being created

தேவதச்சன்: Difference between revisions

From Tamil Wiki
(Category:கவிஞர்கள் சேர்க்கப்பட்டது)
(Removed non-breaking space character)
Line 1: Line 1:
[[File:தேவதச்சன்.jpg|alt=தேவதச்சன்|thumb|தேவதச்சன்]]

தேவதச்சன் (நவம்பர் 6, 1952) தமிழ் கவிஞர். தேவதச்சனின் கவிதைகள் நாம் தினசரி வாழ்வில் தொட்டு அறியக்கூடிய ஒவ்வொன்றிலும் இப்புடவியின் ரகசியங்களை  திறந்து பார்ப்பவையாக உள்ளன.  

== பிறப்பு, இளமை ==
== பிறப்பு, இளமை ==
Line 15: Line 15:

== இலக்கிய இடம் ==
== இலக்கிய இடம் ==
தேவதச்சனின் கவிதைகள் இங்குள்ள ஒவ்வொன்றிலும் வெளிப்படும் முடிவிலி ஒன்றை மொழிவழியாகக் காட்ட முயல்பவை. அது  அபத்தங்களைக் கொண்டாடும் நுண்ணுணர்வு கொண்டதாகவும்  தர்க்கத்தை காலிடறிவிடுவதில் குதூகலிக்கும் தன்மைகொண்டதாகவும் உள்ளது.

அவரவர் கை மணல் என்ற பெயரில் வந்த தேவதச்சனின் முதற் கவிதைத் தொகுப்பிலுள்ள பல கவிதைகளை முதல் பார்வையில் இருத்தலிய நோக்கு கொண்டவை என்று சொல்லலாம். தலைப்பே சுட்டுவது போல அது தனி மனிதனின் அகஅலைவை பெரிதும் பேசும் கவிதைகளால் ஆனது. ஆனால் அத்தொகுப்பின் கவிதைகள் எவையும் அன்றைய நவீனத்துவ- இருத்தலியத்தின் எதிர்மறை பண்புகள் படியாமல் இருந்தவை. அதற்கு தேவதச்சனின் ஜென் பாதிப்பு காரணமாக இருக்கலாம்.

Revision as of 14:51, 31 December 2022

தேவதச்சன்
தேவதச்சன்

தேவதச்சன் (நவம்பர் 6, 1952) தமிழ் கவிஞர். தேவதச்சனின் கவிதைகள் நாம் தினசரி வாழ்வில் தொட்டு அறியக்கூடிய ஒவ்வொன்றிலும் இப்புடவியின் ரகசியங்களை திறந்து பார்ப்பவையாக உள்ளன.

பிறப்பு, இளமை

தேவதச்சன், நவம்பர் 6, 1952 ல் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் எம். எஸ். ஏ. சேதுராமலிங்கம், சாரதா தம்பதியருக்கு பிறந்தவர். தேவதச்சனின்இயற்பெயர் ஏ. எஸ். ஆறுமுகம். கோவில்பட்டியில் பள்ளிப்படிப்பும் இளங்கலை பட்டப்படிப்பும் முடித்த பின் சென்னை பச்சையப்பன் கல்லூரியில் முதுகலை (தத்துவம்) பட்டம் பெற்றார்.

தனிவாழ்க்கை

இலக்கியவாழ்க்கை

தேவதச்சன் 1970களில் 'கசடதபற’ என்ற இலக்கிய பத்திரிகையில் அறிமுகமானார். தொடர்ந்து 'ழ’ என்ற கவிதை இதழிலும் அதிகமாக எழுதி வந்ததார். காலச்சுவடு, கல்குதிரை, உயிர்மை போன்ற இலக்கிய இதழ்கள் இவரது கவிதைகளை வெளியிட்டுள்ளன.

தேவதச்சன் 1982 இல் அவரவர் கைமணல் என்ற தன் முதல் தொகுதியை வெளியிட்டார். அதற்கு 18 ஆண்டுகளுக்குப் பின்னர் காலச்சுவடு பத்திரிகையில் இவரது பல கவிதைகள் வெளிவந்துள்ளன.

தேவதச்சன் கண்டடைந்த நிஸர்கத்த மகராஜ் அவருடைய சிந்தனைகளிலும் மொழியிலும் ஆழமான பாதிப்பை செலுத்தியிருக்கிறார்.

இலக்கிய இடம்

தேவதச்சனின் கவிதைகள் இங்குள்ள ஒவ்வொன்றிலும் வெளிப்படும் முடிவிலி ஒன்றை மொழிவழியாகக் காட்ட முயல்பவை. அது அபத்தங்களைக் கொண்டாடும் நுண்ணுணர்வு கொண்டதாகவும் தர்க்கத்தை காலிடறிவிடுவதில் குதூகலிக்கும் தன்மைகொண்டதாகவும் உள்ளது.

அவரவர் கை மணல் என்ற பெயரில் வந்த தேவதச்சனின் முதற் கவிதைத் தொகுப்பிலுள்ள பல கவிதைகளை முதல் பார்வையில் இருத்தலிய நோக்கு கொண்டவை என்று சொல்லலாம். தலைப்பே சுட்டுவது போல அது தனி மனிதனின் அகஅலைவை பெரிதும் பேசும் கவிதைகளால் ஆனது. ஆனால் அத்தொகுப்பின் கவிதைகள் எவையும் அன்றைய நவீனத்துவ- இருத்தலியத்தின் எதிர்மறை பண்புகள் படியாமல் இருந்தவை. அதற்கு தேவதச்சனின் ஜென் பாதிப்பு காரணமாக இருக்கலாம்.

தேவதச்சனின் அனைத்துக்கவிதைகளிலும் ஓடும் பொதுச்சரடு என்பது முன்னிலைப்படுத்தல். இந்த வாழ்க்கையில் நிகழும் ஒவ்வொரு கணத்தையும் அரியநிகழ்வாக எடுத்து முன் நிறுத்துதல், ஒரு சட்டகத்தில் வைத்தல் என்று கூறலாம்.

கவிதை தொகுதிகள்

  • அவரவர் கை மணல் (1982)
  • அத்துவான வேளை (2000)
  • கடைசி டினோசார் (2004)
  • யாருமற்ற நிழல் (2006)
  • ஹோம்ஸ் என்ற காற்று (2010)
  • இரண்டு சூரியன் (2012)
  • எப்போதும் விடிந்து கொண்டிருக்கிறது (2013)
  • மர்மநபர் (முழு தொகுப்பு) (2017)

விருதுகள்

  • அமெரிக்கத் தமிழர்களின் கலாச்சார அமைப்பு வழங்கிய விளக்கு விருது (2010)
  • கனடா தமிழ் இலக்கியத் தோட்டம் வழங்கிய இயல் விருது (2011)
  • கோவை விஷ்ணுபுரம் இலக்கிய அமைப்பு வழங்கிய விஷ்ணுபுரம் விருது (2015)
  • கவிக்கோ அப்துல் ரகுமான் அறக்கட்டளை வழங்கிய கவிக்கோ விருது (2017)
  • கவிஞர் சிற்பி அறக்கட்டளை வழங்கிய சிற்பி இலக்கிய விருது (2018)

உசாத்துணை

🔏Being Created

Please do not write any content below this line. This section is only for editing templates & categories.