being created

நாச்சியார் திருமொழி: Difference between revisions

From Tamil Wiki
No edit summary
No edit summary
Line 1: Line 1:
நாச்சியார் திருமொழி பன்னிரு ஆழ்வார்களில் ஒருவரான ஆண்டாள் இயற்றிய 113 பாடல்களை கொண்ட நூல். கண்ணனைத் தனது நாயகனாய்க் கொண்டு எழுதப்பட்ட பக்திச்சுவையும் காதல் சுவையும் நிறைந்தது.
நாச்சியார் திருமொழி பன்னிரு ஆழ்வார்களில் ஒருவரான ஆண்டாள் இயற்றிய நாயகி பாவம் கொண்ட  143 பாடல்களைக் கொண்ட நூல். கண்ணன் மேல் ஆண்டாள் கொண்ட காதலையும், அவளது பிரிவாற்றாமையையும்  வெளிப்படுத்துவன. 
 
== ஆசிரியர் ==
நாச்சியார் திருமொழியை இயற்றியவர் பெரியாழ்வாரின் புதல்வியும், பன்னிரு [[ஆழ்வார்கள்|ஆழ்வார்]]களில் ஒரே பெண் ஆழ்வாருமான  [[ஆண்டாள்]].  ஆண்டாள் இயற்றிய இரு பிரபந்தங்களான  [[திருப்பாவை]]யும் நாச்சியார் திருமொழியும்<ref>திருப்பாவை முப்பதுஞ் செப்பினாள் வாழியே
 
ஒருநூற்று நாற்பத்து மூன்றுரைத்தாள் வாழியே”
 
ஆண்டாளின் வாழி திருநாமம் </ref> நாலாயிர திவ்யப் பிரபந்தத்தின் முதலாயிரத்தில் இடம்பெறுகின்றன.'சூடிக் கொடுத்த சுடர்க்கொடி' என அழைக்கப்பட்ட ஆண்டாள் திருமாலின் அவதாரமான கண்ணனின் மேல் கொண்ட பக்தியாலும், காதலாலும்  அவனை அடைய வேண்டி பாவை நோன்பிருந்து இயற்றியது திருப்பாவை.  நாச்சியார் திருமொழி  திருப்பாவை முடிந்த இடத்தில் தொடங்குகிறது என வைணவ அறிஞர்கள் கருதுகின்றனர். நாச்சியார் திருமொழிப் பாசுரங்கள் 143-ம் பக்திப் பனுவல்கள் மட்டுமல்ல; அகப்பொருள் கூறுகளைக் கொண்டவை; இலக்கிய மரபுகளைப் பதிவு செய்துள்ள வரலாற்றுச் சிறப்புக்குரியவை. தமிழரின் வழிபாட்டு முறைகளையும் புலப்படுத்துபவை. பெண்ணின் அகமொழியும், அகவெளியும் பெண் சார்ந்த எந்த வரையறைகளுக்கும் ,ஒழுக்க நியதிகளுக்கும் உட்படாமல் கட்டற்று வெளிப்படும் ஓர் படைப்பாகவும் விளங்குகிறது.
 
== நூல் அமைப்பு ==
நாச்சியார் திருமொழியில் உள்ள 143 பாசுரங்களை 14 பதிகங்களாக ஆண்டாள் இயற்றியுள்ளார்.  143 பாடல்களும் அறுசீர், எழுசீர், எண்சீர் கழிநெடிலடி ஆசிரியப்பாக்களாலும் கலிப்பாக்களாலும் ஆனவை. காமனிடம் வேண்டுதல் ,  கண்ணனுக்கு அவள் விடும் மேக தூது, குயில் தூது , அழகருக்குப் பாடிய பாடல்கள் ,திருமணக் கனவு , பிரிவாற்றாமை , வேதனை, தன்னை பிருந்தாவனத்திலோ, துவாரகையிலோ கண்ணன் இருக்குமிடம் சென்று சேர்க்கும்படி  உற்றாரிடம் வேண்டல்
 
நினைவு தெரிந்த நாள் முதல் ,ஆண்டாளின் மனதில் வளர்த்தெடுக்கப்பட்ட கண்ணபிம்பம்,விளையாட்டுத்தோழனாய், குறும்புக்கார சிறுவனாய் ,மாயங்கள் பல புரியும் சாகசக்காரனாய் என்று பல வடிவங்கள் எடுத்துக்கொண்டே சென்று, அவளின் இளமை உணர்வுகள்விழித்துக்கொண்ட நிலையில்,'காதலன்',மணாளன்' என்ற உச்சங்களை எட்டுகிறது.
 
===== தையுறு திங்களும்-முதல்பத்து =====
தை முதல் நாளில் காமனைத் தொழுது, நோன்பிருந்து கண்ணனுடன் இணைய வேண்டும் என்ற  வரத்தைக் கோரும் பத்து பாடல்கள் அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரியப் பாக்களாக அமைந்தவை.
 
# முதற் பத்துப் பாடல்கள், கண்ணனை இணக்கு எனக் காமனைத் தொழும் பாங்கில் அமைந்தவை. இவை அறுசீர் ஆசிரிய விருத்தப் பாடல்களாக அமைந்துள்ளன.
# இரண்டாம் பத்து, சிறுமியர் மயனைத் தம் சிற்றில் சிதையேல் எனக் கேட்கும் வகையில் அமைந்தவை. இப் பாடல்கள் கலிவிருத்தங்களாக அமைந்தவை.
# கன்னியரோடு கண்ணன் விளையாடுவதைக் கூறும் பாங்கில் அமைந்ததது மூன்றாம் பத்து. இப் பாடல்கள் அறுசீர் ஆசிரிய விருத்தப் பாடல்கள்.
# நான்காம் பத்துப் பாடல்கள் கூடல் குறிப்புப் பற்றியவை. இவை கலிவிருத்தப் பாடல்களால் இயற்றப்பட்டுள்ளன.
# குயிற்பத்து என்னும் குயிலை விளித்துப் பாடும் பாடல்களாக அமைந்துள்ளவை ஐந்தாம் பத்தைச் சேர்ந்த பாடல்கள். இவை எழுசீர் ஆசிரிய விருத்தங்களாக அமைந்துள்ளன.
# மாயவன் தன்னை மணஞ்செய்யக் கண்ட கனவைத் தோழிக்கு உரைப்பதாக அமைந்த பாடல்கள் ஆறாம் பத்தில் அமைந்துள்ளன. இவையும் கலிவிருத்தப் பாடல்கள் ஆகும்.
# ஏழாம் பத்து, பாஞ்சசன்னியத்தைப் பதுமநாபனோடும் சுற்றமாக்கல் என்னும் தலைப்பில் அமைந்தவை. கலிவிருத்தப் பாடல்கள்.
# மேகவிடுதூதாக அமைந்த எட்டாம் பத்து தரவுக் கொச்சகக் கலிப்ப்பா எனும் பாவகையில் ஆக்கப்பட்டுள்ளது.
# ஒன்பதாம் பத்தில் திருமாலிருஞ்சோலை எம்பெருமானை வழிபடும் பாங்கிலான பாடல்கள் அமைந்துள்லன. இவை கலிநிலைத்துறை எனும் பாவகையில் உள்ளன.
# மாற்செய் வகையோடு மாற்றம் இயம்பல் என்னும் தலைப்பில் அமைந்த பாடல்களைக் கொண்ட பத்தாம் பத்து, கலிநிலைத்துறை எனும் பாவகையைச் சேர்ந்தது.
# திருவரங்கத்துச் செல்வனைக் காமுறுவதாக அமைந்த பதினோராம் பத்துப் பாடல்கள் தரவுக் கொச்சக் கலிப்பா வகையைச் சேர்ந்தவை.
# பன்னிரண்டாம் பத்துப் பாடல்கள் சீதரனிருந்துழிச் செலுத்துவீர் எனை எனக் கோதை தமர்க்குக் கூறிய துணிபு எனும் தலைப்பில் அறுசீர் ஆசிரிய விருத்தங்களால் ஆனவை.
# அவலம் தணி என இறைவனைக் கோரும் பதின்மூன்றாம் பத்தும் அறுசீர் ஆசிரிய விருத்தப்பாக்களால் ஆனவையே.
# பிருந்தாவனத்தே பரந்தாமனைக் கண்டது பற்றிக்கூறும் இறுதிப் பாடல்களும் அறுசீர் ஆசிரிய விருத்தப் பாக்களே.
 





Revision as of 14:09, 26 December 2022

நாச்சியார் திருமொழி பன்னிரு ஆழ்வார்களில் ஒருவரான ஆண்டாள் இயற்றிய நாயகி பாவம் கொண்ட 143 பாடல்களைக் கொண்ட நூல். கண்ணன் மேல் ஆண்டாள் கொண்ட காதலையும், அவளது பிரிவாற்றாமையையும் வெளிப்படுத்துவன.

ஆசிரியர்

நாச்சியார் திருமொழியை இயற்றியவர் பெரியாழ்வாரின் புதல்வியும், பன்னிரு ஆழ்வார்களில் ஒரே பெண் ஆழ்வாருமான ஆண்டாள். ஆண்டாள் இயற்றிய இரு பிரபந்தங்களான திருப்பாவையும் நாச்சியார் திருமொழியும்[1] நாலாயிர திவ்யப் பிரபந்தத்தின் முதலாயிரத்தில் இடம்பெறுகின்றன.'சூடிக் கொடுத்த சுடர்க்கொடி' என அழைக்கப்பட்ட ஆண்டாள் திருமாலின் அவதாரமான கண்ணனின் மேல் கொண்ட பக்தியாலும், காதலாலும் அவனை அடைய வேண்டி பாவை நோன்பிருந்து இயற்றியது திருப்பாவை. நாச்சியார் திருமொழி திருப்பாவை முடிந்த இடத்தில் தொடங்குகிறது என வைணவ அறிஞர்கள் கருதுகின்றனர். நாச்சியார் திருமொழிப் பாசுரங்கள் 143-ம் பக்திப் பனுவல்கள் மட்டுமல்ல; அகப்பொருள் கூறுகளைக் கொண்டவை; இலக்கிய மரபுகளைப் பதிவு செய்துள்ள வரலாற்றுச் சிறப்புக்குரியவை. தமிழரின் வழிபாட்டு முறைகளையும் புலப்படுத்துபவை. பெண்ணின் அகமொழியும், அகவெளியும் பெண் சார்ந்த எந்த வரையறைகளுக்கும் ,ஒழுக்க நியதிகளுக்கும் உட்படாமல் கட்டற்று வெளிப்படும் ஓர் படைப்பாகவும் விளங்குகிறது.

நூல் அமைப்பு

நாச்சியார் திருமொழியில் உள்ள 143 பாசுரங்களை 14 பதிகங்களாக ஆண்டாள் இயற்றியுள்ளார். 143 பாடல்களும் அறுசீர், எழுசீர், எண்சீர் கழிநெடிலடி ஆசிரியப்பாக்களாலும் கலிப்பாக்களாலும் ஆனவை. காமனிடம் வேண்டுதல் ,  கண்ணனுக்கு அவள் விடும் மேக தூது, குயில் தூது , அழகருக்குப் பாடிய பாடல்கள் ,திருமணக் கனவு , பிரிவாற்றாமை , வேதனை, தன்னை பிருந்தாவனத்திலோ, துவாரகையிலோ கண்ணன் இருக்குமிடம் சென்று சேர்க்கும்படி உற்றாரிடம் வேண்டல்

நினைவு தெரிந்த நாள் முதல் ,ஆண்டாளின் மனதில் வளர்த்தெடுக்கப்பட்ட கண்ணபிம்பம்,விளையாட்டுத்தோழனாய், குறும்புக்கார சிறுவனாய் ,மாயங்கள் பல புரியும் சாகசக்காரனாய் என்று பல வடிவங்கள் எடுத்துக்கொண்டே சென்று, அவளின் இளமை உணர்வுகள்விழித்துக்கொண்ட நிலையில்,'காதலன்',மணாளன்' என்ற உச்சங்களை எட்டுகிறது.

தையுறு திங்களும்-முதல்பத்து

தை முதல் நாளில் காமனைத் தொழுது, நோன்பிருந்து கண்ணனுடன் இணைய வேண்டும் என்ற வரத்தைக் கோரும் பத்து பாடல்கள் அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரியப் பாக்களாக அமைந்தவை.

  1. முதற் பத்துப் பாடல்கள், கண்ணனை இணக்கு எனக் காமனைத் தொழும் பாங்கில் அமைந்தவை. இவை அறுசீர் ஆசிரிய விருத்தப் பாடல்களாக அமைந்துள்ளன.
  2. இரண்டாம் பத்து, சிறுமியர் மயனைத் தம் சிற்றில் சிதையேல் எனக் கேட்கும் வகையில் அமைந்தவை. இப் பாடல்கள் கலிவிருத்தங்களாக அமைந்தவை.
  3. கன்னியரோடு கண்ணன் விளையாடுவதைக் கூறும் பாங்கில் அமைந்ததது மூன்றாம் பத்து. இப் பாடல்கள் அறுசீர் ஆசிரிய விருத்தப் பாடல்கள்.
  4. நான்காம் பத்துப் பாடல்கள் கூடல் குறிப்புப் பற்றியவை. இவை கலிவிருத்தப் பாடல்களால் இயற்றப்பட்டுள்ளன.
  5. குயிற்பத்து என்னும் குயிலை விளித்துப் பாடும் பாடல்களாக அமைந்துள்ளவை ஐந்தாம் பத்தைச் சேர்ந்த பாடல்கள். இவை எழுசீர் ஆசிரிய விருத்தங்களாக அமைந்துள்ளன.
  6. மாயவன் தன்னை மணஞ்செய்யக் கண்ட கனவைத் தோழிக்கு உரைப்பதாக அமைந்த பாடல்கள் ஆறாம் பத்தில் அமைந்துள்ளன. இவையும் கலிவிருத்தப் பாடல்கள் ஆகும்.
  7. ஏழாம் பத்து, பாஞ்சசன்னியத்தைப் பதுமநாபனோடும் சுற்றமாக்கல் என்னும் தலைப்பில் அமைந்தவை. கலிவிருத்தப் பாடல்கள்.
  8. மேகவிடுதூதாக அமைந்த எட்டாம் பத்து தரவுக் கொச்சகக் கலிப்ப்பா எனும் பாவகையில் ஆக்கப்பட்டுள்ளது.
  9. ஒன்பதாம் பத்தில் திருமாலிருஞ்சோலை எம்பெருமானை வழிபடும் பாங்கிலான பாடல்கள் அமைந்துள்லன. இவை கலிநிலைத்துறை எனும் பாவகையில் உள்ளன.
  10. மாற்செய் வகையோடு மாற்றம் இயம்பல் என்னும் தலைப்பில் அமைந்த பாடல்களைக் கொண்ட பத்தாம் பத்து, கலிநிலைத்துறை எனும் பாவகையைச் சேர்ந்தது.
  11. திருவரங்கத்துச் செல்வனைக் காமுறுவதாக அமைந்த பதினோராம் பத்துப் பாடல்கள் தரவுக் கொச்சக் கலிப்பா வகையைச் சேர்ந்தவை.
  12. பன்னிரண்டாம் பத்துப் பாடல்கள் சீதரனிருந்துழிச் செலுத்துவீர் எனை எனக் கோதை தமர்க்குக் கூறிய துணிபு எனும் தலைப்பில் அறுசீர் ஆசிரிய விருத்தங்களால் ஆனவை.
  13. அவலம் தணி என இறைவனைக் கோரும் பதின்மூன்றாம் பத்தும் அறுசீர் ஆசிரிய விருத்தப்பாக்களால் ஆனவையே.
  14. பிருந்தாவனத்தே பரந்தாமனைக் கண்டது பற்றிக்கூறும் இறுதிப் பாடல்களும் அறுசீர் ஆசிரிய விருத்தப் பாக்களே.






🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.

  1. திருப்பாவை முப்பதுஞ் செப்பினாள் வாழியே ஒருநூற்று நாற்பத்து மூன்றுரைத்தாள் வாழியே” ஆண்டாளின் வாழி திருநாமம்