தொல்சடங்கு மதம்: Difference between revisions

From Tamil Wiki
Line 10: Line 10:
====== பரவல் ======
====== பரவல் ======
தென்னமேரிக்கச் செவ்விந்தியர்கள், ஆப்ரிக்கப் பழங்குடிகள், பசிஃபிக் தீவுகளின் தொல்குடிகள், தென்னாசியப் பழங்குடிகள் ஆகிய அனைவரிலுமே இந்த வகையான தொல்சடங்கு மதம் காணப்படுகிறது. இந்தியாவில் பல்வேறு தொல்குடிகளிடமும் ஷாமனிசம் உள்ளது இந்துமதத்தின் முக்கியமான கூறாகவும் உள்ளது.  

== புதுச்சடங்கு மதம் ==
இருபதாம் நூற்றாண்டில் ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் கிறிஸ்தவ மதத்தின் அமைப்புசார்ந்த செயல்பாடுகளுக்கு எதிராக மாற்றுமதங்களை உருவாக்கும் போக்கு எழுந்தது. பலவகையான ரகசிய வழிபாட்டுமுறைகள், குறுமதங்கள் உருவாயின. அவை ஆப்ரிக்க, தென்னமேரிக்க தொல்குடிகளின் மதங்களில் இருந்து முன்மாதிரிகளைப் பெற்றுக்கொண்டவை. 
== உசாத்துணை ==
== உசாத்துணை ==
ஷாமனிசம் வரையறை https://www.shamanism.com/what-is-shamanism
ஷாமனிசம் வரையறை https://www.shamanism.com/what-is-shamanism

Revision as of 12:32, 6 December 2022

தொல்சடங்கு மதம் ( Shamanism ) (சாமியாட்டு மதம். வெறியாட்டு மதம்) தெய்வங்களுடன் தொடர்புள்ளவராகவும், தெய்வம் வெளிப்படும் ஊடகமாகவும் திகழும் மனிதர்களை அடிப்படையாகக் கொண்ட தொல்மதம். உலகமெங்கும் பழங்குடிகளிடம் இருக்கும் முதன்மையான மதநம்பிக்கை இதுவே. பழங்குடி மரபில் இருந்து தொல்வரலாறு கொண்ட மதங்களுக்குள் இந்த மரபின் நம்பிக்கைகளும் சடங்குகளும் நீடிக்கின்றன. இந்து மதத்தில் வெறியாட்டு, சன்னதம் கொள்ளுதல், குறிசொல்லுதல் ஆகிய வடிவில் தொல்சடங்கு மதத்தின் நீட்சி உள்ளது. இக்கலைச் சொல் இன்று மேலும் விரிவடைந்து தெய்வம் எவ்வகையிலேனும் மனிதர்களிடம் தோன்றும்பொருட்டுச் செய்யப்படும் எல்லா சடங்குகளையும் உள்ளடக்கிய மரபைச் சுட்டுவதாக ஆகியுள்ளது.

வேர்ச்சொல்

சைபீரியாவில் வாழும் துங்குசிக் (Tungusic) பழங்குடி மக்களின் ஷாமன் என்னும் சொல்லில் இருந்து உருவானது ஷாமனிஸம் என்னும் கலைச்சொல். ஷாமன் ( ) என்ற சொல் பூசாரி, மந்திரவாதி, தெய்வ ஊடகம் ஆகிய பொருட்களைக் கொண்டது. துங்குசிக் மக்களின் எல்லா மொழிகளிலும் இச்சொல் உள்ளது. மானுடவியலாளர் இச்சொல்லை உலகம் முழுக்க பழங்குடிப் பண்பாடுகளில் காணப்படும் பொதுவான சடங்குமதம் ஒன்றை சுட்டுவதாக ஆக்கிக் கொண்டனர்.

தொல்சடங்குமதம்

தோற்றம்

பழங்குடிகளில் பெருந்தந்தை என்னும் ஆளுமை தொல்காம முதல் உள்ளது. அந்த ஆளுமையே பின்னர் குடித்தலைவன், அரசன் என்னும் ஆளுமை உருவகங்கள் அதில் இருந்து உருவாயின. அதற்கு இணையாகவே மந்திரவாதி, பூசாரி, சாமியாடி, குறிசொல்லி, சோதிடன், மருத்துவன் ஆகிய ஆறு அடையாளங்களையும் கொண்ட ஆளுமை உருவகங்கள் பழங்குடிகளில் காணப்படுகின்றன. பழங்குடியினரின் மதத்தின் அடிப்படை இந்த பூசாரி என்னும் ஆளுமையே.

சடங்குகள்

பூசாரி தெய்வத்துடன் நேரடியாக உறவுள்ளவன். தெய்வம் அவன் வழியாக வெளிப்படுகிறது. அவன் சில சடங்குகள் வழியாகவும், சில போதைப்பொருட்களை நுகர்வதன் வழியாகவும் நிலைமறந்த தன்மையை அடைந்து தன்னை தெய்வங்களுக்கு ஒப்புக் கொடுக்கிறான். அவன் அந்நிலையில் சொல்லும் சொற்கள் தெய்வத்தின் சொற்களாகவே கருதப்படுகின்றன. இவ்வாறு பூசாரி தெய்வத்துடன் தொடர்பு கொள்வதற்கு பலவகையான சடங்குகள் பழங்குடிகளிடம் உள்ளன. கூட்டான நடனங்கள், கூட்டான மந்திர உச்சாடனங்கள், பலவகையான பலிச்சடங்குகள், கொடைச் சடங்குகள், வேட்டை மற்றும் பலி போன்ற நடிப்புச் சடங்குகள் உண்டு. இவை எல்லாமே ஷாமனிச மதத்தில் அடங்கும்

பரவல்

தென்னமேரிக்கச் செவ்விந்தியர்கள், ஆப்ரிக்கப் பழங்குடிகள், பசிஃபிக் தீவுகளின் தொல்குடிகள், தென்னாசியப் பழங்குடிகள் ஆகிய அனைவரிலுமே இந்த வகையான தொல்சடங்கு மதம் காணப்படுகிறது. இந்தியாவில் பல்வேறு தொல்குடிகளிடமும் ஷாமனிசம் உள்ளது இந்துமதத்தின் முக்கியமான கூறாகவும் உள்ளது.

புதுச்சடங்கு மதம்

உசாத்துணை

ஷாமனிசம் வரையறை https://www.shamanism.com/what-is-shamanism