standardised

உதுமான் லெப்பை மஷாயிக்: Difference between revisions

From Tamil Wiki
No edit summary
Line 3: Line 3:

== பிறப்பு, இளமை ==
== பிறப்பு, இளமை ==
உதுமான் லெப்பை மஷாயிக் முகமது நபி (ஸல்) யின் இருபத்து ஏழாவது தலைமுறையில் தோன்றியவர். இவர் ஹிஜ்ரி 12-ஆம் நூற்றாண்டில் அரபு நாட்டிலிருந்து கொச்சி வந்து அங்கிருந்து இஸ்லாமியப் பிரச்சாரம் செய்தவண்ணம் நாகர்கோயில் கோட்டாறை வந்தடைந்து அங்குச் சிலகாலம் தங்கியிருந்த பின்னர் அங்கிருந்து ஐந்து கல் தொலைவிலுள்ள திட்டுவிளை என்னும் ஊரில் வந்து தங்கினார். அவ்வூர் மக்கள் இவர்களை ‘அப்பச்சி அப்பா’ என்று அன்புடன் அழைத்தனர். இவர்கள் அரபு நாட்டிலிருந்து கொச்சிக்கு வந்த விபரம் ஷாம் ஷிஹாபுத்தீன் வலியுல்லாற் அவர்கள் எழுதிய ஒரு பாடலிலிருந்து தெரியவருகிறது.
உதுமான் லெப்பை மஷாயிக் முகமது நபி (ஸல்) யின் இருபத்து ஏழாவது தலைமுறையில் தோன்றியவர். இவர் ஹிஜ்ரி 12-ஆம் நூற்றாண்டில் அரபு நாட்டிலிருந்து கொச்சி வந்து அங்கிருந்து இஸ்லாமியப் பிரச்சாரம் செய்தவண்ணம் நாகர்கோயில் கோட்டாறை வந்தடைந்து அங்குச் சிலகாலம் தங்கியிருந்த பின்னர் அங்கிருந்து ஐந்து கல் தொலைவிலுள்ள திட்டுவிளை என்னும் ஊரில் வந்து தங்கினார். அவ்வூர் மக்கள் இவர்களை ‘அப்பச்சி அப்பா’ என்று அன்புடன் அழைத்தனர். இவர்கள் அரபு நாட்டிலிருந்து கொச்சிக்கு வந்த விபரம் ஷாம் ஷிஹாபுத்தீன் வலியுல்லாஹ் அவர்கள் எழுதிய ஒரு பாடலிலிருந்து தெரியவருகிறது.

== தனிவாழ்க்கை ==
== தனிவாழ்க்கை ==

Revision as of 10:46, 10 February 2022

திட்டுவிளை வாகையடி பக்கீர் பாவா தர்கா

உதுமான் லெப்பை மஷாயிக் கன்னியாகுமரி மாவட்டம் திட்டுவிளை என்னும் ஊரில் அடங்கப்பெற்றிருக்கும் இஸ்லாமிய மதஞானி. திட்டுவிளை அப்பச்சி அப்பா என இவர் அழைக்கப்படுகிறார்

பிறப்பு, இளமை

உதுமான் லெப்பை மஷாயிக் முகமது நபி (ஸல்) யின் இருபத்து ஏழாவது தலைமுறையில் தோன்றியவர். இவர் ஹிஜ்ரி 12-ஆம் நூற்றாண்டில் அரபு நாட்டிலிருந்து கொச்சி வந்து அங்கிருந்து இஸ்லாமியப் பிரச்சாரம் செய்தவண்ணம் நாகர்கோயில் கோட்டாறை வந்தடைந்து அங்குச் சிலகாலம் தங்கியிருந்த பின்னர் அங்கிருந்து ஐந்து கல் தொலைவிலுள்ள திட்டுவிளை என்னும் ஊரில் வந்து தங்கினார். அவ்வூர் மக்கள் இவர்களை ‘அப்பச்சி அப்பா’ என்று அன்புடன் அழைத்தனர். இவர்கள் அரபு நாட்டிலிருந்து கொச்சிக்கு வந்த விபரம் ஷாம் ஷிஹாபுத்தீன் வலியுல்லாஹ் அவர்கள் எழுதிய ஒரு பாடலிலிருந்து தெரியவருகிறது.

தனிவாழ்க்கை

இவர் திட்டுவிளையிலேயே திருமணம் முடித்து வாழ்ந்தார். இவரு மூன்று ஆண்மகள். அவர்களில் மூத்தவரான ஷைகு மீரானிடம், “உனக்கு ஓர் ஆண் மகவு பிறக்கும். அதற்கு என் பெயரை இட வேண்டும்’ என்று இவர் கூறினார் என்றும் அந்த மகனே கடையநல்லூரில் அடங்கப்பெற்றிருக்கும் ஷைகு உதுமான் வலி என்றும் கூறப்படுகிறது.

மதப்பணி

திட்டுவிளையில் இவர் கட்டிய ‘ஜும்ஆ மஸ்ஜித்’ உள்ளது. திட்டுவிளை வாகையடி பக்கீர் பாவா தர்கா என இவர் அடக்கத்தலம் அழைக்கப்படுகிறது

மறைவு

ஜமாதுல் ஆகிர்பிறை 16-ல் இவர்கள் நல்லடக்கம் செய்யப்பட்டிருக்கும் ஜும் ஆ மஸ்ஜிதின் அருகிலுள்ள  தர்காவில் மௌலீது ஓதப்பட்டு கொண்டாடப்படுகிறது.

உசாத்துணை

⨮ Standardised

Please do not write any content below this line. This section is only for editing templates & categories.