நாவேந்தன்: Difference between revisions
(Category:இலக்கிய விமர்சகர்கள் சேர்க்கப்பட்டது) |
(Category:கட்டுரையாளர்கள் சேர்க்கப்பட்டது) |
||
Line 88: | Line 88: | ||
[[Category:கவிஞர்கள்]] | [[Category:கவிஞர்கள்]] | ||
[[Category:இலக்கிய விமர்சகர்கள்]] | [[Category:இலக்கிய விமர்சகர்கள்]] | ||
[[Category:கட்டுரையாளர்கள்]] |
Revision as of 18:44, 31 December 2022
நாவேந்தன் (டிசம்பர் 14, 1932 - ஜூலை 10, 2000) இலங்கையின் தமிழ் எழுத்தாளர். சிறுகதை ஆசிரியர், பத்திரிகையாளர், கட்டுரையாளர், கவிஞர், ஆய்வாளர், விமர்சகர், கல்வியியலாளர், தொழிற்சங்கவாதி
பார்க்க நாவேந்தன் (முருகேசன்)
பிறப்பு, கல்வி
நாவேந்தனின் இயற்பெயர் த. திருநாவுக்கரசு. நாவேந்தன் யாழ்ப்பாண மாவட்டம், புங்குடுதீவில் தம்பிராஜாவுக்கு மகனாகப் பிறந்தவர். பயிற்றப்பட்ட ஆசிரியராகி சட்டமுதற் தேர்வில் வெற்றி பெற்றார். நீதியதிபர் பதவி வகித்தார். கடைசி நாட்களில் கிறிஸ்தவ மதத்தில் இணைந்தார்.
இவரது சகோதரர்கள் துரைசிங்கம்,இளங்கோவன், தமிழ்மாறன். இவர்கள் மூவரும் ஊடகம்,இலக்கியம் முதலான துறைகளில் ஈடுபட்டவர்கள். கேர்ன்ஸ் திரைப்படவிழாவில் விருது வென்ற தீபன் திரைப்படத்தில் படத்தொகுப்பில் ஈடுபட்டஓவியா இளங்கேவன் நாவேந்தனின் மகள்.
இலக்கிய வாழ்க்கை
தமது பதினைந்தாவது வயதில் இந்து சாதனம் மூலம் எழுத்துத்துறையில் புகுந்த நாவேந்தன் ஆம்பலூர் அருணகிரிதாசர், பண்டிதர் பரசுராமமூர்த்தி, காண்டீபன், நக்கீரன், தீப்பொறி, ததீஜி ஆகிய பல புனைப்பெயர்களில் விமர்சனங்களை எழுதியுள்ளார். தினகரன், வீரகேசரி, சிந்தாமணி, விவேகி, கலைச் செல்வி, உதயன், உதயதாரகை ஆகிய இதழ்களில் இவரது சிறுகதைகள் பல வெளிவந்தன. எனினும் சுதந்திரனிலேயே அதிகமான சிறுகதைகளையும் நாடகங்களையும் கவிதைகளையும் எழுதியுள்ளார். தமிழகத்திலிருந்து வெளியான தென்றல், உமா, கலைமன்றம், அறப்போர், தென்றல்திரை, சாட்டை, மணிமொழி ஆகிய இதழ்களில் இவரது படைப்புகள் வெளியிட்டுள்ளன. தமது இறுதிக்காலத்தில் இவர் எழுதிய "மரியாள் மகதலேனா" என்னும் குறுங்காவியத்தை தென்னிந்திய திருச்சபையின் யாழ்ப்பாணம் அத்தியட்சாதீனம் வெளியிட்டது
அமைப்புப் பணிகள்
- யாழ்ப்பாண எழுத்தாளர் சங்க நிறுவனர்
- இலங்கை இலக்கியரசிகர் சங்க தலைவர்
இதழியல்
நாவேந்தன் தொடர்ச்சியாக இலக்கியம் மற்று அரசியலுக்காக இதழ்கள் நடத்திக்கொண்டிருந்தார். நாவேந்தன் நடத்திய இதழ்கள்
- தமிழ்க் குரல்
- சங்கப்பலகை
- நாவேந்தன் (இதழ்)
- நம்நாடு
அரசியல் பணி
யாழ்ப்பாணம் மாநகரசபையின் பிரதி மேயராகவும் பதவிவகித்தவர் நாவேந்தன். இலங்கை தமிழரசுக் கட்சி நடத்திய பல்வேறு போராட்டங்களிலும் பங்குபற்றியவர். சிங்கள ஸ்ரீ எதிர்ப்புப் போராட்டத்திலீடுபட்டு ஒருவார காலச் சிறைத் தண்டனையையும் அனுபவித்தவர். சிறையிலிருந்து வெளிவந்ததும் அவர் ’சிறீ அளித்த சிறை" என்னும் நூலை எழுதினார்.
தமிழரசுக்கட்சியில் இருந்த நாவேந்தன் ஜி.ஜி.பொன்னம்பலத்தின் தமிழ்க்காங்கிரஸில் பின்னர் இணைந்தார். இறுதியாக இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் ஆதரவாளராக மாறினார்.
நினைவு
யாழ். இலக்கிய வட்டம் நாவேந்தன் நினைவாக ஆண்டு தோறும் ஈழத்தில் வெளியாகும் சிறுகதைத் தொகுதிகளுக்குள் சிறந்ததெனத் தெரிவு செய்யப்படும் சிறுகதைத் தொகுதிக்கு நாவேந்தன் விருதினை வழங்கிவருகிறது.
மறைவு
ஜூலை 10, 2000-ல் மறைந்தார்
இலக்கிய இடம்
நாவேந்தன் அரசியல், சமூகவியல் கருத்துக்களை நேரடியாக வெளிப்படுத்தும் பிரச்சார இலக்கியங்களை உருவாக்கியவர்.
விருதுகள்
வாழ்வு சிறுகதைத்தொகுதி இலங்கை சாகித்திய விருதைப்பெற்றது (1964)
நூல்கள்
சிறுகதை
- வாழ்வு
- தெய்வ மகன்
வாழ்வு சிறுகதைத் தொகுதி இலங்கை அரசின் சாகித்திய மண்டல விருதினையும் (1964) பெற்றது.
குறுங்காவியம்
- மரியாள் மகதலேனா
கட்டுரை
- மானவீரன் கும்பகர்ணன்
- சிலப்பதிகாரச் செந்நெறி
- நான் ஒரு பிச்சைக்காரன்
- தலைவர் வன்னியசிங்கம்
- ஜோண் கஸ்டர்
- சிறி அளித்த சிறை
நாடகங்கள்
- பெருநெருப்பு
- மண்டோதரி
- தாரை
உசாத்துணை
- நாவேந்தன், ஜாஃப்னா
- நாவேந்தன் நினைவுகள், இ. ஓவியா, தமிழ் ஆதர்ஸ்.காம்
- தமிழ்முரசு Tamil Murasu: திரும்பிப்பார்க்கின்றேன் - தமிழ்த் தலைவர்களை கவர்ந்த நாவேந்தன். முருகபூபதி
- சாதாரண மக்களின் வாழ்வியல் சிக்கல்களை சிறுகதைகள் மூலம் வெளிப்படுத்தியவர் நாவேந்தன் - இரா.சம்பந்தன், தினகரன் இலங்கை, ஜூலை 2009
✅Finalised Page