்கான சிறுகதைப் போட்டியின் இணை ஆலோசகர் - 2022
பங்களிப்பு
கி. இளம்பூரணன் சிறுகதைகள் எழுதியிருந்தாலும் இவரது பிரதானமான பங்களிப்பு இடைநிலைப்பள்ளி மாணவர்களிடையே இலக்கிய வளர்ச்சியை முன்னெடுப்பதில்தான் உள்ளது. பள்ளி அளவிலும் தேசிய அளவிலும் கி. இளம்பூரணன் இடைநிலைப்பள்ளி மாணவர்கள் இலக்கிய வளர்ச்சிக்கு வலுவான பங்களிப்பைச் செய்துள்ளார்.
வெளியிட்ட நூல்கள்
1. இடைநிலைப் பள்ளிக்கான இலக்கண இலக்கிய வழிகாட்டி நூல் - 2002
2. இடைநிலைப் பள்ளிக்கான இலக்கியத் துணைவன் 1 - 2018
3. இடைநிலைப் பள்ளிக்கான இலக்கியத் துணைவன் 2 - 2020
4. சிலாங்கூர் மாநில தமிழ்த் திணைக்களத்தின் இலக்கியத் தேர்வு வழிகாட்டி நூல் - 2021
விருதுகள், பரிசுகள்
ஆசிரியர் துறை விருதுகள்
1. கல்வி அமைச்சின் சிறந்த சேவையாளர் விருது - 2011, 2016
2. பள்ளி அளவிலான சிறந்த புறப்பாட ஆசிரியர் விருது - 2014, 2021
இலக்கியப் போட்டிக்கான பரிசுகள்
மலாயாப் பல்கலைக்கழக பேரவைக் கதைகள் (பொதுப் பிரிவு)
1. 2007 - முதல் பரிசு (போர்க்களமாகும் பூங்காக்கள்)
2. 2010 - இயந்திரத் தவம் (4வது பரிசு)
3. 2013 - முதல் பரிசு (அம்மா என்றழைக்கவா)
4. 2014- மூன்றாவது பரிசு (போர்வை)
5. 2018- இரண்டாவது பரிசு (மேரி ஜேன்)
மலாயாப் பல்கலைக்கழக பேரவைக் கதைகள் (ஆறுதல் பரிசுகள்)
1. இயந்திரத் தவம் (2004)
2. சங்கொலி (2006) – மாணவர் பிரிவு
3. புற்று (2008)
4. அப்பனாவது கடினம் (2012)
5. கலர் டீவியும் கருப்பு வெள்ளையாகிய நானும். (2015)
6. கஞ்சாக்காரனும் கடாரம் கொண்டானும் (2019)
இலக்கியகம் நடத்திய இளையோர் சிறுகதைப் போட்டி
1. கைபேசியும் கலைந்த கனவுகளும் (2013)
2. விளக்கின் இருள் (2014)
3. என் அன்பு டைரியே (2013)
ஆசிரியர்களுக்கான வல்லினம் சிறுகதைப் போட்டி
1. அழகியும் அப்பா சொன்ன கதையும் (2019)
இந்த பக்கம் தற்பொழுது மெய்ப்பு பார்க்கப்படுகிறது. மாற்றம் எதுவும் செய்ய வேண்டாம்
Ready for review
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.