under review

வடதிருமுல்லைவாயிற் புராணம்: Difference between revisions

From Tamil Wiki
(Moved categories to bottom of article)
Line 41: Line 41:
* [https://shaivam.org/tamil/sta-vada-thirumullaivayil-puranam.pdf திருமுல்லைவாயிற் புராணம் இணையநூலகம். சைவம்]
* [https://shaivam.org/tamil/sta-vada-thirumullaivayil-puranam.pdf திருமுல்லைவாயிற் புராணம் இணையநூலகம். சைவம்]
* [https://tamil.webdunia.com/holy-places/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%A9%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%80%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D-107062500016_2.html வடதிருமுல்லைவாயிற் புராணம்- இணையப்பக்கம்]
* [https://tamil.webdunia.com/holy-places/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%A9%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%80%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D-107062500016_2.html வடதிருமுல்லைவாயிற் புராணம்- இணையப்பக்கம்]
[[Category:Tamil Content]]
 
{{Finalised}}
{{Finalised}}
[[Category:தலபுராணம்]]
[[Category:தலபுராணம்]]
[[Category:Tamil Content]]

Revision as of 15:39, 29 December 2022

வடதிருமுல்லைவாயிற் புராணம்

வடதிருமுல்லைவாயிற் புராணம் (பதிப்பு: 1903) (திருமுல்லைவாயில் புராணம்) சென்னையை அடுத்த திருமுல்லைவாயில் என்னும் ஊரின் தலபுராணம். மகாவித்வான் திருமயிலை சண்முகம் பிள்ளை எழுதிய காவியம்.

எழுத்து வெளியீடு

சென்னையை அடுத்து ஆவடியில் அமைந்துள்ள திருமுல்லைவாசல் என்னும் ஊரில் கோயில்கொண்ட மாசிலாமணீஸ்வரர் ஆலயத்தைப் பற்றிய தலபுராணம் இது. வடதிருமுல்லைவாயிற் புராணம் மகாவித்வான் திருமயிலை சண்முகம் பிள்ளையால் 1898-ல் எழுதப்பட்டது. சென்னை தாம்ஸன் கம்பெனியால் 1903-ல் மினர்வா அச்சகத்தில் பதிப்பிக்கப்பட்டது.

நூல் அமைப்பு

வடதிருமுல்லைவாயிற் புராணம் நாட்டுப்படலம், நகரப்படலம் தவிர 23 படலங்களைக் கொண்டது. இதில் 1,458 பாடல்கள் உள்ளன. 3 முதல் 5 வரையுள்ள படலங்கள் தலவிசேடம். தீர்த்த விசேடம், மூர்த்தி விசேடம் பற்றி எடுத்துரைக்கின்றன.

  1. நாட்டுப்படலம்
  2. நகரப்படலம்
  3. நைமிசப்படலம்
  4. புராணவரலாற்றுப் படலம்
  5. தலவிசேட படலம்
  6. தீர்த்த விசேடப்படலம்
  7. மூர்த்திவிசேடப்படலம்
  8. பிரமன் விழாப்படலம்
  9. குமரநாயகன் வழிபடு படலம்
  10. பிருகுமுனிவர்தவம்செய் படலம்
  11. காமதேனு பெறு படலம்
  12. சந்திரன் கழுவாய் படலம்
  13. அசுவினி வழிபடு படலம்
  14. கதிரவன் துயர்நீங்கு படலம்
  15. குசலவர் பூசனைப் படலம்
  16. துருவாச படலம்
  17. வெள்ளையானை படலம்
  18. இந்திராணி பூசனைப் படலம்
  19. இந்திரன் விழாப்படலம்
  20. சிவபுண்ணியப் படலம்
  21. தேவமித்திரன் கதிபெறு படலம்
  22. சம்புதாசன் கதியடைந்த படலம்
  23. சித்திரசன்மன் கதியைடைந்த படலம்
  24. தொண்டைமான் வழிபடு படலம்
  25. சிவாலய தரிசன விதி படலம்

கதைச்சுருக்கம்

நைமிசாரண்யத்தில் முனிவர்கள் தவம் செய்கையில் அங்கே வியாசரின் மாணவராகிய சூதர் வந்தார். அவர் முனிவர்களுக்கு திருமுல்லைவாயில் புராணத்தைச் சொன்னார். கயிலைமலையில் பார்வதி சிவனிடம் ஊழியிலும் அழியாத தலம் எது என்று கேட்டபோது சிவன் அது திருமுல்லைவாயில் என்னும் ஊரே என்று சொன்னார். அங்கே மானத தீர்த்தம், கனருந்தடம், ஐராவத தீர்த்தம், இஷ்டசித்தி தீர்த்தம், மங்கல தீர்த்தம், அரதனத் தடம், சிவஞான தீர்த்தம், பிரம தீர்த்தம் என்றெல்லாம் அழைக்கப்படும் குளம் உள்ளது. இங்கே சிவன் பினாகதாரியாக பாம்பை அணிந்து அமர்ந்திருக்கிறார். பிரம்மனும் முருகனும் இங்கே சிவனை வழிபட்டனர்.

பிருகுமுனிவர் அங்கே தவம் செய்து பார்வதியிடம் எக்காலத்திலும் அந்நகரில் பஞ்சம் வரலாகாது என வரம்பெற்றார். பஞ்சம் வந்தபோது பிருகு முனிவர் வேண்ட பார்வதி ரத்தின மழையை பெய்யவைத்து அன்னதானம் செய்யும்படி ஆணையிட்டாள். மணிமழை பெய்தமையால் இந்நகருக்கு மணிநகர் என்னும் பெயர் வந்தது. சுக்கிராச்சாரியாரின் சாபம் பெற்ற சந்திரன் தன் பழிநீங்க வழிபட்ட தலங்களில் ஒன்று இது. தக்கனின் யாகத்தில் கலந்துகொண்டமையால் பார்வையிழந்த சூரியன் வழிபட்டு சொல்மீட்சி அடைந்த இடம் இது. ராமனின் மைந்தர்களான குசனும் லவனும் இங்கே வழிபட்டனர், ஆகவே இதற்கு குசலவ புரம் என்னும் பெயர் அமைந்தது. இந்திரனுக்குச் சாபம் அளித்த துர்வாசர் இங்கே வந்து வழிபட்டு சாபம் அளித்த மனவருத்தம் நீங்கப்பெற்றார்.சாபம் பெற்ற இந்திரனின் மீட்புக்காக இந்திராணி இங்கே வழிபட்டாள்.

வாணர்குலத்தைச் சேர்ந்தவர்களாகிய குறும்பர்களை வெல்ல தொண்டைநாட்டை ஆட்சி செய்த தொண்டைமான் படையுடன் வந்து இங்கே தங்கினான். அப்போது சிவன் ஆலயத்து மணி ஓசை கேட்டது. போரில் பைரவ வழிபாட்டாளர்களான வாணர்களிடம் தோற்று திரும்பும்போது தொண்டைமானின் யானையின் கால் முல்லைக்கொடியில் சிக்க அவன் அதை வெட்டியபோது கொடியில் இருந்து ரத்தம் வந்தது. அங்கே சிவலிங்கம் இருப்பதையும் அதில் வெட்டுபட்டிருப்பதையும் உணர்ந்த அவன் தலைநகராகிய காஞ்சியில் இருந்து பொன்கொண்டுவந்து திருமுல்லைவாயில் சிவன் ஆலயத்தை கட்டினான்.

இலக்கிய இடம்

தமிழகம் முழுக்க ஆலயங்களுக்கு பதினெட்டு பத்தொன்பதாம் நூற்றாண்டில் தலபுராணங்கள் இயற்றப்பட்டன. அவற்றில் பெரும்பகுதி கிடைப்பதில்லை. இன்று கிடைக்கும் பத்தொன்பதாம்நூற்றாண்டு தலபுராணங்களில் ஒன்று இது. தலபுராணங்களின் அமைப்பு, மொழி ஆகியவற்றை ஆராய்வதற்கு மிகவும் உதவியானது.

உசாத்துணை


✅Finalised Page