under review

வைரவன் லெ.ரா: Difference between revisions

From Tamil Wiki
(Removed non-breaking space character)
(Category:சிறுகதையாசிரியர்கள் சேர்க்கப்பட்டது)
Line 19: Line 19:
[[Category:Spc]]
[[Category:Spc]]
[[Category:எழுத்தாளர்கள்]]
[[Category:எழுத்தாளர்கள்]]
[[Category:சிறுகதையாசிரியர்கள்]]

Revision as of 20:26, 31 December 2022

To read the article in English: Vairavan Le. Ra.. ‎

வைரவன் லெ.ரா (நன்றி: கார்த்திக். கே)

வைரவன் லெ.ரா (ஆகஸ்ட் 6, 1990) நாகர்கோயிலைச் சேர்ந்த எழுத்தாளர். தமிழில் சிறுகதைகள், கட்டுரைகள் எழுதி வருகிறார். தற்போது பெங்களூரில் தகவல் தொழில்நுட்பத் துறையில் பணியாற்றி வருகிறார்.

பிறப்பு,கல்வி

வைரவன் லெ.ரா, ஒழுகினசேரி நாகர்கோயிலில் ஆகஸ்ட் 6, 1990 அன்று லெட்சுமணன்-ராஜலெட்சுமி இணையருக்குப் பிறந்தவர். உயர்நிலை வகுப்புகளை எஸ். எம். ஆர். வி மேல்நிலைப் பள்ளி, வடசேரியிலும் மேல்நிலை வகுப்புகளை டி. வி. டி மேல்நிலைப் பள்ளி, கோட்டாற்றிலும் பயின்றார்.

மின்னணு மற்றும் தகவல் தொடர்பு பட்டயக் கல்வியை காமராஜர் தொழில்நுட்பக் கல்லூரி, பழவிளையில் படித்தார்.கேப் இன்ஸ்டியூட் ஆப் டெக்னாலஜி, லெவிஞ்சிபுரத்தில் இளங்கலை தகவல் தொழில்நுட்பம் பயின்றார்.

தனி வாழ்க்கை

2017-ஆம் வருடம் மீனாவைத் திருமணம் செய்து கொண்டார். மகன் சமீன் லக்சன்.

இலக்கிய வாழ்க்கை

இவரின் முதல் சிறுகதை 2019 பதாகை இணைய இதழில் வெளிவந்தது. இலக்கிய ஆக்கத்தில் நாஞ்சில் நாடன், ஆ. மாதவன், அ. முத்துலிங்கம் ஆகியோரை முன்னோடிகளாகக் கொண்டவர். இவரின் முதல் சிறுகதை தொகுப்பு, பட்டர் -பி & பிற கதைகள் யாவரும் பதிப்பகம் மூலம் 2021-ல் வெளியிடப்பட்டது.

இலக்கிய இடம்

நாஞ்சில் எழுத்தாளனை அவர்களின் முன்னோடிகளே பெரும்பாலும் வழி நடத்துகின்றனர். வைரவனின் கதைப்புலம், மனிதர்கள், நிலம், வட்டார வழக்கில் அந்த நிலத்தின் மனிதர்களே ஊடும் பாவுமாக தங்களை பிணைத்துக்கொண்டுள்ளனர். இவரின் கதைகளை வாசிப்பவர்களுக்கு ஒரு நம்பகமான நிலத்தின் கதையாடல் அனுபவம் கிடைக்கின்றது.

நூல் பட்டியல்

சிறுகதைகள்
  • பட்டர் -பி & பிற கதைகள் (2021)


✅Finalised Page