being created

கலைச்செல்வி: Difference between revisions

From Tamil Wiki
No edit summary
Line 1: Line 1:
[[File:Writer kalaiselvi.jpg|thumb|கலைச்செல்வி]]

கலைச்செல்வி (பி- 1972) ஒரு தமிழ் எழுத்தாளர். சிறுகதைகள், நாவல்கள் எழுதி வருகிறார். காந்தியின் வாழ்க்கையை அடிப்படையாக கொண்ட அவரது கதைகள் பரவலாக கவனிக்கப்பட்டன.
கலைச்செல்வி (பிறப்பு: 1972) தமிழ் எழுத்தாளர். சிறுகதைகள், நாவல்கள் எழுதி வருகிறார். காந்தியின் வாழ்க்கையை அடிப்படையாக கொண்ட அவரது கதைகள் பரவலாக கவனிக்கப்பட்டன.
== பிறப்பு, கல்வி ==
== பிறப்பு, கல்வி ==
எல். சுப்ரமணியன் - எஸ். ராஜேஸ்வரி இணையருக்கு மகளாக நெய்வேலியில் 1972 ஆம் ஆண்டு பிறந்தார். அவரது தந்தை நெய்வேலி லிக்னைட் கார்பரேஷனில் உயரதிகாரியாக பணியாற்றியவர். நெய்வேலி என்.எல்.சி பெண்கள் மேல்நிலை பள்ளியில் படித்தார். சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் வணிகவியல் இளங்கலை பயின்றார்.
கலைச்செல்வி நெய்வேலியில் எல். சுப்ரமணியன், எஸ். ராஜேஸ்வரி இணையருக்கு மகளாக 1972-ல் பிறந்தார். தந்தை நெய்வேலி லிக்னைட் கார்பரேஷனில் உயரதிகாரியாக பணியாற்றியவர். நெய்வேலி என்.எல்.சி பெண்கள் மேல்நிலை பள்ளியில் படித்தார். சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் வணிகவியல் இளங்கலை பயின்றார்.
== தனி வாழ்க்கை ==
== தனி வாழ்க்கை ==
  25.10.95 அன்று எஸ்.கோவிந்தராஜுவை மணந்தார். குவாரி மற்றும் அரவை ஆலை தொழில் சொந்தமாக செய்து வருகிறார். இரண்டு மகள்கள் ஜி.ஷன்மதி, ஜி.சுருதி. தற்போது திருச்சியில் பொதுப்பணித்துறையில் நேர்முக உதவியாளராக பணிப்புரிகிறார்.
கலைச்செல்வி அக்டோபர் 25, 1995 அன்று எஸ்.கோவிந்தராஜுவை மணந்தார். கோவிந்தராஜு குவாரி மற்றும் அரவை ஆலை தொழில் சொந்தமாக செய்து வருகிறார். இரண்டு மகள்கள் ஜி. ஷன்மதி, ஜி. சுருதி. கலைச்செல்வி திருச்சியில் பொதுப்பணித்துறையில் நேர்முக உதவியாளராக உள்ளார்.
== இலக்கிய வாழ்க்கை ==
== இலக்கிய வாழ்க்கை ==
2012 ஆம் ஆண்டு தினமணி - நெய்வேலி புத்தக கண்காட்சி சிறுகதை போட்டிக்காக எழுதி அதில் இரண்டாம் பரிசு பெற்ற  'வைதேகி காத்திருந்தாள்' அவரது முதல் சிறுகதை. சிறுகதைகள், நாவல்கள் என தொடர்ந்து எழுதி வந்தவர் காந்தியின் மீது தனது ஈடுபாடே கண்டுகொண்டார். காந்தியை கதை மாந்தராக கொண்டு சிறுகதைகளும், காந்திக்கும் அவரது மூத்த மகன் ஹரிலாலுக்கும் இடையேயான உறவை அடிப்படையாக கொண்ட நாவலையும் எழுதியுள்ளார்.
கலைச்செல்வியின் முதல் சிறுகதை 2012ஆம் ஆண்டு தினமணி-நெய்வேலி புத்தக கண்காட்சி சிறுகதை போட்டிக்காக எழுதி அதில் இரண்டாம் பரிசு பெற்ற 'வைதேகி காத்திருந்தாள்'. சிறுகதைகள், நாவல்கள் எழுதினார். காந்தியை கதை மாந்தராகக் கொண்டு சிறுகதைகளும், காந்திக்கும் அவரது மூத்த மகன் ஹரிலாலுக்கும் இடையேயான உறவை அடிப்படையாக கொண்ட நாவலையும் எழுதினார்.
== இலக்கிய இடம் ==
== இலக்கிய இடம் ==
சக்கை, கல்லுடைக்கும் தொழிலாளிகளை பற்றிய கதை. பழங்குடியினர் மீதான ஆதிக்கம் , காடழிப்பு ஆகியவற்றை பேசுபொருளாக கொண்டது அவரது அற்றைத் திங்கள் நாவல். புனிதம் பெண்ணிய நாவல் என வரையறுக்கலாம். கலைச்செல்வி தன்னை பெண்ணிய படைப்பாளியாக கருதவில்லை. படைப்புக்கு பால் அடையாளம் தேவையில்லை என கருதுகிறார். தன்னை அறம் சார்ந்த படைப்பாளியாகவே முன்வைக்கிறார். அகம் சார்ந்த கதை களங்களை எழுதினாலும், வரலாற்று ஆய்வுகள் வழி புற தகவல்கள் செறிவான புனைவுகளை எழுதி வருகிறார். கலைச்செல்வியின் எழுத்து பற்றி [[பாவண்ணன்]] "பொருட்படுத்தி வாசிக்கும் விதத்தில் தொடர்ந்து சிறுகதைகள் எழுதிவரும் படைப்பாளி கலைச்செல்வி அசலான வாழ்வனுபவங்கள் சார்ந்து மானுட மன ஆழத்தைத் தொட முனையும் விழைவை அவர் கதைகள் புலப்படுத்துகின்றன. அவர் கதைகளில் சித்தரிக்கப்படும் எல்லாச் சம்பவங்களும் மிக இயல்பான முறையில் பொருந்தி, கதைகளுக்கு ஒருவித நம்பகத்தன்மையை வழங்குகின்றன. கச்சிதமாக வடிவமைக்கப்பட்ட ஆடைகளென கதைகளின் வடிவம் கலைச்செல்விக்கு மிக இயல்பாகவே கை வந்திருக்கிறது" என்று மதிப்பிடுகிறார்.<ref>http://tamilonline.com/thendral/article.aspx?aid=15027</ref>

காந்தியையே தனது ஆதர்ச எழுத்தாளராகவும் முன்வைக்கிறார். அவரது கதைகள் காந்தியை உணர்வுகளுக்கு இடையே ஊசலாடும் சாமானிய மனிதராக சித்தரிக்கிறது. அதன்வழி அவரது வாழ்வின் அசாதாரணதன்மையை மேலும் பெரிதாக காட்டுகிறது. தமிழில் காந்தியை கதை மாந்தராக கொண்டு முழு நீள நாவல்கள் அரிதாகவே வந்துள்ளன. மாலனின் 'ஜனகனமன' சரவணா கார்த்திகேயனின் 'ஆப்பிளுக்கு முன்' ஆகியவற்றை சொல்லலாம். 'ஹரிலால்' அவ்வகையில் ஒரு முக்கிய ஆக்கம். மேலும் காந்தியை கதை மாந்தராக கொண்டு அதிக கதைகளை தமிழில் எழுதியவரும் கலைச்செல்விதான்.   

== விருதுகள் ==
* ஸ்பேரா விருது (2021)
* இலக்கிய சிந்தனை விருது (2018)
* கணையாழி சிறுகதைக்கான பிரிவு
* (வடுவூர்புலவர் க.சீதாராமன் நினைவுபரிசு) (2017)
* திருப்பூர் அரிமா சங்கம்- சக்தி விருது (2016)
* கலையிலக்கிய பெருமன்ற சிறந்த நாவல் பரிசு- சக்கை நாவலுக்கு (2016)
* 'புனிதம்' நாவல் 'எழுத்து' நாவல் போட்டியில் சிறந்த நாவலாக தேர்ந்தெடுக்கப்பட்டு பதிப்பிக்கப்பட்டது 
== நூல் பட்டியல் ==
== நூல் பட்டியல் ==
=== சிறுகதைத் தொகுப்புகள் ===
=== சிறுகதைத் தொகுப்புகள் ===
Line 26: Line 34:
=== அபுனைவு ===
=== அபுனைவு ===
* ஏற்றத்துக்கான மாற்றம்- (பொதுப்பணித்துறை 2015)

== விருது/ பரிசு ==
* ஸ்பேரா விருது- 2021
* இலக்கிய சிந்தனை விருது- 2018
* கணையாழி சிறுகதைக்கான பிரிவு
* (வடுவூர்புலவர் க.சீதாராமன் நினைவுபரிசு)- 2017
* திருப்பூர் அரிமா சங்கம்- சக்தி விருது 2016
* கலையிலக்கிய பெருமன்ற சிறந்த நாவல் பரிசு- சக்கை நாவலுக்கு 2016
* 'புனிதம்' நாவல் 'எழுத்து' நாவல் போட்டியில் சிறந்த நாவலாக தேர்ந்தெடுக்கப்பட்டு பதிப்பிக்கப்பட்டது
== உசாத்துணை ==
== உசாத்துணை ==
* [http://tamilonline.com/thendral/article.aspx?aid=15027 தென்றல் இதழில் கலைச்செல்வி]

Revision as of 12:18, 24 December 2022

கலைச்செல்வி

கலைச்செல்வி (பிறப்பு: 1972) தமிழ் எழுத்தாளர். சிறுகதைகள், நாவல்கள் எழுதி வருகிறார். காந்தியின் வாழ்க்கையை அடிப்படையாக கொண்ட அவரது கதைகள் பரவலாக கவனிக்கப்பட்டன.

பிறப்பு, கல்வி

கலைச்செல்வி நெய்வேலியில் எல். சுப்ரமணியன், எஸ். ராஜேஸ்வரி இணையருக்கு மகளாக 1972-ல் பிறந்தார். தந்தை நெய்வேலி லிக்னைட் கார்பரேஷனில் உயரதிகாரியாக பணியாற்றியவர். நெய்வேலி என்.எல்.சி பெண்கள் மேல்நிலை பள்ளியில் படித்தார். சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் வணிகவியல் இளங்கலை பயின்றார்.

தனி வாழ்க்கை

கலைச்செல்வி அக்டோபர் 25, 1995 அன்று எஸ்.கோவிந்தராஜுவை மணந்தார். கோவிந்தராஜு குவாரி மற்றும் அரவை ஆலை தொழில் சொந்தமாக செய்து வருகிறார். இரண்டு மகள்கள் ஜி. ஷன்மதி, ஜி. சுருதி. கலைச்செல்வி திருச்சியில் பொதுப்பணித்துறையில் நேர்முக உதவியாளராக உள்ளார்.

இலக்கிய வாழ்க்கை

கலைச்செல்வியின் முதல் சிறுகதை 2012ஆம் ஆண்டு தினமணி-நெய்வேலி புத்தக கண்காட்சி சிறுகதை போட்டிக்காக எழுதி அதில் இரண்டாம் பரிசு பெற்ற 'வைதேகி காத்திருந்தாள்'. சிறுகதைகள், நாவல்கள் எழுதினார். காந்தியை கதை மாந்தராகக் கொண்டு சிறுகதைகளும், காந்திக்கும் அவரது மூத்த மகன் ஹரிலாலுக்கும் இடையேயான உறவை அடிப்படையாக கொண்ட நாவலையும் எழுதினார்.

இலக்கிய இடம்

சக்கை, கல்லுடைக்கும் தொழிலாளிகளை பற்றிய கதை. பழங்குடியினர் மீதான ஆதிக்கம் , காடழிப்பு ஆகியவற்றை பேசுபொருளாக கொண்டது அவரது அற்றைத் திங்கள் நாவல். புனிதம் பெண்ணிய நாவல் என வரையறுக்கலாம். கலைச்செல்வி தன்னை பெண்ணிய படைப்பாளியாக கருதவில்லை. படைப்புக்கு பால் அடையாளம் தேவையில்லை என கருதுகிறார். தன்னை அறம் சார்ந்த படைப்பாளியாகவே முன்வைக்கிறார். அகம் சார்ந்த கதை களங்களை எழுதினாலும், வரலாற்று ஆய்வுகள் வழி புற தகவல்கள் செறிவான புனைவுகளை எழுதி வருகிறார். கலைச்செல்வியின் எழுத்து பற்றி பாவண்ணன் "பொருட்படுத்தி வாசிக்கும் விதத்தில் தொடர்ந்து சிறுகதைகள் எழுதிவரும் படைப்பாளி கலைச்செல்வி அசலான வாழ்வனுபவங்கள் சார்ந்து மானுட மன ஆழத்தைத் தொட முனையும் விழைவை அவர் கதைகள் புலப்படுத்துகின்றன. அவர் கதைகளில் சித்தரிக்கப்படும் எல்லாச் சம்பவங்களும் மிக இயல்பான முறையில் பொருந்தி, கதைகளுக்கு ஒருவித நம்பகத்தன்மையை வழங்குகின்றன. கச்சிதமாக வடிவமைக்கப்பட்ட ஆடைகளென கதைகளின் வடிவம் கலைச்செல்விக்கு மிக இயல்பாகவே கை வந்திருக்கிறது" என்று மதிப்பிடுகிறார்.[1]

காந்தியையே தனது ஆதர்ச எழுத்தாளராகவும் முன்வைக்கிறார். அவரது கதைகள் காந்தியை உணர்வுகளுக்கு இடையே ஊசலாடும் சாமானிய மனிதராக சித்தரிக்கிறது. அதன்வழி அவரது வாழ்வின் அசாதாரணதன்மையை மேலும் பெரிதாக காட்டுகிறது. தமிழில் காந்தியை கதை மாந்தராக கொண்டு முழு நீள நாவல்கள் அரிதாகவே வந்துள்ளன. மாலனின் 'ஜனகனமன' சரவணா கார்த்திகேயனின் 'ஆப்பிளுக்கு முன்' ஆகியவற்றை சொல்லலாம். 'ஹரிலால்' அவ்வகையில் ஒரு முக்கிய ஆக்கம். மேலும் காந்தியை கதை மாந்தராக கொண்டு அதிக கதைகளை தமிழில் எழுதியவரும் கலைச்செல்விதான். 

விருதுகள்

  • ஸ்பேரா விருது (2021)
  • இலக்கிய சிந்தனை விருது (2018)
  • கணையாழி சிறுகதைக்கான பிரிவு
  • (வடுவூர்புலவர் க.சீதாராமன் நினைவுபரிசு) (2017)
  • திருப்பூர் அரிமா சங்கம்- சக்தி விருது (2016)
  • கலையிலக்கிய பெருமன்ற சிறந்த நாவல் பரிசு- சக்கை நாவலுக்கு (2016)
  • 'புனிதம்' நாவல் 'எழுத்து' நாவல் போட்டியில் சிறந்த நாவலாக தேர்ந்தெடுக்கப்பட்டு பதிப்பிக்கப்பட்டது 

நூல் பட்டியல்

சிறுகதைத் தொகுப்புகள்

  • வலி (காவ்யா 2015)
  • இரவு (நியூசெஞ்சுரி புத்தகநிலையம் 2016)
  • சித்ராவுக்கு ஆங்கிலம் தெரியாது (வாசகசாலை பதிப்பகம் 2017)
  • மாயநதி (யாவரும் பதிப்பகம் 2018)
  • கூடு (யாவரும் பதிப்பகம் 2020)

நாவல்கள்

  • சக்கை (நியூசெஞ்சுரி புத்தகநிலையம் 2015)
  • புனிதம் (எழுத்து பதிப்பகம் 2016)
  • அற்றைத்திங்கள் (யாவரும் பதிப்பகம் 2017)
  • ஆலகாலம் (யாவரும் பதிப்பகம் 2022)
  • ஹரிலால் த/பெ மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி (தன்னறம் நுால்வெளி 2022)

அபுனைவு

  • ஏற்றத்துக்கான மாற்றம்- (பொதுப்பணித்துறை 2015)

உசாத்துணை

குறிப்புகள்

🔏Being Created

Please do not write any content below this line. This section is only for editing templates & categories.