திருப்பள்ளியெழுச்சி (தொண்டரடிப்பொடியாழ்வார்): Difference between revisions

From Tamil Wiki
No edit summary
No edit summary
Line 1: Line 1:
தொண்டரடிப்பொடியாழ்வாரின் திருப்பள்ளியெழுச்சி திருவரங்கத்தில் கோவில் கொண்ட அரங்கனைத் துயிலெழுப்பும் பதிகம். நாலாயிர திவ்யப் பிரபந்தத்தின் முதலாயிரத்தில் ஆறாம் பிரபந்தமாக இடம்பெறுகிறது. மார்கழி மாதத்தின் அதிகாலைகளில் திருவரங்கத்தில் விஸ்வரூப சமயத்தில் திருப்பள்ளியெழுச்சி பாசுரங்கள் வீணை கானத்துடன் பாடப்படுகின்றன. மார்கழியில் மட்டும் திருப்பதி உட்பட அனைத்து வைணவ ஆலயங்களிலும் தொண்டரடிப்பொடியாழ்வார் தமிழில் இயற்றிய அரங்கநாதன் மீது பாடப்பட்ட திருப்பள்ளியெழுச்சியே பாடப்பெற்று வருகிறது.பெருமாளை திருக்கண் பள்ளி உணர்த்த அல்லது திருக்கண் மலர செய்ய, ஆழ்வார் வேண்டிய பாடல்கள் ஆனதால், இதற்கு திருப்பள்ளியெழுச்சி என்ற பெயர். வேறு எந்த பிரபந்தத்திற்கும் இல்லாத பெருமையாக, நேரடியாக ஒரு காரியத்தை கொண்டு தலைப்பு பெற்ற பிரபந்தம் ஆகும்.  

== ஆசிரியர் ==
== ஆசிரியர் ==
வைணவ திருப்பள்ளியெழுச்சியை இயற்றியவர் [[தொண்டரடிப்பொடியாழ்வார்]] (இயற்பெயர்: விப்ரநாராயணர்).  

====== திருப்பள்ளியெழுச்சி இயற்றல்-குருபரம்பரைக் கதை ======
திருமாலைக்கு உரையெழுதிய நஞ்ஜீயர் தான் எழுதிய திருமாலைக்கான உரையில், உலக இன்பங்களில் உழன்று கிடந்த ஆழ்வாரை, அரங்கன் விழிப்பித்தான். அரங்கனைக் காணவந்த தொண்டரடிப்பொடியாழ்வார் தன்னைக் கண் திறந்து பாராமல், யோக நித்திரையில் இருக்கும் அரங்கனைக் கண் விழிக்கச் செய்வதற்காக இயற்றியது திருப்பள்ளியெழுச்சி. பின்பு திருப்பள்ளியெழுச்சியில் '''ஆழ்வார்,''' யோக நித்திரையில் இருந்த பெருமாளை, எல்லாம் தயாராக உள்ளது, திருக்கண் மலர்ந்து தொண்டரடிபொடி என்னும் தன்னை பகவத் பாகவத கைங்கர்யம் செய்ய தகுந்தவன் என்று அருள் புரிய வேண்டும் என்பதை “'''''அளியன் என்று அருளி உன் அடியார்க்கு ஆட் படுத்தாய்'''''” என்று பிரார்த்திக்கும் பிரபந்தம் ஆகும் எனச் சொல்கிறார்
== நூல் அமைப்பு ==
திருப்பள்ளியெழுச்சி பத்து ஆசிரியப்பாக்களால் ஆன பதிகம். திருமலைஆண்டான் வடமொழியிலும், திருவரங்கப் பெருமாள் அரையர் தமிழிலும் இரு தனியன்கள்(பாயிரங்கள்) இயற்றியுள்ளனர். ஒவ்வொரு பாடலும் ''அரங்கத்தம்மா பள்ளி எழுந்தருளாயே'' என்று முடிவடைகிறது.  காலையின் காட்சிகளை நன்கு விவரிக்கிறார்

====== திருப்பள்ளியெழுச்சி இயற்றல்-குருபரம்பரைக் கதை ======
திருமாலைக்கு உரையெழுதிய நஞ்ஜீயர்  தான் எழுதிய திருமாலைக்கான உரையில், உலக இன்பங்களில் உழன்று கிடந்த ஆழ்வாரை, அரங்கன் விழிப்பித்தான்.  அரங்கனைக் காணவந்த தொண்டரடிப்பொடியாழ்வார் தன்னைக் கண் திறந்து பாராமல், யோக நித்திரையில் இருக்கும் அரங்கனைக் கண் விழிக்கச் செய்வதற்காக இயற்றியது திருப்பள்ளியெழுச்சி. பின்பு திருப்பள்ளியெழுச்சியில் '''ஆழ்வார்,''' யோக நித்திரையில் இருந்த பெருமாளை, எல்லாம் தயாராக உள்ளது, திருக்கண் மலர்ந்து தொண்டரடிபொடி என்னும் தன்னை பகவத் பாகவத கைங்கர்யம் செய்ய தகுந்தவன் என்று அருள் புரிய வேண்டும் என்பதை “'''''அளியன் என்று அருளி உன் அடியார்க்கு ஆட் படுத்தாய்'''''” என்று பிரார்த்திக்கும் பிரபந்தம் ஆகும் எனச் சொல்கிறார்

== நூல் அமைப்பு ==
== தத்துவப் பொருள் ==
திருப்பள்ளியெழுச்சி பத்து ஆசிரியப்பாக்களால் ஆன பதிகம். திருமலைஆண்டான் வடமொழியிலும், திருவரங்கப் பெருமாள் அரையர் தமிழிலும்  இரு தனியன்கள்(பாயிரங்கள்) இயற்றியுள்ளனர். ஒவ்வொரு பாடலும் ''அரங்கத்தம்மா பள்ளி எழுந்தருளாயே'' எனபதை ஈற்றடியாகக் (கடைசி அடி)

''<br />''

== திருப்பள்ளியெழுச்சி பாடல்கள்-எளிய பொருளுடன் ==

====== தனியன் -திருவரங்கப்பெருமாள் அரையர் ======
<poem>
''மண்டங்குடி என்பர் மாமறையோர் மன்னிய சீர்''
''தொண்டரடிப்பொடி தொன்னகரம் வண்டுதிணர்த்த வயல் தென்னரங்கத்தம்மானைப்''
''பள்ளி உணர்த்தும் பிரான் உதித்த ஊர்''
</poem>

(வண்டுகள் மீண்டும் மீண்டும் வந்து அணையும் தேன் நிறைந்த சோலைகள் சூழ் திருவரங்கத்தில் பள்ளிகொண்ட  அரங்கனை துயில் எழுப்பி,  நமக்குப் பேருபகாரம் செய்த தொண்டரடிப்பொடி ஆழ்வார் அவதரித்த ஊர் திருமண்டங்குடி என்று மறையறிந்த பெரியோர்கள் கூறுவர்.

<poem>
''கதிரவன் குணதிசைச் சிகரம்வந் தணைந்தான்
''கனவிருளகன்றது காலையம் பொழுதாய்,
''மதுவிரிந் தொழுகின மாமல ரெல்லாம்
''வானவ ரரசர்கள் வந்துவந் தீண்டி,
''எதிர்திசை நிறைந்தன ரிவரொடும் புகுந்த
''இருங்களிற் றீட்டமும் பிடியொடு முரசும்,
''அதிர்தலி லலைகடல் போன்றுள தெங்கும்
''அரங்கத்தம்மா பள்ளி யெழுந்தரு ளாயே.    1
</poem>

அரங்கா, கதிரவன் கிழக்கு திக்கில் உதித்துவிட்டான்.இரவின் அடர்ந்த இருள் அகன்று காலை புலர்ந்து விட்டது. அழகிய மலர்களெல்லாம் தேன்வழிய மலர்ந்துவிட்டன.தேவர்களும், அரசர்களும் திரண்டு உன் திருக்கண்கள் நோக்கிய தெற்கு திக்கில் கூடிவிட்டனர். ஆண் யானைகளும், பெண் யானைகளும், வாத்தியங்களும் சேர்ந்து ஒலிக்கும் அரவம் அலைகடலின் ஓசையை ஒத்திருந்தது. எனவே இனியும் பள்ளியில் (சயனத்தில்) இருக்கலாகாது. நீ விரைவில் எழுந்து அருள்வாயாக.

<poem>
''கொழுங்கொடி முல்லையின் கொழுமல ரணவிக்
''கூர்ந்தது குணதிசை மாருத மிதுவோ,
''எழுந்தன மலரணைப் பள்ளிகொள் ளன்னம்
''ஈன்பனி நனைந்தத மிருஞ்சிற குதறி,
''விழுங்கிய முதலையின் பிலம்புரை பேழ்வாய்
''வெள்ளெயி றுறவதன் விடத்தினுக் கனுங்கி,
''அழுங்கிய ஆனையி னருந்துயர் கெடுத்த
''அரங்கத்தம்மா பள்ளி யெழுந்தரு ளாயே.
</poem>

நன்கு மலர்ந்த மல்லிகைக் கொடிகளைத் தடவி வந்த கீழ்க்காற்று வீசிக்கொண்டிருக்கிறது. அந்த மலர்ப்படுக்கையில் உறங்கும் அன்னங்கள் மழைபோலே பொழிந்த பனியாலே நனைந்த தங்கள் சிறகுகளை உதறிக்கொண்டு எழுந்தன. தன்னுடைய கூரிய விஷப் பற்களாலே கடித்துத் துன்புறுத்தி, தன் குகை போன்ற பெரிய வாயாலே கஜேந்திரன் என்ற யானையின்  காலை விழுங்கப்பார்த்த முதலையைக் கொன்று கஜேந்திரனின்  துயரைப் போக்கிய அரங்கா! பள்ளி எழுந்து அருள்வாயாக!

<poem>
''சுடரொளி பரந்தன சூழ்திசை எல்லாம்
''துன்னிய தாரகை மின்னொளி சுருங்கி
''படரொளி பசுத்தனன் பனிமதி இவனோ
''பாயிருள் அகன்றது பைம்பொழில் கமுகின்
''மடலிடை கீறிவண் பாளைகள் நாற
''வைகறை கூர்ந்தது மாருதம் இதுவோ
''அடலொளிதிகழ் தரு திகிரியந்தடக்கை
''அரங்கத்தம்மா பள்ளி எழுந்தருளாயே!
</poem>

{{Being created}}
பார்க்கும் திசையெல்லாம் சூரிய ஒளி படர்ந்து விட்டது. இரவில் ஒளிரும் விண்மீன்களும், நிலவும் ஒளி குறைந்தன.பரந்த இருள் நீங்கிவிட்டது. விடியல் காற்று சோலைகளிலுள்ள பாக்குமரங்களிடையே மடலைக்கீற அந்த அழகிய பாளைகளின் மணத்தைப் பெற்றுக்கொண்டு வீசுகிறது. ஒளிபொருந்திய சுதர்சனம் என்னும் ஆழியைக் கையில் ஏந்திய அரங்கா!  துயில் எழுவாய்.
[[Category: Tamil Content]]

Revision as of 00:08, 19 December 2022

தொண்டரடிப்பொடியாழ்வாரின் திருப்பள்ளியெழுச்சி திருவரங்கத்தில் கோவில் கொண்ட அரங்கனைத் துயிலெழுப்பும் பதிகம். நாலாயிர திவ்யப் பிரபந்தத்தின் முதலாயிரத்தில் ஆறாம் பிரபந்தமாக இடம்பெறுகிறது. மார்கழி மாதத்தின் அதிகாலைகளில் திருவரங்கத்தில் விஸ்வரூப சமயத்தில் திருப்பள்ளியெழுச்சி பாசுரங்கள் வீணை கானத்துடன் பாடப்படுகின்றன. மார்கழியில் மட்டும் திருப்பதி உட்பட அனைத்து வைணவ ஆலயங்களிலும் தொண்டரடிப்பொடியாழ்வார் தமிழில் இயற்றிய அரங்கநாதன் மீது பாடப்பட்ட திருப்பள்ளியெழுச்சியே பாடப்பெற்று வருகிறது.பெருமாளை திருக்கண் பள்ளி உணர்த்த அல்லது திருக்கண் மலர செய்ய, ஆழ்வார் வேண்டிய பாடல்கள் ஆனதால், இதற்கு திருப்பள்ளியெழுச்சி என்ற பெயர். வேறு எந்த பிரபந்தத்திற்கும் இல்லாத பெருமையாக, நேரடியாக ஒரு காரியத்தை கொண்டு தலைப்பு பெற்ற பிரபந்தம் ஆகும்.

ஆசிரியர்

வைணவ திருப்பள்ளியெழுச்சியை இயற்றியவர் தொண்டரடிப்பொடியாழ்வார் (இயற்பெயர்: விப்ரநாராயணர்).

திருப்பள்ளியெழுச்சி இயற்றல்-குருபரம்பரைக் கதை

திருமாலைக்கு உரையெழுதிய நஞ்ஜீயர் தான் எழுதிய திருமாலைக்கான உரையில், உலக இன்பங்களில் உழன்று கிடந்த ஆழ்வாரை, அரங்கன் விழிப்பித்தான். அரங்கனைக் காணவந்த தொண்டரடிப்பொடியாழ்வார் தன்னைக் கண் திறந்து பாராமல், யோக நித்திரையில் இருக்கும் அரங்கனைக் கண் விழிக்கச் செய்வதற்காக இயற்றியது திருப்பள்ளியெழுச்சி. பின்பு திருப்பள்ளியெழுச்சியில் ஆழ்வார், யோக நித்திரையில் இருந்த பெருமாளை, எல்லாம் தயாராக உள்ளது, திருக்கண் மலர்ந்து தொண்டரடிபொடி என்னும் தன்னை பகவத் பாகவத கைங்கர்யம் செய்ய தகுந்தவன் என்று அருள் புரிய வேண்டும் என்பதை “அளியன் என்று அருளி உன் அடியார்க்கு ஆட் படுத்தாய்” என்று பிரார்த்திக்கும் பிரபந்தம் ஆகும் எனச் சொல்கிறார்

நூல் அமைப்பு

திருப்பள்ளியெழுச்சி பத்து ஆசிரியப்பாக்களால் ஆன பதிகம். திருமலைஆண்டான் வடமொழியிலும், திருவரங்கப் பெருமாள் அரையர் தமிழிலும் இரு தனியன்கள்(பாயிரங்கள்) இயற்றியுள்ளனர். ஒவ்வொரு பாடலும் அரங்கத்தம்மா பள்ளி எழுந்தருளாயே என்று முடிவடைகிறது. காலையின் காட்சிகளை நன்கு விவரிக்கிறார்

தத்துவப் பொருள்

திருப்பள்ளியெழுச்சி பாடல்கள்-எளிய பொருளுடன்

தனியன் -திருவரங்கப்பெருமாள் அரையர்

மண்டங்குடி என்பர் மாமறையோர் மன்னிய சீர்
தொண்டரடிப்பொடி தொன்னகரம் வண்டுதிணர்த்த வயல் தென்னரங்கத்தம்மானைப்
பள்ளி உணர்த்தும் பிரான் உதித்த ஊர்

(வண்டுகள் மீண்டும் மீண்டும் வந்து அணையும் தேன் நிறைந்த சோலைகள் சூழ் திருவரங்கத்தில் பள்ளிகொண்ட அரங்கனை துயில் எழுப்பி, நமக்குப் பேருபகாரம் செய்த தொண்டரடிப்பொடி ஆழ்வார் அவதரித்த ஊர் திருமண்டங்குடி என்று மறையறிந்த பெரியோர்கள் கூறுவர்.

கதிரவன் குணதிசைச் சிகரம்வந் தணைந்தான்
கனவிருளகன்றது காலையம் பொழுதாய்,
மதுவிரிந் தொழுகின மாமல ரெல்லாம்
வானவ ரரசர்கள் வந்துவந் தீண்டி,
எதிர்திசை நிறைந்தன ரிவரொடும் புகுந்த
இருங்களிற் றீட்டமும் பிடியொடு முரசும்,
அதிர்தலி லலைகடல் போன்றுள தெங்கும்
அரங்கத்தம்மா பள்ளி யெழுந்தரு ளாயே. 1

அரங்கா, கதிரவன் கிழக்கு திக்கில் உதித்துவிட்டான்.இரவின் அடர்ந்த இருள் அகன்று காலை புலர்ந்து விட்டது. அழகிய மலர்களெல்லாம் தேன்வழிய மலர்ந்துவிட்டன.தேவர்களும், அரசர்களும் திரண்டு உன் திருக்கண்கள் நோக்கிய தெற்கு திக்கில் கூடிவிட்டனர். ஆண் யானைகளும், பெண் யானைகளும், வாத்தியங்களும் சேர்ந்து ஒலிக்கும் அரவம் அலைகடலின் ஓசையை ஒத்திருந்தது. எனவே இனியும் பள்ளியில் (சயனத்தில்) இருக்கலாகாது. நீ விரைவில் எழுந்து அருள்வாயாக.

கொழுங்கொடி முல்லையின் கொழுமல ரணவிக்
கூர்ந்தது குணதிசை மாருத மிதுவோ,
எழுந்தன மலரணைப் பள்ளிகொள் ளன்னம்
ஈன்பனி நனைந்தத மிருஞ்சிற குதறி,
விழுங்கிய முதலையின் பிலம்புரை பேழ்வாய்
வெள்ளெயி றுறவதன் விடத்தினுக் கனுங்கி,
அழுங்கிய ஆனையி னருந்துயர் கெடுத்த
அரங்கத்தம்மா பள்ளி யெழுந்தரு ளாயே.

நன்கு மலர்ந்த மல்லிகைக் கொடிகளைத் தடவி வந்த கீழ்க்காற்று வீசிக்கொண்டிருக்கிறது. அந்த மலர்ப்படுக்கையில் உறங்கும் அன்னங்கள் மழைபோலே பொழிந்த பனியாலே நனைந்த தங்கள் சிறகுகளை உதறிக்கொண்டு எழுந்தன. தன்னுடைய கூரிய விஷப் பற்களாலே கடித்துத் துன்புறுத்தி, தன் குகை போன்ற பெரிய வாயாலே கஜேந்திரன் என்ற யானையின் காலை விழுங்கப்பார்த்த முதலையைக் கொன்று கஜேந்திரனின் துயரைப் போக்கிய அரங்கா! பள்ளி எழுந்து அருள்வாயாக!

சுடரொளி பரந்தன சூழ்திசை எல்லாம்
துன்னிய தாரகை மின்னொளி சுருங்கி
படரொளி பசுத்தனன் பனிமதி இவனோ
பாயிருள் அகன்றது பைம்பொழில் கமுகின்
மடலிடை கீறிவண் பாளைகள் நாற
வைகறை கூர்ந்தது மாருதம் இதுவோ
அடலொளிதிகழ் தரு திகிரியந்தடக்கை
அரங்கத்தம்மா பள்ளி எழுந்தருளாயே!